தங்கத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றில் முக்கிய பகுதியாக இருக்கிறது. பின்னர் இயற்கை வளங்களையும் புதிய தொழில் வாய்ப்புகளையும் தேடி நாடு நாடாகச் சென்றவர்கள், புதிய வேட்டை நிலங்களைக் கண்டடைந்தார்கள். ஐந்து முதலைகளின் கதை, நவீன தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் இதுவரை சொல்லப்படாத நிலங்கள், நாடுகள் வழியே ஒரு புதிய கதையைச் சொல்கிறது. செல்வத்தையும் அதிர்ஷ்டட்தையும் தேடி புதிய தடங்களில் பயணம் செய்யும் மனிதர்களின் சவால்களும், தன்னையே பணயம் வைத்து ஆடுகிற சூதாட்டங்களும் இந்த நாவலை மிகுந்த சுவாரசியமுடையதாக்குகின்றன. மனிதர்களின் ஆழம்காண முடியாத மனோவிசித்திரங்களை சரவணன் சந்திரன் மிக நுட்பமாக சித்தரிக்கிறார்.
செய்தித்தாள்களில் கடல் அட்டை கடத்தியவர்கள் கைது என்று படித்திருப்போம் , அந்த கடல் அட்டை வியாபாரம் செய்பவர் தான் நம் கதைசொல்லி. அதை போலவே , நாம அறியாத , பெரிதும் கேள்விப்படாத ஒரு நாடு , தைமூர் , அதுதான் கதைக்களம் . ஒரு நாவலுக்கான , கதை அம்சம் என்று பெரிதாக ஒன்றும் இல்லை , கதை மாந்தர்களும் ஆழமற்றே சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். சாதாரண கதை, சில சுவாரசிய தகவல்கள் . ஒரு முறை வாசிக்கலாம்.
Spoiling the story so you don't have to read it. A tamil man works under a goon and meets many people. With one such person, The guy goes to Timor Leste. He sells his ancestral house and tries the sea cucumber business with another 4 people and is an inherent loser. so he fails and returns back to the goon. Except for the Country name and Business type, there's nothing in the book. Utterly disappointing.
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸 புதிய நிலத்தின் கதை 🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
புதிய வழிகளில் பொருளீட்டுவதற்காக தமிழகத்திலிருந்து தைமூர் செல்லும் ஒருவனின் கதை இது. ஐவர் இணைந்து தொழில் செய்வதால் இது ஐந்து முதலைகளின் கதை.
தொழில் தைமூரின் இயற்கை வளங்களை பயன்படுத்தி சம்பாதிப்பது, எ .கா கடல் அட்டைகளை பிடித்து பதப்படுத்தி சிங்கப்பூர் முதலிய கிழக்காசிய நாடுகளில் விற்பது, கோபி லுவாக் எனும் ஒருவகை காட்டுப்பூனையின் புளுக்கையிலிருந்து தயாரிக்கப்படும் உலகின் விலையுயர்ந்த காஃபி பொடி வியாபாரம் என இன்னும் பல.
வியாபாரத்தில் ஏற்படும் பின்னடைவுகள், தோல்விகள். உடனிருப்பவர்களின் துரோகங்கள் , புதிய நட்புகள் அவர்களின் அன்பு. சந்திக்கும் பெண்கள் அவர்களின் மீது ஈர்ப்பு , மது, போதை என நகரும் கதை.
ஆசிரியரின் ரோலஸ் வாட்ச் நாவல் பரவலான கவனத்தை பெற்றதை அறிவேன், இந்நாவலில் ஒரு சில அழகிய இடங்களை தவிர ஆழமாக, தரிசனமாக எதுவும் சொல்லப்படாதது ஏமாற்றமளித்தது. கதை மிக மேலோட்டமாக நகர்கிறது. காலக்கோட்டில் முன்னும் பின்னுமாக நகரும் கதை வாசிக்கும் பொது குழப்பத்தை தரும் வகையில் இருந்தது முழுவதும் எனது வாசிப்பு குறைபாடுதான் என்று சொல்ல முடியவில்லை. ஒரே தகவல் வெவ்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது புத்தகம் செம்மைப்படுத்துதலில் தவிர்த்திருக்கலாம். கதையில் வரும் முதலைப்படிமம் வெறும் முயற்சியாக தொக்கி நிற்கிறது.
தைமூர் பற்றிய சித்தரிப்பு , அங்கு வாழும் உள்ளூர் வாசிகளின் வாழ்வு, சீனர்கள் பற்றிய சில செய்திகள் ஆகியவை ஆர்வமூட்டுவதாக இருந்தன. எ . கா. சீனர்களுக்கு தங்கள் ஆண் குறி பற்றிய தாழ்வுமனப்பான்மை மற்றும் அதை பயன்படுத்தி சூப் வியாபாரம் செய்யும் நூதன கொள்ளை. தனக்கு பிடித்த ஆணை கட்டுக்குள் வைக்க பெண்கள் போடும் குறிவேர்வை சோறு என இன்னும் சில.
கதை முடிவும் சற்று தடடையாகவே இருந்தது போலுள்ளது. நினைத்துப்பார்க்க எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று சொல்ல இயலாத கதை ஓட்டம் . இது ஆசிரியரின் முதல் நாவல் அவ்வகையில் மோசமான படைப்பு அல்ல என்று மட்டும் தயங்காமல் சொல்வேன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ கூடுதல் தகவல் - சரவணன் சந்திரன் ஒரு தொழில்முறை ஹாக்கி விளையாட்டு வீரர். தற்போது ஊடகத்துறையில் பணிபுரியும் இவர் வேறு பல தொழில்களும் செய்துவருகிறார். ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++