Jump to ratings and reviews
Rate this book

வாழ்விலே ஒருமுறை: அனுபவக் கதைகள் [Vaazhvile Oru Murai : Anubava Kathaigal]

Rate this book
வாழ்பனுபவங்கள் கோடி. ஒவ்வொரு கணமும் அனுபவமே. வீட்டில்
குழந்தைகள் வளரும்போது ஒவ்வொரு கணமும் பொற்கணமே. பார்க்க
நமக்குக் கண்ணிருக்கவேண்டும். அனுபவங்களில் இருந்து தொடங்கி மேலும்
சில தூரம் பறந்து காற்றில் எழுவதற்கான முயற்சிகள் இவை. அனுபவங்களும்
அவை எழுப்பிய எதிரொலிகளும் அடங்கியவை. இவற்றில் உள்ள புனைவுக்கூறு ஒன்றுதான். அனுபவங்கள் இயல்பானவை. ஒரு மையம், ஒரு திறப்பு நிகழும்விதமாக இதை அமைக்கும்போது நாம் மறு ஆக்கம் செய்யவேண்டியுள்ளது. அங்கு புனைவு வந்து சேர்கிறது. என் அனுபவங்கள் எனக்கு மட்டும் உரியவை. என் குழந்தை எனக்கு அளிக்கும் பரவசம் தந்தையாக இருப்பதனாலேயே நான் அடைவது. அது பிறருக்குக் கிடைக்காமல் போகக்கூடும். ஆனால் அவ்வனுபவத்தை நான் மானிடப் பொது அனுபவத்தின் தளம் நோக்கி நீட்டினால் எல்லா அனுபவங்களும்
எல்லோருக்கும் உரியனவாகிவிடுகின்றன. "இந்நூலைத் தொடுபவன் என்னைத் தொடுகிறான்" என்றார் ஓர் எழுத்தாளர். இச்சிறு நூலைப் பற்றி அதைச் சொல்லத் துணிவேன்.

158 pages, Kindle Edition

First published December 1, 2009

11 people are currently reading
126 people want to read

About the author

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
32 (27%)
4 stars
46 (38%)
3 stars
34 (28%)
2 stars
4 (3%)
1 star
2 (1%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Thenappan Thenappan.
100 reviews6 followers
February 3, 2024
இவை அனுபவ கட்டுரைகள் என எடுத்துக் கொள்ள முடியவில்லை.. சில கட்டுரைகள், சிறுகதைகளுக்கும் அப்பாற்பட்டு மிக நேர்த்தியாக புனையப்பட்டு இருக்கின்றன.

களம், குதிரைவால் மரம் இவை ஓரு புறமென்றால், 
அவதாரம், மூன்றாவது சீட்டு இடையிலும், 
கண்ணன் ஒரு கைக்குழந்தை, தேசம் மாரு புறமாய்

நேர்த்தியாகவும் அழகாகவும் தொகுக்கப்பட்டிருக்கின்றன...

:)
54 reviews9 followers
June 11, 2020
ஜெயமோகன் அவர்களது கதைகள், அல்லது அனுபவங்கள் மிகவும் எளிமையான ( but grandiose) வடிவமைப்பபை உடையது என்பது என் கருத்து. வாழ்க்கையில் நிகழும் சிறு அனுபவங்களை இவ்வளவு பிரம்மாண்டமான முறையிலும் அதிர வைக்கும் நிகழ்வுகளை நுட்பமாக கூற முடியுமா என்று எனக்கு வியப்பை ஆழ்த்துகிறது.
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.