வேர்களை அறுத்தெரிந்து வெடித்துக் கிளம்பிய ஒரு வித்தாக, சாதியத்தின் கொடிய நரம்புகளை அறுத்துக்கொண்டு தாழ்த்தப்பட்ட 'மகர்' இனத்தின் இருண்ட கருவறையிலிருந்து வெளிவந்த ஒரு விடிவெள்ளி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர். பள்ளி நாட்களிலேயே சாதியத்தின் கொடுங்கரங்களால் தீண்டப்பட்டு மனமெங்கும் புண்ணாகிப்போன பீமாராவ் சக்பால் என்ற இளைஞர்தான் அம்பேத்கராக மாறினார். வேதனையில் வெந்து நொந்துகொண்டிருந்த அந்த நேரத்தில் கல்வி என்ற தற்காப்பு ஆயுதம் அவர் கைக்குக் கிடைத்தது. கூரான அந்த ஆயுதம் சாதியத்தின் நரம்புகளை பதம் பார்க்கத் தொடங்கியது. இதனால், தீண்டாமை, ஏற்றத்தாழ்வு, ஒடுக்குமுறை என்று பிரயோகப் படுத்திக்கொண்டிருந்த சாதிய, துவேஷ சக்திகள் அம்பேத்கரை கண்டு அஞ்சத் தொடங்கின. இதுதான் சமயம் என்று உணர்ந்த அவர், தன் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக கல்வி என்னும் ஆயுதத்தைத் தீவிரமாகப் பயன்படுத்தினார். சட்டம் பயின்றார். பல பட்டங்கள் பெற்றார். ஆலய நுழைவு போராட்டத்தை கையில் எடுத்தார். தொடர்ந்து தம் மக்களின் விடுதலைக்காக ஓங்கிக் குரல் எழுப்பினார்.
Ajayan Bala is a writer, film director and screenplay writer from Thirukalukundram, Tamilnadu, India. His book Ulaka cin̲imā varalār̲u : maun̲ayukam 1894-1929 was awarded as best book in the fine arts section by Tamil Nadu Government in 2007. He has written several fiction and non-fiction works in Tamil. He has written a history serial in the popular Tamil magazine Ananda Vikatan.
டாக்டர் அம்பேத்கர்(14.04.1891 - 06.12.1956)அவர்களின் வாழ்க்கை போராட்டங்களை மிக தெளிவாக,எளிய எழுத்து நடையில் பதிவு செய்யப்பட்ட நூல் இது.
அம்பேத்கரின் போராட்டங்கள் அனைத்தும் தாழ்த்தப்பட்ட மக்களின் சுதந்திர எதிர் காலத்திற்கானது. பெரியாரின் போராட்டங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பெண் அடிமைத்தனத்தின் விடுதலைக்கானது. இந்தியாவில் காங்கிரஸ் இயக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளப்படாத போது காந்தியை துணிந்து எதிர்த்தவர்கள் இவர்கள்(அம்பேத்கர் & பெரியார்)இருவர் மட்டுமே. இரு தலைவர்களின் போராட்ட வாழ்வின் காரணமாகத்தான் இன்று என் நாட்டில் அனைவருக்கும் அடிப்படை கல்வி சாத்தியமானது.
அஜயன் பாலா விகடனில் எழுதிய நாயகன் தொடரில் வெளியான அம்பேத்கர் அவர்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்த நூலில் என்னை வியக்கவைத்த சில வரிகள் ,
கல்வியின்மையால் அறிவை இழந்தோம்; அறிவின்மையால் வளர்ச்சியை இழந்தோம்; வளர்ச்சியின்மையால் சொத்தை இழந்தோம்; சொத்து இல்லாததால் சூத்திரர்களாக ஆனோம்! - ஜோதிராவ் புலே
‘‘பன்னெடுங்காலமாக நீங்கள் அழுது புலம்பிக்கொண்டு இருக்கிறீர்கள். துன்பம் தோய்ந்த உங்கள் குரல்களைக் கேட்கும் போதெல்லாம் என் இதயம் வெடித்துச் சிதறுகிறது. வளர்ந்தபின், இந்த உலகில் அவமானங்களை நீங்கள் அடைவதற்குப் பதிலாக, உங்கள் தாயின் கருவறையிலேயே நீங்கள் இறந்திருக்கக்கூடாதா!’’
‘‘சில ரொட்டித் துண்டுகளுக்காக மனித உரிமையையே விற்பது மானங்கெட்டத்தனம்’’ - வழக்கம் போல, அவரது சுளீர் சாட்டையடிப் பேச்சு, மக்களை உணர்ச்சி அலைகளின் மீது ஓடமாகத் தத்தளிக்கவைத்தது. ‘‘எந்தக் குளத்தில் நமக்கு நீர் மறுக்கப்பட்டதோ, அந்தக் குளத்தை நோக்கி நடப்போம்’’
‘‘இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியாகவும், கிட்டத்தட்ட பிரான்ஸ் நாட்டு மக்கள் தொகைக்கு ஈடாகவும் இருக்கக்கூடிய பெருவாரியான தாழ்த்தப் பட்ட மக்களின் சார்பாக இங்கு பேசுகிறேன். உங்களது ஆட்சி எம்மக்களுக்கு அளித்துவந்த வேதனைகள் போதும். காலம் காலமாக எம்மக்கள் மதத்தின் பேரால் அனுபவித்து வரும் துயரங்களிலிருந்து மீட்காமல், உங்கள் அரசு மேலும் அவர்களை இழிவுபடுத்தி வருவதை இனியும் எங்களால் சகித்துக்கொள்ள முடியாது. ஒரு தாழ்த்தப்பட்டவனுக்கு அந்த நாட்டின் ராணுவப் படையில் சேர உரிமை மறுக்கப்படுமானால், அப்படிப்பட்ட ஆட்சியே எங்களுக்குத் தேவையில்லை. இனி இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களுக்காக, மக்களே ஆள்கிற புதிய ஆட்சிமுறை வேண்டும். அந்த ஜனநாயக ஆட்சியில் எம் தாழ்த்தப்பட்ட மக்கள் இப்போது வாழ்கிற அடிமை நிலையிலிருந்து விடுபட்டு, அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக நிலைகளில் ஏனைய உயர் சாதியினரைப் போல பூரண விடுதலை பெற்றவர்களாக வாழவேண்டும்!’’
எண்ணற்ற உயிர் பலிகளைக் கோரும், போரை ஆதரிக்கும் பகவத் கீதையை கையில் வைத்துக்கொண்டு அஹிம்சையைப் போதித்த அவரது கருத்தியல் முரண்பாட்டையும், பிரம்மாவின் காலிலிருந்து பிறந்தவன் எனக் கூறி குறிப்பிட்ட சகோதரர்களை தீண்டப்படாதவர்களாக ஒதுக்கிவைக்கும் வருணாசிரம தர்மத்தை முழு மனதுடன் அங்கீகரித்தபடியே தீண்டாமைக்கு எதிராக இயக்கம் நடத்திய அவரது கொள்கை முரண்பாட்டையும் பற்றி மக்கள் யோசிக்கவே இல்லை. காரணம், காந்தியின் மீதான பக்தி.
Mahathmas come and go but untouchables stay. Short and to the point book. Gandhi fasting for the religion against a British rule(loksaba and parliament seat for lower caste by reservation system) that would have given light to the lower caste people is disappointing revelation. A life dedicated to give light for others and the legacy lives on. A hope to underprivileged till today. Studied in US UK Germany . Attended the London round table Conferences. Unpleasant experiences during childhood because of the caste system made him the man who he was. Birth as Hindu is fine, death as a Hindu is no. Since Manu tharma(Hindu religion) created soothrars from the feet of Brahma. So he practiced bhudhism. Good Read. A life can’t be lived with fundamental or superstitious thoughts of ancestors. It sure needs to vetted by our own .