Jump to ratings and reviews
Rate this book

உணவு யுத்தம் [Unavu Yutham]

Rate this book
‘உயிர் வாழ்வதற்கு மட்டுமே உணவு’ என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத ஆரம்ப நிலை. அதுவே, ‘உணவு என்பது மருந்து’ என்று எண்ணுவது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு. முதல் நிலையில் உடலுக்கு எது நன்மை என்று ஆராயாமல் ஃபாஸ்ட், ஜங்க் ஃபுட்களையும், காற்றடைத்து உப்பிய உரையில் -‘படம் எடுத்து ஆடும்’, காரசாரமான நாகரீக பொட்டேடோ சிப்ஸ்களையும் வரட்டு கௌரவத்துக்காக உண்பது. தற்கால நிலையில் கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர் வாய் ருசிக்காக மட்டுமே வசீகரமான உணவுகளை உட்கொள்கின்றனர் என்ற ஆதங்கத்தையும், எதிர்கால சந்ததியைப் பற்றிய கவலையையும் தவறான உணவை உண்பதை எப்படித் தவிர்த்து ஆரோக்கியத்துக்காக நம் பாரம்பரிய உணவை உண்பது என்பதைப் பற்றியும் விரிவாக எழுதி, ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் நூல் ஆசிரியர். யுத்தம் என்றாலே தனி நபர் ஒருவரின் போராட்டமல்ல; நாடே ஒன்று இணைந்து யுத்தம் புரிய வேண்டிய வலிமையான எதிரி ஒருவன் இருக்கிறான் என்று புரியும். உலகச் சந்தை என்ற போர்வையில் சுயநலக்காரர்கள் கடை விரிக்கும் எதிரியைப் புரிந்துகொண்டு தீய உணவுக்கும், நோய்களை உண்டாக்கும் உணவுக்கும் எதிராகப் போராட வேண்டி இருப்பதை விளக்குகிறார். பாரம்பரிய தானியங்களின் நன்மைகளையும், உணவு தயாரிக்கும் பக்குவத்தையும் நாம் அசட்டை செய்வதைப் புரிந்துகொண்டு, வளரும் நம் சந்ததிக்கு சரியான விழிப்பு உணர்வை ஏற்படும் விதத்தில் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. ஜூனியர் விகடனில் தொடராக வந்து வாசகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது. அடுத்த சந்ததியையும் தோள் சேர்த்துக்கொண்டு யுத்தத்தை வெற்றிகரமாக முடிப்பது இப்போது நம் அனைவர் கையிலும் இருக்கிறது!

279 pages, Hardcover

First published January 1, 2014

20 people are currently reading
277 people want to read

About the author

S. Ramakrishnan

163 books663 followers
S. Ramakrishnan
(Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)

is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.

Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.

His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
48 (40%)
4 stars
56 (47%)
3 stars
12 (10%)
2 stars
1 (<1%)
1 star
2 (1%)
Displaying 1 - 18 of 18 reviews
Profile Image for Aravinthan ID.
145 reviews17 followers
December 21, 2015
நாம் தற்போது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பல்வேறு உணவுகளைப் பற்றி குறுப்பாக துரித உணவுகள் பற்றி, அதன் வரலாறு, பெயர்க் காரணம், தயாரிக்கப்படும் முறை, அவற்றில் கலப்படம் செய்யப்படும் பொருட்கள் மறறும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றியும் தெளிவாக ஆதாரத்துடன் ஆசிரியர் எழுதியுள்ளார். பன்னாட்டு நிறுவனங்கள் உணவுப் பொருட்களை வைத்து செய்யும் அரசியல், வித விதமான விளம்பர உத்திகளை் உபயோகித்து மக்களை கவர்ந்திழுக்கும் முறைகளைப் பற்றியும் விரிவாக எழுதியள்ளார். மேலும் நம்முடைய பழங்கால மற்றம் பாரம்பரிய உணவுகள் பற்றியும், அவை எவ்வாறு நம்முடைய சூழலுக்கு ஏற்றது எனவும் அதன் அளவற்ற நண்மைகள் பற்றியும் அருமையாக விளக்கியுள்ளார்...
Profile Image for Karunakaran Palanichamy.
33 reviews4 followers
May 10, 2021
அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம். நூறு புத்தகங்கள் படித்த அனுபவத்தை இந்த புத்தகம் கொடுத்தது .
Profile Image for Karthikeyan Radha.
26 reviews1 follower
April 21, 2025
உணவு அரசியல் என்ற வார்த்தையை எங்கோ கேட்டு, உணவில் ஏது அரசியல் என்று அதைப் பற்றித் தேடும் போது விழிப்புணர்வாக இருந்தது. அப்படி தேடியதில் கிடைத்த புத்தகம்தான் உணவு யுத்தம்.

இந்தியாவிற்குள் ஆங்கிலேயர்கள் நுழைந்ததற்கு மிளகை மலிவாக வாங்கிச்செல்வதற்காகத்தான். ஆனால் உப்பிற்கு நாம் வலுக்கட்டாயமாக ஆங்கிலேய அரசுக்கு வரி செலுத்தியிருக்கிறோம். தேயிலை தோட்டந்தில் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிறோம். செயற்கை பஞ்சத்தில் உயிர் இழந்து இருக்கிறோம்.

கெட்சப் இல்லாத உணவகம் என்பதால் அவற்றை தவிர்த்து வேறு உணவகத்திற்கு செல்கிறோம். ஆக, ஒரு உணவகத்தை தேர்ந்தெடுப்பதை கெட்சப் முடிவு செய்கிறது. ஆனால் கெட்சப்பிற்கு உகந்த சதைப்பற்றுள்ள மரபணு மாற்றம் செய்யப்பட்ட தக்காளியை விளைவிக்க இத்தாலிய தக்காளி தோட்டங்களில் ஆப்பிரிக்க மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாட்டு அகதிகள் கொத்தடிமைகளாக வேளை செய்கிறார்கள்.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை சார்ந்தது. நாம் அரிசி, கோதுமை, பால் சார்ந்த உணவுப்பொருட்கள், தேயிலை, மிளகு, ஏலக்காய் போன்ற தரமான பொருட்களை ஏற்றுமதி செய்துவிட்டு அயல் நாட்டு உணவுகளை வாங்கி உண்கிறோம்.
பெருநகரங்களில், அலுவலக விருந்திற்கோ அல்லது மதிய உணவிற்கோ நாம் டோமினோஸ், பீட்சா ஹட், கே எஃப் சி போன்ற பண்பாட்டு உணவகத்தைதானே தேர்ந்தெடுக்கிறோம்.

மனிதர்கள் வாழக்கூடிய இயற்கை சூழலை பொருத்து உணவுப் பழக்க வழக்கம் மாறுபடும். அனைத்து மக்களுக்கும் ஒரே உணவு என்பது சந்தையை விரிவுபடுத்த பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் முயற்சி. நாம் வாழும் இடத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் சுற்றி விளையக்கூடிய உணவுப்பொருட்களை உட்கொள்வது உடலுக்கு உகந்தது என்பார்கள்.

புத்தகத்தில் உள்ள சில தலைப்புகள்,
*வேர்கடலை பெருகிய கதை,
*உணவுப் பொய்கள்,
*தியேட்டரும் பாப்கார்னும்,
*இது ஓட்ஸ் அரசியல்
மேலும் பல……..

வாழைப்பழ யுத்தம், உருளைகிழங்கு உலகை இணைக்கிறது போன்ற தலைப்புகள் என்னை மிகவும் கவர்ந்தது.
Profile Image for MAHENDRAN S.
19 reviews
March 29, 2023
உணவு யுத்தம் என்பது நிஜத்தில் துப்பாக்கி முனையில் ஒரு நாட்டை கைப்பற்றுவதை விட உணவு சந்தை வழியே எளிதாக ஒரு நாட்டை அடிமையாக வைப்பது நடந்தேறி வருகிறது , நாம் அன்றாடம் ஆரோகியம் என நினைத்து கொண்டு சாப்பிடும் எந்த காய்கறி யும் ஆரோகிமானாது அல்ல அனைத்தும் வியாபார நோக்குடன் மரபு மாற்றம் செய்தது வெறும் உணவு தேவையை பூர்த்தி செய்ய கடுகு முதல் காய் பழம் தினை வரை எல்லாம் இப்பட்டியலில் ஆழமாக நீட்டித்து ராமகிருஷ்ணன் போடும் பட்டியல் நீள்கிறது அனைவரும் படித்து , பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் யுத்தத்தில் இருந்து நம்மை தற்காத்து நமது அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியமான உணவுவை கொடுக்க கடமைப்பட்டுள்ளோம்.
Profile Image for Ihthar Zeenath.
17 reviews1 follower
December 16, 2021
இலக்கியத்தினை தாண்டி ஒரு எழுத்தாளனின் சமூகப் பொறுப்பின் ஒரு வடிவமாகவே இந்த நூலை காண்கிறேன். சங்க கால உணவுக்கலன்களில் தொடங்கி நவீன உணவு சந்தையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஊடுருவல் வரை நீண்டு செல்கிறது இந்த நூல். வாழைப்பழதின் சந்தைக்காக ஒரு இனப்படுகொலையா !.... சாக்லேட் வணிகத்தின் பின்னணியில் அடிமை முறையா!.....டீயில் பிஸ்கட்டை தொட்டு உண்ணும் முறையை விளக்கும் இயற்பியல் விளக்கமா!.....என பல வியப்புக்குறிகளை நம்முள் வரைந்து செல்கிறார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.
6 reviews
July 20, 2020
The author guides you through every food that we come across every day and establishes the politics of government and food industries around it. He also establishes the history of food with reference. A very good read especially for those who are concerned about the way our earth progress with respect to food.
Profile Image for Anuradha Sridharan.
12 reviews6 followers
December 30, 2018
Interesting read that talks about the history and origins of many foods. Fascinating to read about how various commonly used ingredients and foods like potatoes, sabudana, bread etc made its way to India.
Profile Image for Maithili.
22 reviews2 followers
May 22, 2021
இந்த புத்தகத்தை மிஸ் பண்ணிடாதீங்க...
அப்புறம் வருத்த படுவீங்க!
June 22, 2022
உணவு பற்றிய குறிப்பிடத்தக்க தகவல்களை இந்த புத்தகத்தை வாசித்ததன் மூலம் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது‌.
Profile Image for Sriram Mangaleswaran.
176 reviews3 followers
October 15, 2022
S Ra never disappoints. Deals with different food habits and adulteration in it. Nice and must read for foodies.
5 reviews
May 30, 2023
நாம் உண்ணும் உணவு எவ்வளவு அரசியல் கடந்து நமது தட்டில் வந்து விழுகிறது என்பதை எஸ்.ரா அவர்கள் எளிய மொழியில் எழுதியுள்ளார்.
23 reviews2 followers
September 10, 2023
நிறைய விவரங்களை உள்ளடக்கிய புத்தகம்
188 reviews4 followers
Read
April 13, 2016
The book "unavu yutham" speaks much about food items which we often eat at home, or roadside or during some festive time wateva. Certain facts revealed with proof made my jaw drop on floor. The book was enlightening and clear eye opener for the false belief we have on it. Also it emphasizes how the food industries tracks our collective thinking on healthy diet stuffs and produces many food items claiming this would help reduce your weight, keep your waist line small or reduces risk of heart attack n many. All we can finally fathom is almost everything we have now is poisonous not the processed foods or non veg also fruits n vegetables since natural harvesting had been lost long back and we are using all form of urea, pesticides even seed we use is hybrid which are not truly provide the real value as the item claims to be. Suppose we say banana contains enough roughage and vital amines we get it after processing it with chemicals to improve color, chemical to grow it fast ,, chemical used for grow it long and chemicals used for few fruits which can be grown even when it is not seasonal. All we can do is get some good seed from karela or natural place and do terrace farming by ourself as nammalvar suggests and to some extent protect from severe harm to ourself and upcoming next generation.
Profile Image for Kracekumar.
41 reviews32 followers
January 31, 2016
உணவு யுத்தம், நாம் தினமும் உண்ணும் உணவு உருவான வரலாறு, காலப்போக்கிலடைந்த மாற்றம், அதன் பின் ஒளிந்திருக்ககும் அரசியல், பொய்கள், மறைக்கப்பட்ட உண்மைகள், விளம்பர மோசடிகளைப் பற்றி அவதானிப்பு.

நாம் தினமும் உண்ணும் இட்லி, உலகளிவில் காலை உணவுக்கு உகந்த பட்டியில் உலக சுகாதார அமைப்பால் (WHO) பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதை புரந்தல்லி காடைக்கண்ணி (oats) உட்க்கொள்ளும் பழக்கம் பெருகிவருகிறது. ஓட்ஸ் நிறுவனங்கள் விளம்பரத்திறக்காக இந்தியாவில் ஒராண்டில் செலவாகும் தொகை குளிர் பானம் விளம்பரத்தைவிட இருமடங்காகும். இது போல பல தரவுகளின் அடிப்படையில் புத்தகம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

வாழைப்பழ தேசம்[0]. வாழைப்பழம் வெப்பமண்டலப் பயிர். இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பா வளராது. வாழைப்பழத்திற்க்காக இலத்தீன் அமெரிக்கா நாடுகளை சுரண்டும் அமெரிக்காவின் அரசியல் [1], அதற்காக நடக்கும் ஒடுக்குமுறைகளைப்பற்றி சுருக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நூடுல்ஸ், டீ, பாப்கார்ன், காய்கறிகள், கேக், பேக்கரி, பாயசம், காபி, பிஸ்கட், பீஸ்ஸா போன்ற அன்றாட உண்ணும் உணவுகளைப்பற்றி தெளிவான பதிவு.

மேலும் படிக்க

Food Rules- http://michaelpollan.com/books/food-r...
பதார்த்த குண சிந்தாமணி -https://ta.wikipedia.org/s/2el0
அறியப்படாத தமிழகம் -https://www.goodreads.com/book/show/1...

[0]: https://en.wikipedia.org/wiki/Banana_...
[1]: https://en.wikipedia.org/wiki/United_...
37 reviews
Read
October 27, 2017
அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு உன்னதமான முயற்சியே இந்த உணவு யுத்தம். நாம் தினசரி பயன் படுத்தும் ,சுவைக்கும் பொருட்களில் ஒளிந்து கிடக்கும் வியாபார சந்தை அச்சரியப்பட வைக்கின்றது. வியாபாரம்,சந்தை என்கிற மேல் பூசில் நடக்கும் அத்தனை தந்திரங்களையும்,அதனால் பதிக்கப்படடவர்களை,பதிக்கப்பட்டுக்கொண்டிருப்பவர்களை பற்றி சொல்லும் அருமையான புத்தகம். நாம் தினசரி உண்ணும் உணவுகளில் உள்ள தீய பண்புகளை விளக்கமாக எடுத்துரைக்கிறார் எஸ் ரா.
1 review
Read
August 24, 2016
French fries originated in Belgium and lot of interesting news about food.good one
Displaying 1 - 18 of 18 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.