Ajayan Bala is a writer, film director and screenplay writer from Thirukalukundram, Tamilnadu, India. His book Ulaka cin̲imā varalār̲u : maun̲ayukam 1894-1929 was awarded as best book in the fine arts section by Tamil Nadu Government in 2007. He has written several fiction and non-fiction works in Tamil. He has written a history serial in the popular Tamil magazine Ananda Vikatan.
வங்காள சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாறு மேலோட்டமாக விவரிக்கப்பட்டுள்ளது. பல வியக்கத்தக்க தகவல்கள் இடம் பெற்றுள்ளது. ஆசிரியர் அஜயன் பாலாவின் சிறந்த எளிய தமிழ் எழுத்து நடை வாசிப்பை உற்சாகப்படுத்துகிறது.
இந்த புத்தகத்தில் என்னை கலங்க வைத்த சில உணர்ச்சிமிகு வரிகள்:
வரலாற்றுக்கு மனச்சாட்சிகள் ஏதும் இல்லை. சாதாரண மனிதர்களின் வாழ்வை அது பொருட்படுத்துவதே இல்லை. ஒரு துறையில் எத்தனை பேர், என்ன தியாகங்கள் செய்திருந்தாலும், அது கவலைப்படுவது இல்லை. அதில் யார் வித்தியாசமாகச் செய்கிறார்களோ அவர்களை மட்டுமே குறிவைத்துத் துதிபாடி, அந்த வித்தியாசமானவரைக் கடவுளாக மாற்றிவிடுவதில் தீவிரம் காட்டும். வரலாற்றின் இந்த விபரீத மூர்க்கத்தால், அந்தத் தனி மனிதரின் குறைகள் முழுவதுமாக மறைக்கப்படும். அதுமட்டுமல்லாது, அதே துறையில், அதே காலத்தில் வாழ்ந்த எத்தனையோ பேருடைய திறமையும், ஆற்றலும், அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்தமாக மறைக்கப்படுவதுதான் வேதனையான விஷயம். இந்திய விடுதலைப் போரில், வரலாற்றின் இந்தத் துரோகத்துக்குப் பலியானவர்களின் கதைகள் அநேகம். தமிழ்நாட்டிலேயே ஊமைத்துரை, மருதுபாண்டியர், அவர்களது மகனான துரைசாமி, திண்டுக்கல் கோபால நாயக்கர், குமாரசாமி நாயக்கர் போன்ற இன்னும் பலரும் ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டு, கடும் சித்ரவதைக்கு ஆளாகியிருக்கின்றனர். அத்தகைய வேதனைகளின் வரலாறு முழுவதும் ‘காந்தி’ எனும் ஒற்றைச் சொல்லில் மறைக்கப் பட்டதுதான் வரலாற்றின் துயரம். அவர் கைக்கொண்ட அகிம்சை அதுவரை உலகில் யாரும் பயன்படுத்தாத வித்தியாசமான ஆயுதம் என்றாலும், இந்தியச் சுதந்திரம் என்பது அவர் மட்டுமே போராடி பெற்றுத் தந்ததாக வரலாறு திரும்பத்திரும்பப் பாடப் புத்தகங்களில் விதைக்கப்பட்டு வருகிறது. விடுதலைக்காக மாற்றுப் பாதைகளில் பயணித்த தன்னலமற்ற வீரர்களின் கண்ணீர்க் கதைகளுக்குச் சாட்சி சொல்ல அந்தமான் சிறை ஒன்றே போதும். ஆங்கிலேயர்களின் கொடூரத்தை நமக்கு விவரிப்பதில் அந்தமானுக்கு அடுத்ததாக அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கியது பர்மாவின் மாண்டலா சிறைச்சாலை. அங்கே கம்பிகளுக்குப் பதில் சிறைகள் மரத்தால் வடிவமைக்கப்பட்டு இருந்தன. மரச் சட்டங்களுக்குப் பின் வசிக்கும்போது, ஒருவன் மெள்ள மெள்ள தன் சிந்திக்கும் திறனை முழுமையாக இழந்து, ஒருகட்டத்தில் மிருகமாக மாறுவதற்காக அவர்கள் பயன்படுத்திய உளவியல் ரீதியான கொடூர யுக்தி அது.
வெகு மேலோட்டமான வாழ்க்கை வரலாறு . நாம் பெரும்பாலும் பரவலாக அறிந்திருக்கும் நேதாஜியை பற்றிய தகவல் தவிர்த்து புதிதாக எதுவும் இல்லை. இந்நூலில், ஐயர்லாந்தின் "Seinn Finn " ஐ ஒரு நபர் என்பது , கல்கத்தாவின் "Holwell" நினைவுச்சின்னத்தை சிலை என்பது போன்ற பல உண்மை பிழைகள் உள்ளன. மேலும் . புத்தகத்தின் தொனி மிகவும் ஒருதலைப்பட்சமாக உணர்ந்தேன்.