சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். ஐந்து கல்லூரி மாணவர்கள், ஒரு பேராசிரியர், கல்லூரி முதல்வர் ஒருவர். பேராசிரியர் மற்றும் முதல்வரின் மனைவிகள். இவர்களை சுதந்திரப் போராட்டம் எவ்வாறு பாதித்தது என்பதுதான் “சுதந்திரதாகம்” நாவலின் கதை. போராட்ட நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு, தேசபக்தி உணர்வு தலைதூக்கும்போது, இவர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்ற கதை அன்றைய வரலாற்று சம்பவங்களின் பின்னணியில் சொல்லப்படுகிறது. இந்திய சுந்தந்திரப் போராட்டத்தின் முக்கிய காலகட்டமான 1900 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திர இந்தியா வரையான காலகட்டத்தை புனைவெழுத்தில் சொல்லும் முதல் நாவல். எழுத்து பத்திரிகை மூலம் தமிழ் நவீன கவிதைக்கு ஒரு புது பாணியை உருவாக்கிக் கொடுத்த சி.சு.செல்லப்பா, உயிருடன் இருக்கும் காலத்தில் வெளியிட்ட கடைசிநாவல் சுதந்திர போராட்ட காலகட்ட இருந்த மதுரையின் முழுமையான வரலாற்று ஆவணம்.
சி.சு. செல்லப்பா (C.S. Chellappa) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.
பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.
Cinnamanur Subramaniam Chellappa (Tamil: சி.சு. செல்லப்பா) was a Tamil writer, journalist and Indian independence movement activist.He belonged to the "Manikodi" literary movement along with Pudhumaipithan, Ku Pa Ra, Va. Ramasamy, N. Pichamurthy and A. N. Sivaraman. He also founded Ezhuthu, a literary magazine. His novel Suthanthira Thagam won the Sahitya Akademi Award for 2001
வரலாறு நான் பள்ளி படிக்கும் போது ஏன் இவ்வளவு சுவாரஸ்யமாக இல்லை!! செல்லப்பா இந்த நூலை எவ்வாறு இவ்வகை எழுத முடிந்தது.. ஒரு மாணவ சமுதாயம் எவ்வாறு எல்லாம் போராடி இருக்கும் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.. மனிதர்கள் ஒரு மாயை.. அவர்களை கட்டுண்டு ஒரு தோணியில் பயணிக்க செய்த காந்தி... சூழல் , மக்கள் மன எழுச்சி, இன்றும் நாவலில் உள்ள பல அவலங்கள் தொடர்கின்ற.. காந்தி போல் இன்னும் எத்தனை மாந்தர்கள் வந்தால் இங்கே மனிதம் மென்மை பெறும்?.. ஒன்று மட்டும் நிச்சயம் நல் எண்ணம், நல்ல மனம் அதற்கு ஆன மனிதர்கள் நம்மை சுற்றி இருந்தால் யாவும் நலமே ... நான் பாரதியை இப்படி நேசித்த ஒரு எழுத்தாலனை கண்டதில்லை.. பக்கங்கள் 1500 ஆயினும், நம்மை கட்டுண்டு வாசிக்க செய்யும்..