Jump to ratings and reviews
Rate this book

அழகின் சிரிப்பு

Rate this book
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், "அழகின் சிரிப்பு" என்ற இக்கவிதைத் தொகுப்பில் இயற்கையின் சிரிப்பில் தான் ரசித்தவை எவ்வளவு அழகு என்பதைச் செந்தமிழில் மிகவும் நயமாக எழுதியுள்ளார். கடல், தென்றல், காடு, குன்றம், ஆறு, செந்தாமரை, ஞாயிறு, வானம் எனப் பல தலைப்புகளில் கவிதைகள் இருப்பினும் தமிழ் மொழியின் சிறப்புக்கள் நல்கும் இறுதி கவிதைகள் தனிச் சிறப்பு. சிற்றூருக்கும், பட்டினத்திற்கும் உள்ள வித்தியாசங்களைக் குறித்தும் அழகாகப் பதிவிட்டுள்ளார்.

பாவேந்தர் பாரதிதாசன் – குறிப்பு

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சிந்தும் பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர் சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’, ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது.

66 pages, Paperback

First published January 1, 1944

15 people are currently reading
215 people want to read

About the author

பாரதிதாசன்

11 books19 followers
Bharathidasan (Tamil: பாரதிதாசன்) was a twentieth century Tamil Poet and a rationalist whose literary works handled Socio-Political issues. His greatest influence was Periyar and his self-respect movement. In addition to poetry, his views found expression in his works of essays, plays, films, scripts. He was also influenced by his mentor Bharathiar, another great Tamil poet. He was awarded the Sahitya Academy award for Literature in the year 1969.

He was also called as "Paventhar Bharathidasan", "Puratchi Kavingyar" (Revolutionary Poet).

தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். மேலும் அவர் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். அதன் காரணமாக, கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, மத எதிர்ப்பு போன்றவற்றினை தனது பாடல்கள் மூலம் பதிவு செய்தார்.

பிரபல எழுத்தாளரும், திரைப்படக் கதாசிரியரும், பெரும் கவிஞருமான பாரதிதாசன், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராக, 1954 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1946, சூலை 29இல் அறிஞர் அண்ணாவால், கவிஞர் "புரட்சிக்கவி" என்று பாராட்டப்பட்டு, ரூ.25,000 வழங்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
10 (43%)
4 stars
8 (34%)
3 stars
4 (17%)
2 stars
1 (4%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Dineshsanth S.
192 reviews42 followers
October 11, 2016
இயற்கையும் தமிழும் ஆங்காங்கே அழகிய உவமைகளும் இணைந்து சிரித்திடும் அழகின் தொகுப்பு "அழகின் சிரிப்பு"
Profile Image for Balasundaram Mohan.
7 reviews5 followers
February 17, 2021
"(ஆல்) குரங்கின் அச்சம்:"
கிளையினிற் பாம்பு தொங்க
விழுதென்று, குரங்கு தொட்டு
"விளக்கினைக் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் குதித்த தைப்போல்"
கிளைதோறும் குதித்துத் தாவிக்
கீழுள்ள விழுதை யெல்லாம்
ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி
உச்சி போய்த் தன்வால் பார்க்கும்.

Read in middle school and still remember the words. நனுக்கமான வரிகள்
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.