Jump to ratings and reviews
Rate this book

குடி குடியைக் கெடுக்கும்

Rate this book
நூலகத்துக்கும் அலுவலகத்துக்கும் கோவில்களுக்கும் செல்லவேண்டிய கால்கள் இன்று முதலாவதாக மதுக் கடையை நோக்கிச் செல்வதற்கு ஆர்வம் காட்டுகிறதே காரணம் என்ன? குடியைக் கெடுக்கும் மதுக்கடைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அரசாங்கமே தன் குடிமக்களை குடிக்கு அடிமையாக்கி வைத்திருக்கிறது. சினிமாவும் மதுவை முதன்மைப்படுத்தி அதன் வளர்ச்சிக்கு ஊக்குவிப்பது கவலைக்கிடமே. மதுவை நாடுபவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. மதுவாலும் அதை நாடுபவர்களாலும் விளைவது என்ன? இந்த நூல் அதை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. பல குடும்பத்தில் கணவர், தகப்பன், பிள்ளை - என குடும்பத்தைக் காக்கும் பொறுப்பில் இருப்பவர்கள், மது என்னும் எமனுக்கு பலியாகி தன் குடும்பத்தினரின் வாழ்வை சின்னாபின்னமாக்கிச் செல்கிறார்கள். மது அடிமை என்ற நிலையில் இருந்து தன் கணவனை, தந்தையை, மகனை மீட்டெடுக்க ஒவ்வொரு தாயும், மனைவியும் சகோதரியும் படும் துயரம் தொடர்கதையாகிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு டாஸ்மாக் கடையும் ஒவ்வொரு கழிவறை. அந்தக் கழிவறையின் நாற்றத்தில் புரண்டு அங்கேயே நோயாளியாகி, வீட்டினரின் நல்வாழ்வையும் கெடுத்து விடுகிறார்கள். மக்கள் நலம் காக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும், பொது நல நோக்கோடு ஒவ்வொரு வரியிலும் ‘டாஸ்மாக்கை மூடு’ என்கிற கோரிக்கையை முன்வைத்து, அதற்கான காரணத்தை முன்வைத்திருப்பது இந்த நூலின் சிறப்பம்சமாகும். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மது இல்லா எதிர்காலம் உங்கள் கைகளில் என்பதை எடுத்துரைக்க காத்திருக்கிறது.

191 pages, Paperback

Published January 1, 2016

12 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (36%)
4 stars
3 (27%)
3 stars
3 (27%)
2 stars
0 (0%)
1 star
1 (9%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Kalaiselvan selvaraj .
135 reviews18 followers
September 18, 2018
தம் மக்கள் மது நோயாளியாக உருவாக அரசாங்கம் எந்த விதத்தில் உதவி செய்தது, குடி நோயாளியின் குடிப் பழக்கத்தால் அவனது குடும்பம் படும் இன்னல்கள், இளம் தலைமுறைகளிடம் குடிப் பழக்கம் சாதாரண செயல் என மாற்றம் கண்டுள்ளதை, மதுவின் பெயரில் நடைபெறும் அரசியல், மது என்னும் எரிசாராயம், மதுபான கடை விற்பனையாளர்களின் இன்னல்கள், மது கடைகளை மூட என்ன வழி - இந்த அனைத்து தகவல்களையும் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் விளக்கும் சிறந்த புத்தகம். ஆசிரியர் பாரதி தம்பி அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

குடி குடியைக் கெடுக்கும் - போதை தெளிவோம்.
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.