Jump to ratings and reviews
Rate this book

Pei Kathaigalum Devathai Kathaigalum

Rate this book
This book is from New Horizon Media.

177 pages, Kindle Edition

First published December 1, 2005

12 people are currently reading
182 people want to read

About the author

ஜெயமோகன்

12 books5 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
35 (24%)
4 stars
62 (43%)
3 stars
37 (25%)
2 stars
10 (6%)
1 star
0 (0%)
Displaying 1 - 13 of 13 reviews
Profile Image for Puthiya Parithi.
5 reviews32 followers
February 3, 2014

பேய்களைப் பற்றி ஏற்கனவே எனக்கு ஒரு கருத்து இருந்தது..
பேய்க் கதைகள் எப்போதும் நம்மோடு இருப்பவை... தாத்தா பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்தவர்கள் யோசித்துப் பார்த்தால் அதில் 70 சதம் பேய்க்கதைகளாகத் தான் இருக்கும்.. பேய் மீது நம்பிக்கையற்றவர்கள் கூட எப்போதும் பேய்களை சுமந்து கொண்டே திரிகிறார்கள். பேய்களும் பேய்க் கதைகளும் அச்சத்துக்கு உரியவை அல்ல.. என்னைப் பொருத்தவரை பேய்க்கதைகள் நம்மை ஆசுவாசப்படுத்துபவை நமக்குள் ஆழ்ந்திருக்கும் வன்மத்தை அச்சத்தை சபலத்தை வெளிக்கொண்டு வந்து நம்மை விடுவிப்பவை... இதை ஜெ.மோ வின் இந்த தொகுப்பில் நன்கு உணரலாம்.. இதில் எந்த கதையையும் நீங்கள் படித்துவிட்டு பயப்பட மாட்டீர்கள்... ஆனால் இது ஏற்படுத்தும் அமானுஷம் உங்கள் உணர்வுகளை கொஞ்சம் உஷாராக்கிவிடும்.. இதில் இருக்கும் இமையோன்.. தம்பி.. ரூபியைத் தவிர மற்றவை எல்லாம் சுமாரனவை தான்.. வேகமான வாசிக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இந்த புத்தகம் உதவும்...
Profile Image for Soundar Phil.
129 reviews12 followers
October 28, 2014
நான் படித்த முதல் ஜெயமோகன் புத்தகம், அவரின் வாசகர்கள் அவரை ஆஹா! ஓஹோ! என்று புகழும் காரணம் இந்த புத்தகத்தின் முதல் கதையின் பாதியில் புரிந்தது. மிகச்சாதாரண பாமர எண்ணங்களை மிக அழகாய் வெளிபடுத்த அவர் பயன்படுத்தும் தொன்மையான அதே நேரத்தில் எல்லோருக்கும் புரிகின்ற மாதிரி எழுதுவது மிக நேர்த்தி.

இந்த நிழல்வெளி கதைகளின் ஊடே தொடக்கம் முதல் முடிவு வரை பிடாரிகளும்,நீலிகலும்,அழகான யட்சிகளும்,தேவதைகளும் உலாவுவார்கள் இதனை எழுத்தாளர் அவர்கள் மானுட மனத்தின் அலைகளின் மறுவடிவங்களே என கூறுகிறார்.

இந்த நூற்றாண்டில் இதை படிக்கும் வாசகனுக்கு நிறைய இடத்தில் பழமை தென்படும்..., இதற்க்காக எழுத்தாளர் அவர்கள் நிறைய விஷயங்களை பரண் மீது இருந்து எடுத்து அழகாய் எழ்த்து வடிவம் தந்திருக்கிறார்.

பழைமை,விசித்திரம்,பேய்க் கதைகள் விரும்பிகளுக்கு உகந்த தவறவிட கூடாத புத்தகம்.

By Soundarapandian
Profile Image for Manojkumar Ganesh.
Author 1 book2 followers
April 19, 2018
ஜெயமோகன் எழுத்தில் நான் படிக்கும் முதல் புத்தகம்

பேய்கள் இருக்கா? இல்லையா? என்பது ஒரு முடிவில்லா விவாதம். இந்த புத்தகத்தில் அதற்கு பதில் கிடைக்கும். வண்ணம் பூசி உருவம் கொடுத்து நாம் படத்தில் பார்த்த பேய்கள் பல. ஆனால் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய இந்த புத்தகத்தில் பேய்களுக்குள் இருக்கும் உணர்ச்சியை நீங்கள் உணரலாம். பேய்கள் என்றால் கெட்டதோ காட்டேரியோ அல்ல, அவர்களும் தேவதைகள் தான்.

இந்த பத்து கதைகளில் அறைகள், பாதைகள், தம்பி, ஐந்தாவது நபர் மற்றும் ரூபி எனக்கு பிடித்தவை.
4 reviews
Currently reading
January 27, 2024
தம்பி சிறுகதையின் விமர்சனம்:

அந்நியன் படம் பார்த்திருக்கிறோம். அதில் ஒரு சைக்காட்ரிஸ்ட் நாயகனுடன் ஒரு செஷன் நடத்துவார். அது உண்மையில் சம கால வாழ்வில் எப்படி இருக்கும் அதை சைக்காட்ரிஸ்ட் எப்படி இன்டெர்ப்ரெட் செய்து கண்டுபிடிக்கிறார் என்பது தான் இந்த சிறுகதை. நான் சிறுகதை படித்து பயப்படுவேன் என்று உணர்த்திய கதை. மனம் என்பதை எப்படி ஏமாற்றுவது, நாம் அதற்காக எப்படி நடிப்போம் மற்றும் அதன் இயல்பு என்ன என்று சொல்லும் கதை. அன்பு காட்டினால் அந்த பேய் கூட ஓட்டிவிடலாம் (உண்மையாக இருந்தால்) என்று எடுத்து காட்டும் சிறுகதை. ஜெ விற்கு நன்றிகள்
Profile Image for Meenakshisankar M.
272 reviews10 followers
June 6, 2025
A small collection of ten short stories, all focused on supernatural themes, ghosts, and horror. Vivid and spectacular descriptions spook the reader, while the characters and events burrow new insights into the human psychological depths. I particularly liked the three stories - "thambi" (dealing with a case of split personality syndrome), "kural" and "Ruby" (both dealing in supernatural scenarios with animals, thereby bringing an extra layer of sinister unease.)
Profile Image for Raja.
24 reviews5 followers
February 13, 2017
இந்தச் சிறுகதை தொகுப்பில் மனிதர்களுக்குள் குடியிருக்கும் பேய்களாலான ஓர் உலகை உருவாக்கியுள்ளார் ஜெயமோகன். எல்லாக் கதைகளும் ஆழ்மனதைத் தொடும்படி உளவியல்ரீதியாகவும் கவித்துவத்துடன் உள்ளது. பத்து பன்னிரண்டு பக்கத்தில் மனதில் அநீதி, துரோகம் , மோகம் போன்ற எல்லா உணர்வுகளையும் ஆழமாக உணரவைக்கிறார் ஜெ. குறிப்பிடும் படியாக இமையோன் பாதைகள் , தம்பி, யட்சி மற்றும் குரல் மிக அருமையாக இருக்கும். இதில் யட்சி, இரண்டாவது பெண் போன்ற கதைகள் பல முறை வாசித்தபின்னே எனக்குப் புரிந்தது. நான் படித்த சில சிறுகதை தொகுப்பினில் (“அறம் Aram ”க்கு அடுத்தபடி ) சிறந்த தொகுப்பு இது தான்.
Profile Image for Venkat.
145 reviews73 followers
July 16, 2013
Read when I was in school (around 8/9 years back) and I still can remember these stories vividly.

The story about a wife violently attacking her husband (in his privates) while being possessed by a godly spirit and the story about the crippled flower seller becoming a revered elder when he kills his sister's molester are particularly haunting.

A grotesque caricature of our seemingly amicable society and such wielding of the prose - Poignant and flowing.

Profile Image for Srikumar Krishna Iyer.
307 reviews10 followers
June 6, 2021
Nice little collection of Jeyamohan's short stories.
I just wished one could hear more of the ghost stories.
This collection comprises below stories:

இமையோன்
பாதைகள்
அறைகள்
தம்பி
யட்சி
எழுநிலை பந்தல்
இரண்டாவது பெண்
குரல்
ஐந்தாவது நபர்
ரூபி

Profile Image for Prabhu R.
22 reviews32 followers
June 11, 2013
ஜெயமோகன் எழுத்தில் நான் படிக்கும் முதல் புத்தகம்.வட்டார சொற்கள் இருக்கும் இடங்கள் எனக்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது.10 கதைகள் ... அழகாக இருந்தது.தனிமையில் தான் படித்தேன்.தம்பி கதை மிகவும் பிடித்தது.கதைகள் பலவற்றிலும் ஆண்,பெண் உறவு சார்ந்த்தாகவும்,தனிமையில் உறையாடும் மனப்பான்மையுடனும் இருந்தது.நம்ம சூது கவ்வும் விஜய் சேதுபதி ஸ்டைல்ல ஒரு கதை இருந்தது.

நான் சிறு வயதில் பேய்களை கதைகளில் கேட்டதில்லை...அதனால் எனக்கு இக்கதைகள் யாவும் சுவாரஸ்யமாகவே இருந்தது.

4-5 மணி நேரம் - 150 பக்கங்கள்
இனையத்தில் : http://www.jeyamohan.in/?p=2949 (தம்பி என்ற ஒரு கதை)
25 reviews9 followers
April 1, 2015
இந்த புத்தகத்தின் கதைகள் எல்லாம் சொல்வழி கதைகள், அதனால் இந்தகால வாசிப்பாளர்களுக்கு பெரிதாய் சுவாரசியத்தை ஏற்படுத்தாது.! ஆயினும், ஒரு முறை படிக்கலாம்...
Displaying 1 - 13 of 13 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.