Jump to ratings and reviews
Rate this book

அஸ்தினாபுரம்

Rate this book
அண்ட சராசரத்தின் இயக்கத்தைத் தன் அசைவுகள் மூலம் காட்டுகிறது கடல். இதோ கீழ்வானில் வெளிச்சக் கீறல்கள். கா...காவென கரைந்தபடி பறந்தது காகக் கூட்டம். ஒரு புறம் குதிரை பூட்டிய ரதத்தில் இந்திரன் வருகிறான்; பக்கத்திலேயே இந்திரப்பிரஸ்தம். யாரது பளிங்கு மாளிகையில் சேலையைத் தூக்கிக் கொண்டு நடப்பது, அர்ஜுன்ன் தேரில் வில்லோடு வருகிறான். முள் படுக்கையில் பீஷ்மர். விதவிதமாய் அழகு காட்டியது கீழ்வானின் மேகக் கூட்டம். அது என்ன - மேக விளிம்புகளில் தீப்பற்றிக் கொண்டதா....
(நாவலிலிருந்து)

416 pages, Paperback

First published February 1, 2016

1 person is currently reading
20 people want to read

About the author

Joe D'Cruz

8 books32 followers
R. N. Joe D'Cruz (ஜோ டி குருஸ்) is a Tamil writer, novelist and documentary film director from Tamil Nadu, India. He won the Sahitya Akademi award in 2013 in the Tamil language category for his novel Korkai.

Joe D'Cruz published a Tamil poetry compilation, Pulambazhkal, in 2004. His Sahitya Akademi award-winning novel Korkai was originally published in 2009 and prior to that his 2005 novel Aazhi Soozh Ulagu was awarded the Tamil Nadu state government literary award and Tamil Literary Garden award. Both his novels are based on history and the lives of Parathavar fishermen of Tamil Nadu. The first novel Aazhi Soozh Ulagu dealt with the lives of fishermen who used catamarans and their conversion to Christianity. The second novel titled Korkai refers to Korkai, an ancient port city ruled by Early Pandyan Kingdom. It documented 20th-century history of the people in the region. It is considered as a well-researched historical novel.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (37%)
4 stars
4 (50%)
3 stars
0 (0%)
2 stars
1 (12%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
2,121 reviews1,108 followers
June 23, 2018
அதீத மன ஆக்கிரமிப்பு:::::::::::::::::::

சுயநலத்தைப் பொதுவில் வைத்து ஒவ்வொரு தனிமனிதனும் தன் அகங்காரத்தின் பொருட்டு ஆடும் ஆட்டத்தில் அன்பு, பாசம், அரவணைப்பு, புரிதல், துரோகம், ஏமாற்றம், வலி, எதிர்பார்ப்பு,பகைமை என்று விரிந்து கொண்டே சென்று மனிதனை மனிதனாக வாழவிடாமல் கொடூர மனம் கொண்டவனாக மாற்ற முயலும் சமூகத்தையும் சேர்த்து எதிர்ப்பவனுக்குக் கிடைப்பது “தனிமையின் வலி” மட்டுமே.

மனிதனை வீழ்த்துவது போலி அன்பின் செய்கைகளே.

தன்னைப் போலவே தான் மற்றவர்கள் என்று கருதுபவனைத் தான் சமூகமும் உறவுகளும் சுமைதூக்கியாக்கி வேடிக்கைப் பார்ப்பது மட்டுமில்லாமல் அடிமைப்படுத்தவும் விழைகிறது.
“அமுதன்” தனிப்பட்ட ஆளுமையல்ல.ஒவ்வொரு மனிதனும் தொழிலில் எதிர்க்கொள்ளும் பொறாமையும்,நெருக்கடியும், உறவுகளால் அவர்களின் போக்கிலே பந்தாடப்படுபவனும்.

தனக்கென விருப்பம் இருக்கும் என்பதை மறைய வைக்கும் வலிமை கொண்ட குடும்ப உறுப்பினர்களைச் சகமனிதனாய் மதிக்க வைக்கும் பண்பை வளர்த்துக் கொண்டு மனக்கட்டுப்பாட்டுடன் வாழ்வது மற்றவர்களுக்காக இல்லை தன்னைத் திருப்தி படுத்தவே என்ற உண்மையை அறிந்தவன்.

அமுதனின் ஆதங்கத்தின் வழியே கடலோர மக்களின் எதிர்பார்ப்புகள் அவர்களைப் பல ஆண்டுகளாக மெல்ல அழித்துக் கொண்டு முன்னேறவிடாமல் அதே கோட்டிலே அவர்களைத் தக்கவைத்து இருப்பது வேறுசாரரின் சுயநல தேவையின்றி வேறென்ன.. துறைமுகப் பணிகள், எதிர்பார்ப்புகள் உடைப்பட்டுத் தவிக்கும் தருணங்கள் அனைத்தும் விரிவாக ஆழ்மன ஊடுருவல் மூலம் நிரப்பி விடுகிறது.

இறுதியில் அமுதனுக்கும் மகனுக்குமான உரையாடலில் நிசர்சனத்தை முழுவதும் புரிந்து கொண்ட தியானநிலை.

உயர் அதிகாரியிடம் கோபம் கொண்டு வெடிக்குமிடம் வேலையைத் தவிர வேறு ஒன்றும் தனக்கு முக்கியமில்லை என்று வாழ்பவனின் தன்மானத்தைச் சீண்டிவிட்டால் கிளம்பும் பொறியின் சுவடு.

அமுதன் ஆழ்மனதின் பிம்பம்.

படித்தால் மட்டுமே தருணத்தின் அழுத்தத்தைக் கண்டறிந்து உணரமுடியும் என்ற வகையில் சேர்ந்த புத்தகம்.
Profile Image for Sudeeran Nair.
93 reviews20 followers
June 28, 2016
ஜோ டி குருஸ்ஸின் மூன்றாவது நாவல். ஆழி சூழ் உலகு , கொற்கை போன்ற பிரமாண்ட படைப்புகளைக் கொடுத்தவரின் மற்றுமொரு படைப்பு. அவருடைய கொற்கையை வாசித்தப்பின் அதன் கதைக்களமும் ,மொழிநடையும், அதன் கதையும் என்னை இந்நாவலை வாங்கத் தூண்டியது.
“அஸ்தினாபுரம்” என்ற பெயரைக் கேட்டவுடனே என் மனது இயல்பாய் இது ஒரு வரலாற்று நாவலாய் இருக்குமோ என்ற முடிவுக்கு வந்தது. நாவலைப் படித்தவுடன் அதற்கான பெயர்க்காரணம் ஒரு குழப்பமாகவே எனக்குத் தோன்றுகிறது. மேலும் இது ஆசிரியரின் சுயசரிதையாக இருக்குமோ என்ற ஐயமும் தோன்றினாலும் இது ஒரு தனிமனிதனின் வாழ்க்கைப் போராட்டமே.
நாவலின் முக்கியமான கதை மாந்தராய் அமுதன் வருகிறார். அவரின் பணியானது கப்பல் போக்குவரத்துத் துறையை சார்ந்திருப்பதால் கதைக் களமும் அதனடிப்படையிலேயே நகர்கிறது. அதன் களம் இந்தியக் கப்பல் போக்குவரத்துத் துறையின் அத்துனை ஓட்டைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
கதையின் காலக்கட்டம் 21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தை கொண்டுள்ளது. கதையின் நாயகன் மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்களின் நிலைமையைப்பற்றியும் , நமக்கும் இலங்கைக்குமான அரசியல் தொடர்புகளும் அதனடிப்படையில் அவர்கள் அரங்கேற்றும் அக்கிரமங்களையும் அறியும் போது நம்மனதில் ஏதோவொரு பாரம் தொற்றிக் கொண்டுவிடுகிறது .
உறவுகளுக்குள் உள்ள சலனத்தையும், வெறுப்பையும், விருப்பையும், எதிர்பார்ப்புகளையும், ஏமாற்றுதலையும் பதிகிறார் நாவலின் ஆசிரியர்.

கதையின் வேகம் சில இடங்களில் தொய்வைக் கொடுத்தாலும் நிகழ்வுகளின் கோர்வைகள் அதற்கு பலத்தைக் கொடுக்கிறது. பலவினமாய் இருப்பது கதையின் நாயகரைச் சுற்றியுள்ள அத்துணை குடும்ப உறவுகளையும் எதிர்மறையாக சித்தரிப்பதும் அதை எல்லா வித்திலும் ஏற்றுக் கொண்டு அதனடிப்படையில் வாழ்வை நகர்த்துவது என்று நகருவதும் கொஞ்சம் அதீதமாய் உணரவைக்கிறது.
Profile Image for Bharath Jambulingam.
Author 2 books16 followers
September 16, 2016
"நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்ப்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன்
கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விளகும் கண்ணா
உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விளகும் கண்ணா"

இந்த பாடலுக்கு முற்றிலும் பொருத்தமான பாத்திரம் அமுதனின் பாத்திரம். ஆசிரியர் தன்னுடைய வாழ்க்கை அனுபவத்தை அமுதன் மூலமாக நமக்குச் சொல்லியிருக்கிறார் என நம்புகிறேன்.

அத்தனை வேலையிலும், சொந்த வாழ்க்கையில் தோல்வியிலும், அலுவலத்தில் நேர்மை மாறாமல், தாயின் முழு பாசமும் இல்லாமல் இருந்தாலும் தாயை விட்டுக்கொடுக்காமல், தனி மனித ஒழுக்கம் பற்றி பேசும் முதல் கதாநாயகன் இந்த அமுதன். அமுதன் கடந்து வந்த பாதை முட்களாலும், கற்களாலும் ஆனது. அதிலும் எப்படி முட்டி மோதி வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதை நமக்கு சொல்லிக்கொடுக்கின்றார்.

படிக்கவேண்டிய புத்தகம். கப்பல் துறையில் ஒருவன் சாதித்த விஷயங்களை இப்படியும் பதிந்து வைக்கலாம் என்று காட்டுகிறது ஆசிரியர் நமக்கு காட்டுகிறார்.

Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.