மனிதனை மீறிய சக்திகளில் இருக்கும் நல்லவைகளும் தீயவைகளும் அம்மனிதர்களுக்காகவே ஒன்றுக்கொன்று போராடி நியமங்களின்படி நல்லதே இறுதியில் வெற்றிப் பெறுகிறது.
பெற்றவர்களை இழந்த பிறகு அமைதியான வாழ்வை வாழ இந்தியா வந்த சந்திரமோகன் தங்குவதற்குக் கட்டிய வீட்டில் அவன் கொண்ட கலையார்வத்தால் பல சிற்பங்களைத் தேடி வாங்கிக் குவித்து வைக்கிறான்.
சில தீயசக்திகளும் அங்கிருக்கும் சிற்பங்களில் குடிகொண்டிருக்கிறது. நல்சக்தியான மோகினியின் சிற்பமும் அங்கே இருப்பதால் சந்திரமோகனுக்கு இன்னல்கள் ஏற்படாமல் அவளின் மூலம் இன்பமே கிட்டுகிறது.
தான் இருக்கும் ஊரில் தானே முதன்மையாளனாக இருக்கவேண்டும் என்று வெறிபிடித்த ராஜசேகரனுக்குப் புதுசாக வந்த சந்திரமோகனின் செல்வாக்கு தொல்லையாகுவதால் அவனை அழிக்க செய்யும் தந்திரங்களை எல்லாம் மோகினி முறியடிக்கிறாள்.
பல வருடங்களாகத் தன் மந்திரசக்தியால் இளமையாக இருக்கும் அம்பிகாதேவியை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்த சந்திரமோகனுக்கு வெகுமதியாக அவள் அளித்த சக்தியின் துணை கொண்டு எதிரியை தோற்கடிக்கிறான்.
இவ்வளவு நாட்களாக சந்திரமோகனை காத்துவந்த மோகினி அவனுக்கு சக்தி வந்த பிறகு தன் இருப்பிடத்திற்கே சென்று சேர்கிறாள்.