இமையம் (Imayam, nom de plume of Ve. Annamalai), என்ற புனைப்பெயரில் எழுதும் வெ. அண்ணாமலை நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர். இமையம் முதுகலைப் பட்டம் பெற்றுப் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தனது முதல் புதினமான கோவேறு கழுதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார். இவர் எழுதிய செல்லாத பணம் என்ற புதினத்திற்கு 2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. எனினும் இராசு கௌதமன் போன்ற தலித் சமூக அறிஞர்கள் தலித்து சமூகத்தின் அவலநிலைகளை மட்டுமே முன்னிறுத்துவதாகவும் மேல் சாதியினர் புகழக்கூடிய வகையானதாகவும் இப்புதினம் உள்ளதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
He is also the recipient of the Agni Aksra Award, the Tamil Nadu Progressive Writers Association Award, the N.L.C. Award, and the Thamizh Thendral Thiru.V.Ka. Award, among others, and has been honored by the governments of Kerala, TamilNadu and India.
ஒரு புத்தகம் அதன் அட்டையில் இருந்தே அரமிக்கிறது. அந்த வகையில் இந்தச் சிறுகதை தொகுப்பின் அட்டைப்படம் ஒரு தேள் முதுகில் அதன் குட்டிகளை சுமத்துட்டு இருக்குறாப்போல ஒரு புகைப்படம். புத்தகத்தில் இருக்கும் கதைகளும் அதையே பிரதிபலிக்குது. பிள்ளைகளால் சிரமத்திற்கு உள்ளாகும் பெற்றோர்களை மையமாக வைத்த கதைகள். இமயத்தின் புனைவுலகத்தில் கிராமத்து மக்களுக்கும் புலம்பலுக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு, இந்தச் சிறுகதைகளும் விதிவிலக்கு அல்ல. எனக்குப் பிடித்த கதைகள் சில.
பொருத்தம்:
தன் கல்யாணத்தை பற்றிய கேள்விகளுடன் பல ஜோசியர்களைப் பார்த்து சலித்த ஒரு இளைஞன், ஒரு ஜோசியரைச் சந்திக்கிறான் அவர் கூட நடக்கிற சண்டை, வாக்குவாதமே இந்தக் கதை. கதையின் கடைசியில் அந்த ஜோசியர் கல்யாணத்துக்கு மிகவும் முக்கியமான பொருத்தம் "யோனிப் பொருத்தம் தான்"."உரலுக்கேத்த ஒலக்க இருக்கனும். ஒலக்கைக்கு ஏத்த ஒரலும் இருக்கனும்". இதன் ஒத்த கருத்தையே முன் வச்சி குஷ்வந்த் சிங் "Horoscope" சிறுகதையை எழுதி இருக்குறாரு.
ஒரு வெற்றிகமான கல்யாண வாழ்க்கைக்கு "Sex" அவ்வளவு முக்கியமான அங்கம். அப்படிலாம் இல்லனு வாதிடலாம் ஆனா அது எந்த அளவுக்கு உண்மைன்னு அவங்க தனிப்பட்ட வாழ்க்கையே முடிவு பண்ணுது.
அன்னக்கிளியும் பன்றிக்கறியும்:
இமயத்தின் சிறுகதைகளில் துன்பியல் தூக்கலாகவே இருக்கும், ஆனா இந்தக் கதையோ நக்கலும், எள்ளலும் தெறிக்கும்.
பாட்டியும் பேரனும் திருவிழாவைச் சுத்தி பார்ப்பதே கதை. திருவிழாவின் சித்திரமாகவே கதை இருந்தாலும் கிழவிக்கு தன் பெண்ணை பற்றிய கவலை. கிழவியின் பெண்ணை பக்கத்துக்கு ஊர் சண்டியர் குடும்பம் வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணிக்கிட்டது. புகுந்த ஊர்ல பொண்ணு பன்றிக்கறி சாப்பிடுவாளா மாட்டாளாணு சந்தேகம். இங்க பன்றிக்கறி ஒரு குறியீடு மட்டுமே, கிழவி கவலை படுவது பிறந்த வீட்டையும், பிறந்த வீட்டின் வழக்கத்தையும் பொண்ணு மறந்துடுவாளான்னு தான்.
இமையம் "Age gap"அ கையாண்ட விதம் ஒரு சிறப்பு. கிழவியின் பெயர் பழனியம்மா, பேரன் பெயர் தினேஷ்.
ஐஸ் கிரீம் கடைக்காரன்கிட்ட கிழவி கேக்குறது அடுத்த படி "பத்துப் பைசாதான. நீ அஞ்சு பதுங்கிற?" "அது ஐஸ். இது ஐஸ் கிரீம்"
கிழவி முருகன் படம் வாங்குனா பேரன் சினிமா நடிகர் படம் வாங்குறான்.
கடைசீல "நீ எதுக்கு சட்டைப் போடாம இருக்குற? என்னக்கு வெக்கமா இருக்கு." "அட நாதே ரிப் பயலே. நீ எதுக்குடா வெக்கப்படுற? நீ என்ன என் பிரிசனாடா? நான் சட்ட போடலைனு என் பிரிசனே வேக்கப் பாடலை.... ....ஆறாவது படிக்குற நாயே நீயி. ஒனக்கு வெக்கமா இருக்கா."
அணையும் நெருப்பு:
புலம்பலை மட்டுமே வைத்து ஒரு கதையை சொல்ல முடியுமா? புருஷனை இழந்த ஒரு பெண், தன் மீது மோகம் கொண்ட ஒரு இளைஞனை வீட்டுல உட்கார வைத்து தன் முழுவாழ்க்கையும் புலம்பலின் வழியாவே சித்திரம் வரையுற. காமத்தை தனிக்கத்தான் உடல் தேவை, அணைக்கப் புலம்பல் போதுமானது.
வேலை:
இமையத்திடம் இருந்து "Dystopian" கதை எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. "Dystopian" கதையாவே இருந்தாலும் இதன் மையம் மனித உணர்வு தான். மனிதன் மனிதனா உணர உதவும் அதனை உணர்ச்சிகளும் மதிப்பிழந்து காலத்துல நடக்கிற ஒரு வேலைவாய்ப்புக்கான தேர்வு. அந்த நிறுவனம் வைக்கும் நிபந்தனைகள் பெற்றோர் சாவுக்குக்கூட விடுமுறை கிடையாது, அழக் கூடாது, மார்க்சிய பார்வை இருக்கக் கூடாது இது போல இன்னும் பல கேள்விகளும் நிபந்தனைகளும். இதுல உச்சமே அவன் பெற்றோர்கள் இதுக்கு துணையா இருப்பதுதான்.
சாமி கும்பிட்டு "Interview" ஆரமிக்க சொல்றது இமையத்தின் பகடி. கதையின் இறுதி வரியா அவன் பெற்றோர்கள் "எப்படியோ எங்க கனவு நெறவேறிடுச்சி". இது கதையின் முடிவாக இருக்கலாம் ஆனா நமக்கு இதுவே தொடக்கம்.
பெரும்பாலும் இந்த கதைகள் ஒரு மனித புலம்பலை கொண்டுள்ளது.
இதில் உள்ள கதாபாத்திரங்கள் எல்லாம் அவரவர் மனக்குறைகளை அவர் அவருடைய இயலாமைகளை அவர்களுடைய பிடிவாதங்களை அவர்களுடைய எதிர்ப்புகளை புலம்பல்களாக மற்றொரு ஆளிடம் சொல்லிக் கொள்ளும் படியாக எழுதப்பட்டிருக்கிறது.
அணையாத நெருப்பு என்ற சிறுகதை மிகவும் பிடித்ததாக இருந்தது.