Balaji Srinivasan148 reviews10 followersFollowFollowJuly 9, 2016விஷ்வக்ஸேனன் எழுதிய செங்கதிர்மாலை போல் தடதடக்கும் வேகத்தில் இல்லை. சோழ மண்ணில் இருக்கும் ஒரு ஏழை விவசாயி மகன் சமய சந்தர்ப்ப சூழ்நிலையால் வீரனாகி சோழ மண்ணை ஆட்டி படைக்கும் ராட்டிரக்கூடர்களை விரட்டி அடிக்கிறார். பல்லவ மன்னன் நந்திவர்மன் ஆங்காங்கே ஈர்க்கிறார். ஆனால் முடிவில் அவர் செய்யும் காரியங்கள் சினிமா ரகம். ஒரு விவசாயி மகன், வாள் வீச தெரியாதவன் திடீரென ஊரே வியக்கும் வண்ணம் வீரனாக மாறுவதை இன்னும் சுவாரசியமான முறையில் சொல்லியிருக்கலாம். ஒரு முறை படிக்கலாம். :-)