“உங்களுடைய கால் பெருவிரலிலோ, பல்லிலோ, தலையிலோ அல்லது இதயத்திலேயேகூட வலி இருந்தாலும் வேலை செய்யுங்கள்; வேலைதான் சிறந்த வலி நிவாரணி. மரணம், தூக்கம், க்ளோராஃபார்ம் ஆகியவற்றைவிட அதுதான் நன்றாக வேலை செய்யும்” என்றார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சீர்திருத்தவாதியும், எழுத்தாளருமான லியோனார்ட் உல்ஃப். வேலை! அதுவே செயல். நம்முடைய செயல் ஒவ்வொன்றும் நம்மை மேம்படுத்தும். நம்மை வாழவைக்கும். வாழும்போதே சிறப்பாக வாழ்கிறோம் என்ற உணர்வை நமக்கு நம்முடைய செயல்கள் ஏற்படுத்துகின்றன. அப்படிப்பட்ட செயல் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? இதோ... பத்திரிகையாளர், எழுத்தாளர்,- திரைப்பட இயக்குநர் ராஜுமுருகன் போல. அவரது பயணத்தைப் போல செயல்கள் இருந்தால் அதுவே வாழ்வாகும். அதுவே பூரணத்துவம். ஆம்! ராஜுமுருகன் மேற்கொண்ட இலக்கு இல்லாத, இலக்குகளை கற்பித்த பயணம்தான், இதோ ‘ஜிப்ஸி’ என்ற பெயரில் உங்கள் கைகளில் தவழும் இந்த நூல். எந்த இடமும் சொந்த இடமாக இல்லாத, உயிரையும் உறவையும் தம்முடன் இணைத்து நிலம், நீர் ஆகியவற்றுடன் உறவாடி, காற்றுவழித் திரியும் நாடோடிகளைப் பற்றி நமக்கு தெரியாத- புரியாத வாழ்நிலைகளைத் தன் பயணத்தில் உணர்ந்து, அந்த உணர்வை வார்த்தைகளாக்கித் தந்துள்ளார் ராஜுமுருகன். ‘பச்சைத் தவளையைத் தின்னும் வாத்து பச்சை முட்டை போடும். தானியங்களைத் தின்னும் வாத்து பழுப்பு வண்ணத்தில் முட்டை போடும்’ & வாத்து மேய்க்கும் நாடோடிக் கூட்டத்திடம் இருந்து நமக்கு கிடைக்கும் தகவல் இது. இதுபோன்று ஏராளமான செய்திகளை, மனித மனத்தின் சொல்லாடல்களை, வரலாறுகளை தன்போக்கில் சொல்லிச் செல்லும்போது, ராஜுமுருகனும் ஜிப்ஸியாகவே உருமாறியிருக்கிறார். விகடனில் தொடராக வந்த ஜிப்ஸிக்கு கிடைத்த வரவேற்பு இப்போது நூல் வடிவெடுத்துள்ளது. ‘வட்டியும் முதலும்’ மூலம் சராசரி மனிதர்களின் நெகிழ்வைத் தந்த ராஜுமுருகன், ‘ஜிப்ஸி’ மூலம் நம்மை நெகிழ வைக்கிறார். காற்றுவழி மனிதர்களின் அற்புத தரிசனங்களைக் காண ஜிப்ஸியைத் தொடருங்கள்.
Raju Murugan is a writer, journalist turned filmmaker. His works include Vatiyum Muthalum, Ondru and Jipsy, all of which were published in Ananda Vikatan. He made his directorial debut with Cuckoo (2014). His second film, Joker, was awarded the Best Feature Film in Tamil award at the 64th National Film Awards.
வாழ்க்கை முழுவதும் நாடோடிகளாக வாழ நிர்பந்தப்படுத்தப்பட்டவர்கள் சபிக்கப்பட்டவர்களே!…
பயணங்கள் மனிதர்களை பக்குவப்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால், பயணப்பட நினைக்கும் மனங்கள் திரும்பி வந்துசேர ஒரு வீடோ நிலமோ நிச்சயம் இருக்கும் எனும் நம்பிக்கை தான் மகிழ்ச்சியை தருமே தவிர, நிராதரவை விடப்பட்ட மனங்கள் என்றும் நாடோடி தன்மையை விரும்புவதே இல்லை.
நாடோடிகளாய் மாறிவிட நினைக்கும் மனிதர்களுக்கு தெரியும், அந்த வாழ்க்கை சிரமமென்றால், திரும்பவும் இயல்பு வாழ்க்கைக்கே வந்துவிடலாம் என்பது. ஆனால், நாடோடி குடும்பத்திலேயே பிறந்து, நாடோடியாகவே வளர்ந்து, பசிக்கு பயந்து, பலவித தொழில்கள் செய்து வாழ்க்கையை நகர்த்தும் பல இன குழுக்குள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
சர்க்கஸ் தொழில், குடுகுடுப்பைகாரர்கள், ஜோசியம் சொல்வது, ஊசி பாசி விற்பது, கம்பிமேல் நடப்பது, கத்திவீசும் வித்தை, இரவில் நடக்கும் கூத்து, பகல்வேச கலைஞர்கள் என எல்லா தொழில்களுமே வயிற்றுப் பசிக்கான நிர்பந்தத்தில் செய்யும் தொழில்கள் தான்.
கையை கீறி, கொளுத்தும் வெயிலில் தரையில் படித்திருக்கும் சிறுவனின் மார்பில் ரத்தத்தை சிதறி விடுவதற்கு பெயரென்ன? கலையா? பள்ளி செல்லும் வயதுடைய சிறுமியை கம்பி மேல் நடக்கச்செய்யும் வித்தைக்கு பெயரென்ன? வீரமா? ஆழ்ந்து யோசிக்க தேவையில்லை. பசிதான் மானுடத்தின் பொது மொழி.
நம்மை பொருத்த வரை குளுமையான பயணங்கள், பிரசித்த பெற்ற தளங்கள், வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள் மட்டும்தான் பயணங்கள் என நம்பியிருப்போம். உண்மையை சொல்லப்போனால், மகிழ்வான தருணங்களை ஏற்படுத்திக் கொள்ள மேற்கொள்ளும் செலவே நமக்கான பயணங்கள் என்றொரு எழுதப்படாத விதி உள்ளது.
ராஜூமுருகனின் பயணம் மனிதர்களையும் மனித மனங்களையும் தேடுவதாகவே உணர்கிறேன். உலகின் ஒவ்வொரு நாடோடி மனிதனின் மனநிலையும் என் கண்முன்னால் விரிகிறது. பயணங்கள் விசித்திரமானவைதான். இந்த ‘ஜிப்ஸி’ புத்தகத்தின் பயணமும் எனக்குள் பல கேள்விகளை விதைத்துள்ளது.
இதுவரை நான் சிந்தித்தே பார்த்திராத மனிதர்களை அறிமுகப்படுத்தி, வாழ்க்கை பற்றிய புரிதலை இன்னுமொரு படி நகர்த்தியமைக்கு ராஜூமுருகனுக்கு நன்றிகள்.
You will definitely love this book if you love to travel. The book is about Gipsies, people who are nomads. He tries to get the stories of nomads from TamilNadu and how their current lives are. This is a very small book for a full-blown research text. But the author has strategically mentioned where to find more text on this subject and also people who are actively researching about them.
The book has two tracks of storytelling. One of them is authors experience in Varanasi and the other about meeting nomads across Tamil Nadu. The author has subtly argued how Buddha was the first nomad he knew to LTTE Prabhakaran is also a nomad.
Authors thoughts are towards left politics and he also mentions how he believes in God but not the nonsense around it.
It actually made me realise how less we think about people whom we meet in our everyday life. I have met almost all the nomads he has written about in my real life and I never gave a second thought about them at all.
The author sure loves to travel, music and reading. The book is filled with recommendations of music he liked and the authors and books he enjoyed. Very interesting short read.
ஜிப்ஸி ராஜுமுருகனின் நாடோடிபயணம்.......இது ஒரு நாடோடி சர்க்கஸ்காரனின்,பன்றிமேய்பவனின்,நரிக்குறவனின்,வாத்துமேய்பவனின்,பக்கெட் விற்பவனின்,தெருகூத்துக்காரனின்,புகை போடுபவனின்,சாட்டை அடிப்பவனின்.....பைத்தியகாரனின் வாழ்க்கை கதை .....ஒன்றுமே பெரிதுமே இல்லாத அற்புதங்களின் அற்புதம்..//நாள் ஒன்றின் விடியலையும், இருளையும் பார்ப்பதே பயணங்களின் பெரும் தரிசனம்//...என ஜிப்ஸில் என்னையும் பயணிக்க செய்தார் ...ஒரு நாடோடியின் சுயசரிதையை படைத்ததற்கு நன்றி💝💝
பயணம் பல மனிதர்களின், காதலையும், பாசத்தையும், புறக்கணிப்புகளின் வலியையும் நமக்கு கற்றுத்தரும் - ஜிப்ஸி தொடரின் கரு, இதை பல எடுத்துக்காட்டுகளுடன் எழுதியுள்ளார் ஆசிரியர் ராஜூமுருகன்.
பல மகத்தான தலைவர்கள் உருவாக நாடோடி வாழ்க்கை தான் உதவியது என்பதை நாம் எந்த இடத்திலும் ஏற்றுக்கொள்ள கூடிய கருத்தே. பல நாடோடி இன மக்களின் வாழ்க்கை அனுபவங்கள், தந்தை பெரியார், புரட்சியாளர் சே, வைக்கம் முகமது பஷீர்,விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன்,அன்னை தெரசா, புதுமைப்பித்தன், புத்தர் இவர்களின் நாடோடி வாழ்க்கை கற்றுத்தந்த பாடம் என்ன என்பதை ராஜூமுருகன் உதாரணமாக இந்த ஜிப்ஸி புத்தகத்தில் பதிவுசெய்துள்ளார்.
ஜிப்ஸி புத்தகத்தில் நான் மிகவும் ரசித்த சில வரிகள்,
ஜிப்ஸி என்றால் நாடோடி. தனக்கு என ஒரு கூரையின்றி, நிலமின்றி... மானுடமே தனதாக்கிப் பயணங்களில் திரியும் உயிர்.
“இயற்கை, இறை, இசை, இயக்கம், உறவு, நட்பு, போதை என மனிதன் தீவிரமாக எதையாவது பற்றிக்கொள்கிறான். பற்றிக்கொண்டது எது என்பதில்தான் இருக்கிறது ஒவ்வொருவரின் வாழ்வும் தாழ்வும், அற்பமும் அற்புதமும்!”
‘தம்பி என் அனுபவத்துல நான் கண்டுபிடிச்ச உண்மை என்ன தெரியுமா? புத்திசம், பெரியாரிசம், கம்யூனிசம்... எல்லா இசமும் பெயின்ட்டுதான். நீங்க என்ன பெயின்ட் அடிச்சாலும், அது கொஞ்ச காலம்தான். அப்பறம் பெயின்ட் உதிர்ந்து மனுஷன் வெளியில வந்துருவான். மனுஷப்புத்தி மட்டும்தான் நிரந்தரம். இது தெரியாம பல வருஷமா பெயின்ட் அடிக்கிற வேலையே பார்த்துட்டு இருந்துட்டேன்.
“ஆடி மாசங்கள்ல பச்சை தவக்களைங்களைத் தின்னுட்டு வாத்துங்க பச்சை கலர்ல முட்டை போடும். மத்த காலங்கள்ல தானியங்களைத் தின்னுட்டு பழுப்பு கலர்ல முட்டை போடும். நம்ம பயலுகளும் அப்பிடித்தான். கிடைச்சதைத் தின்னுட்டு ரெண்டு கட்சிகளுக்கு மாறி மாறி ஓட்டு போடுறான்’”
“‘நாங்கெல்லாம் திருட்டுப் பசங்க... பாக்கிறதெல்லாம் ஃப்ராடு வேலை. வாட்ச்ல இருந்து டேபிள்மேட் வரைக்கும் பொய் பொய்யா சொல்லி நாலு மடங்கு விலைவெச்சு விக்கிறோம். நாலைஞ்சு மாசத்துக்கு ஒரு தடவை இங்க வந்து ஒரு வாரம் இப்படிச் சுத்துவோம். இந்த ஒரு வாரம்தான் நாங்க லைஃப்ல உண்மையா இருக்கிறது.”
எல்லாமே பொருள்; எல்லாவற்றின் மேலும் ஒரு ஸ்டிக்கர்; எதற்கும் ஒரு விலை என முற்றிலும் பொருள்வயப்பட்ட உலகில், விளம்பரங்களின் மாயங்களுக்கு மத்தியில் இருக்கிறது நம் இருப்பு.(ராமச்சந்திர குஹா எழுதி, போப்பு மொழிபெயர்த்த ‘நுகர்வு எனும் பெரும் பசி)
பசியும் தேவையும் மட்டும் அல்ல, உங்கள் சிரிப்பை, கண்ணீரை, காமத்தை, வாக்கை, கடவுளை, மதத்தை, சாதியை... எல்லாவற்றையும் பயன்பாட��கவும் பணமாகவும் மாற்றுகிறது புதிய இந்திய முதலாளியச் சமூகம். அரசையும் அதிகாரத்தையும் மட்டும் அல்ல, உங்களின் உணர்வுகளையும் பெருமுதலாளிகளே தீர்மானிக்கிறார்கள். அதற்கு அனுதினமும் இரையாகிக்கொண்டே இருக்கிறது நமது நுகர்வு எனும் பெரும்ின் உணர்வுகளையும் பெருமுதலாளிகளே தீர்மானிக்கிறார்கள். அதற்கு அனுதினமும் இரையாகிக்கொண்டே இருக்கிறது நமது நுகர்வு எனும் பெரும் பசி.(ராமச்சந்திர குஹா எழுதி, போப்பு மொழிபெயர்த்த ‘நுகர்வு எனும் பெரும் பசி)
நாங்கள் வீடு வீடாத் தானியங்கள் வாங்கிப் பொழச்சவங்க சார் நாங்க. இப்போ எங்க கையால நாலு பேருக்குச் சாப்பாடு போடுறது பெருமை இல்லியா? அந்தப் பெருமையை எங்களுக்குக் குடுங்க’’
அலெக்ஸ் ஹேலியின் ‘ஏழு தலைமுறைகள்’. அதில் உள்ள, ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்’
இயற்கை என் நண்பன். வாழ்க்கை என் தத்துவ ஆசிரியன். வரலாறு என் வழிகாட்டி’ என்ற பிரபாகரனின் வரிகள், எனக்கு ரொம்பப் பிடிக்கும்!
நாடோடியம் நமக்குக் கற்றுத்தருவது, எல்லையில்லா அன்பை; மானுடத்தின் மீதும் மனிதர்கள் மீதும் மகத்தான கரிசனத்தை; இசையை, காதலை, சமூகப் பிடித்தத்தை, இறைமையை, பெரு விசாலத்தை. நாடோடியம் பழகுவோம் நண்பர்களே!லை, சமூகப் பிடித்தத்தை, இறைமையை, பெரு விசாலத்தை. நாடோடியம் பழகுவோம் நண்பர்களே!
பயணங்கள். பெரும் பணம் வைத்து கொண்டு,பீர் குடித்து கொண்டு,பெண்டிரோடு காதல் அல்லது காம மயக்கத்தில் செல்லும் பயணங்கள் பற்றி மேற்கோள் காட்டவில்லை இப்புத்தகத்தில்.
நாடோடிகளை தேடி நாடோடிகளாக மாறி நாடோடிகளாக வாழ்ந்து எழுதிய புத்தகம்.
அன்றாட வாழ்வின் அழுதங்களில்,வாழவே மறந்து விட்ட நமக்கு,வாழ வழி சொல்லும் பயணங்கள் மற்றும் மனிதர்கள் இப்புத்தகத்தின் ஒவ்வொரு இதழிலும்.
Book Summary of Gypsy Written by Raju Murugan. Is this Book's story the base for Raju Murugan's Next movie Gypsy after the acclaimed Joker. Gypsy is an upcoming movie starring Jeeva.
Rajumurgan takes us through a never-gone journey from South to North India through the streets and tents of nomads around the country. The detailed review of the book is at http://bit.ly/storiesonboard-whoisgypsy
பொதுவா நம்ம பயணங்கள் எல்லாம் அவ்வளவு இனிமையா இருக்க காரணம் திரும்பி வந்து இளைப்பாற வீடும், மூன்று வேலை பசியை போக்க உணவும் இருக்கிறது தான். ஆனா ஒரு ஜிப்ஸி யோட பயணம் அப்படியானது இல்லை, எங்கோ பிறந்து, தாய் மன்னை வி்ட்டு,தேசங்கள் கடந்து தெருக்களில் வாழ்ந்து நாட்களை கடத்த அவனுக்கு இருக்க ஒரே காரணம் பசி மட்டும் தான். பசி ஒன்னு தான் இங்கு மனுசனை தொடர்ந்து இயக்கிகிட்டே இருக்கு.
நாம பொது புத்தில இருந்து சொல்றது தான் பேசாம ஒரு நாடோடி வாழ்க்கைய வாழ்ந்துட்டு போகலாம்னு சொல்றது,அதை எல்லாம் இந்த புத்தகம் அடிச்சு சுக்குநூறாக ஒடைச்சு இருக்கு. ஒரு நாடோடி வாழ்க்கையில எவ்வளவு சிரமங்கள், பசிக்கான போராட்டங்கள், அடக்குமுறைகள் இதை எல்லாத்தையும் தாண்டி உடலை வறுத்தியாது வயித்த நிரப்பிகனும்னு போராட்டம் தான் ஒரு ஜுப்ஸி யோட வாழ்க்கை .
ஒரு ஜிப்ஸி யோட சிந்தனையும், தத்துவார்த்தங்களும்,மானுடத்தை பற்றியான புரிதலும் இங்கு நாம கொண்டாடுற எந்த சிந்தனைவாதிகளுக்கும் கொஞ்சம் கூட குறைவே இல்லை.ஆனா அது எதுவும் படித்து கற்ற அறிவு இல்ல அவனுடைய பயணமும், வாழ்வியலும் போதித்த பாடங்கள் அவை.
இங்கு அரசியல் படுத்தப்பட்ட சட்டங்களும், தீர்மானங்களும் இருந்தாலும், அரசியல் படுத்தப்படாத சில சட்டங்களும், நடைமுறைகளும், அதிகார அடக்கு முறையும் எளிய மனுசன எப்படி நசுக்குதுனு அழுத்தமா புரிய வைக்குது, கத்திகளுக்கு இடையே நிக்கிற மெர்ஸியின் வார்த்தைகள்.
உலக இலக்கியங்களுக்கு சற்றும் குறைவில்லாத காதல் கதை தான் சர்க்கஸில் அற்புத சகோதார்கள் மாதிரி நிக்கிற வில்லிபுட் மணி யோட காதல் கதை.
ரெண்டு வயது இந்துப் பையன் செத்ததுக்கும், இருவது வயது முஸ்லிம் பையன் பைத்தியகாரன் ஆனதுக்கும் மதம் தான் பொறுப்புனு கோவப்படுற அபூ.
இப்படிப்பட்ட நான் சந்தித்திராத, சிந்தித்திராத எளிய மனுசங்களான சர்க்கஸ்காரர்கள், கலை கூத்தாடி, வேஷம் கட்டுபவர்கள், குடு குடுப்பை காரர்கள், புலம்பெயர் நாடோடிகளோட வாழ்வியல உயிரோட்டமாக பதிவு பன்னியிருக்காரு ராஜுமுருகன்.
பயணங்கள் என்பது காடு, மலை, கடல், பள்ளதாக்கு எல்லாத்தையும் தாண்டி மனித மனத்தையும், அவனின் கலையையும், நம்பிக்கையும், வாழ்வியலயும் புரிந்து கொள்வது தான் உண்மையான பயணம்னு ராஜுமுருகனோட இலக்கற்ற ஒவ்வொரு பயணமும் புரிய வைச்சு இருக்கு.
என்னதான் பசி, உறக்கம், அதிகாரத்தின் அடக்குமுறை இப்படி எவ்வளவோ பிரச்சனைகள் நாடோடி வாழ்க்கையில் இருந்தாலும், முழுக்க முழுக்க இயற்கை, இசை,பாடல்,நடனம், மானிடம், காதல்,நட்பு,உறவு னு எந்த தீங்கும்,விரோதமும் இல்லாம வாழுற ஜுப்ஸி யோட வாழ்க்கையை ஒரே ஒரு நாளாச்சு வாழ்ந்து பாக்கணும்னு ஆசைதான்.
ஓடிடி தளங்களில் வரும் தொடர்களை ஒரு அத்தியாயம் தவறாமல் பார்க்கும் ஆனால் வார இதழ்களில் வரும் தொடர்களை கண்டு கொள்ளாமல் இச்சமூகத்தில் அலையும் பெரும்பாலமானவர்களில் நானும் ஒருவன்.
அதுபோல் தவறவிட்ட ஒரு தொடர் தான் இந்த ஜிப்ஸி.
எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் திரைப்பட இயக்குனருமான ராஜு முருகன் அவர்களால் எழுதப்பட்டது.
வாத்து மேய்ப்பவர்களும், பன்றி மேய்ப்பவர்களும், கழைக் கூத்தாடிகளும், தோல்பாவை கூத்து குழுக்களும், நரிக் குறவர்களும், குடுகுடுப்பைக் காரர்களும், பூம்பூம் மாட்டுக் காரர்களும், சாட்டையடிக்காரர்களும், ஊர் ஊராய்ச் சென்று கூடாரம் போட்டு சர்க்கஸ் நடத்துவோர், வீதியில் கம்பி கட்டி கயிற்றின் மேல் நடந்து வித்தைக்காட்டுவோர், அனுமார் போல், சிவனைப் போல், இராமர் போல் வேடம் அணிந்து யாசகம் கேட்டு திரியும் ஆசாமிகள் என தினசரி நாம் கடந்து செல்லும் அத்துனைப் பேரும் ஜிப்சிக்களே. இது போன்று இந்தியா முழுக்க ஜிப்சிக்களாக பல உயிர்கள் இனக் குழுக்களாக சுற்றித் திரிகின்றனர்.
தான் கொண்ட உடல் மட்டும் சொந்தம் என மற்ற அத்தனைக்கும் உத்திரவாதமின்றி திரியும் இவர்கள் யாதும் ஊரே! யாவரும் கேளீர்! என்பதற்க்கு சிறந்த உதாரணம்.
இவர்களின் அனுதின வாழ்க்கைப் போராட்டம், படும் அல்லல்கள், படும் பாடுகள் என அனைத்தையும் மீறி அதற்குள் அவர்கள் வாழும் வாழ்க்கை, மாறும் சூழலுக்கு ஏற்ப தங்களின் தேசாந்திரி வாழ்க்கையில் இருந்து தன் பிள்ளைகளை மீட்க மேற்கொள்ளும் புது முயற்சிகள் என அவர்களைப் பற்றி விரிவாக ஆவணப் படுத்தப்பட்டுள்ளது.
பயணங்கள் வாழ்க்கையை மாற்றும் வல்லமைப் பெற்றது.
இந்த மக்களின் வாழ்க்கை முறை நமக்குள் எழுப்பும் கேள்விகள் ஏற்படுத்தும் மாற்றங்கள் என இந்த பயண அனுபவ புத்தகம், “ஒரு தேடுதல் பயணமாகத் தொடரும். அனைவரின் உள்ளத்திலும்”.
"சாலையோரம் களிமண் பொம்மைகள் விற்கிற கும்பார் இனச் சிறுமி ஒருத்தி கொடுத்த பூச்சாடி, விடியலின் கருக்கலில் கமலாலயக் குளக்கரையில் கேட்ட நாழிமணிக்காரரின் பாடல், பூம்பூம் மாட்டுக்காரர் வீட்டில் பார்த்த கறுப்பு வெள்ளைக் கல்யாணப் புகைப்படம், கழைக்கூத்தாடியின் வீட்டில் நிறைந்த இரவு உணவு, மறக்கவே முடியாத நரிக்குறவப் பெண்ணொருத்தியின் புன்னகையும் ஸ்படிக மாலையும், பாலையின் வாழ்வை மீட்டிய பெயர் தெரியாத இசைக்கருவி, மரணத்தை முத்தமிட்டு முத்தமிட்டுத் திரும்பும் சர்க்கஸ் கலைஞர்களின் கலை மனம், தூங்காமல் துரத்தி வரும் தெருக்கூத்துக் கலைஞனின் குரல், மனதின் முற்றத்தில் உதிர்ந்து கொண்டே இருக்கும் முதிர்ந்த கதை சொல்லிகளின் கதைகள், பதிந்து கிடக்கும் பெயர் தெரியாத மகத்தான நாடோடிக் குரல்களின் பாடல்கள், பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்கல்லூரியின் நாட்டுப்புறவியல் துறை நூலகம், சரஸ்வதி மகால் நூலகத்தின் வாசனை... அத்தனையையும் சுமந்து வந்திருக்கிறேன்"
இவ்வாறு பல நாடோடி/ஜிப்சி வாழ்வினை,அழகியல் சேர்த்து கொடுத்து இருக்கிறார் ராஜு முருகன்...
நாடோடி மனிதர்கள் போகுமிடங்களெல்லாம் கூடு கட்டி வாழும் தற்காலி பறவைகள்.
பயணங்கள் என்ற பெயரில் எங்காவது இயற்கையில் மடியில் இரண்டு நாட்கள் தவழ்ந்துவிட்டு வந்து தான் முழு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டவனாய் தன்னை தானே நம்ப வைத்துக்கொண்டு தன்னுடைய வழக்கமான இயந்திர வாழ்க்கையை தொடர்வது போல அல்லாமல் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை ஜிப்ஸியில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிஜ கதாபாத்திரமும் கற்றுவிட்டிருக்கிறது.
அவர்களுக்குள் அவ்வளவு அழகியல்கள் கொட்டிக்கிடந்தும் நிரந்தர உறைவிடம் இல்லாமல், உணவின்றி உறங்குதல் கொள்ளாமல் வயிற்றுப்பிழப்புக்கு அவர்கள் எடுக்கும் ஆயுதம், போராட்டம். எறிக்கும் வெயிலில் சூரியனை பார்த்து மல்லாக்க படுத்து நெஞ்சில் கொதிக்கும் இரத்தத்தை வழியவிட்டுக்கொண்டிருக்கும் சிறுவனை பார்க்கும் போது நாம் எத்தனை ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை தாண்டி, முன்பு உதாசித்தள்ளியும், எரிந்துவிழுந்து வார்த்தைகளை ஏவிவிட்டும் நெஞ்சில் வழிந்த இரத்தத்தோடு நகர்ந்த சிறுவர்களை நினைத்து வெட்கத்தில் பொசுங்கியது மனம்.
Gypsy (n) a member of a travelling people traditionally living by itinerant trade and fortune telling. Gypsies speak a language (Romany) that is related to Hindi and are believed to have originated in South Asia.
Raja Murgan is always good at finding a write words. His words and narrative made me a part of his journey. Murugan written about the people he met during his travel, their culture, in their own words. Murugan also mentioned about other gypsies he admired like Che Guevara, Rahul Sankrityayan, Mother Theresa, Captain Prabhakaran and lot of other artist.
This book is not only about Murugan's journey. It's a stories of a people who carry mountains on their back.
ஜிப்ஸி (Gypsy) ஒரு சிறப்பான கதை, இயக்குநர் ராஜு முருகன் எழுதிய ஒரு சமூக நோக்கு கொண்ட நாவல். கதை சாரம்: நாவல் ஒரு நாடோடி வாழ்க்கையை வாழும் மனிதனின் கதையைக் கொண்டுள்ளது. கதாநாயகன் ஜிப்ஸி, மத எல்லைகளைக் கடந்த ஒரு மனிதன் - அவர் எந்த மதத்தையும் ஏற்காமல் மனிதத்தை மட்டுமே வழிபடுகிறார். சிறப்பியல்புகள்: • மதம், இனம் மற்றிய எல்லைகளைக் கடக்கும் மனிதாபிமான கருத்துக்கள் • சமூக யதார்த்தத்தை வெளிப்படுத்தும் தீவிர கதைசொல்லல் • பல்வேறு மொழிகளில் பேசும் கதாநாயகனின் வாழ்க்கை அனுபவம் தாக்கம்: நாவல் மத வெறுப்பு, சமூக மோதல்கள் மற்றும் மனிதாபிமானம் பற்றிய ஆழமான சிந்தனைகளை வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக, ஜிப்ஸி ஒரு சமூக மாற்றத்திற்கான சக்திவாய்ந்த தூண்டுதலாக அமைகிறது.
தமிழ்நாட்டில் தொடங்கி காசி வரை நீளும் பயணங்களில் ஆசிரியர் ராஜு முருகனுக்குக் கிடைத்த பட்டறிவை நம்முடன் இந்நூல் வழி அழகாய்ப் பகிர்ந்திருக்கிறார்.
நள்ளிரவில் குறி சொல்லும் தொழில் செய்பவருடன் சுடுகாட்டிற்குச் செல்வதாகட்டும் நாடெங்கும் சென்று சர்க்கஸ் நடத்தும் குழுவினரோடு நேரங்கழித்தாகட்டும் தன் நண்பர்களோடு நடந்த சில சிரிப்பூட்டும் நிகழ்வுகளாகட்டும் நமக்குச் சில நல்ல புத்தகங்களை அறிமுகப் படுத்துவதாகட்டும் தன்னை ஒரு நாடோடி என்று சொல்லிக் கொள்வதிலேயே நிறைவடையும் அவர் தன்மையாகட்டும் எல்லாம் நமக்குணர்த்துவது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதைத் தான்.
நெடும்பொழுது அனைத்தையும் அணிந்து நடக்கிறோம். சிறுபொழுது எல்லாவற்றையும் களைந்து கிடக்கிறோம் உயர உயர பறக்கின்ற பறவை ஓரோர் கணம் பறக்காமல் மிதக்கிறது இப்படிதான் இருக்கிறது எல்லாமும் " S.Ramakrishnan ku aprm travel pathi uyirpa eluthina azhagaana book ! #gypsy #rajamurugan
தட்டில் சுடச்சுட சாப்பாடு கிடக்க கண்கள் மூடிக் திறந்து, 'ஓம் சாய்.. ஓம் சாய்..' என்கிற உதடுகள், 'உணவளித்த கர்த்தரே.. உமக்கே எம் ஸ்தோத்திரங்கள்' என்கிற உதடுகள், 'பிஸ்மில்லா' என்கிற உதடுகள்... எல்லாவற்றுக்கும் பசி!
A simple book of some portion of a journey by Raju Murugan. Good read but definitely, he shouldn't have attempted to make these pieces of write-up int0 the movie. Proof that loose prose cannot be a movie.
How beautiful & painful is the simple lives of simple people ? This book reminds me to stay grounded and stay grateful for many things in life ❤️ Nomadic life is the basis for human life. Definitely a wonderful read
After watched the Gypsy movie, i was keen to read this book . And it made me to feel kaasi to kanyakumari travel with author raju murugan. He also made us to experience the people who met he with this journey. யாதும் ஊரே யாவரும் கேளிர்😊🌸
ராஜூ முருகன் தன் பயண அனுபவங்களையும், நாடோடிகளுடன் உரையாடிய உரையாடலையும், அவர்கள் வரலாற்றையும் மிக அழகாக கூறியுள்ளார்...நிச்சயம் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்...