இமையம் (Imayam, nom de plume of Ve. Annamalai), என்ற புனைப்பெயரில் எழுதும் வெ. அண்ணாமலை நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர். இமையம் முதுகலைப் பட்டம் பெற்றுப் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தனது முதல் புதினமான கோவேறு கழுதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார். இவர் எழுதிய செல்லாத பணம் என்ற புதினத்திற்கு 2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. எனினும் இராசு கௌதமன் போன்ற தலித் சமூக அறிஞர்கள் தலித்து சமூகத்தின் அவலநிலைகளை மட்டுமே முன்னிறுத்துவதாகவும் மேல் சாதியினர் புகழக்கூடிய வகையானதாகவும் இப்புதினம் உள்ளதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
He is also the recipient of the Agni Aksra Award, the Tamil Nadu Progressive Writers Association Award, the N.L.C. Award, and the Thamizh Thendral Thiru.V.Ka. Award, among others, and has been honored by the governments of Kerala, TamilNadu and India.
பகடியான, உக்கிரமான இயல்புவாத கதைகள் கொண்ட தொகுப்பு.
இந்த தொகுப்பு பற்றி சற்று விரிவாக எழுதவேண்டும். "துபாய்காரன் பொண்டாட்டி" கதை என்னை அசைத்துவிட்ட்து. கூர்மையான, தத்துவ விளக்கங்களுடன் கூடிய அலங்காரம் இல்லாத எளிய மொழியில் வாசிப்பவருக்கு கதாபாத்திரங்களில் உளநிலைய கடத்துவது இமையத்தின் நடை .
துபாய்காரன் பொண்டாட்டி கதையின் தொடக்கத்தில் வரும் உரையாடல் இது. இதை தொடர்ந்து பத்மாவதி, எப்போதுமில்லாம மதி, ஏன் கோவமா பேசுறான்? ஊர்ல வந்து உன்னப் பேசிக்கிறன்னு ஏன் சொன்னான் , மாமியாக்காரி ஏதும் சொல்லிருப்பாளோ, செட்டியார் கடை முன் தனக்கும் கண்ணனுக்கும் நடந்த சண்டை அவனுக்கு தெரிந்திருக்குமோ , மேலும் விவரங்களை யார் மூலமாவது தெரிந்திருப்பானோ? என்று பயத்தில் , அவமானத்தில், சுயஇரக்கத்தில் எண்ணத்தை ஓடவிடுகிறாள் பத்மாவதி.
யோசிச்சு யோசிச்சு நடந்த நிகழ்வுகளை நினைத்துப்பார்த்து, தெரிந்தால் மதி என்ன செய்யக்கூடும் என்று மனதில் கற்பனைகளை உருவாக்கி நெஞ்சிலும் வயிற்றிலும் தொடையிலும் அடித்துக்கொண்டு அழும் காட்சிகள் உண்மையாகவே நம்மை பரிதவிக்கவைப்பவை. இந்த குழப்பமான சிக்கல் இரவு போன் வந்த நேரத்திலிருந்து அதிகாலை வரை அவளை ஆட்கொள்கிறது , துன்பத்தில், அவமானத்தில், ஏமாற்றத்தில் , தன்னையே அவள் எல்லாத்திசைகளிலும் வீசி எறிகிறாள் .
நனவோடை வகை எழுத்து, அசலான உணர்வுக்கடத்தல். வாசிப்பவரை பத்மாவுடன் சேர்ந்து துடித்து அழவைக்கும் வருணனைகள். சிறுகதை தொகுப்பில் எனக்கு மிகப்பிடித்த (?) என்னை அதன் உணர்வு நிலைகளுக்குள் நிறுத்திய கதை.
ஐயா - சிறுகதை - நான் சில நாட்களுக்கு முன்பு வாசித்த ஜெயமோகனின் "நூறு நாற்காலிகள்" சிறுகதையை நினைவுபடுத்தியது, முற்றிலும் எதிர்த்தளத்தில் இருக்கும் கதைசொல்லி. ஐயா ஐயா என்று சொல்லுக்கு சொல் குனியும் நாயகன் சாதி அடுக்குகளை சொல்லாமல் சொல்கிறார்.
========================================================================== காதில் விழுந்த கதைகள் மற்றும் ஆபர் (offer ) பகடிக்கதைகள்
அடுத்து இமையத்தின் கோவேறு கழுதைகள் நாவல் வாசிக்கவுள்ளேன்.
இமையம் அய்யா அவர்களின் மற்றோரு சிறு கதை தொகுப்பு. வழக்கம் போல் இமையம் அய்யா அவர்களின் கதைகளில் வரும் விளிம்பு நிலை மக்களை மையமாக கொண்ட 9சிறு கதைகளை கொண்ட தொகுப்பு
1. நறுமணம் - ஆனந்த விகடன் 04.11.2015
2. ஈசனருள் - உயிர்மை - டிசம்பர் 2015
3.காதில் விழுந்த கதைகள் - அந்தி மழை, ஜனவரி 2015
4.வீடும் கதவும் - ஆனந்த விகடன் 24.02.2016
5.துபாய்க்காரன் பொண்டாட்டி - உயிர்மை, மார்ச் 2016
6.உண்�மைக் கதை - உயிர்மை, மார்ச் 2015
7.ஆஃபர் - ஆனந்த விகடன் 05.08.2016
8.ஐயா - அம்ருதா, பிப்ரவரி 2016
9.மணியார் வீடு
பள்ளியில் அட்மிஷன் என்பது எப்படி வியாபாரம் ஆகிவிட்டது, அதை அறியாமல் எப்படி மக்கள் ஏமாறுகிறார்கள்
ஒரு அரசு அலுவலகத்தில் வேலை செய்யும் பியூனின் மனக்கூமுறல்
நகர வாழ்விற்கு இடம் பெயர்வதால் பிறந்த மண் /வீட்டிற்கு இருக்கும் உறவு அந்து போவது
ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு கதவு என்பது போல பெரிய பள்ளிக்கூடத்தில் teacher என்றாலும் சரி, ப்ரெசிடெண்ட் ஆனாலும் சரி பெண்ணிற்கு என்று விதிக்கப்பட்ட வேலையில் இருந்து மட்டும் விடுதலை இல்லை
துபாயில் இருக்கும் கணவனுக்கு துரோகம் செய்ததாக மனம் உடைந்த பத்மவாதி எடுக்கும் முடிவு
தன்னால் தன் மகன் குடும்பத்தில் குழப்பம் வந்து குடும்பம் உடைந்து விடக்கூடாது என்று அனாதை இல்லத்தில் சேர முடிவு எடுக்கும் லீலாவதி
நகர விரிவாக்கத்தின் திட்டங்களினால் எப்படி பாமர மக்கள் பாதிக்க படுகின்றனர்
என்று இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள பெரும்பாலன கதைகள் பெண்களின் வாழ்க்கையை மற்றும் மனபோராட்டத்தை மையப்படுத்திகின்றன.
எழுத்தாளர் இமையம், உயிர்மை மற்றும் ஆனந்த விகடன் இதழ்களில் எழுதி வெளிவந்த ஒன்பது சிறுகதைகளை தொகுத்து வழங்குவதே "நறுமணம்" என்ற இந்தப் புத்தகம்.
இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான சிறு கதைகள் பெண்களின் வாழ்வை மையப்படுத்தி எழுதப்பட்டவை. ஒரு சிறு நவீன வளர்ச்சி, சமூக வரையறைகள், குடும்ப அதிகாரங்கள் போன்றவை குறிப்பாக பெண்களை எப்படி பாதிக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. இவரது எழுத்து படிப்பதற்கு எளிமையாக இருந்தாலும், அது ஏற்படுத்தும் தாக்கம் சற்று காட்டமானதாக உள்ளது.
இந்தத் தொகுப்பில் "துபாய்க்காரன் பொண்டாட்டி" என்ற சிறுகதை என்னுள் ஏற்படுத்திய தாக்கம் அபரிமிதமானது. அந்தக் கதையின் தாக்கத்திலிருந்து வெளிவர இரண்டு நாட்களானது. மேலும் என்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் கதையை பகிர்ந்து கொள்ளாமல் இருக்க கடினமாக இருந்தது. ஒரு ஆணால் பாதிக்கப்பட்ட பெண் தன் ஏமாற்றத்தை எண்ணி, தன் கருணை குணத்தை எண்ணி வெக்கமுற்று, இனி நிகழவிருக்கும் துக்கங்களுக்கு தானே ஒரு வடிவம் தந்து, சமூகத்தில் தன் வருங்கால நிலையை எண்ணி, மரியாதையா? உயிரா? என்ற கேள்விக்கான விடையுடன் அந்தக் கதை முடிவுரும்.
"மணியார் வீடு" என்ற சிறுகதை, உபயோகமற்று இருந்தாலும் கூட நாம் வாழ்ந்த இடம் அல்லது வீடு எவ்வாறெல்லாம் நம் மனதுக்கும், சுய அடையாளத்திற்கும் நெருக்கமாக இருக்கிறது என்பதை ஒரு வயதான ஆண் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி பேசுகிறது. 35 ஆண்டுகளாக ஒரே ஊரில், ஒரே வீட்டில் வாழ்ந்த ஒருவர் தன் வயதான காலத்தில் அதை விற்க நேரும்போது, தன்னுள் ஏற்படும் உணர்ச்சிகளை எளிமையாக படம்பிடித்துக் காட்டியுள்ளார் இமையம்.
சமூகத்தில் ஒரு தனி மனிதனின் நிலையை வெவ்வேறு கோணங்களில் வடிவமளித்து, அவனது பல்வேறு மன ஓட்டங்களை முன்னிறுத்தி, சுற்றத்தாரால் அவனுள் ஏற்படும் தாக்கங்களை எளிமையான எழுத்தில் கையாண்டு, நம்மைச் சிந்தனையில் ஆழ்த்துகிறார் இமையம்!
Good collection of short stories with his signature style of writing-Practicality to the core- Engages us with his writing though the plot of the stories is weak .
இதில் இடம்பெற்றுள்ள கதைகளில் என்னை கவர்ந்தது "ஈசனாருல்" மற்றும் "நறுமணம்".
ஒரு நேர்காணலில் இயக்குனர் ராம் சொல்லி கேட்டது இது "ஒரு சமூக மாற்றத்தை, கலாச்சார மாற்றத்தை, மற்றும் நடைமுறை வாழ்வியலை ஆண்களை விட பெண்கள் சீக்கரம் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் வாழ கற்றுக்கொள்கின்றனர். ஆண்கள் சற்று தாமதமாகவே இதை உணர்கின்றனர்."
இதில் இடம்பெற்றுள்ள பல கதைகள் இதையே தான் உணர்த்துகின்றன. உதாரணத்திற்கு "மணீயார் வீடு". முக்கியமாக தொழில் நுட்பத்தின் வளர்ச்சி குடும்பங்களை எவ்வாறு குலைக்கின்றன எனவும் இமையம் உணர்த்துகிறார்.
இமயத்தின் எழுத்து ஆச்சர்ய மூட்டுகிறது. "ஐயா" மற்றும் "மணீயார் வீடு" இவ்விரு கதைகளிலும் அந்த கணவன் மனைவியின் உரையாடல்கள் எளிய முறையில், இயல்பான பேச்சுடன் பல பக்கங்கள் செல்கின்றன. அவ்வளவையும் படிக்க சலிப்பு இல்லை. கதாபாத்திரங்கள் இரண்டு தான், ஆனால் அவ்வளவு நேர்த்தியான வடிவமைப்பு.
இமையம் -- கோவேறு கழுதைகள் தொடங்கி நறுமணம் வரை நீர் எனக்கு ஒரு நல்ல ஆசிரியராகவே இருந்திருக்கீர். நன்றி.