Jump to ratings and reviews
Rate this book

Vantharkal Vendrarkal

Rate this book
Madhan, who has been working in Ananda Vikadan publications for almost 25 years as Co-editor is not only a cartoonist but also has many skills which are hidden within himself. Madhan has the ability to say things in a graceful manner. When he started to write Mughal History in Junior Vikatan, the Babar masjid dispute was burning like a fire in the north. Even some speculated that, is this the right time for this serial? Some of them even got scared. But he did not hesitate even for a moment about the start of his work. He was confident that this is the right time to do it, and moreover by revealing the truth it will only benefit and not bring harm to the society. When Madhan started to reveal the Mughal history, the series slowly became a great success. There was no stain in his character. The events were portrayed in such a way that, it looked like as if he was present at that moment, made the readers astonished.

613 pages, Kindle Edition

First published January 1, 1994

987 people are currently reading
10858 people want to read

About the author

Madhan

17 books428 followers
whose real name is Maadapoosi Krishnaswamy Govinda Kumar, is a famous Tamil cartoonist, journalist, writer and film critic who works for Ananda Vikatan magazine, a leading Tamil weekly.

During 1970s, he started his career as cartoonist at Ananda Vikatan magazine. Later he was assistant editor of Ananda Vikatan and Junior Vikatan(Tamil weekly).

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1,646 (50%)
4 stars
1,098 (33%)
3 stars
315 (9%)
2 stars
99 (3%)
1 star
93 (2%)
Displaying 1 - 30 of 233 reviews
Profile Image for Arun Radhakrishnan.
68 reviews18 followers
October 28, 2012
உணர்ச்சி வசப்பட வைத்த வரிகள்.

பாபருக்கும், மெதினிராய் (ராஜபுத்திரர், ராணா சங்கா வின் நண்பர்) க்கும் நடந்த யுத்தம்.

பாபரின் படையை தாக்குப் பிடிக்க முடியாமல் ராஜபுத்திரப் படைகள் கோட்டைக்குள் புகுந்து கொண்டு நீண்ட நேரம் வெளியே வரவில்லை. திடீரென்று பாபரை வியப்பில் ஆழ்த்திய அந்த நிகழ்ச்சி நடந்தது...

திடீரென்று கோட்டைக்குள்ளிருந்து நெற்றியில் சிவந்த திலகங்களுடன், பிறந்த மேனியுடன், கையில் வாட்கள் பளீரிட ராஜபுத்திர வீரர்கள் சாரி சாரியாக வெளியே பெருங்கோஷத்துடன் ஆவேசமாக பாய்ந்து வந்தனர்!

"என்ன இது" ? என்று குழம்பிய பாபரிடம் அவரது தளபதி கூறினார்.

"போரில் இனி தோல்வி உறுதி என்கிற நிலை ஏற்ப்படும் மாத்திரத்தில் இந்த ராஜபுத்திரர்கள் தங்கள் குடும்பங்களின் மானத்தை காக்கவேண்டி தாய், மனைவி, குழந்தைகளை வாலைப்பாய்ச்சி கொன்று விட்டு, தங்கள் போர் உடைகளை கலைந்து விடுவார்கள். அந்தக் கணமே உயிர் தியாகத்துக்கும், வீர சொர்கத்துக்கும் அவர்கள் தயாராகிவிட்டார்கள் என்று அர்த்தம். ராஜபுத்திர இனத்தின் சம்பிரதாயம் அது. இனி இவர்களுடைய உயிரற்ற உடல்களை மிதிதுக்கொன்டுதான் நாம் கோட்டைக்குள் நுழைய முடியும்..."
Profile Image for Mayooresan.
43 reviews3 followers
November 22, 2012
உலகின் மிகப்பெரிய இந்து இராச்சியத்தினுள் எவ்வாறு பெருமெடுப்பில் இஸ்லாம் பரவியது என்பதற்கு இந்தப் புத்தகம் வடக்கில் இருந்து வந்த முஸ்லீம் மன்னர்கள் என்று அழகாக அர்த்தம் கற்பிக்கின்றது. இந்திய அரசர்கள் தம்முள் முட்டி மோதிக்கொண்டு அல்லல்பட அந்த நேரம் பார்த்து பாரசீகம், ஆப்கானித்தான், மொங்கோலியா என்று கைபர் கணவாய் வழியாக வந்த அன்னியர்கள் இந்தியாவைக் கபளீகரம் செய்கின்றனர்.

புத்தகம் பெருமளவில் முகலாய ஆட்சியின் தொடக்கத்தில் இருந்து முகலாய ஆட்சியின் இறது மன்னர் வரை விலாவாரியாக விபரிக்கின்றது. விறுவிறுப்பிற்குக் குறைவில்லை. கொடுங்கோலன் ஔரங்கசீப் இந்துக் கோவில்களை இடிப்பதை நிறைவேற்றவும் அதற்கு எதிராகக் கொடி பிடிக்கும் வீர சிவாஜியும் அருமையான வரலாற்றுப் படிப்பினைகள். மாபெரும் பேரரசரைக் கூட சிறிய படையை வைத்து கரில்லா முறையில் மடக்கலாம் என்று இதன் மூலம் காட்டுகின்றனர்.

ஔரங்கசீப்பிற்கு எதிர் மறையாக அவர் தாத்தா அக்பர். இந்து இஸ்லாம் நல்லிணக்கத்தில் நாட்டை ஒரு குடையின் கீழ் கோலோச்சுகின்றார். பாபர் தொடங்கி இறுதி பாதுஷா வரை கதை நகர்கின்றது. பிரித்தானியர் டெல்லியில் ஆட்சிப் பொறுப்பேற்பதுடன் பாதுஷா எழுதும் சோகமான ஒரு கவிதையுதடன் புத்தகம் முடிவடைகின்றது.

மதன் வழமையாக நாங்கள் பேசும் போது பயன்படும் ஆங்கில வார்த்தைகளை அப்படியே புத்தகத்தில் பாவித்திருப்பது கொஞ்சம் அல்ல மிகவுமே நெருடலாக உள்ளது. யாரிற்குத் தெரியும் எதிர்காலத்தில் அவைதான் நவீன காவிங்களாகப் போற்றப்பட்ட அடிப்படை காரணியாக இருக்குமோ தெரியாது

புத்தகம் வாசித்து முடிந்த பின்னர் மனதினுள் ஒரு கேள்வி. 1500 களிலேயே பாரசீகம் இந்தியா என்று துப்பாக்கி பரவிவிட 1800 களில் கூட இலங்கையில் ஏன் துப்பாக்கி வரவில்லை. வாள் கொண்டே சிங்கள மற்றும் தமிழ் சுதந்திரப் போராளிகள் போராடினர் என்று புரியவில்லை.

வரலாற்று ஆவலர்களை ஏமாற்றாது இந்தப் புத்தகம். கட்டாயம் வாசிக்கவும் நேரம் கிடைத்தால்.
Profile Image for Ashish Iyer.
870 reviews633 followers
September 26, 2019
Basically this book is the enlarged version of those NCERT history books which we have read in schools. NCERT history books were biased and left leaning, those books were simply whitewashing all the horrifying things done by Islamic invaders to India. Leftist cabal who used to write NCERT books were simply glorifying those invaders and hide the real truth. But this book is quite opened, it doesn't hide the truth. Book does mentioned about inter family rivalry, marriage within family, zenana, forced conversion of Hindus and destruction of Hindu temples but not in details. For me the information provided in this book was not new. I found this book a bit of left leaning which was turned off for me but this book was way better than those NCERT books and i find this book Delhi Centric too which (again) we have read in school books.
August 27, 2013
ஆடி அடங்கும் வாழ்க்கையடா...
ஆறடி நிலமே சொந்தமடா...

என்னமோ தெரியல இந்த புத்தகம் படித்து முடிக்கையில் என் மனம் தானாக இப்பாடலை முணுமுணுத்தன...

ஒரு அதிரடிப்படம் ஓடி முடிந்த உணர்வு, ரொம்ப வேகமாகவே இந்த புத்தகத்த படிச்சிட்டதால பல வரலாற்று முக்கியம் வாய்ந்த தகவல்களை என் மூளை சேமிக்காமல் போய்விட்டது. திரும்பவும் தகவல்களுக்காக ஒருமுறை படிப்பேன்...!
நன்றி இதை எழுதிய மதனுக்கு...
Profile Image for Mythili Mani.
3 reviews1 follower
September 25, 2021
படிகிறவங்கள அந்த காலகட்டத்துகே கூட்டீட்டு போய் கதை சொல்ற திறமை மதன் அவர்கள்கிட்ட இருக்கு, பல நூற்றாண்டுகளாக இங்க யாரெல்லாம் வந்தங்கன்னு ரொம்ப சுவாரசியமா கோர்த்து இருக்காரு. சிலவிஷயங்கள் என் கருத்தியல் கூட ஒத்து போகவில்லை என்றாலும் , சுவாரசியம் குறையமா கடைசி பக்கம் வரை நகர்த்தி செல்லும் நடை , ரொம்ப அழகா இருந்துது , நகைச்சுவையும் சேர்ந்து.
Profile Image for Kishore Ahamed.
15 reviews10 followers
November 7, 2014
போன மே மாதம் முதன்முறையாக டெல்லி சென்ற பொது இரண்டு நாட்கள் தங்க வாய்ப்பு கிடைத்தது. என்னடா ஒரு பீச் கூட இல்ல, வெறும் மால்கள் , இவ்வளவு நெரிசல் என்று ஓரளவு நல்ல சிதோஷன நிலை கொண்டிருக்கும் பெங்களுரயே திட்டும் எனக்கு ஹிந்தியும் தெரியாமல் போனதால் அவ்வளவாக பிடித்தமே இல்லாமல் சம்பிரதயமாக பழைய தில்லி பக்கம் மட்டும் போய்விட்டு வந்துவிட்டேன். அநியாய வெயில் , கூட்ட நெரிசல், வேறு எங்கயாவது போகலாமா என்று நண்பனைக் கேட்டால் எல்லாமே ஏதோ முகலாய கல்லறைகள், பழைய கட்டிடங்கள், பூங்கா பெயர்களையும் கூறினான். ஒன்றும் புரியாததால் பெரிய நாட்டம் வரவில்லை. ஆக்ரா போகலாம் என்றால் நேரம் இல்லை. எப்போதோ படிக்கத்தொடங்கி விட்டுப்போன கார்டூனிஸ்ட் மதனின் மொகலாய ஆட்சி வலாற்றுப் புத்தகம் "வந்தார்கள் வென்றார்கள் " இந்த வாரம் முடிந்தது. யமுனை நதியின் கரையில் தேமேவென்று இருக்கும் இந்த ஊருக்கு உலக வரலாற்றில் எவ்வளவு மவுசு என்று இப்போது தான் புரிகிறது. பல நூற்றாண்டுகளாக எவ்வளவு சாம்ராஜ்யங்கள், படையெடுப்புகள், சூறையாடல்கள், குருதி ஆறுகள் என்று அனைத்தையும் கண்டு பீனிக்ஸ் பறவையாக நிலைத்திருக்கிறது ஆச்சிரியம் தான். ஆக்ராவில் ஏதோ தாஜ் மஹால் மட்டும் இருக்கிறதென்று தெரியும். அதன் வரலாரும் உணர்சிப்பூர்வமாகத்தான் இருக்கிறது. மத நல்லினக்கங்களில் அக்பரைப் புகழ்வது தெரியும். ஏழ்மைக் குடும்பத்தில் சிவாஜி ரஜினி போல் தெருவுக்கு வந்து பின் முயன்று ஈரான் முதல் வங்கம் வரை ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கட்டி ஆண்ட பாபரின் கதை மனதில் அப்படியே தங்கிவிட்டது. பள்ளி வரலாறுகளில் கொடூரனாகச் சித்தரிக்கப்படும் அவுரங்கசிப்பின் மறுபக்கம் எ��ப் பல தகவல்கள். கொடூரமான கொலைகள் , சகோதரச் சண்டைகள் , போர்க்களங்கள் என்று ஒருவாறாகப் போனாலும் சூரையாடல்களில் தொடங்கி பின் நல்லிணக்கம் ���ொண்டு மெல்ல சாம்ராஜ்ஜியத்தை வளர்த்து கலைகள் , ஓவியம், கட்டிடக் கலை என்று எல்லாவற்றையும் கண்டு வாழ்ந்துவிட்டுப்போயிருக்கிறார்கள். பிரிட்டிஷர்கள் தாஜ் மகாலை இடிக்க முயன்றது, பின் அதன் கதவுகள், உட்புறங்களில் இருந்த விலையுயர்ந்த ரத்தினங்கள் முத்துக்களை சொரண்டிக்கொண்டு போனது , தெற்கே செஞ்சிக் கோட்டை தஞ்சாவூர் கூட ஒரு காலத்தில் மோகலாயர்களின் கிழ் இருந்தது என்பது எனக்குச் செய்தி தான். குத்துப் மினார் முதல் தாஜ்மஹால் செங்கோட்டை, ஏன் தெற்கே ஔரங்காபாத் ஹைதராபாத்திலும் கலை வளர்த்திருக்கிறார்கள். புனைவு தான் என்றாலும் பொன்னியின் செல்வன் படித்ததும் அதில் வரும் சோழ வள நாட்டு இடங்களையும் கோட்டைகளையும் பார்க்க மனம் கண்டபடி தேடியது. இன்னும் போன பாடில்லை. (கல்கி குறிப்பிடும் பெரும்பாலான இடங்கள் இப்போது இல்லை எனத் தேடிப்போனவர்கள் எழுதியிருக்கிறார்கள் ). மீண்டுமொருமுறை அர்த்ததுடன் சந்திப்போம் டெல்லி!
4 reviews
January 4, 2015
வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தை படிக்க ஆரம்பித்த உடன் ஏதோ அதிரடி திருப்பங்கள் நிறைந்த சினிமா படம் பார்ப்பது போல் இருக்கும். எழுத்தில் அவ்வளவு சுவாரசியம் சேர்த்து எழுதிருப்பார் மதன் அவர்கள்.

-- விஜயசங்கர்
Profile Image for Dinesh.
128 reviews9 followers
April 13, 2023
முதலாம் டெல்லி சுல்தான் Qutb-ud-din Aibak காலத்திலிருந்து கடைசி முகலாயரான Bahadur Shah காலம் வரை வடஇந்தியாவை ஆண்ட மன்னர்களின் வீரம், துரோகம், நயவஞ்சகம், ஆட்சிமுறையை ரத்தம் சொட்ட சொட்ட (படிக்கும்போது கருப்பு மை சிவப்பாக மாறுவது போல ஒரு பிரமை) சுருக்கமாக விவரித்திருக்கிறார் எழுத்தாளர்-கார்ட்டூனிஸ்ட் மதன்.

பதவிக்காக சொந்த சகோதரர்களை கொல்வது, கண்களை குருடாக்குவது, மக்களின் தலைகளை சீவுவது என கொடூர மனம் படைத்த பல மன்னர்கள் அட்டூழியம் செய்ய; அக்பர், ஷெர்ஷா போன்ற மக்களை மதித்து நிலையான ஆட்சி புரிந்த சில மன்னர்கள் இருந்ததினால் நாடு சுடுகாடாகமல் தப்பித்தது.

ஔரங்கசீப் அத்தியாயம் முரண்பாடாக இருந்தது. சகோதரர்களை கொன்றார், அக்பரால் நீக்கப்பட்ட (இஸ்லாமியர்கள் அல்லாதோருக்கு விதிக்கப்படும்) ஜிஸ்யா வரியை மீண்டும் திணித்தார், கோவில்களை இடித்தார் என்று ஒரு அத்தியாயத்தில் கூறிவிட்டு; மறு அத்தியாயத்தில் மக்கள் குறைகளை கவனமாக கேட்டு சிறப்பான தீர்ப்பளித்தார், கட்டுக்கோப்பான ஆட்சியை வழங்கினார் என்று கூறுவது முரண்.

கடைசி மன்னரான Bahadur Shah வை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நடத்திய விதம் கொடுமை.

இந்திய வரலாறு மேல் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம்.
1 review
September 12, 2014
In comparison with the 'Volga to Ganges' by Rahul Sankarathiyan, this book carries more fiction than the fact. It speaks on the arrival of powerful Persian emperors, and terms them as looters, it is fact but no king will be graceful to anyone other than his own countrymen, and that is the universal truth. But in turn Rahul speaks politely on how the Aryans came from the North west Europe to India, the number of wars they waged against the natives of India and took control over the land. How they swallowed the deities of the land with their - religion called - Saivism - Vaishnavism - Vedicism. And later how they brought the Natives under the one roof of Hinduism, even after bringing them into a common religious identity and kept the natives of the land as the slaves in the name of caste and color of skin.

Both are invasions - worst barbaric invasions that this land had witnessed, calling one as good and labeling the other as bad, allow us to doubt the writer's partial approach.

In spite of the writer's attempt to drag 'venomous' image on the Persians, those Persians dwell with their uniqueness.

Anyhow a good attempt by an one sided half baked historian!!
Profile Image for Udhayakumar Tamileelam .
87 reviews27 followers
May 18, 2021
இந்த புத்தகத்தைப் படிக்கும் பொழுது மீண்டும் 9வது வகுப்பு சமூக அறிவியலில் உள்ள வரலாறுப் பாடத்தில் நுழைந்த காலத்திற்கு என்னை அழைத்துச் சென்றார் ஆசிரியர் மதன் அவர்கள்.
வரலாறு எப்போதுமே என்னையுடைய விருப்பப்பாடம்.
அந்த வரலாற்றை சுவையாகவும்,விறுவிறுப்பாகவும் மற்றும் பகடியாக அணுகியதே இந்நூலின் வெற்றி.
ஒவ்வொரு அரசர் பற்றிய analaysis
அவர்களைப் பற்றி ஆழமாக அறிந்து கொள்ள முடிகிறது
ஒளரங்கசீப் பற்றிய analaysis ஒளரங்கசீப்பைப் பற்றி அறிந்துகொள்ளவும்,
எனக்கு மிகவும் பிடித்தமானதாக அமைந்தது.
#Must Read
Profile Image for Vani Alagarsamy.
20 reviews3 followers
February 16, 2023
Must read, Indian history book. History in a nutshell. Available in English and other regional languages too.
249 reviews8 followers
February 1, 2016
More fiction than facts. Some biased opinions. Unwanted slander against gays and transgender people. Some information are new. Could have been lot better.
Profile Image for Balaji M.
220 reviews14 followers
November 2, 2021
"வந்தார்கள் வென்றார்கள்" - மதன்
*********************************

"வந்தார்கள் வென்றார்கள்" தொடர் "பாபர் மசூதி" இடிப்புக்கு பிறகு ஜூனியர் விகடனில் எழுதப்பட்டதாக, இப்புத்தகத்தின் முன்னுரையில், "விகடன்" தலைமை ஆசிரியரான திரு எஸ். எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
போலவே, சரித்திரத்தை ரசனையான நடையில், போர்களை பற்றி 'போர்' அடிக்காமல் எழுதியதாக திரு சுஜாதா அவர்களும் அணிந்துரையில் தெரிவித்துள்ளார்.

அதாவது கொலைபாதக, இரணகொடுர படையெடுப்புகள், சூழ்ச்சியும் துரோகங்களும் கொண்ட அரசியல், மத துவேஷங்களும் அது தொடர்பான கொலைகளும் கற்பழிப்புகளும் கொண்ட இஸ்லாமிய மன்னர்களின் படையெடுப்பு ஆட்சிமுறை சரித்திரத்தை, சலிப்பும் வெறுப்பும் ஏற்படா வண்ணம் உள்ளதை உள்ளபடி எழுதியிருக்கிறார் திரு மதன் அவர்கள்.

கிட்டத்தட்ட 10ம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு வரை நடைபெற்ற படையெடுப்புகள், கோட்டை முற்றுகைகள், கொள்ளைகள், எதிர் புரட்சிகள் மற்றும் கலகங்கள் என அந்தந்த காலங்களில் நடந்ததை படம்பிடித்து, நம்மையும் ஆப்கானிய சமர்கண்ட் முதல் பர்மா வரை சுற்றிக்காட்டியிருக்கிறது இப்புத்தகம். அதிலும் குறிப்பாக டெல்லி சுற்றியுள்ள கோட்டைகள் மற்றும் சமாதிகள் பற்றி படங்களுடன் விவரிக்கிறது.

ஆட்சியாளர்களை பற்றி சொல்ல வேண்டுமென்றால் கஜினி முகமது, கோரி முகமது, தைமூர், குத்புதீன், இல்தூத்மிஷ், பல்பன், அலாவுதீன் கில்ஜி, முகமது பின் துக்ளக், முகலாயர்கள் வம்சம்(பாபர், ஹுமாயுன், அக்பர், ஷாஜஹான், ஜஹாங்கிர், அவுரங்கசிப் , முகமது ஷா)., சிவாஜி, பற்பல ராஜபுத்திர மன்னர்கள், பீஜப்பூர் சுல்தான்கள், நிஜாம்கள், மேலும் சில இஸ்லாமிய சிற்றரசர்கள், ஆங்கிலேய���்கள் என அனைவரும் இந்த பாரத பூமிக்கு வந்து வென்ற கதையையும், வீழ்ந்த கதையையும் சொல்கிறது, கால் நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட இந்த புத்தகத்தில்.

பற்பல நூல்களை மேற்கோளாக கொண்டு, குறிப்பாக`பாபர் எழுதிய சுயசரிதியை கொண்டும் எழுதப்பட்டுள்ளது இந்நூல். இன்றளவும் பாபரும் அக்பரும் இந்தியர் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பதற்கு, அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் "அனைத்து மதத்தவரும் சமம். எந்த மதமும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை. ஒரே சட்டம் ஒரே நீதி" என்ற கோட்பாடுடன் ஆட்சி புரிந்துதான் என்பதனை நன்கு உணர்த்துகிறது இப்புத்தகம்.

மதமாற்றம், கோவில் சொத்துக்கள் கொள்ளை, தலை சீவல்கள், அந்தப்புர கேளிக்கைகள், மது மற்றும் ஓபியம் நுகர்வு என இஸ்லாமிய மன்னர்கள் கோரத்தாண்டவம் ஆடியிருந்தாலும், மற்றொரு பக்கம் சில மன்னர்கள் நீதிபரிபாலனம், சட்ட ஒழுங்கு, சமத்துவம், கவிதை, கலை, கட்டிடக்கலை என நல்வழிப்போக்கும் கொண்டிருந்தார்கள் என்பதை அறியமுடிகிறது.

வரலாற்று பாடத்தின் மீது சுணக்கம் உள்ளவர்கள், இந்த புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தால், ஒரே மூச்சில் கூட முடித்துவிடக்கூடிய அளவில் உள்ளது, திரு மதன் அவர்களின்` எழுத்துநடை.

(புத்தகத்தில் நாம் குறித்துள்ள பகுதிகளை "Highlights"ல் காண்க !!!)
Profile Image for Nisha Sadasivan.
Author 3 books24 followers
June 20, 2021
தமிழ் நூல்கள் படிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு வெகு நாட்களாகவே இருக்கும் ஒன்று தான்.

காவியா அவர்களின் தூண்டுதலின் பெயரில், "மாதொருபாகன்" படிக்க ஆரம்பித்தேன். அது பெரும்பாலும் நடைமுறைத் தமிழில் எழுதப்படவே, படிக்க முடியாமல் திக்கு முக்காடி, பின்பு வேறு வழியின்றி, அதை அங்கிளல்த்தில் படித்து முடித்தேன்.

இந்த அவல நிலையிலிருந்து என்னை மீட்கும் எண்ணத்தோடு, செந்தமிழில் இயற்றிய நூல் ஒன்றைப் படிக்கலாம் என்ற எண்ண ஓட்டத்தில் இருக்க - தோராயமாக கண்ணில் சிக்கியது தான் மதனின் "வந்தார்கள் வென்றார்கள் ".

படிக்க ஆரம்பித்தால், அப்போது தான் தெரிகிறது - நூலில் சராமாரியாக ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தியிருப்பதும், மிகுந்த நக்கல் நய்யாண்டி தனத்துடன் மதன் எழுதி இருப்பதும். அடடா , ஏன் இந்த நூலை எடுத்தோம் என்று கலங்கிப் போன எனக்கு "ஆடியோபூக்" கைகொடுத்தது.

கொஞ்சம் கேட்ட பிற்பாடே தெரிந்தது, "கூகிள் போட்காஸ்ட் " இல் இருந்தது பாதி புத்தகம் கூட இல்லை என்று. தீவிரமாக தேடி, "யூடூபில்" மீதியை கண்டுபிடித்தேன். இறுதி ஓர் இரு ஆடியோக்கள் வரும்போது தான் தெரிந்தது, இதுவும் முழுமையானதாலல்ல என்று.

அனால், புத்தகம் சூடு பிடித்திருந்ததன் காரணத்தால் மீதம் இருந்த 60 பக்கங்களை இறுதியாக வாசித்தே தீர்த்தேன். அதுவும் ஒரு விதத்தில் நல்லதைப் போயிற்று. இப்பொழுது எனக்குத் தமிழ் நூல்கள் படிக்கும் ஆர்வம் மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி :) "ஆடியோபூக்" படித்தவரின் குரலும், உணர்ச்சிகரமான வாசிப்பும் அருமை.


மதனின் "வந்தார்கள் வென்றார்கள்", இந்தியத் துணைக்கண்டத்தில், படையெடுத்து கோலூன்றிய இஸ்லாமிய அரசுகளை சுருக்கமாக விவரிக்கிறத - தோராயமாக ஒரு 500 ஆண்டு வரலாறு 300 பக்கங்களில் அடக்கம். பெரும்பாலும் முகலாயர் பற்றிய நூல் தான் இது.

"கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு" என்பதற்கு இந்த நூல் ஒரு நல்ல சாட்சி. இதுவே ஒரு குறுகிய "சினாப்ஸிஸ்" நூல் தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

மராட்டியர்களின் வீர தீரா படையெடுப்புகளை நான் முதன்முதலாக இங்கு தன் படித்தேன். "சிவாஜி" ஏன் இதனை பிரசித்தி பெற்றார் என்பதைப் படித்து வியந்தேன். கண்டிப்பாக மராட்டியர்களின் வரலாற்றை இன்னும் தோண்டிப் படிக்க, இந்நூல் என்னைத் தூண்டியுள்ளது. "சிவாஜி" தமிழகத்தையும் படையெடுத்து வென்றார் என்பதும் எனக்கு புதிய செய்தியே.

அதற்க்கு முன்பாய்க் கூட இங்கு பீஜாப்பூர் அரசின் ஆட்சி தன் போலும். "சேர சோழ பாண்டிய" பெருமை எங்கு முடிவடைந்தது என்பது புரியாத புதிராக உள்ளது எனக்கு.

முகலாயரின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தது சீக்கிய மதம் என்பதும் படிக்க அதே வியப்பைத் தான் தந்தது.

பின்னுரையில், மதன் தான் குறிப்பெடுத்து பல நூல்களையும் விவரித்துள்ளார்.

ஆகமொத்தம் இப்புத்தகம் என் மனதைப் பெரிதும் கவர்ந்தது.
Profile Image for HanSlick.
6 reviews7 followers
June 8, 2022
இந்த புத்தகம் என்னை மன்னராட்சி உலகிற்கு கொண்டு சென்றது. ஒவ்வொரு மன்னரின் கதையும் மிருதுவாகவும் தெளிவாகவும் எழுதப்பட்டுள்ளது. நான் இந்த புத்தகத்தை audible (யில்)🎧 கேட்டேன். கதை நடை அருமை. சில சமயங்களில் கதை சொல்பவர் (கே. சார்லஸ்) ஒரு கதாபாத்திரத்தை ஜாலியாகக் காட்ட வித்தியாசமான குரலைப் பயன்படுத்துகிறார்.அது என் மனதை மேலும் மகிழ்வித்தது.
Profile Image for Rohith.
31 reviews3 followers
April 10, 2022
This would be one of my best reads this year. I never thought that I could enjoy reading history would be fun until I read this book. Madhan has done an extraordinary research in Islam invasion in India and given the outcome in a way which everyone can enjoy reading.
Profile Image for Karthick.
369 reviews121 followers
January 5, 2018
Hola Hola! Scored a Century! :) :)
"Goodreads"இல் என்னுடைய 100வது புத்தகத்தின் விமர்சனம்!

"வந்தார்கள் வென்றார்கள்" பற்றி:

உண்மையிலேயே வந்தான், படையெடுத்தான், சூறையாடினான், வென்றான், சாம்ராஜ்யம் உருவாக்கினான், சென்றான் (இறந்தான்).

பாபர் முதல் ஔரங்கசிப் வரை, முகாலய அரசர்களுக்குள் இருந்த ஒரே ஒற்றுமை - தனக்கென சொத்தோ, பணமோ, பொருளோ சேர்த்துக் கொள்ளவில்லை. ஒரே குறிக்கோள் - "மக்களை தனக்குக் கீழ் கொண்டு வந்து மிகப்பெரிய சாம்ராஜ்யம் அமைப்பது", "எதிர்த்து நிற்பவனை வீழ்த்துவது, அது பெற்ற மகனாக இருந்தாலும் சரி".

அக்பர் மட்டுமே "ஹிந்துக்களை அரவணைத்துக் கொள்வதன் மூலம்தான் நிலையான, கட்டுப்பாடான ஓர் ஆட்சியை தர முடியும்" என்ற புத்திசாலி தனத்தை கையாண்டவர்!

ஜஹாங்கிரும் சரி, சாஜஹானும் சரி, கலைக்கும் காதலுக்கும் கொடுத்த முக்கியத்துவம் ஔரங்கசிப் கொடுக்காமல் போனது சற்று வருத்தமே!
ஔரங்கசிப் நாடாளும் சக்ரவர்த்தியாக இல்லாமல் இருக்கலாம்! ஆனால் தனி மனிதர் என்கிற முறையில் பக்தி, எளிமை, நீதி, வீரம், ஒழுக்கம் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர்!..

அக்பரை போல் மக்களிடம் கருணை மட்டும் கொண்டிருந்தால், ஔரங்கசிப் நிச்சியம் உலகம் போற்றும் பேரரசனாக இருந்திருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை!. இறக்கும் பொழுது அவரிடம் இருந்த சொத்து 309 ருபாய், 2 அணாக்கள்.
மற்ற முகாலய அரசர்கள் போல் தனக்கென ஓர் கல்லறை அமைக்காமல், எளிமையாக மண்ணை மூடி அடக்கம் செய்யப்பட்ட கடைசி முகாலய நட்சத்திரம் - ஔரங்கசிப்!

இவர்கள் கொடுங்கோலர்களும், மக்கள் போற்றிய பேரரசர்களும் தான்!.
ஒருவேளை முகலாயர்கள் இந்திய மண்ணில் காலடி எடுத்து வைக்காமல் இருந்திருந்தால், இன்றைய இந்தியா எப்படி இருந்திருக்கும்?
Profile Image for Dineshsanth S.
192 reviews42 followers
June 4, 2018
தைமூரில் ஆரம்பித்து டெல்லியில் இஸ்லாமிய அரசு தோன்றி சாம்ராஜ்யமாக விரிவடைந்த விதம் பற்றி சுருக்கமாகவும் மொகலாய சாம்ராஜ்யத்தின் வரலாற்றை சற்று விரிவாகவும் எளிமையான மொழிநடையில் விவரிக்கிறது வந்தார்கள் வென்றார்கள். தமிழில் சரளமான மொழிநடையில் ஒரு நாவல் போல வரலாற்றை சொல்லும் பாணியை பிரபலமாக்கியது வந்தார்கள் வென்றார்கள் என்று தான் கூற வேண்டும். சரளமான எளிய உரைநடை காரணமாக வேகமாக வாசிக்க முடிந்தாலும் வாசித்து முடித்த போது பல விடயங்கள் குறிப்பாக முக்கியமான ஆண்டுகள், போர்கள் மறந்து போயிருந்தன. மற்றையது ஜலாலுத்தீன் கில்ஜி அலாவுதீனை சந்திக்கச் சென்றது அலாவுதீன் மன்னிப்புக் கேட்டு அவருக்கு கடிதம் எழுதிய பின்னர் தான் அதுவும் அலாவுதீனின் சகோதரர் ��லூக் கான், மன்னிக்காது விடின் அலாவுதீன் தற்கொலை செய்யக்கூடும் என்று கூறியதால் தான். இணைய வசதி அதிகமில்லாத காலத்தில் இவ்வளவு தகவல்களை தேடி தொகுத்த மதனின் முயற்சி பாராட்டத்தக்கது. சுருக்கமாக சொன்னால் வரலாற்று ரசிகர்களுக்கு வந்தார்கள் வென்றார்கள் ஓர் நல்விருந்து.
Profile Image for Yuvi Yuvaraj.
5 reviews
April 1, 2015
Excellent write on Mughal dynasty in India by Madhan sir... Can understand how insecure the life by then... Write from Baabar, humayun, akbar,jagangir,shahjahan and aurangazeb , historical details and their lives were great to read... India (Hindustan by then) was most probably the wealthiest land that time... The amount of Gold,Silver and other valuable stuff stolen by Persians and East Indian company were enormous. Overall a good read for history lovers.
Profile Image for Ramakrishnan.
18 reviews1 follower
May 17, 2019
Indian secular textbooks written by so called prominent historian like romalya thaper she intentionally hided the brutality, barbarianism, and intorllerence behaviour of Islamic dynasty against Indians however Indian dharmic traditional forces were defended and saved our value system hence they have not mentioned single line about such truth rather they continusely abused dharmic traditions in the name of post modernism 😏😏😏
Profile Image for Saji Maruthurkkara.
62 reviews
July 23, 2013
Awsome history book written in beautiful and engaging Tamil. If I had read this book when I was a kid, history might not have been one of my least favorite subjects. Now I know why Akbar was called "Akbar the great". The book gives good insights into the history behind the Hindu - Muslim issues in India and the circumstances which lead to the British rule.
Profile Image for Vinoth Srinivasan.
207 reviews
September 12, 2018
A brief history of the Mughal Period in India. It also describes how the Persian and Afghan invaders etched away the wealth of our nation. The colloquial writing of Madhan is the value addition to this book. I would strongly recommend such a writing in school books too, which would make the young minds understand our glorious past easily.
Profile Image for Mohan Kumar.
16 reviews1 follower
January 15, 2014
Very interesting narration by author brings the reader a joyful mood to know about the part of Mohul Samraj in Indian history. A must read book.
Profile Image for Sri Varshini.
7 reviews8 followers
February 15, 2015
best buk bot rulers...
d way madan narrates s simply osm..!
Profile Image for N S MUTHU.
51 reviews7 followers
July 10, 2020
Absolute master piece. A must read book to now about our Turkish invaders ina fascinating way.
Profile Image for Ram M Srinivas.
91 reviews2 followers
June 7, 2023
இந்த வருடத்தில் நான் படித்து முடிக்கும் 46ஆவது புத்தகம் இது. இந்த புத்தகம் முதலில் ஆனந்த விகடன் தொடர் கதையாக வெளியிட்டு பின்பு புத்தகமாக ஒன்றிணைத்து வந்தது, வென்றது. இது புத்தக வடிவில் வந்த முதற்பதிப்பு 1994, நான் வாங்கியது முப்பத்திரண்டாம் பதிப்பு - வெளியிட்டது 2019 (படிப்பது 2023) - நான் கொஞ்சம் அல்ல, ரொம்பவே லேட்.

இந்த புத்தகத்தை எழுதியவர் கார்டூனிஸ்ட் மதன். சுமார் 280 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம், ஆனந்த விகடன் தொடராக 53 வாரங்கள் வெளியாயின போல. கதை எழுதிய ஸ்டைல் வேற லெவல். போர் அடிக்கும் வரலாறு சாயலிலும் இல்லாமல், நாவல் போல மசாலா கலந்த சாயலிலும் இல்லாமல், ஒரு தனி பாணியில் எழுதியுள்ளார் மதன். ஆங்காங்கே இந்த கால வார்த்தைகளாக போனஸ், புரொமோஷன், இன்க்ரிமெண்ட் என்று அரண்மனையில் ஆஃபீஸ் கலாச்சாரத்தை அரசர்கள் பெர்மிஷன் இல்லாமல் புகுத்திவிட்டு, சைலெண்டாக கதையை முடித்துவிட்டார் மதன்.

கதைகளில் என் மனதை பாரமாக்கிய சம்பவங்கள் பல - முக்கியமாக தைமூர், சோம்நாத் கோயில் கஜினி படையெடுப்பு, கில்ஜி ஆகியவை. நினைத்துக்கூட பார்க்க முடியாத கொடுமைகளை செய்ததில் 1ஸ்ட் ராங்க் வாங்கியவர் துக்லக் (மன்னன் அல்ல மிருகம்). நினைத்து பார்த்தால் இப்பவும் வயிறு எதோ செய்கிறது. மறுபக்கம் நாம் வரலாற்றில் படிக்காத அளவு ஹுமாயூன் பற்றிய சில விஷயங்கள் உள்ளன, ஷாஜஹான் சம்பவம் சில முகம் சுழிக்க இருக்கிறது. முக்கியமாக அவுரங்கசீப் பற்றிய பல எண்ணங்கள் மாறிவிட்டன - சுருக்கமாக சொன்னால் ஒழுக்கமான ஒரு மன்னன் (ஹிந்து மேல் உள்ள வெறுப்பின் வீரியத்தை ஒதுக்கிவிட்டால்).

மொத்தத்தில் புத்தகம் நன்றாக உள்ளது. ஓவியங்களும் புகைப்படங்களும் சூப்பர். பெரிய டுவிஸ்ட் - மதன் ஓவியங்கள் அல்ல அவை.
Profile Image for Vinoth.
3 reviews
June 26, 2019
வரலாற்றை எளிமையாகவும் ஆழமாகவும் சொ‌‌ல்ல முடியும் என்று உணர்த்திய புத்தகம். திரு மதனால் மட்டும் தான் "இவன் தன் மாப்பிள்ளையையே காட்டிக்கொடுத்தவன், அதனால் இவனை தான் முதலில் கொல்ல வேண்டும்" என்று கேளியாகவும்,
"மனிதர்கள் மாறினாலும் மனம் எங்கே மாறுகிறது" என்று நுட்பமாகவும் எழுத முடியும்.
235 ஆண்டு மொகலாய வரலாற்றை 280 பக்கங்களில் சொல்ல முடியுமா? என்ற கேள்விக்கு ஆம் என்று பதில் அளிக்கிறது, "வந்தார்கள் வென்றார்கள்".
Displaying 1 - 30 of 233 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.