Jump to ratings and reviews
Rate this book

செடல்

Rate this book

244 pages, Paperback

Published January 1, 2006

7 people are currently reading
113 people want to read

About the author

Imaiyam

21 books93 followers
இமையம் (Imayam, nom de plume of Ve. Annamalai), என்ற புனைப்பெயரில் எழுதும் வெ. அண்ணாமலை நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர். இமையம் முதுகலைப் பட்டம் பெற்றுப் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தனது முதல் புதினமான கோவேறு கழுதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார். இவர் எழுதிய செல்லாத பணம் என்ற புதினத்திற்கு 2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. எனினும் இராசு கௌதமன் போன்ற தலித் சமூக அறிஞர்கள் தலித்து சமூகத்தின் அவலநிலைகளை மட்டுமே முன்னிறுத்துவதாகவும் மேல் சாதியினர் புகழக்கூடிய வகையானதாகவும் இப்புதினம் உள்ளதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

He is also the recipient of the Agni Aksra Award, the Tamil Nadu Progressive Writers Association Award, the N.L.C. Award, and the Thamizh Thendral Thiru.V.Ka. Award, among others, and has been honored by the governments of Kerala, TamilNadu and India.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
17 (34%)
4 stars
22 (44%)
3 stars
8 (16%)
2 stars
3 (6%)
1 star
0 (0%)
Displaying 1 - 12 of 12 reviews
108 reviews3 followers
February 26, 2023
செடல் - இமையம்
க்ரியா பப்ளிகேஷன்

ஒரு எழுத்தாளன் நம்மை அவ்உலகத்தில் சஞ்சரிக்க மட்டும் செய்வதில்லை, நம்மை அவ்வுலகத்தில் நடமாடவிடுகிறார்கள், நம்மில் அழிய சுவடாகிவிடுகிறார்கள்.

செடல் இனி எண்ணில் தங்கிவிடுவால். மாரியாயி அவளை காத்தாளோ இல்லையோ? ஆனால் அவளின் வாழ்வு நான் இனி சுமக்கும் ஒரு அழகிய அனுபவம்.

பொட்டுகட்டிவிடபட்ட பருவம் முதல் அவளின் காலம்வரை இந்த வாழ்வுதந்த அனைத்தும் அவளின் வாழ்வு ஐயோ!!!

சமுக அமைப்பை கேள்வி கேட்டு கொண்டே இருக்க வேண்டும், கூத்தாடிகளின் வாழ்வு? தேவதாசிகளின் வாழ்வை என்னால ஒப்பிட முடியாமல் இருக்க முடியவில்லை.

இமையம் அவர்களின் எழுத்தின் மீது ஒரு பெரும் ஆவல் துளிர்த்துள்ளது.

பல நூறு கூறுகளை எழுத தான் எண்ணம், ஆனால் இதை பற்றி உரையாடி உரையாடி களிக்க இந்த பதிவு போதும் என்ற எண்ணம் மேல் ஓங்குகிறது.

இன்னும் இது போன்ற கட்டுபாடுகள், சமுக அவலங்கள் தொடர்கிறதா என்ற கேள்வி மேலோங்கிறது...
183 reviews17 followers
March 12, 2019
Sedal - Imaiyam

Imaiyam writes on Dalit lives of Tamilnadu, in that sense, he is a continuity to the Tamil liberal rationalistic novelist tradition. The works are realistic and depict the lives in a photographic sense. The writings are not preachy or judgemental in any sense. Traditionally when Dalit lives were written by writers from upper caste it used to showcase the injustice meted out to Dalits in their lives. Take for instance the work Thottiyin magan written by Thagazhi Sivasankaran Pillai. It lacks detail into the lives of Dalits, as it is written by an outsider to the Dalit life. On the contrary, Imaiyam's work is written by a Dalit who has first-hand experience of Dalit lives. Say for instance even in this novel we see the various castes within the Dalit fold themselves having huge differences. Like the Paraiyar's consider Sakkiliyar's as untouchable. This novel also shows that within the Paraiyar fold itself there are different groups with different levels in the social hierarchy.

Sedal also shows the lives of TheruKoothu dancers who are tremendously knowledgeable in Indian mythology this is contrary to generally believed that the Therukoothu and other Dalit arts don't have any link with Hindu/Indian myth.

The novel is the life of Sedal who is given to the local temple as a sort of daughter dedicated to the Goddess. This tradition might look archaic and superstitious to the modernist inside all of us. But Imaiyam treats it within the feudal life framework. The tradition is linked to the Goddess creation myth and the girl is separated from the family early in her childhood. The daughter is like given as a sacrifice to the society and society assures her that it will take care of her. So we see her suffering that she is taken out of her family and she is not able to live like any normal person. This is the fundamental conflict in Sedal's life where she has no family to belong to and she directly belongs to society. But the society fails in the responsibility and stops protecting her and she is made to fend for herself.

She learns the cruel reality of her state on a day when she attains puberty and has her first menstruation. She is having no one to go for the old lady who used to take care of her has just recently died. That day on a rainy night she is facing the rain and her new state all alone. The enormity her situation shows how alone she is lacking the basic unit of the family to defend her. She leaves the family and becomes a dancer in a Therukoothu group but all along her life, she is forced to protect her from the society who thinks her as a woman of loose morals.

She has to constantly prove to people around and also to herself about her purity. At the end of the novel, we are left to wonder the enormous loneliness of her existence due to the renege of society.
Profile Image for Praveen.
14 reviews2 followers
July 4, 2019
விளிம்பு நிலை மக்களின் வாழ்கையை அவர்களின் மொழி நடையிலேயே சித்தரிப்பதுடன் இந்த சமூகம் பெண்களின் மேல் செலுத்திய அதிகார வன்முறையினையும், அவர்களின் வாழ்வை கேள்விக்குள்ளாகி இருபத்தையும் இமயத்தின் இன் நாவல் பேசுகிறது.
Profile Image for Balaji M.
221 reviews14 followers
June 12, 2017
செடல்
*********
"பொட்டு கட்டிவிடுதல்" என்ற பதத்தை நம்மில் சிலர் கேள்வி பட்டிருக்கக்கூடும்...
அதே போன்று, தற்போது வெகு சில கிராமங்களில் இன்னமும் "கூத்து" நாடகங்கள் திருவிழா காலங்களில் நடந்து வருகிறது என்பதும் சிலருக்கு தெரிந்திருக்க கூடும் .

இதன் பின்னணியில்,
1950 களின் மத்திய காலத்தில், வடதமிழகத்தின் தென் பகுதியில், தெருக்கூத்து குடும்பத்தில் பிறந்த கடைக்குட்டியான 'செடல்' என்ற பெண்ணை சுற்றி பின்னப்பட்டதாக இருக்கிறது இந்நாவல்.
ஊரின் நன்மைக்காக, கூத்தாடும் குடும்பத்தில் உள்ள சிறு பெண்ணான செடலை தேர்ந்தெடுத்து, அவளுக்கு மொட்டை அடித்து சிறு தங்க பொட்டை அணிவித்து கோவிலுக்கும், தெய்வ சேவைக்குமாக, குடும்பத்திலிருந்து தனித்து விடப்படுகிறாள்...கோர பஞ்சத்திலிருந்து இந்த குழந்தையாவது கோவிலின் பிள்ளையாக வயிறார சாப்பிடட்டும் என அவளது பெற்றோர்களும் இதற்கு சம்மதிக்கின்றனர்.
அதன்பின் வளர வளர அவள் சந்திக்கும் மனிதர்களும், துயரங்களுமாக கிட்டத்தட்ட, அவளது நடுத்தர வயது வரை அவளின் பார்வையிலேயே நாவல் விவரிக்க படுகிறது. வட தமிழகத்தின் வட்டார பேச்சு வழக்கில் பெரிய மாற்றமிருக்காது...அவ்வாறான பேச்சு வழக்கிலே இந்நாவல் எழுதப்பட்டிருப்பது, படிப்பவருக்கு கதை சம்பவங்கள் உணர்வு பூர்வமான தொடர்பை ஏற்படுத்தும்...

குடியான மக்களுக்கும், பட்டியலின மக்களுக்குமான வாழ்வியல் முறை,
சாதி வன்மம்,
கூத்து தொழிலின் சாதக/பாதகங்கள்,
கோவில் திருவிழாக்களில் 'பள்ளு' பாட செல்கையில் கிடைக்க பெரும் தான தருமங்கள்,
கூத்தாட செல்கையில் தனியொரு பெண்ணானவளுக்கு ஏற்படும் தொல்லைகள்...
என அனைத்தையும் தொட்டு செல்கிறது இந்நாவல்.

ஒரு ADDICTIVE தனமான உந்துதல் இருந்துகொண்டே வந்திருக்கிறது, இந்த நாவலை படித்து முடிக்கும் வரையில்...அப்படியொரு எழுத்துநடை!

உண்மையிலேயே அந்த காலகட்டத்திற்கு சென்று பஞ்சத்தையும், செடலின் வாழ்க்கையையும் பக்கத்திலிருந்து பார்த்து வந்தது போன்ற உணர்வை பெறமுடிந்தது.

கிடைத்தால்,.. யோசிக்காமல் வாங்கி வாசிக்கலாம்!
78 reviews4 followers
March 27, 2023
கோயில்களுக்காக பொட்டுக்கட்டி விடப்பட்ட ஒரு பெண் சிறுமியின் வாழ்வே இந்நூல், அவள் தான் செடல். சிறு பருவத்திலேயே அப்பிள்ளைகளை கோவிலுக்குப் பொட்டுக்கட்டி விட்ட பிறகு அவர்கள் வாழ்க்கை எவ்வாறு மாறுதல் அடைகிறது என்பதை உணர்த்துகிறது. இப்படியும் ஒரு வளமை இருந்ததே எனக்கு தெரியாது இந்நூலை வாசிப்பதற்கு முன், வாசிக்கும் போது எனக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது இப்படியும் வாழ்ந்திருக்கிறார்கள் என்று.

இப்படி குடும்பத்தில் இருந்து விலகி அனாதையாக வாழும் பெண் பிள்ளை சாமிக்காக வாழ்க்கையை தொடங்கியதும் அம்மக்கள் அப்பிள்ளையை எவ்வாறு பார்க்கிறார்கள் அப்பிள்ளையின் வாழ்வு எவ்வாறெல்லாம் மாறுகிறது என்பதை உணர்த்துகிறது. வயதை அடைந்ததும் வயிற்று பிழைப்பிற்காக கூத்தாடியாக வாழும் பட்சத்தில் அவ்வூரில் அவளின் பெயர் என்னவாக மாறுகிறது. கோவில்களின் பிள்ளையாக இருந்தவள் தாசியாக பெயர் சூட்டப்படுகிறார் மானமோடு வாழ்ந்தாலும் சரி.

இமையம் இந் நாவலில் பயன்படுத்திய மொழி நடை அக்கிரமதில் வாழ்ந்த மக்களின் வாழ்வை காட்டுகிறது. இதில் பயன்படுத்தி சொலவடைகள் பாடல்கள் பகடிகள் அச்சூழலின் எதார்த்தத்தை காட்டுகிறது. இமையம் எழுதிய பல நூல்களின் பெண்களையே மெய்ய கதாபாத்திரமாக வைத்து எழுதி இருப்பார். பெண்ணின் வாழ்வியலை ஒரு பெண்ணாகவே வாழ்ந்து எழுதுவது போல் இருக்கும் உணர்ச்சி பொங்க. இந்நூல் வாயிலாக நாம் அறிவது என்னவென்றால் ஐதீகத்துக்கும் சமூகத்திற்கும் மரபிற்கும் அம்மக்கள் தாம் வஞ்சிக்கப்படுகிறோம் என்று உணராமலேயே அதற்கு கட்டுப்பட்டு வாழ்கிறார்கள்.
Profile Image for Kalaiselvan selvaraj .
134 reviews18 followers
November 6, 2019
கோபால் - பூவரும்பு தம்பதியின் கடசி மகள் செடல். இவர்களின் கூத்தாடி சாத��யிலிருக்கும் பெண்களில் ஒருவரை செல்லியம்மனுக்கு பொட்டு கட்டுவிடுவது வழக்கம். ஊரில் பஞ்சாயத்தார் கூடி பஞ்சம் தீர்க்க செல்லியம்மனுக்கு செடலை பொட்டுகட்டிவிடுகிறார்கள். செடலை தனியே தவிக்கவிட்டுவிட்டு கோபாலை குடும்பத்துடன் கண்டிக்கு கப்பல் ஏற வைக்கிறது பஞ்சம். ஊரில் கோவில் பக்கம் உள்ள வீட்டில் செடல் ஒரு கிழவியின் அரவணைப்பில் தங்கி கொள்கிறாள். பிறகு செடலின் வாழ்க்கை வழி கதை நகர்கிறது.

பொட்டு கட்டப்பட்ட பெண்களின் வாழ்க்கை சிக்கல், கூத்தாடிகளின் பிழைப்பு, சாதியின் ஏற்றத்தாழ்வுகள், மத மாற்ற நிகழ்வுகள் என பல நிகழ்வுகள் இந்த நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. -கலைச்செல்வன் செல்வராஜ்

செடல் நாவலில், எனக்கு பிடித்த சில வரிகள் ;


செல்லியம்பாளையத்திற்குப் பள்ளுப் பாட போனாலே செடல் ராத்திரிகளில் தூங்க மாட்டாள். பெரும்பாலும் தனியாக இருக்க மாட்டாள். பகலில் சூத்தாம்பட்டையில் தட்டவும், இடுப்பில் கிள்ளவும்தான் செய்வார்கள். ரொம்பவும் போக்கிரியாக இருந்தால் எவ்வளவு கூட்டத்தில் இருந்தாலும் அவளுடைய முலையை ஒரு தட்டுத் தட்டிவிட்டுப் போவான். அவ்வாறு தட்டிவிட்டுப் போகும்போது மொத்தக் கூட்டமும் சிரிக்கும். செடலும் சிரிப்பாள். அப்படிப்பட்ட ஆட்களைச் செடலும் விடமாட்டாள். கூட்டத்திலேயே வேட்டியைப் பிடித்து உருவிவிடுவாள். திருவிழாவிலேயே வேட்டியை உருவுவதுதான் மொத்தக் கூட்டத்திற்கும் அதிகச் சிரிப்பையும் சந்தோசத்தையும் தரும். பகலில் அப்படி இப்படி ஓட்டவிடலாம். ராத்திரியல்தான் பொருந்தொல்லை. முதலில் அவ்வளவு தொல்லை இருக்காது. கூத்து ஆரம்பிக்கும்வரை கூத்தாடிகளுடன் இருப்பாள். கூத்தை ஆரம்பித்துவிட்டுக் கோயிலின் தாழ்வாரத்தில் வந்து படுத்த பிறகுதான் தொல்லையே ஆரம்பிக்கும். ஒருத்தன் வந்து ‘பெரிய ஒடயாரோட மவன் ஒன்னெக் கையோட கூப்புட்டாரச் சொன்னாரு?’ என்பான். ‘எங்க வரச் சொன்னாரு?’ ‘நீ மின்னாலெ போ. நான் பின்னாலெ வரன்’ என்பாள். அவள் சொன்னதைக் கேட்காமல் கட்டாயப்படுத்த ஆரம்பித்தால் பக்கத்தில் ஆள் இருப்பதாகச் சொல்லி முகச்சாடை காட்டி பின்னால் வருவதாகச் சொல்லி ஆளைத் தள்ளிவிடுவாள். சிலர் துணிந்து வந்து கையைச் சீண்டி இருட்டுப் பகுதிக்கு வரும்படி சாடைகாட்டி விட்டுத் தூரமாகப் போய் நின்றுகொண்டு வருகிறாளா என்று பாத்துக்கொண்டேயிருப்பார்கள். சிலர் காலை மிதித்து எழுப்பி இருட்டுப்பக்கம் வரச்சொல்லி கையக் காட்டுவார்கள். முரட்டுக்கட்டைகள் ஆளை எழுப்பி ரவிக்கைக்குள் பத்து, இருபது ரூபாய் நோட்டுக்களைத் திணித்துவிட்டுப் போக்குக்காட்டுவார்கள். ஏழெட்டு அடி தூரத்தில் நின்றுகொண்டு கல்லைப் போட்டு எழுப்பப்பார்ப்பார்கள். முதல் கோழி கூவும்வரை செடலின் மேல் சிறுசிறு கற்கள் வந்து விழுந்துகொண்டே இருக்கும். விடிந்து பார்த்தால் அவளைச் சுற்றி ஒரு முறம் அளவுக்கு கற்கள் கிடக்கும். சிரித்துக்கொண்டே கற்களை அள்ளி வெளியே போடுவாள். படுத்தபிறகு எவ்வளவு அவசரமாக ஒண்ணுக்கு வந்தாலும் படுத்த இடத்தைவிட்டு எழுந்திருக்க மாட்டாள். தொல்லை தாங்க முடியாமல் ஊர்ப் பெரியவர்களிடம் போய்ச் சொன்னால் ‘எலமறவா காய்மறவா இருந்துட்டு போ. இதெயெல்லாம் பஞ்சாயத்துக்குக் கொண்டாராத’ என்றுதான் சொல்வார்கள். அப்படி ஒரு முறை கழுதூருக்குப் பள்ளுப் பாடப் போயிருந்தபோது ஒரு கவுண்டர் பையன் அடிக்கடி சூத்தாம்பட்டையில் கிள்ளியதைப் போய் ஊர்த் தலைவரிடம் சொன்னாள். செடல் சொன்னதை கேட்காமல், ‘பொறத்தாலியே மாட்டுக் கொட்டாவுக்கு யாரு கண்ணுலயும் படாம வா. அங்க பேசிக்கலாம்’ என்று சொன்னார். அன்றிலிருந்து எது நடந்தாலும் பஞ்சாயத்துக்குப் போவதையே விட்டுவிட்டாள்.

‘வூட்டுக்குள்ள நொய்யறதுக்கு வர்றாளே என் மானங்கெட்ட சக்காளத்தி! அவ யாரு? என் புருசனுக்குப் பொண்டாட்டியா, இல்ல கூத்தியாளா? வராப் பாரன் மானம்ஈனம் கெட்டுப்போயி. சேல ஒண்ணு கட்டிக்கிட்டா சீமத் தேவிடியா எல்லாம் என் வூட்டுக்குள்ளார நொய்யறதா? மீறி நொயிஞ்சா மசுரயும் மாரயும் அறுத்துப்புட மாட்டன் அறுத்து. ஆளு வச்சி அடிக்கிறாப் பாரு எம் புள்ளெய. கண்ட பயலுக்கு கால தூக்குறவளுக்கு இருப்பான் நூறு பிரிசன் கேக்கறதுக்கு. இல்லன்னா எம்புள்ளெயக் கைத்தொட்டு அடிப்பானுங்களா? அடிக்க மனசுதான் வருமா? கெடுத்தது போதாதுன்னு இன்னும் என் குடும்பத்தக் கெடுக்க வரா பாரு! என்னா மருந்து வச்சாளோ, மாயம் வச்சாளோ எந்தக் கோவுல்ல ஈடு போட்டாளோ சதிகாரி, எம் பிரிசன் இப்படி போயிச் சேந்துட்டானே. யாண்டி ஒனக்கு வேற பிரிசனே கெடக்கிலியாடி? எம் பிரிசன்தான் கெடச்சானாடி தேவிடாயா? வர்றா பாரு ஊரு வுட்டு ஊரு பிரிசன் தேடிக்கிட்டு. நான் இன்னிக்கி தெவிக்கிறாப்ல அவளும் ஒரு நாளக்கித் தெவிப்பா!’ பொன்னன் - அஞ்சலை சாவு வீடு சண்டை வீடாக மாறியது.

கையில நாலு காசி இருந்தப்ப முடிச்சி வச்சிக்கத் தெரியாம ‘எடுறி கறிய ஆக்குடி சோத்த’ன்னு தின்னு தீத்தாச்சி

-இமயம்.
Profile Image for Bhuvan.
254 reviews42 followers
December 25, 2023
3.5*

பல நாட்கள் காத்திருந்து முடித்த நாவல் இது.

எழுத்தாளர் இமயத்தின் எழுத்துக்கள் மனதினுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. சமூகத்தின் பெரும் கேள்விகளை எளிமையாக மனதில் தட்டி எழுப்பி விட்டு செல்லக் கூடியவை.

செடலும் அப்படி ஒன்றுதான்.

மதத்தாலும் ஜாதியாலும் பிளவு பட்டு கிடக்கும் மனிதர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.

கனம் மிகுந்த வார்த்தைகளை வட்டார வழக்கோடு சேர்த்துக் கொடுத்திருக்கிறார்.

அவர் எழுதிய பிற நாவல்களில் இருந்து இது முற்றும் வேறுபட்டவை. கையாளப்பட்டிருக்கும் விதமும் எழுதப்பட்டிருக்கும் விதமும் வித்தியாசமானவை.

செடல் என்ற ஒரு கதாபாத்திரத்தை நோக்கி கதை நகர்ந்தாலும் கதை முழுக்க சிறு சிறு மாந்தர்களும் சிறு சிறு கதைகளும் எழும்பி மனதாற்றி செல்கிறார்கள்.
Profile Image for Satusan.
14 reviews
July 22, 2019
The author has chose to describe a system through the life of a girl..the detailing part is good..in certain areas he had went too far with his detailing stuff ...To be honest this book could have been an essay on the people the author chose to describe...it is not a page turner..boring stuff with predictable people ...i wouldn't recommend this
Profile Image for Priya Kumar.
19 reviews4 followers
June 18, 2023
Another book that showed me no matter how tough your life is , you're capable of passing through it. The more tougher it becomes , the more wiser and stronger you become .. and don't miss to be kind though , because sedal didn't give up on kindness amidst all the toughs
Profile Image for Sheik Hussain A.
40 reviews2 followers
May 7, 2025
first time i read this author...
what a writing..! each and every page... i can't accept the truth..
caste is a terrible thing... my heart does not accept anything.. why is happening here..!
but i am alive in this kind of society...
must read..! imayam is one of the great writers for me..!
Profile Image for Vishnu M.
13 reviews1 follower
March 30, 2023
செடல் வயசுக்கு வர காலத்த, படிக்க முடியல ஊரே ஒதுக்குது, மழையும் சித்தரவாத பன்னுது. வயசுக்கு வர  பொண்ணுங்களுக்கு உறவு இல்லனா ரொம்ப கஷ்டம்.
Profile Image for Sakthi Santhosh.
10 reviews
January 27, 2025
2.5
First 176 pages was good. After that many incidents will happen but nothing will bring a big impact.
Displaying 1 - 12 of 12 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.