Jump to ratings and reviews
Rate this book

அரசியல் பழகு

Rate this book

88 pages, Paperback

Published January 1, 2017

2 people are currently reading
99 people want to read

About the author

சமஸ்

9 books9 followers
சமஸ் (பிறப்பு: டிசம்பர் 4, 1979) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிக்கையாளர், உரையாளர். ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’, ‘தி இந்து’ தமிழ் ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ’அருஞ்சொல்’ இணைய இதழின் ஆசிரியர்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
13 (31%)
4 stars
23 (56%)
3 stars
4 (9%)
2 stars
1 (2%)
1 star
0 (0%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for Jagan K.
50 reviews15 followers
March 19, 2021
Having been a fan of Samas' writing this book is definitely a must read for anyone who has or doesn't or want to have a political opinion. It talks about the importance of the same with examples and real life case studies of a small change in your personal life can be the seed for a larger political revolution that we seek. As expected, Gandhian ideologies occupy the majority of the talking points but he also doesn't shy away from talking Gandhi's political/ideological opponents Periyar and Ambedkar. A very important and great book indeed
Profile Image for Kalaiselvan selvaraj .
135 reviews18 followers
April 24, 2020
அரசியல் ஒரு சாக்கட, அரசியல்வாதிங்க ஊழல் பெருச்சாலிங்க, எல்லாத்துக்கும் பணம் குடுத்தா தான் வேல ஆவும், அரசியலுக்கு இளைஞர் வரனும், படிச்சவன் வரனும் அப்பதான் எல்லாம் மாறும்(அப்ப படிச்சு பட்டம் வாங்கி அரசாங்க வேலைக்கு பரிட்ச்ச எழுதி அதுல பாஸ் பண்ணி பணியில அமரும் அதிகாரி ஊழலில் ஈடுபடும் போது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போதும் அவர் படித்து பட்டம் வாங்கியவர் என்பதை எல்லாரும் மறந்தராங்க) இந்த எண்ணம் மிக தவறானது.

மாற்றம் ஏற்பட நாம் உண்மையின் வழியில் நடக்க கற்று கொள்ளவும், அநீதியை எதிர்க்கவும் பழக்கப்பட வேண்டும். சுயநலம்(நமக்கு எதுக்கு வம்பு) நம்மை தடுக்கிறது.

நமது சுதந்திர தேசத்தின் ஜனநாயகம், உன் ஒரு ஓட்டின் ஆற்றல், நீ ஏன் அரசியல் அறிய வேண்டும் என்பன பற்றிய கட்டுரைகளின் தொகுப்பே அரசியல் பழகு. -கலைச்செல்வன் செல்வராஜ்.

அரசியல் பழகு புத்தகத்தில் இருந்த பல சிறந்த கட்டுரைகளில் ஒன்று,

ஓட்டதிகாரம் : முதல் தேர்தலையொட்டி, 22.11.1951 அன்று தன் வானொலி உரையில் நேரு குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் இந்தியத் தேர்தலின் பிரம்மாண்டத்தை நமக்குச் சொல்லும்: “மொத்தமாக 3,293 தொகுதிகள். மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை என மூன்று அவைகளுக்கும் சேர்த்து 4,412 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஏறத்தாழ 2.24 லட்சம் வாக்குச்சாவடிகள். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் உத்தேசமாக ஒரு வாக்குச்சாவடி அதிகாரி, நான்கு காவலர்கள், ஐந்து உதவியாளர்கள் தேவை. ஆகக் குறைந்தது 16,500 உதவியாளர்கள், 56,000 அலுவலர்கள், 2.8 லட்சம் தன்னார்வலர்கள், 2.24 லட்சம் காவலர்கள்…”

உண்மையான சவால் இதுவல்ல. ஓட்டு என்றாலே என்னவென்று விளக்க வேண்டி இருந்த வாக்காளர்கள். அன்றைக்கு நாட்டின் 17.6 கோடி வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தறிவற்றவர்கள். பல மேற்கத்திய நாடுகளே அப்போது சொத்துள்ளவர்களுக்கும் படித்தவர்களுக்கும் மட்டுமே வாக்குரிமையை அளித்தன. குறிப்பாக பெண்கள், கருப்பினத்தவரை அவை ஒதுக்கின. சுதந்திர இந்தியா தம் குடிமக்கள் எல்லோருக்கும் வாக்குரிமையைக் கொடுக்கவிருந்தது. அதிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்குத் தனித் தொகுதிகள் ஒதுக்கீட்டுடன். வெளிநாடுகளிலும் உள்நாட்டிலுமாகப் பலர் இம்முடிவைப் பைத்தியக்காரத்தனம் என ஏசினர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரபூர்வப் பத்திரிகையான ‘ஆர்கனைஸர்’ எழுதியது: “அனைவருக்கும் வாக்குரிமை எனும் முடிவின் தோல்வியைப் பார்க்க நேரு உயிரோடு இருப்பார்.”

சுகுமார் சென் சாதித்தார். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தந்தை. அடர் காடுகளிலும், பனி மலைகளிலும், பாலைவனங்களிலும், பள்ளத்தாக்குகளிலும், சமவெளிகளிலும் என எங்கும் நிறைந்திருந்த இந்நாட்டின் கோடிக்கணக்கான வாக்காளர்கள் முன்னிரவிலும், அதிகாலையிலும் வாக்குச்சாவடிகளை அடைந்து, காத்திருந்து தங்கள் வாக்குகளை அளித்தனர். அடுத்த சில ஆண்டுகளில் இந்த நாடு சுக்குநூறாக உடையும் எனும் ஆரூடத்தை உடைத்தெறிந்து தேர்தல் ஜனநாயகத்தைத் தமதாக்கிக்கொண்டனர்.

இந்திய ஜனநாயகத்தின் மீது முன்வைக்கப்படும் கடுமையான விமர்சனங்களில் முக்கியமானது நம்முடைய தேர்தல் முறை. “100 பேர் வாக்களிக்கும் இடத்தில் 51 பேர் வாக்களித்த கட்சி 100 மதிப்பைப் பெற்றுவிடுகிறது; 49 பேர் வாக்களித்த கட்சி 0 மதிப்புக்கு இறங்கிவிடுகிறது. இதை மாற்ற விகிதாச்சாரத் தேர்தல் முறையைக் கொண்டுவர வேண்டும். அந்தந்தக் கட்சி பெறும் வாக்குகள் வீதத்துக்கேற்ப அவையில் இடம் அளிக்க வேண்டும். பணக்காரக் கட்சிகள் மட்டுமே தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் சூழலை உடைக்க, எல்லா வேட்பாளர்களின் தேர்தல் செலவையும் அரசே ஏற்க வேண்டும். அதைத் தாண்டி ஒருவரும் ஒரு பைசாகூடச் செலவழிக்க அனுமதிக்கக் கூடாது. நேர்மையான, வெளிப்படையான தேர்தலை உறுதிப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்…” இப்படிப் பல விஷயங்கள் தொடர்ந்து வலியுறுத்தப்படுகின்றன. ஏராளமான சீர்திருத்தங்கள் தேவைப்படும் ஒரு முறையே நம் தேர்தல் முறை. எனினும், குறைகளின் பெயராலேயே நிராகரிக்கக் கூடிய முறை அல்ல இது. உலகின் முன்னேறிய சமூகங்கள் பலவும் சுவீகரித்துக்கொண்டிக்கும் இம்முறை நமக்கு எளிமையாகக் கிடைத்ததாலேயே நாம் மலிவானதாகக் கருதுகிறோம்.


திருச்சியில் இருந்தபோது பச்சைமலை மக்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இந்த மலையிலுள்ள டாப் செங்காட்டுப்பட்டி, புத்தூர், நச்சினைப்பட்டி மூன்று பகுதிகளையும் சேர்ந்தவர்கள் - தவிர்க்கவே முடியாத உடல்நலப் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளும் ஓரிருவரைத் தவிர - முழுக்க வாக்களிப்பதை ஒரு கடமையாகக் கடைப்பிடிப்பவர்கள். நான் அவர்களைச் சந்திக்க விரும்பினேன். அப்போதெல்லாம் காலையில் ஒரு பஸ், மாலையில் ஒரு பஸ் மட்டுமே அங்கு செல்லும். அதன் பின் ஓரளவுக்கு மேல் செல்ல மலையேற வேண்டும். சக பத்திரிகையாளர்கள் மயில்வாகனன், அசோக்கையும் துணை சேர்த்துக்கொண்டு மூவருமாகப் போனோம். அங்குள்ள மக்களிடம் பேட்டி கண்டோம். “எங்க மலைக்கு இப்ப வர்றதுக்கே இவ்வளவு சிரமம் இருக்கே, ஆரம்பக் காலத்துல எப்படி இருந்திருக்கும்? அரசாங்கத் தரப்புலேர்ந்து ஒரு ஈ, காக்கா எட்டிப் பார்க்காது. பெரியவங்க கூடிப் பேசுனாங்க. ‘மலையில ரெண்டாயிரம் ஓட்டு இருக்கு. நாம ஒருத்தர் விடாம சிந்தாம போட்டா அரசியல்வாதிங்க நம்மளைத் தேடி மலைக்கு வருவாங்க. நாம கேட்குறதைச் செஞ்சு கொடுப்பாங்க’ன்னு பேசி முடிவெடுத்தாங்க. அப்படியே நடந்துச்சு. இன்னைக்கு இங்கே உள்ள ரேஷன் கடை, பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, பஸ்ஸுக எல்லாம் எங்களுக்கு எங்க ஓட்டு கொண்டுவந்து சேர்த்தது.”

என் அனுபவத்தில் தேர்தல் அரசியலையும் ஓட்டு போடுவதையும் இகழ்ந்து பேசும் அவலத்தை, படித்தவர்கள் என்று தம்மைச் சொல்லிக்கொள்ளும் நடுத்தர/உயர் வர்க்கத்தினரே பெருமளவில் செய்வதைப் பார்க்கிறேன். தன்னுடைய அறிவாலோ, பணத்தாலோ எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும் என்று நம்புபவர்களிடமிருந்து வெளிப்படும் திமிர் இது. அவர்கள் இதுவரை பெற்றிருக்கும் அறிவு, செல்வத்தில் இந்தச் சமூகத்தின், நாட்டின் பங்கு என்ன எனும் வரலாற்றையும் சமூகம் தவிர்த்த தனித்த வாழ்க்கை என்று ஒன்று கிடையாது எனும் நிதர்சனத்தையும் அறியாத அசட்டுத் தனத்தின் வெளிப்பாடு. இந்நாட்டின் சாமானிய மக்கள் ஒருபோதும் அதைச் செய்வதில்லை. அவர்களுக்குத் தெரியும், வாக்குச்சீட்டு என்பது எண்ணிக்கையிலான வெறும் ஒரு ஓட்டு மட்டும் அல்ல; அது அதிகாரம் என்பது! -சமஸ்
Profile Image for Parithi Saravanan.
6 reviews2 followers
February 8, 2018
Short essays which will ignite the power of participatory government within the readers. Samas writings is always the one which gives answers the questions which we have about the political happenings.
Profile Image for Thamarai Selvam  Ekambaram .
12 reviews
April 5, 2021
ஒரு அரசியல்வாதி என்பவன் இப்போது நடப்பதையும் நடந்ததையும் இனி வரப்போகும் காலத்தில் நடக்கப் போவதையும் கணிக்கும் தீர்க்கதரிசி போல இருக்க வேண்டும்.
உலகத்தில் பல மதங்கள் இருந்தாலும் மிகவும் ஆபத்தான மற்றும் அபாயகரமான மதம் என்னவென்றால் அது அரசியலில் மதம் தான் என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

அரசியல் என்பது மக்களுக்குச் சேவை செய்யும் பணி இருக்காக உருவாக்கப்பட்ட ஒன்று ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அரசியல்வாதிகளின் மோகம் சொத்துக்குவிப்பு மீதும் மற்றும் அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பதில் ஏயே இருக்கிறது.
சட்டத்தின்படி அதிகார குறிப்பானது படிப்படியாக பாசிசத்தை நோக்கி நடை இட்டுச்செல்லும் என்பதே உண்மையாகும்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தி இந்து இந்துத்துவம் மேலோங்கிய தேசத்தோடு முதலீடும் அரசியல் இன்று பிணைந்திருக்கிறது.

பிள்ளைகளுக்கும் இளைஞர்களுக்கும் அரசியல் சொல்லிக் கொடுங்கள் என்றால் என்ன அர்த்தம்?
அவர்களை அரசியல் கட்சியிலும் அல்லது ஏதேனும் ஒரு கழகத்தில் சேர்ப்பது அல்ல என்கின்றார் ஆசிரியர்.

அரசியல் என்பது ஒரு ஒரு விஷயத்திலும் உள்ளது அது வீட்டிலும் உள்ளது தெருவில் உள்ள பள்ளிக்கூடத்தில் உள்ளது அனைத்து இடங்களிலும் இருக்கிறது.

ஒரு கட்சியின் அதீத பாலமும் அந்தக் கட்சியில் இருக்கும் தலைமை மீதுள்ள விசுவாசமும் ஜனநாயகத்துக்கு ஒரு பேராபத்து.

எப்போது எதை செய்தாலும் சரி இப்போது இதற்கு என்ன தேவை என்று கேட்டுக் கொள்ளுங்கள் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு காரியத்திற்கும் மட்டுமல்ல வாங்க கூடிய ஒவ்வொரு பொருளுக்கும் கூட இது பொருத்தம் ஆகும்.

இப்படி அரசியலில் சிறுசிறு நுணுக்கங்களையும் அரசியலில் பலத்தையும் பலவீனத்தையும் ஆசிரியர் சமஸ் எடுத்துரைக்கின்றார்.

அனைத்து கல்லூரி மற்றும் மேல்நிலை பள்ளி பருவத்தில் இருக்கும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் அடங்கியுள்ளது.
Profile Image for Sadayappan.
66 reviews2 followers
March 25, 2018
Fantastic write up in many ways. Each chapters has many interesting insights on People and Democracy.
Displaying 1 - 7 of 7 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.