மணற்கேணியில், நீண்ட கதைகளாக எழுதப்பட வேண்டியவை, கதையம்சமே அற்ற நினைவலைகள் போன்றவை, கவிதையாக எழுதப்பட வேண்டிய தருணங்கள், சாதாரணப் பார்வைக்கு எளிதாகத் தப்பிவிடும் சின்னஞ்சிறு பிறழ்வுகள், யாரும் எதிர் கொள்ளக்கூடிய கணங்கள்,
கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தின் பிரத்தியேக அனுபவங்கள் என்று பல்வேறு விதமான சந்தர்ப்பங்களைக் குறுங்கதை வடிவில் எழுதிப் பார்த்திருக்கிறேன்.
இவற்றை எழுதும்போது நான் அடைந்த கிளர்ச்சி அபரிமிதமானது.
மிகக் குறைந்த வார்தைகளில் வாக்கியங்களை உருவாக்க முடிந்ததும்,மிகக் குறைந்த வாக்கியங்களில் மனிதர்களும் இடங்களும் உருவான விதமும் பெரும் போதையை அளித்தன.
உரையாடல், விவரணை, விசாரணை என்று புனைகதையின் அடிப்படைத் தேவைகளை நிறை வேற்ற எவ்வளவு குறைவான மொழிப் பிரயோகம் போதுமானதாய் இருக்கிறது என்பது தொடர்ந்து ஆச்சிரியம் தந்தவாறிருந்தது.
- யுவன் சந்திரசேகர்.
This ebook is a product of Kizhakku pathippagam, which is a imprint of New Horizon Media Private Limited (NHM).
Yuvan Chandrasekar (b. 14 December 1961) is a Tamil writer, poet, translator, whose works bring out a postmodern aesthetic. He wrote poetry under the name of M. Yuvan. Yuvan Chandrasekar's works express a kind of magical realism which he classifies as 'alternate reality'.
படிக்க ஆரம்பித்ததில் இருந்து இன்று முடிக்கும் நேரம் வரை, கிருஷ்ணனின் அனுபவங்களோடு நானும் பயணித்து வந்துள்ளேன். கிருஷ்ணன் பார்த்த மனிதர்கள், அவருக்கு கிடைத்த அனுபவங்கள், அவர் சென்ற இடங்கள், அவருடைய எண்ணங்கள் எல்லாமே தோளில் கை போட்டு பேசி செல்லும் ஒரு தோழனின் நெருக்கத்துடன் மனக்கண்ணில் வருகின்றன.