Jump to ratings and reviews
Rate this book

துறவாடைக்குள் மறைந்த காதல் மனம்

Rate this book
தமிழ் இலக்கிய ஆய்வுகள், பரவச மொழிதலாகவும் உயர்வு நவிற்சியாகவுமே பல காலம் இருந்து வந்துள்ளன. கடந்த அரை நூற்றாண்டாக ஆய்வுகள் புதிய திசையில் நடைபெறத் தொடங்கியுள்ளன. புனைவாகிய இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய ஆய்வுகள் மற்றொரு புனைவாகவே இருந்த நிலைமாறி, கல்வெட்டுகள், செப்பேடுகள் துணைகொண்டும் மானுட இயல் முதலான பல புதிய துறை அறிவு கொண்டும் புதிய சொல்லாடலைக் கட்டமைத்துள்ளன. தமிழ் ஆய்வைப் புதிய தடத்தில் செலுத்திய முன்னோடிகளைப் பின்பற்றி, பிரபஞ்சன் ஆதித் தமிழ் இலக்கியம் பற்றிய கருத்துகளை முன்வைக்கும் கட்டுரைத் தொகுப்பு இது.

152 pages, Paperback

First published December 1, 2011

12 people want to read

About the author

பிரபஞ்சன்

64 books60 followers
Prapanchan (Tamil: பிரபஞ்சன்), is the pseudonym of S. Vaidyalingam (Tamil: சாரங்கபாணி வைத்தியலிங்கம்) a Tamil, writer and critic from Puducherry, India.

He started his career as a Tamil teacher in Thanjavur. He also worked as a journalist in Kumudam, Ananda Vikatan and Kungumam. In 1961, he published his first short story Enna ulagamada in the magazine Bharani. He was influenced by the Self-Respect Movement. He had published 46 books. In 1995, he was awarded the Sahitya Akademi Award for Tamil for his historical novel Vaanam Vasappadum (lit. The Sky will be ours) set in the times of Ananda Ranga Pillai. His works have been translated into Hindi, Telugu, Kannada, German, French, English and Swedish. His play Muttai is part of the curriculum in Delhi University and his short story collection Netrru Manidhargal is a textbook in many colleges.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (33%)
4 stars
4 (44%)
3 stars
2 (22%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Yadhu Nandhan.
258 reviews
June 14, 2023
சங்கக் காலம் என்றாலே தமிழரின் பொற்காலமாய் அஃதிருந்துள்ளது எனும் எண்ணம் நம்மில் பலர்க்குண்டு.
ஆனால் "காதலைத் தின்று துரோகத்தை விழுங்கிய சங்கப் பெண்கள்" எனத் தொடங்கும் கட்டுரைகளின்வழி அன்றைக்கும்கூட பெண்களின் சமூக நிலை எப்படி இருந்திருக்கிறது குடும்பம் எனும் நிறுவனத்தால் பெண்களின் உரிமைகள் எப்படிப் பறிக்கப்பட்டிருக்கின்றன அந்த நிறுவனத்திற்குள் அடங்க மறுத்த பெண்களைச் சமூகம் எப்படிப் பார்திருக்கிறது என்று இதுவரை நாம் எண்ணிராத நோக்கில் ஒரு சமூகப் பார்வையுடன் சங்க இலக்கியங்களை அணுகியுள்ளார் அன்பிற்குரிய ஆசிரியர் பிரபஞ்சன்.

போர் என்பது சோழன் செய்தாலும் பாதிக்கப்படுவது மக்கள்தான் எனும் உண்மையைச் சொல்லிச் சிந்திக்கவைத்து போர்களினால் பெருமையடைந்து கொள்ள ஒன்றுமில்லை எனும் உண்மையை நிறுவுகிறார். இந்த உணர்வு தொனிக்க இந்நூலில் ஒரு உரையாடல் வருகிறது அதை எல்லோரும் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

வரலாறு என்பது எப்பொழுதும் திட்டமிட்ட மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டதாகவே உள்ளது எனும் ஆசிரியரின் ஆற்றாமையைப் புரிந்துகொள்ள முடிகிறது. சங்கக் காலத்திலும் ஒடுக்குமுறைகள் பாணர் மரபை புலவர் மரபு ஒடுக்குவதன் மூலம் நடந்திருக்கின்றன என்று சான்றுகளுடன் குறிப்பிடுகிறார் ஆசிரியர். அவை எப்படி ஒரு சமூகத்தின் குழு மனப்பாங்கைக் கட்டமைப்பதில் பங்கு வகித்துள்ளன என்பதை நுண்மையாய் விளக்குகிறார்.

வரலாற்றினை அறிவதன்வழி அதன் இருண்ட பக்கங்கள் மறுபடி நடவாமல் நாம் பார்த்துக்கொள்ள முடியும் எனும் நோக்கில் இந்நூல் வரவேற்புக்குரியதே.
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.