Jump to ratings and reviews
Rate this book

என் இலக்கிய நண்பர்கள்

Rate this book
எம்.வி.வி.யின் எழுத்து, மென்மையும் திறந்த போக்கும் சக ஜீவன்களிடத்தில் பரிவும் கொண்டது. அவர். இளம்வயதிலேயே அபூர்வமான - இந்திய வாழ்க்கை மீண்டும் மீண்டும் ஆபத்தானதுங்கூட என்று நிரூபித்திருக்கும் - இலக்கியப் பித்துக்கு ஆட்பட்டுப் போனவர்.அவரது இளமைக்கால ஆவேசம் அவருடைய கனவின் ஒரு பகுதியைக்கூட நிறைவேற்றாமல் சிதைந்து போனதற்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்?மனதார அவர் ஏற்ற பணிக்குச் செலவிட்ட காலத்தையும் உழைப்பையும்விட பிழைப்புக்காக கேவலப்பட்ட மனத்துடன் செலவிட நிர்பந்திக்கப்பட்ட காலமும் உழைப்பும் அதிகம்.எம்.வி.வி.யும் எவ்வளவோ நினைவுகளை நமக்குப் பதிவுசெய்து தந்திருக்கக்கூடியவர்தான். இன்னும் எவ்வளவோ படைப்புகளையும் தந்திருக்கக்கூடியவர்

Paperback

4 people are currently reading
12 people want to read

About the author

M.V. Venkatram

11 books16 followers
Venkatram was born in Kumbakonam in a Sourashtra family. He obtained a B.A degree in Economics and was involved in silk Zari business. He first started publishing in the literary magazine Manikodi in the 1930s, while he was still a college student. He was influenced by Ku. Pa. Rajagopalan and was part of a literary circle that included Karichan Kunju (R. Narayanaswami), Thi. Janakiraman, Thiruloka Seetaram, Dhenuka, Thanjai Prakash, Na.Vichuvanathan, C.M.Muthu and Podhikaiverkpan. His works have been published in magazines like Kaalamohini, Grama Ooozhiyan and Sivaji. He also ran a literary magazine named Thenee briefly. He has written over two hundred short stories and novels. Nithyakanni Kathukal and Velivithee are his most noted works. He also wrote more than 60 short biographies for Palaniappa Brothers and translated over 10 books for the National Book Trust of India. In 1993, he was awarded the Sahitya Akademi Award for Tamil for novel Kathukal (lit. Ears).

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (20%)
4 stars
6 (40%)
3 stars
4 (26%)
2 stars
2 (13%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Gayathri (books_and_lits).
113 reviews3 followers
October 12, 2025
இந்த அளவு எண்ணற்ற எழுத்தாளர்களையும் பலப்பல பழங்கால பத்திரிகைகளையும் புதுப்புது புத்தகங்களையும் வேறு எந்த புத்தகமும் என்னிடம் கொண்டு சேர்த்ததில்லை😱

இலக்கணப் பிழையுடன் எழுதிய “சிறுகதைகளின் திருமூலர்”?! | MVV | Thi.Ja. | Mouni | என் இலக்கிய நண்பர்கள்

https://youtu.be/VOO3EcM0MfQ
Profile Image for Desikan Srinivasan.
17 reviews1 follower
May 6, 2024
வெகு சுவாரசியமான கட்டுரைகள். ஒரு அருமையான கால இயந்திரப் பயணம். தி ஜானகிராமன், மௌனி, க.நா. சுப்ரமணியம் போன்ற இலக்கிய ஆளுமைகளை அவருடைய பார்வையில், சக மனிதர்களாக காண்பது ஒரு வித்தியாசமான அனுபவம். கூடுதலாக தேனீ,கிராம ஊழியன், கலா மோகினி மணிக்கொடி என இலக்கியம் வளர்க்க முயன்ற சிறு பத்திரிகைகள் பற்றி பல தகவல்கள். முக்கியமாக, மிகப் பெரிய இலக்கிய ஆளுமைகளின் மோசமான பொருளாதார நிலை. அது குறித்து அதிகம் கவலைப் படாமல் அவர்கள் இயங்கியது என பலப் பல விஷயங்கள்.

கு. பா. ரா வை பாலியல் கதைகள் எழுதத் தூண்டியது, மௌனியை, க. நா. சு. வை சீண்டியது, ஆயினும் அவர்களிடம் நட்பு பாராட்டியது என இவரது ஆளுமை இவர் நூல்களைப் போலவே சுவாரஸ்யம்
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.