Jump to ratings and reviews
Rate this book

பஷீர் நாவல்கள்

Rate this book
வைக்கம் முகம்மது பஷீர் உலகை அதன் அனைத்துக் குறைகளோடும் நேசித்த அபூர்வமான கலைஞர்களுள் ஒருவர். தீமை, சிருஷ்டியின் இன்றியமையாத இயங்கு பகுதி என்ற அவரது புரிதலாலும் ஒதுக்கப்பட்டவர்களோடு குறிப்பாகக் கோமாளிகள், மடையர்கள், திருடர்கள், குற்றவாளிகள் என்று உலகம் கணிக்கும் மனிதர்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதாலும் இவ்வகையினரைத் தன்னுடைய மந்திர எழுத்தால் நாம் விரும்பும் பாத்திரங்களாக மாற்றி மலையாள இலக்கியத்தின் வரைபடத்தைப் பலபத்தாண்டுகளுக்கு முன்பே மாற்றி அமைக்க பஷீரால் முடிந்தது.

479 pages, Paperback

Published April 1, 2016

8 people are currently reading
58 people want to read

About the author

Vaikom Muhammad Basheer

77 books1,533 followers
Vaikom Muhammad Basheer is regarded as one of the prominent literary figures ever existed in india. He was a legend in Kerala.

He was one of those outspoken figures who revolutionized Malayalam Literature, and Thus the World Literature itself with his dauntless sarcasm, satire, and black humor.

Often referred to as the Beypore Sultan (the king of Beypore) by the colleagues, he was one of the prominent figures behind the artistical, economical, and social reformation of the Kerala Culture.

His novel Shabdangal (The Voices) was once banned due to its echo that cyclonized a once feudalistic society.

He is also regarded as the translators nightmare. This is mainly because of the colloquial touch he added to his writings, which ethnically speaking would lose its humor and meaning when translated to other languages.

He was the sufi among the writers and and the greatest exponent of Gandhian Thought.

He was awarded with Padma Sri in 1982 for his overall contributions to nation as a freedom fighter, writer, and as a political activist.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
19 (50%)
4 stars
16 (42%)
3 stars
3 (7%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Sharavanan Kb.
35 reviews26 followers
May 12, 2021
புத்தகத்தின் பெயரில் முழு தொகுப்பு என இருந்தாலும் இதில் 8 நாவல்கள் மட்டுமே உள்ளது.

அனைத்தும் அருமையான கதைகள், காதல் , காமம்,மகிழ்ச்சி, வருத்தம், வறுமை,குடும்பம், பாசம், நகைச்சுவை என உணர்வுகளை கதைகளாக உருமாற்றி வாசகர்களுக்கு படைத்திருக்கிறார்.

இனி கதைகளை பற்றிய சிறு குறிப்புகள்.,

பால்யகால சகி - சிறுவயது நட்பு காதாலாக மாற அது கைகூடாமல் போக மீண்டும் விதி வசத்தால் காதலர்கள் ஒன்றாக சேர பொருள்தேடி சென்ற காதலன் விபத்தில் காலை இழக்க காதலி நோயால் உயிரழக்கிறார் மிகவும் சோகமான கதைதான் ஆனாலும் கதை மாந்தர்கள் யாரும் எந்த சூழ்நிலையிலும் நம்பிக்கை இழப்பதில்லை கடவுளை நம்புகிறார்கள், சக மனிதர்களை நம்புகிறார்கள், நடப்பவை அனைத்தும் அல்லாவின் விருப்பம் என வாழ்வை எதிர்கொள்கிறார்கள்.

சபதங்கள் - மனம் பிறழ்ந்த ராணுவ வீரன் தன் வாழ்க்கையின் அனுபவங்களான போர்,காதல் , நோய் , ஆண் விபச்சாரம் என பலவற்றை எழுத்தாளரிடம் பகிர்ந்து கொள்வதுபோல் எழுதப்பட்ட கதை.

என் உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது - செல்வசெழிப்பிலிருந்து வறுமைக்கு வந்த குடும்பத்தில் தனது பிறந்தவீட்டு பெருமையை எப்போதும் பேசி திரியும் , தனது வறுமைக்கு காரணம் தன் கணவன்தான் என எப்போதும் திட்டி தீர்க்கும் தாய் , முடிந்தவரை தன் மனைவியை சகித்து கொண்டு எதாவது செய்து பிழைப்பை நடத்தும் தந்தை , இவர்களின் இளம் வயது பெண் , அவளுக்கு ஏற்படும் காதல் என கேரள இஸ்லாமிய பின்னனியில் எழுதப்பட்ட கதை.

மூணு சீட்டு விளையாட்டுகாரனின் மகள் - மூணு சீட்டு ஆட்டம் மூலம் எமாற்றி பணம் சம்பாதிப்பவனின் அழகிய மகளை பிக் பாக்கெட் ஒருவன் காதலிக்கிறான் அதை அவன் எதிர்க்கிறான் ஆனால் அவனது மகள் மற்றும் அவளது காதலன் சமயோசிதமாக செயல்பட்டு அவனது சம்மதத்துடன் திருமணம் செய்து டீ கடை நடத்தி பிழைக்கின்ற ஒரு ஜாலியான கதை.

ஆனைவாரியும் பொன்குருசும் - இது இரு கதாபாத்திரங்களின் பெயர் இவர்களுக்கு ஏன் இந்த பெயர் வந்தது என்பதை நகைச்சுவையாக சொல்லும் கதை.

பாத்துமாவின் ஆடு - இதில் எழுத்தாளரின் தாய் , சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்களே கதை மாந்தர்கள் . பஷீர் அவர்களின் தங்கை பாத்துமா வளர்க்கும் ஆட்டினை மைய்யமாக வைத்து குடும்ப உறுப்பினர்களின் ஏனைய நடவடிக்கைகளை இனைத்து சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார்.

மதில்கள் - சிறைகைதிகளின் காதல், பாலியல் சிந்தனைகள் , பெண்களின் மீதான ஏக்கம் இவற்றை இலேசாக தொட்டு ஒரு அழகான காதல் கதையை தந்திருக்கிறார்.

காதல் கடிதம் - ஒர் அறையில் தங்கி வங்கியில் வேலை பார்க்கும் திருமணம் ஆகாத ஆண் மற்றும் அந்த அறை உரிமையாளரின் மகள் இருவருக்கும் ஏற்படுகின்ற தூய்மையான காதலை சொல்லியிருக்கும் கதை.

வைக்கம் முகமது பஷீர் அவர்களின் புத்தகத்தை விமர்சிக்கவோ பரிந்துரைக்கவோ எனக்கு எந்த தகுதியுமில்லை , காரணம் அவரது வாழ்வியல் அனுபவங்கள் , எழுத்து , அவர் பெற்ற விருதுகள், புகழ் போன்றவை மிகவும் பெரிது. அவர் எழுதிய நாவல்களில் சிலவற்றை படித்திருக்கிறேன் என இனி நான் பெருமையாக சொல்லிகொள்வேன் :-)
Profile Image for Kalaiselvan selvaraj .
134 reviews18 followers
September 17, 2018
பலதரப்பட்ட மனிதர்கள், பல ஊர்கள்,சில நாடுகள்,சுற்றி மனிதனின் வாழ்வின் இன்பத்தையும் துன்பத்தையும் இரண்டரை கலந்து உருவானவை பஷீர்’ன் எழுத்துக்கள். பஷீர் படைப்புகளை தமிழாக்கம் செய்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

பஷீர் படைப்புகளில் இருந்து சில வைர வரிகள் :

மனிதர்கள் எல்லா இடங்களிலுமே ஒரேபோல்தான். மொழியிலும் உடையிலும் மட்டும்தான் வேறுபாடு. எல்லாருமே, ஆண் பெண்.பிறந்து,வளர்ந்து,இணைசேர்ந்து உற்பத்தியைப் பெருக்கி... பின்பு, மரணம். அவ்வளவுதான்! ஜனன-மரணங்களினிடையே உள்ள பெருந்துன்பம் எல்லா இடங்களிலும் ஒன்றுபோல்தான். - பால்யகால_சகி

இராணுவ வீரனின் கடமை என்ன? முடிந்தவரைக்கும் மற்ற மனித உயிர்களை கொல்வது..! நானும் கொன்றேன். சில அசிங்கப்பிறவிகள் இந்த நாட்டையாள்வதற்காக-நான் சொல்லவருவது,உலகின் யுத்த இரத்த வெறிபிடித்த தலைவர்களைப் பற்றித்தான். போர்களத்தில் இவர்கள் யாரும் இருப்பதில்லையல்லவா? இவர்களுடைய மனைவி மக்களும் இறக்கமாட்டார்கள். ஆகவே, இது மக்களின் யுத்தம்.நாசகார ஆயுதத் தளவாடங்களுடன் மக்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து நின்று துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் கூரான பயனட்டுகளால் நெஞ்சைப் பிளந்தும் பரஸ்பரம் கொன்றொழிகிறார்கள். ஆகவே, இது மக்களின் யுத்தம்! யாரிந்த மக்கள்? - சப்தங்கள்.


“இந்த மதங்களையும் அரசியலையும் எடுத்துக்கொள்ளுங்கள். எல்லாருமே கலகம் செய்கிறார்கள்; கொலைசெய்கிறார்கள்.இவர்களுடைய நோக்கம்தான் எதுவாக இருக்க முடியும்?”

“இவங்களோட நோக்கத்தின் உச்சத்துலே அதிகார மோகமிருக்கு.அதாவது முஷ்டி பலம்.”

“எதற்காக?”

“இந்த உலகத்திலுள்ள மனிதர்களையும் மற்றெல்லா உயிர் ஜீவன்களையும் அடக்கியாள்றதுக்கான ஆசை. மதங்கள், கடவுளர்களின் பெயரிலும் கடவுள் நம்பிக்கையில்லாதவன் சுய விருப்பத்தை முன்னிறுத்தியும் இதுக்கு ஆசைப்படுறான்.” - சப்தங்கள்.

-கலைச்செல்வன் செல்வராஜ்

108 reviews3 followers
March 9, 2024
பஷீர் நாவல்கள் முழு தொகுப்பு பதிப்பகம் காலச்சுவடு

மொத்தம் எட்டு குறுநாவல் கொண்ட தொகுப்பு
பால்யகால சகி
சபதங்கள்
எங்க உப்பப்பாவுக்கொரு ஆணையிருந்தது
மூணு சீட்டு விளையாட்டுக்காரனின் மகள்
ஆனைவாரியும் பொன்குருசும் பாத்திமாவின் ஆடு
மதில்கள்
காதல் கடிதம்

வலி, அன்பு, காதல் , பகடை, கயமை, மயக்கம், சுதந்திரம், வேட்கை, அறியாமை, பகைமை பஷீரின் எழுத்துக்களை ஒரு சில சொற்களில் வர்ணித்துவிட முடியாது!

தன்னையும் தன்னை சுற்றி உள்ள மனிதர்களையும் வைத்து அவர் கதைகளையும் மற்றும் நிஜ சம்பவங்களை வைத்து எழுதி உள்ளார் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு நாவலையும் படிக்கும் போது ஒவ்வொரு உணர்ச்சி மேலிடுகிறது. சிலவற்றில் கண்ணீர் சில வற்றில் ஆனந்தம், ஆனால் எல்லாமே மனிதத்தின் வாழ்க்கையை மட்டுமே பிரதிபலிக்கிறது.  பஷீரின் உலகம் என்றுமே உயிர்ப்புடன் தான் இருக்கிறது, உயிரற்ற ஒரு சடலத்தை அவர் என்றுமே உற்று நோக்கியது இல்லை என்று தோன்றுகிறது.

காற்று அடித்தால் இலைகள் உதிர்த்தார் செய்யும், ஒரு காய்ந்த மரக்கிளை விளையாட்டு அதைத்தான் செய்யும் அதை எண்ணி மரத்தில் தான் இருக்கும் நாட்களை கொண்டாடமல் விடுவது அறியமை. மதில்கள் மேலே விழும் ஒரு சிறு குச்சிக்கு நானும்ஏங்கினேன். ஒரு மூணு சீட்டுக்காரண் தோற்றது போல நானும் தோற்றுக் கொண்டே இருந்தேன் இதைவிட என்ன வேண்டும் ஒரு வாசகனுக்கு.

ஜேப்படி எப்படியான வித்தை, யானை திருட்டு ஸ்வரங்கள் இருந்ததாகவும் சுவாரஸ்யங்கள் நிறைந்ததாகவும் அன்றாட வாழ்வு பிரதிபலிப்பாகவும் அன்றைய காலகட்டத்தில் அரசியல் சூழலையும் கண்முன் காண்பிக்கிறது.
இந்நாவல்களை வாசிக்க காரணமான கார்த்திக்கு நன்றி எனது தோழர்களுக்கு,தோழ���களுக்கும் மனமார்ந்த நன்றிகள் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தோன்றும், வாசிக்க வேண்டிய எழுத்து.

புத்தகத்திலிருந்து:
மழை பெய்து கொண்டிருக்கிறது. புது மண்ணின் வாசம். ஆட்கள் பேசி சிரித்தபடி போகிறார்கள். பகல்தான். பருந்தொன்றின் அழுகை குரல் கேட்கிறது. அதை பார்க்க முடியவில்லை. இருந்தாலும் அது ஆகாயத்தில் அப்படியே  வேகவேகமாக சிறகுகள் அசையாமல் பறந்து கொண்டிருக்கிறது.

வாழ்க்கை, இளமைச் சூட்டுனும் இதயம், காதலின் அழகுமணத்துடனும் இருக்கும் இந்தக் கிடைத்தற்கறிய காலகட்டத்தை என் அன்பு தோழியே எப்படி செலவிடுகிறாய்?

இருட்டையும் சரியாக பார்க்க முடியவில்லை. ஒன்று மட்டும் புரிந்தது. நான் இதுவரை இருட்டை பார்த்ததில்லை. எதையும் பார்க்க முடியாத அற்புதமான காரிருளே! முடிவற்ற ஆகாயப் பரப்பில் மின்னி மின்னிச் சுடரும் கோடி கோடி நட்சத்திரங்களே! நிலவொளி ததும்பும் மோகன மோகனமான இரவே!
Profile Image for Ananthaprakash.
84 reviews2 followers
June 12, 2023
பஷீர் நாவல்கள் - வைக்கம் முகம்மது பஷீர்

பஷீர ஒரு மகத்தான மனிதராகவோ, சிறந்த மலையாள எழுத்தாளராகவோ, தீவிர அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டவராகவோ, வயது முதிர்ந்த காலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவராகவோ இப்படியெல்லாம் தெரியும் முன்பே எனக்கு பஷீர் எப்படி பரிச்சயம்னா - பஷீர் அவரோட வாழ்க்கையில சந்தித்த இல்ல சந்தித்ததாக சொல்லப்படுகிற ஒரு திருடன் மூலமாக தான்.

ஆமா தன்னை ஏமாற்றிய, இருந்தாலும்கூட தக்க சமயத்தில் உதவி செய்த பெயர் தெரியாத மனிதநேயமுள்ள அந்த திருடனுக்கு , பரவாயில்ல பெயர் தெரியல என்றாலும் இந்த உலகத்துல அவனுக்கு இரண்டே பெயர் தான் இருக்க முடியும் அது அறம் அல்லது கருணை தான்னு சொல்லி ஒரு திருடனை அறிமுகப்படுத்திய எழுத்தாளனாக தான் எனக்கு பஷீர தெரியும்.

பஷீர் ஏன் மகத்தான எழுத்தாளர் என்கிற கேள்விக்கு அவர் யாரை கதாபாத்திரமா தன் கதையில வைக்கிறார்னு பார்த்தாலே புரியும். இந்த சமுகம் உதிரி மனிதர்களாக யாரை நினைக்கிறதோ, யாருடைய இருப்போ, இறப்போ இந்த சமுகத்தை எந்த வகையிலும் பாதிக்காதோ

அந்த மனிதர்களாகிய திருடர்கள்,குற்றவாளிகள், பிக்பாக்கெட் அடிப்பவர்கள்,கோமாளிகள்,சிறை கைதிகள்,பாலியல் தொழில் செய்பவர்கள் - அவர்களின் விருப்பு வெறுப்புகள், அவர்களுக்கான உணர்ச்சிகள் மற்றும் இச்சைகள்,வாழ்க்கை நடைமுறைகள் இதை எல்லாவற்றையும் எந்த முன் முடிவுகளும் இல்லாம தன்னோட கதைகளில் எழுதியிருக்காரு பஷீர். சில கதையில அவரே தன்னோட கதையோட கதாபாத்திரமாகவும் இருக்காரு.

பெரும்பாலான கதைகள் சுய பெருமை பேசுற மனநிலையோ இல்ல மத நம்பிக்கையின் பெயரில் கடைபிடிக்கப்படும் பிற்போக்கு தனங்களையும் பற்றியே தான் பேசுது. ஆனா இது எதையும் சரி, தவறு என்கிற விவாதமாக இல்ல தன்னுடைய அபிப்பிராயம் இது தான் என்கிற பாணியிலோ பேசல.

மாறாக அழுக்கும், அன்பும் நிறைந்த இந்த பரந்துபட்ட சமுகத்திற்கு முன்னாடி மிகப்பெரிய கண்ணாடியை வைத்தா எதை பிரதிபலிக்குமோ அதை தான் பஷீரும் எழுதியிருக்கார். அந்த மிகப்பெரிய கண்ணாடி தான் பஷீர் அதன் பிரதிபலிப்பு தான் அவரின் எழுத்துகள். இந்த உலகை அதன் சகல நிறை, குறைகளோடு நேசித்த எழுத்தாளன் தான் பஷீர்.

சில கதைகள் முழுதும் முடிவு பெறாமல் ஏதோ ஒரு இடத்தில் தொக்கி நிற்கிற இடங்களை எல்லாம் வாசிக்கும் போது "சப்தங்கள்" கதையில வர நாயகன் தான் பஷீரோ என நினைக்க தோன்றுகிறது. என்னோட அபிப்பிராயங்கள், முடிவுகள் அல்லது ஏதோ ஒன்றன் பக்கம் மட்டும் சாய்வது எதற்கு, அவரவர் சுயமாக சிந்தித்து அறிந்துகொள்ளட்டும் என்கிற மனநிலையில் எழுதியது என்று தான் நினைக்க தோன்றுகிறது.

மனிதன் எதையும் சாராமல் இருக்க முடியாத என்கிற கேள்வியையும் கூட அவருக்கு மதில்கள் கதையில இருக்கு.

தொகுப்பை படித்ததும் எல்லா கதைகளுக்குமான என்னோட உணர்வுகளை தனித்தனியே பகிர முடியலையே என்கிற எண்ணம் தான் இருந்தாலும் பரவாயில்லை.

🔸️பால்யகால சகி - பால்ய கால சகி கொடுத்த முதல் முத்தமும், சுகறா, மஜீதின் நிகரில்ல காதலும், மனித வாழ்வின் கருணையே இல்லாத எதார்த்தமும்.

🔸️சப்தங்கள் - ராணுவ வீரரான, நோயால் பாதிக்கப்பட்டு, தனிமையில் இருக்கும் மனிதனின் தர்க்கரீதியான விவாதங்களும், கேள்விகளும்.

🔸️எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது - மூட நம்பிக்கைகளில் ஊறிப்போன, வறுமையின் போதும் கூட சுய மற்றும் பழைய பரம்பரை பெருமைகளை பேசிக்கொண்டு இருக்கும் குடும்பமும் அது அனைத்தும் அடுத்த தலைமுறையால் தகர்க்கப்படும் போது ஏற்படும் புரிதலும்.

🔸️மூணுசீட்டு விளையாட்டுக்காரனின் மகள் - ஒத்தைக்கண்ணன் பாக்கரை, மடையன் முத்தப்பா எப்படி மூணு சீட்டு விளையாட்டில் வென்றான் என்பதும்.

🔸️ஆனைவாரியும் பொன்குருசும் - திருடர்களான ராமன்நாயர் மற்றும் தோமாவும் எப்படி ஆனைவாரி ராமன்நாயராகவும், பொன்குருசு தோமாவாக மாறினார்கள் என்கிற கதையும்.

🔸️பாத்துமாவின் ஆடு - பாத்திமாவின் ஆடும், வளர்க்கப்படும் பிற உயிர்களும், மரங்களும், மனிதர்களும் அவற்றின் தேவைகளும், உரையாடல்களும்.

🔸️மதில்கள் - சிறை சாலையின் மதில்களுக்கு இடையே மட்டும் பகிரப்பட்ட முகம் கூட பார்க்காமல் வெறும் உரையாடல்களாலும், உணர்வுகளாலும் பகிரப்பட்ட காதலும்.

🔸️காதல் கடிதம் - கேசவன் நாயருக்கு சாராம்மாவின் மீதான அளவு கடந்த காதலும் எழுதிய காதல் கடிதமும், அவளுக்காக அவன் பார்த்து வைத்த வேலையும் அதற்கான ஊதியமும், அவர்கள் இருவரும் எப்படி ஆகாசமிட்டாயின் அச்சாவாகவும், அம்மாவாவும் மாறினார்கள் என்பதும் மட்டும் போதும்மென நினைக்கிறேன்.

மனித வாழ்வின் அற்பங்களையும், அற்புதங்களையும் ஒரு சேர தரிசிக்கனுமா பஷீரின் நாவலை படியுங்கள்.
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.