அழகிய பெரியவன் (Azhagiya Periyavan) தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல தளங்களில் இயங்குகிறார். தெளிந்த அரசியலோடு, தலித் மக்களின் பிரச்சினைகளை எழுதும் படைப்பாளிகளில் முக்கியமானவராக விளங்குகிறார். அழகிய பெரியவன் சிறந்த மேடைப் பேச்சாளரும் ஆவார். ‘தகப்பன் கொடி’ புதினத்திற்காக 2003 ஆம் ஆண்டில் தமிழக அரசின் விருது பெற்றவர். அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். முன்பு இவர் முழுநேர எழுத்தாளராக இயங்கினார்.