யாரையாவது காதலிக்கத் துவங்கும்போதே இந்தக் காதல் நிச்சயம் ஜெயிக்காதோ என்று நினைக்கத் தூண்டும் அளவுக்குக் காதல் மிக மென்மையானது. ஆனால் தொடர்ந்து காதல் ஜெயித்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆண்தான் தோற்றுப் பின்வாங்குகிறான். பெண் எப்போதும் தோற்பதே இல்லை. அப்படி அவள் தோற்றுப் போகிறாள் என்றால் கொஞ்சமேனும் அவளிடம் ஆண்மை இருக்க வேண்டும். ஒரு ஆண் காதலில் ஜெயிக்கிறான் என்றால் கொஞ்சமேனும் அவனுள் பெண்மை இருக்க வேண்டும். மென்மையானது எங்குமே ஜெயிக்கிறது. கடினமானது எங்கும் தோற்றுத்தான் போகிறது.
ஒரு பெண் உண்மையாக ஒருவனை விரும்பினால் அவளிடம் எந்த ரகசியமும் இருக்காது. எல்லாவற்றையும் அவனோடு பகிர்ந்திருப்பாள். அப்போது அவளது இதயம் சுத்தமாகத் திறந்திருக்
வா. மு. கோமு ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியைச் சேர்ந்த சிறுகதை, புதின எழுத்தாளர். கொங்கு மண்டல வட்டார வழக்கில் கிராமம் சார்ந்த பாலியல் கதைகளையும் எதார்த்த இலக்கியத்தையும் படைப்பவர். தமிழின் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இவரது கதைகள் வெளியாகியிருக்கின்றன. இவரது தவளைகள் குதிக்கும் வயிறு என்ற சிறுகதைத் தொகுப்பு 2008ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதை பெற்றது.