Jump to ratings and reviews
Rate this book

மகாகவி பாரதியார்

Rate this book
மகாகவி பாரதியார்

வ. ராமசாமி

Pages - 326

சுப்ரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

152 pages, Paperback

First published January 1, 1944

Loading...
Loading...

About the author

வ. ராமசாமி

5 books1 follower
வ. ராமசாமி அய்யங்கார் (வ. ரா), தமிழக எழுத்தாளரும், இதழாசிரியரும், தமிழறிஞரும் ஆவார். தமிழ் வசனநடையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர்களில் ஒருவர்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
20 (51%)
4 stars
12 (30%)
3 stars
4 (10%)
2 stars
3 (7%)
1 star
0 (0%)
Displaying 1 - 6 of 6 reviews
Profile Image for Prem.
77 reviews52 followers
February 26, 2019
2015-ல் குளிர்காலத்தில், அந்த அளவு குளிர் இல்லாத ஒரு நாளில் திருநெல்வேலியில் இருந்து எட்டயபுரம் செல்ல முடிவு செய்தேன். அதற்கு காரணமான பதிவு இது http://seralathan.blogspot.in/2007/04.... இந்த பயணத்தில் பாரதியைப் பற்றி படித்துக் கொண்டே செல்லலாம் என்ற எண்ணத்தில் www.freetamilebooks.com தளத்தில் தேடிக் கண்டெடுத்த புத்தகம்தான் வ.ராமசாமி எழுதிய "மகாகவி பாரதியார் வரலாறு". இந்த புத்தகம் கிரியேடிவ் காமன்ஸ் உரிமத்தில் பொது உடைமையாக்கப் பட்டுள்ளதால் கைபேசியில் படிக்குக்ம் பொருட்டு ePub, Mobi மற்றும் PDF வடித்தில் இலவசமாகக் கிடைக்கின்றது. http://freetamilebooks.com/ebooks/bha...

புத்தகத்தை எழுதிய வ.ராமசாமி தமிழ் வசனநடையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய ஒரு முன்னோடி என விக்கிபிடியா தெரிவிக்கின்றது. புத்தகத்தை வாசித்த எனக்கு அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. பாரதியாரின் வாழ்வை குறுக்கு வெட்டுத் தோற்றமாக, அருகில் இருந்து பார்த்த விதத்தில் அருமையான வாசிப்பாக எழுதி உள்ளார். இந்த புத்தகம் பாரதியின் பிறப்பிலிருந்து ஆரம்பிக்காமல் அவர் பாண்டிச்சேரியில் தங்கியிருந்த காலத்தில் ஆரம்பித்து முன்னுக்கு பின்னாக நகர்கிறது. அதுவும் ஆசிரியரின் சீரிய ஞாபகத்தில் இருந்து பாரதியின் நினைவுகளை மீட்டெடுத்து சொல்லுகிறார். அவரது நகைச்சுவை கலந்த உரைநடை வாசிப்பை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது. பாரதியின் துணிச்சல், நகைச்சுவை, கோபம், சமயோத புத்தி போன்ற குணங்களையும் அவரது நண்பர்கள், விசுவாசிகள் பலரையும் விளக்கும் பல விதமான நிகழ்வுகளை எழுதியுள்ளார். புத்தகத்தை படித்தவாறே பாரதியார் மணிமண்டபம், அவர் பிறந்த வீடு ஆகியவற்றை பார்த்தது சிறப்பாக இருந்தது. பல பிரமுகர்களின் புகைப்படங்களை பார்த்து அந்த பெயர்களை புத்தகத்தில் படித்தது நல்ல அறிமுகமாக இருந்தது. தேவையில்லாத தெரிந்த விடயங்களில் வார்த்தைகளை விரயம் செய்யாமல் புதிய பல தகவல்களை படித்த விதத்தில் இந்த புத்தகம் பாரதியின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள ஒரு மிக நல்ல தொடக்கம்.
49 reviews3 followers
January 1, 2025
பாரதியாரைப் பற்றி அவருடன் வாழ்ந்தோர் எழுதிய நூல்களுள் ஒன்று வ.ரா. அவர்களின் இந்நூல். சிலவேளை வெகுநாளாக விரும்பிய ஒன்று கிடைக்கும்பொழுது மகிழமுடியாதபடி ஆகும். அப்படித்தான் ஆனது வெகுநாளாகப் படிக்க நினைத்த இந்நூலில் 72 பக்கம் வரை

தனித்தமிழ்ப்புலவர் தம்மைத் தமிழைக் கெடுக்கிறார் எனத் தூற்றுகின்றார் என்று முன்னுரையில் கூறுகிறார் வ.ரா. அத்தூற்றல் பொருத்தமே எனத் தோன்றியது மெம்பர், ஸீன் எனறு இவர் எழுதியவற்றைக் கண்டபொழுது

அயலார் ஆட்சியில் நாட்டுப்பற்றையும் கள்ளக்காதலையும் ஒப்பிடுகிறார். ஒப்புமை கூற ஒரு முறை வேண்டாமா? எதனை எதனோடு ஒப்பிடுவது?

தமிழர்களுக்கு இந்தி எழுத்துக்களைச் சொல்வது கடினமாம்

வங்காளப் பிரிவினைக் கிளர்ச்சி தான் தன்னாட்சிக் கிளர்ச்சிக்கு அடிப்படையாம்

பாரதியார் இதழ்த்தொழில் செய்த்ததன் காரணம் நாட்டுப்பற்றா ஊதியமா என்று முன்பு இவர் ஐயுற்றாராம்

எட்டயபுரத்தில் இருந்தபொழுது பாரதியார் எழுதிய மடல் & உலா இலக்கியங்கள் தொலைந்ததற்கு மகிழ்கிறார் அவை இன்று இருந்தால் பாரதியார் புகழுக்கு அவை இழுக்காகும் என்று

நன்னூல் சூத்திரத்தைப் பாரதி பகடி செய்வாராம். நன்னூலை வெறுத்தாராம். உண்மையோ பொய்யோ இவற்றைப் படிக்கப் பிடிக்கவில்லை

இப்படியாகப் படிக்கப்படிக்கக் கடுப்பே எழுந்தது. பாரதியைப் பற்றி அறியும் பொருட்டுப் பொறுமையாகப் படித்தேன்

அப்பொறுமை வீண்போகவில்லை

பாரதியின்
உருவம்
எழுத்து
அவருக்கு ஊரார் தரும் மரியாதை
அவர் ஊராருடன் பழகும் பாங்கு
வேண்டுவோர் தேவை அறிந்து அவர் ஈதல்
தன்னை இரவலனாகக் கருதிப் பிறர் தமக்கு உதவினால் அவர் கொள்ளும் சீற்றம்

முதலியவற்றை விளக்கும் இடத்தில் என்னை ஈர்த்தார் வ.ரா. அது முதல் மேலும் ஊன்றிப் படித்தேன்

பாரதியின்
வழுக்கைத் தலை
இடது கால் ஆணி
இருந்த இடத்திலிருந்தே எச்சில் உமிழும் கெட்ட பழக்கம்
தமக்குத் தேவையானவற்றைத் தாமே செய்துகொள்ளத்தெரியாமை
பள்ளிப் பருவத்தில் ஆசிரியரைப் பற்றிப் பகடிக்குறிப்பெழுதி அருகிலிருக்கும் மாணவனிடம் காட்டிச் சிரித்தல்

பாரதி குணப்படுத்திய மன நோயாளி

முதலிய பரவலாகப் பேசப்படாத செய்தி பல சொல்கிறார். பாரதி அழுத காட்சி ஒன்றும் சொல்கிறார்.

வ.ரா. தமக்கு நம் நாட்டு அன்றைய தலைவர்கள் பெரும்பாலானோரிடம் பழக்கமிருந்தது என்று கூறுகையில் பெருமையடித்துக் கொள்கிறார் என்று தோன்றியது. ஆனால் அண்ணல் காந்தியடிகளைப் பாரதி சந்தித்த நிகழ்வை விளக்கிய இடத்தில் ஒவ்வொரு தலைவரிடத்திலும் பழகியதில் இவர் அவர்களை எவ்வாறு அளந்து வைத்திருந்தார் என்று அறிய முடிந்தது

புதுச்சேரியில் வாழ்ந்த பாரதி & பிற தலைவர்களிடம் மலையை நகரச் செய்யும் தன்னம்பிக்கை இருந்ததென்கிறார். அத்தகையோருடன் வாழ்ந்த இவருக்கும் அத்தன்னம்பிக்கை இருக்குமன்றோ

ஒடுக்கப்பட்டவரான கனகலிங்கத்திற்குப் பாரதி பூணூல் அணிவித்த நிகழ்வு

தன் பேரில் arrest warrant இருந்த சூழலில் பாரதியார் தம் தலைப்பாகையையும் மீசையையும் எடுத்துவிட்டு யாருமறியாதவாறு தஞ்சாவூர் சென்றது

திருவல்லிக்கேணி Parthasarathy கோயில் யானையிடமிருந்து குவளைக் கண்ணன் பாரதியாரைக் காத்தது

போன்ற நிகழ்வுகள் முன்பே அறிந்திருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கத்தக்கன

காடெல்லாம் விறகான செய்தி
பாரதியார் தாம் இப்படி எழுதமுடியும்

குழந்தை பேசும் பொற்சித்திரமாமே வேறு எவராலும் இப்படிச் சித்திரம் வரைய முடியாது

என்றவாறு பாரதியாரைக் கொண்டாடுகிறார். ஆம் நாம் பாரதியாரைப் போற்றுகிறோம். இவரோ கொண்டாடுகிறார் Anirudh இசையமைக்கும் Rajini படப் பாடல்கள் அவரைக் கொண்டாடுவதைப் போல

அண்ணல் காந்தியடிகளைச் சந்திக்கச் சென்ற பொழுது Rajaji போன்ற பெரியோர் கூட பாரதியை அறிமுகப் படுத்தவில்லை எனும்போது வாழுங்காலத்தில் பாரதி கொண்டாடப்படுவதெங்கே. அவர் உடல் மறைந்த பிறகே அவர் எழுத்தின் அருமை விளங்கத் தொடங்கியது போலும்

பிறகு பாரதியைப் போற்றும் நிலை வந்தது. இன்றோ எவர் ஒருவரையும் முழுமையாக ஏற்கவோ முழுமையாக ஒதுக்கவோ இயலாது என்ற பகுத்தறிவு மேலெழுந்து வருகிறது

ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதும்பொழுது அவரின் அனைத்துக் குணங்களையும் பற்றி எழுதுவதே முழுமுயற்சி ஆகும்

அவ்வகையில் இந்நூலைச் சுருக்கி விட்டேன் என்று வ.ரா. தாமே முன்னுரையில் கூறினாலும் பாரதியின் மேன்மை பற்றி மட்டுமே பேசாமல் அவர் கஞ்சாவிற்கு அடிமையானது வரை அனைத்தையும் பற்றிப் பேசியுள்ள வ.ரா. இந்நூலிற்குத் தன்னளவில் முழுமையான வடிவையே தந்துள்ளார்
Profile Image for Dr. Johnson B.
20 reviews
April 19, 2020
அக்ரகாரத்து அதிசய மனிதர் என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் போற்றப்பெற்றவர் வ. ராமசாமி (வ.ரா). இவர் மகாகவியோடு இருந்த ஐந்தாண்டு காலத்தை நினைத்துப் பார்த்து பாரதியின் மறைவிற்குப் பிறகு எழுதியது (நினைத்து எழுதியது எனும்போதே பல்வேறு நிகழ்வுகளையும் அது நடைபெற்ற காலத்தையும் இடத்தையும் ஐயத்தோடு குறிப்பிடுகிறார்). பாரதியின் வாழ்க்கைக்குப் பிறகான அவர் மீதான விமர்சனங்கள் பல்வேறு கோணங்களிலிருந்து முன்வைக்கப்படுகிறது. அதனைத் தெளிவுபடுத்தும் வகையில் இந்நூல் அமைகிறது. பாரதி, பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து பிரெஞ்சு இந்தியாவிற்குச் சென்றபிறகே வ.ரா. அவரைச் சந்திக்கிறார். அதிலிருந்து தொடர்ந்து ஐந்தாண்டுகள் அவருடன் நட்புடன் பழகியுள்ளார். அவருடன் பல்வேறு நிகழ்வுகளில் இருந்துள்ளார்.
இந்தியாவினுடைய பன்முகத்தன்மை பற்றிய கருத்து பாரதியிடம் வேறுவிதமாக இருந்துள்ளது (இன்றைய சூழ்நிலையை நினைவுபடுத்துவதாக அமைகிறது). பாரதி தொடக்க காலத்தில் எவ்வாறு இருந்தார். பின்னர் புதுச்சேரி அவருடைய வாழ்க்கையில் எவ்வித மாற்றங்களை ஏற்படுத்தியது (உடலளவிலும், மன அளவிலும்) என்பன போன்ற செய்திகள் இந்நூலுள் இடம்பெற்றுள்ளன. பாரதிக்கு நண்பர்களாக விளங்கியவர்கள், உதவிசெய்தவர்கள் குறித்த விவரமும், அவருக்கும் பாரதிதாசனுக்கும் ஏற்பட்ட உறவு முறை பற்றியும் இந்நூல் குறிக்கிறது. பாரதியின் எழுத்து, பேச்சு நடை எவ்வாறு இருந்தது என்பது பற்றியும் அவரது உருவத்தைப் பற்றியும் பல்வேறு இடங்களில் குறிப்பிடுகிறார் வ.ரா.
பாரதியின் படைப்புகள் குறித்த பல்வேறு தரப்பு விமர்சனங்களை முன்வைத்துப் பேசுகிறார். பாரதியை ‘உலக மகாகவி’ எனப் புகழும் வ.ரா. அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சிலரின் செயல்பாடுகளைக் கண்டிக்கிறார் (விரிவான தகவல்களுக்கு, ‘பாரதி மறைவு முதல் மகாகவி வரை’ என்ற நூலை நோக்கலாம்). இதுபோன்ற பல்வேறு தகவல்கள் இந்நூலுள் தரப்படுகின்றன. பாரதியைப் பற்றி அறிந்துகொள்ள இந்நூல் உதவும்.

---------------------------
முனைவர் போ. ஜான்சன்
Profile Image for Sampath Kumar.
87 reviews33 followers
August 8, 2018
இது பாரதியாரின் முழு வாழ்க்கை வரலாறா ? இல்லை. இது வ.ரா அவர்கள் பாரதியுடன் பழகிய நாட்களின் வரலாறு. கிட்டத்தட்ட மொத்தப் புத்தகமும் பாரதியின் புதுச்சேரி நாட்களைச் சுற்றியே இருந்தன. ஆயினும், பாரதியைப் பற்றிய வியப்பான தகவல்களுக்குப் பஞ்சம் இல்லை. அவரது நண்பர்கள் பெயர்கள் அனைத்தும் ஒன்றுபோல் இருந்ததால் யார் எவர் என்று ஞாபகம் வைக்க மிகவும் கடினமாயிற்று. பாரதியின் இளமைப் பருவம் பற்றிய வரலாறு அவ்வளவாக இல்லாதது ஏமாற்றமே.
Profile Image for Mahadevan Subramanian.
8 reviews12 followers
May 26, 2020
Life of a great poet

Riveting personal stories of people who lived with the great poet - Mahakavi Subramanya Bharathi. Depicts the man with all his greatness and human flaws.
Displaying 1 - 6 of 6 reviews