தமிழீழம் பற்றிய நூல்களை படிக்க வேண்டும் என்கிற முனைப்பில் வெகு நாட்களாய் தேடிக் கொண்டிருந்த போது, ஜெயமோகனின் ஈழம் சார்ந்த கட்டுரைகளில் ஷோபா சக்தி என்னும் எழுத்தாளர் எனக்கு அறிமுகம் ஆனார். பிறகு, இவரது " சுண்டி வீரன் " மற்றும் " BOx " என்னும் நூல்களை வாங்க ஆசைப்பட்டு " ம் " என்னும் தலைப்பிலும் மற்றும் ஒரு சிறுமி கர்ப்பமாக இருக்கிறாள்; அவளது தந்தை ஒரு போராளியாய் என்ன செய்ய போகிறார் ? என்ற மூலக்கதையில் ஈர்க்கப்பட்டு வாங்கி விட்டேன்.
கதை சொல்லியாக; நான் தேர்ந்தெடுத்து வாங்கும் நூல்கள் என்னை திருப்தி படுத்தியே தான் இருக்கிறது. இதுவும் கூட அப்படிதான், நேரான பாணியில் இல்லாமல் NonLinear முறையில் கூறி; முடிவில் ஏன் ? எதற்கு ? இப்படி என யோசிக்க வைத்து அமைதியில் முடிந்தது.
இதில் கூறப்பட்டுள்ள; எது புனைவு, எது வரலாற்றுப் பின்னணியில் இருக்கிறது, எது பயங்கரவாதத்தின் உண்மை என படித்து முடித்த கையோடு தனியே நம்மை தேடவும் வைத்து விடுகிறார். வெலிக்கடை படுகொலை, மட்டக்களப்பு சிறை உடைப்பு போன்ற சம்பவங்கள் எல்லாம் பரப்பப்பூட்டுவதை தாண்டி அதனோடு ஈடுபடுத்தி நகராது மனதில் பதிந்து விடுகிறது.
நிறைய கதாபாத்திரங்கள், நிறைய கொடுமைகளுக்கு நடுவில் வரும் இந்த வேலைக்கார சிறுவன் இராசேந்திரன் போராளி ஆன கதை, பின்; மாய்ந்த கதை என இந்த பகுதி என்னை மிகவும் பாதித்த பகுதி. கண்முன்னே அச்சிறுவனின் சடலம் மிதந்தது போல ஒர் உணர்வு.
சில பிடித்தமான வரிகளைப் பற்றி சொல்ல வேண்டுமானால்;
" இருட்டுக்குள் வெள்ளைப் புள்ளிகளாக அவர்கள் சிறையின் நான்கு திசைகளிலும் பரவினர் "
சிறுபான்மையினராய் தெரிந்தாலும் இவர்கள் ஒற்றுமையில் ஏனோ, பெரும்பான்மையினரே !!
படகிலே பயணம் செய்து கொண்டு உரையாடுகிறார்கள்;
" ஆறு மறுபடியும் இருண்டபோது நான் விடுதலையை அதன் முழு அர்த்தத்தோடு அனுபவித்தேன் "
" என்னால் கேட்கமுடிகிறது,
மீன் பாடுகிறது "
" சுதந்திரம், புதியவாழ்வு, புத்துணர்ச்சி "
ஒரு வாசிப்பைவிட, நீண்ட நாளுக்கு பிறகு மறுமுறை இதை கண்டிப்பாய் வாசித்தால் இன்னும் சற்று புரிதல் ஏற்படாம் !!
வாசியுங்கள் 🙂