What do you think?

மங்கலதேவி
மங்கலதேவி, பழிவாங்கும் விழிகள், மஸ்தானி, கோழைச் சோழன் ஆகிய நான்கு வரலாற்றுச் சிறுகதைகளின் தொகுப்பு
84 pages, Paperback
Published November 1, 2012
About the author
Sandilyan
77 books396 followersSandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.
சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.
பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.
கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
Displaying 1 - 5 of 5 reviews
October 17, 2018
நான்கு கதைகள் கொண்ட இப்புத்தகத்தில் முதலாவதாக வருவது மங்கலதேவி.பாண்டிய மன்னன் தன் எல்லைகளை விரிவுபடுத்த தடையாக இருக்கும் கொங்குநாட்டின் கோட்டையை அழிக்கத் தன் படைவீரனான ரகுவீரனை அனுப்பிவைக்கிறான்.கோட்டையில் இருக்கும் வீரர்களை வெளியே வர வைத்தால் மட்டுமே வெற்றி என்பதில் தெளிவான பாண்டிய அரசன் அக்கோட்டையைக் காவல் காக்கும் மங்கலதேவியிடம் ரகுவீரனை அனுப்பி வெற்றியை தன் வசமாக்கி கொள்கிறார்.
இரண்டாவது கதையான பழிவாங்கும் விழிகள் அந்தணன் ஒருவனை வீரனாகி தன்னைப்
பரிகசித்த பல்லவ மகளையே மணந்ததை சொல்கிறது.
காதலுக்கு ஜாதிகள் தடையில்லை என்பதை முஸ்லீம் பெண்ணை மணந்த அந்தண வீரனை பற்றி சொல்வது மூன்றாவது கதையான மஸ்தானி.
உலகை சுற்றி பார்க்க ஆசைப்பட்ட இளவரசன் நற்கிள்ளி தன்னைக் கோழையாகக் காட்டி மன்னனே நாடுகடத்த தூண்டி ஒராண்டுக்கு பிறகு தன் வீரத்தை காட்டி மணந்த நக்கண்ணையுடன் தந்தையைச் சந்திக்க வந்ததை சொல்வது தான் நான்காவது கதை கோழைச் சோழன்.

May 16, 2024
Though book is titled as MANGALADEVI , it’s a compilation of four short stories…all four stories are based on legends each from Pandiya,Pallava ,Maratha and chola dynasty..we can read the book Lin less than an hour…not to be missed.
February 25, 2025
மங்கலதேவி ❤️
•
பழைய புத்தகங்களை வைத்திருப்பதும், வாசிப்பதும், பக்கங்களை தொட்டுணர்வதும் ஒரு தனி இன்பமே. அவற்றின் அட்டைப்படத்தில் இருந்து எழுத்துருக்கள் வரை அனைத்தும் காலத்தை பின்னோக்கி இழுக்கும் வல்லமை கொண்டவை. 1995ல் பதிப்பாகிய இந்தப் புத்தகமும் அவ்விதமே. அச்சைத் தாங்கிய பக்கங்கள் 30 வருடங்களாகியும் அழகாய் கதை சொல்லிச் செல்கின்றன.
•
வரலாற்றுப் புனைவு கதைசொல்லலில் வல்லவரான சாண்டில்யனின் எழுத்தில் மங்கலதேவி, பழிவாங்கும் விழிகள், மஸ்தானி, கோழைச்சோழன் என்ற நான்கு வரலாற்றுக் கதைகளை உள்ளடக்கிய இப்படைப்பு பாண்டிய நாட்டில் தொடங்கி, பல்லவ நாட்டிற்குள் நுழைந்து, மகாராஷ்டுரதத்தில் சுழன்று, சோழ நாட்டிற்குள் பயணிக்கின்றது.

March 12, 2025
4 Different Stories..Good one to read
July 19, 2016
மங்கலதேவி, பழிவாங்கும் விழிகள், மஸ்தானி, கோழைச் சோழன் ஆகிய நான்கு சிறுகதைகளில் மஸ்தானி மட்டும் பரவாயில்லை ரகம்.மற்றைய மூன்றும் வெறுமனே பக்கங்களை நிரப்புவதற்காக எழுதப்பட்டவை என்று தான் எண்ணத் தோன்றுகின்றது
Displaying 1 - 5 of 5 reviews