சிலர் வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள்; சிலருக்கு வரலாறே இடம் அளிக்கிறது. இரண்டாவது கூற்றுக்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவர் மாமேதை கார்ல் மார்க்ஸ். நூறு பக்கங்களில் உலக வரலாறு எழுதப்படுகிறது என்றாலும்கூட, இவருக்கு அதில் ஒரு பக்கம் ஒதுக்கித்தான் ஆகவேண்டும். இது தவிர்க்க முடியாத ஒன்று. கார்ல் மார்க்ஸ் பெயர் நினைவிருக்கும் வரை, வறுமையின் காரணமாக தன் ரத்தத்தையே தன் குழந்தைகளுக்குப் பாலாகவும் அறிவாகவும் கொடுத்த மார்க்ஸின் மனைவி ஜென்னியின் பெயரும் நிச்சயம் நினைவிருக்கும். ‘நாமெல்லாம் உழைக்க மட்டுமே பிறந்தவர்கள்’ என்று நினைத்திருந்த தொழிலாளிகளை முதலாளிகளாக்கியவர் மார்க்ஸ். ‘மூலதனம்’ என்ற புத்தகத்தின் மூலம் உலகத்துக்கே பொருளாதார பாதையை ஏற்படுத்திக் கொடுத்த கார்ல் மார்க்ஸின் குடும்பம், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தன் குழந்தைகளையே வறுமைக்கு பலிகொடுக்க நேர்ந்ததை என்னவென்று சொல்வது. மார்க்ஸக்கு உறுதுணையாக மனைவி ஜென்னியும், நண்பர் ஏங்கெல்சும் இல்லை எனில் மார்க்ஸம் ஒரு சாதாரண மனிதராகத்தான் இறந்திருக்கக் கூடும். இதனை மார்க்ஸே ஏற்றுக்கொள்கிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்க ஒன்று.
Ajayan Bala is a writer, film director and screenplay writer from Thirukalukundram, Tamilnadu, India. His book Ulaka cin̲imā varalār̲u : maun̲ayukam 1894-1929 was awarded as best book in the fine arts section by Tamil Nadu Government in 2007. He has written several fiction and non-fiction works in Tamil. He has written a history serial in the popular Tamil magazine Ananda Vikatan.
படித்த புத்தக வடிவம்: Amazon Kindle மின்புத்தகம் படித்த இடம்: பிட்ஸ்பர்க் நகரம், பென்சில்வேனியா மாநிலம்
கார்ல் மார்க்ஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எளிய மொழியில் சுருக்கமாக விளக்கும் நூல். அவருக்கும் அவரது காதலி மற்றும் மனைவியான ஜென்னி, அவரது உற்ற தோழராகிய ஏங்கல்ஸ், அவரது மகள்கள், அவரது படைப்புகள் என்று எல்லா தளங்களையும் தொட்டுச் சென்றாலும் இன்னும் விரிவாக எதிர்பார்க்க வைத்தது. தொழிலாளி வர்க்கத்தின் சரிதத்தை மாற்றி எழுதிய மாமேதையை பற்றி தெரிந்து கொள்ள நல்ல தொடக்கம்.
புத்தகத்தில் இருந்து சில குறிப்புகள்:
* - மற்றவர்களைப் போல பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே ஊசலாடும் வாழ்க்கையைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடும் சராசரி மனிதனாக வாழ்வதில் அவருக்கு விருப்பமில்லை.
* - "உழைப்பின் பொருளாதார விடுதலையை நிறைவேற்றுவதற்குக் கடைசியாகக் கண்டுபிடிக்கப்பட்ட வடிவம் - அரசியல்!"
* - அகங்காரமற்ற அறிவும், தன்னலமற்ற தியாகமும், பெண்களை மதிக்கும் சுபாவமுமே ஓர் ஆணின் உண்மையான அழகு என்பதை ஜென்னி நன்கு அறிந்திருந்தாள்.
* - ஒரு மழைத்துளி வானிலிருந்து பூமியில் விழுவது போல, எவருக்கும் தெரியாமல் இருவரும் தங்கள் காதலைப் பரிமாறிக்கொண்டனர்.
* - தொழிலாளி இல்லாமல் எந்த முதலாளியும் இல்லை; முதலாளி இல்லாமல் தொழிலாளியும் இல்லை. இதில் யாரும் மேலும் இல்லை; கீழும் இல்லை. இருவரும் சமம்!’
* - எதிர்ப்புகள் மூலமே வரலாறு திருப்பப்பட்டு இருக்கும் ரகசியம் புலனாகியது.
* - புறப்படும்போது எல்லா காற்றும் பூங்காற்றே!
* - ‘எல்லா நாடும் என் நாடே! எல்லா மக்களும் என் மக்கள்! நானோர் உலக மகன்!’ - தன் வாழ்வெனும் ரயிலை இயக்கும் எரிசக்தியாக, மார்க்ஸ் பயன்படுத்திய பொன்வாசகம் இது!
* - ‘அவர் யூதனாகப் பிறந்தார்; கிறிஸ்துவனாக வாழ்ந்தார்; மனிதனாக இறந்தார். காலங்கள் தோறும் அவரது பெயர் நிலைத்து நிற்கும்!’
கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு, கம்யூனிசம் பிறந்த வரலாறு பற்றி அறிய உதவும் நூல் இது. எளிய நடை. தமிழில் இது போன்ற வரலாற்று நூல்கள் அதிகம் வேண்டும். அனைவரும் படிக்கலாம்.
A brief bio of a legend. Though not elaborate, will provide enough details about Karl Marx. The author could have provided more information about the same to make the book more attractive .
This book opens up to explore more about the one of the greatest human this mankind has ever produced and his works. Must read for anyone who has a greater love for mankind.