பனிமனிதன் 1998இல் தினமணி சிறுவர்மணியில் தொடராக வெளியாகியது. ஒவ்வொரு வாரமும் அக் கதையை வாசித்து இளம் வாசகர்கள் எழுதிய கடிதங்கள் பிரசுரமாயின. அந்த உற்சாகத்தை இன்றும் நினைவு கூர்கிறேன். அன்றும் இன்றும் வாசிக்கும் சிறுவர்களின் கற்பனையைத் தூண்டும் நாவலாகவே இது உள்ளது. குழந்தைகளுக்கான இந்நாவலை குழந்தைகளும் பெரியவர்களும் வாசிக்கலாம். குழந்தைகள் அடையும் உற்சாகத்தைப் பெரியவர்களும் அடையலாம்.
சிறுவர்கள் இளையவர்களுக்காக ஜெயமோகன் எழுதிய அற்புதமான நவல். ஒரு வரியில் சொல்லவேண்டும் என்றால் "பல சுவாரசியங்கள் கொண்ட சாகசமான நாவல் "A full filled Adventurous Novel". பதின் பருவத்தில் இருக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக இந்த நவலை பரிசலியுங்கள்
புத்தகம் : பனிமனிதன் எழுத்தாளர் : ஜெயமோகன் பதிப்பகம் : நற்றிணை பதிப்பகம் பக்கங்கள் : 224 நூலங்காடி : ஈரோடு புத்தகத் திருவிழா 2023 விலை : 250
🔆 எங்கும் பனிப்பொழிவு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெள்ளை போர்வை போர்த்தியது போல இருந்த லடாக்கில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள், வித்தியாசமான ஒன்றைக் கண்டனர்.
🔆 அது ஒரு மனிதனின் கால்த்தடம். சராசரி மனிதனை விட மூன்று மடங்கு இருந்தது அந்த கால்த்தடம். அதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு - மேஜர் பாண்டியனிடம் வழங்கப்பட்டது.
🔆 அதைக் கண்டுபிடிக்க அவர் புறப்பட்ட போது, சிறுவன் கிம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தான். அவரையும் அழைத்துக் கொண்டு, இந்த மனிதனைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் டாக்டரை பார்க்க சென்றார்கள்.
🔆 மூவரும் இணைந்து அந்த மனிதரை தேட தொடங்கினார்கள். அவர்கள் தேடுவது குரங்கு மனிதன் அல்ல, பனிமனிதன் என்றும், அந்த மனிதன் ஒருவன் அல்ல, ஒரு கூட்டமே அந்த காட்டுக்குள் உள்ளது தெரிய வந்தது.
🔆 ஒவ்வொரு படியாக அவர்களை அழைத்துச் சென்றது அந்த பணி மனிதன் தான். வழியில் ஏராளமான தங்கம், வைரம் என இவர்கள் தடுமாற நிறைய காரணிகள் இருந்தன.
🔆 புத்த பிக்குகள் தங்களின் அடுத்த லாமா-வையும் கண்டு கொண்டனர்.
🔆 அவர்களின் சுதந்திரமான, இனிமையான வாழ்க்கைக்கு எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என விரும்பிய டாக்டரும், பாண்டியனும் அவர்களை பற்றிய ரகசியத்தை அரசாங்கத்தின் கூறவில்லை.
🔆 ஒரு எழுத்தாளர் 12 மாதங்கள் 12 புத்தகங்கள் - ஐந்தாவது புத்தகம் இது.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
1998-இல் சிறுவர்மணியில் தொடராக வெளியான நாவல். லடாக்கில் மிக நீளமான பனிமனிதனின் கால்தடம் கிடைக்கிறது. அதைப் பற்றி விசாரிக்க மிலிட்டரி கேப்டன் பாண்டியன், டாக்டர் திவாகர் உதவியை நாடுகிறார். பனிமனிதனால் ஒரு இக்கட்டில் இருந்து காப்பாற்றப்பட்ட சிறுவன் கிம் இவர்களுக்கு உதவியாக துணை செல்கிறான். மூவரும் பனிமனிதன் வாழும் இடத்தை நோக்கிச் செல்ல பயணம் மேற்கொள்கிறார்கள். பல இன்னல்கள் ஏற்பட்டாலும் மனம் தளராமல் முன்னேறி செல்கிறார்கள். அடுத்த லாமாவை தேடி சென்று கொண்டிருக்கும் இரண்டு புத்த பிட்சுக்களை வழியில் சந்திக்கிறார்கள். புத்தரின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளும் கிம் வழியாக ஆசிரியர் கூறியிருக்கிறார்.
பனிமனிதன் வாழும் இடம் கற்பனை உலகின் பிரம்மாண்டம். சிறுவர்களுக்கான கதை தான் ஆனால் பெரியவர்களும் ரசிக்கும் வகையில் இருக்கிறது. அறிவியல், வரலாறு, கற்பனை உலகம், மதம், தத்துவம் அனைத்தையும் உள்ளடக்கிய நாவல். ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியில் வரும் துணுக்கு அறிவை வளர்த்துக் கொள்ள உதவும். புத்தகத்தில் ஓவியங்கள் சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
பனிப் பிரதேசத்தை கண் முன் நிறுத்தியது ஆசிரியரின் எழுத்து. புத்தகத்தை படித்து முடித்ததும் ஒரு முறையாவது பனிப் பிரதேசத்திற்கு போக வேண்டும் என்று தோன்றியது. சிறுவர்களுக்கான fantasy கதை படிக்க வேண்டுமானால் இந்த நாவலை கண்டிப்பாக படியுங்கள். எளிய மொழிநடை, சுவாரஸ்யமான தகவல்கள், கற்பனை உலகின் அதிசயங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய புத்தகம்.
This entire review has been hidden because of spoilers.
I remember reading this story published in dinamani's siruvarmani, weekly supplement. But it was stopped abruptly. Found this book few days ago and finished reading the ending.
It is a fantasy adventure story. The sentences and words used are simple throughout the book. Kids will enjoy this.
This book triggered my memory of reading "Siruvar malar".
It is an easy read. Though the intended audience is children, people of all ages can read and enjoy the process.
It is a book about an adventure with 3 people from different backgrounds. During the adventure, the characters are discussing topics from science, and life wisdom(based on Buddism).
சிறுவர்களுக்கான நாவல் ஆனால் எந்த வயதினரும் இந்நாவல் உருவாக்கிய உலகத்துக்குள் வாழ்ந்து, சாகசம் புரிந்து, மேலும் இம்மனித வாழ்க்கை நோக்கிய புரிதலை அடைந்து மீளலாம். எளிதில் வாசித்துவிடும் நடையில் இருப்பது கூடுதல் சிறப்பு. கடினமான வாசிப்புக்கு இடையில் இதமான வாசிப்பனுபவம் வேண்டுபவர்கள் வாசிக்கலாம்.
Awesome book for children and adults, Lot of info with simple explanation Many interesting scenes may be reflected in The Avatar movie but the movie is came a decade later to this book.
குழந்தைகளுக்காக எழுதப்பட்ட நாவலாக இருந்தாலும் பெரியவர்களுக்கான வாசிப்பிற்கும் ஏற்ற நாவல். இமயமலை குறித்தும், அது எவ்வாறு உருவாகியது என்ற அறிவியல் குறித்தும், அதன் பண்பாட்டு வரலாறு குறித்தும் எழும் கேள்விகளுக்கும் மற்றும் ஆச்சரியங்களுக்கும் கற்பனைகளின் வழியாக ஒரு குழந்தையின் மனதில் இருந்து படிக்கும் வாய்ப்பைத் தருகிறது இந்நூல்.
கற்பனையில் உருவான பனி மனிதன் மூலம், பரிணாமத்தில் கண்டறியப்பட்ட பிற குரங்கு மனிதர்களை இந்நூல் அறிமுகப்படுத்துகிறது. கடலாக இருந்து பின்னர் மலையாக மாறிய இமயமலை குறித்து ஏராளமான தகவல்களை விளக்கிச் சொல்கிறது. பௌத்தம் குறித்தும் திபெத்திய லாமாக்கள் குறித்தும் அறிமுகப்படுத்துகிறது.
பூச்சிகளைப் போன்ற ஒரே ஒரு ஆழ்மனத்தில் இணைந்து கூடிய பனிமனிதக் கூட்டத்தை பற்றிய கற்பனை அருமை.
இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட படி ராமபிதாகஸ் ( ramapithecus ) என்ற குரங்கு மனிதனில் இருந்து மனிதன் வந்தான் என்ற அறிவியல் கூற்று , நான் படித்தவரையில் உண்மை அல்ல என்றே கொள்கிறேன். ராமபிதாகஸ் என்ற குரங்கு மனிதனிலிருந்து வந்த குரங்கு இனம் ஒராங்குட்டான் ( Orangutan ) குரங்குகள்.
இந்த கதையை படிக்கத் தொடங்கிய உடனே, எங்கேயோ படித்த ஞாபகம் பின் மண்டையில் உறுத்திக் கொண்டே இருந்தது. அதற்கான விடையை திரு. ஜெயமோகன் அவர்களே இந்த புத்தகத்தின் முன்னுரையில் தந்து விட்டார். நான் சிறு வயதாக இருந்த போது ஒரு செய்தித் தாளில் இது தொடர் கதையாய் வந்து, பின் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது என்று தெரிய வந்தது. திரு மோகன் அவர்கள் குறிபிட்டது போல கிராமப்புற மாணவர்களுக்கு இது போன்று வழிகளில் தான் கதைகள் படிக்க கிடைக்கும். அப்போது திடீரென்று இந்த கதை நின்று விட்டது எண்டு நான் அறியாமல், கொஞ்ச நாள் தேடினேன். பிறகு, காலப் போக்கில் மறந்தும் போனேன். அனால், முடிவு பெறாத ஒரு கதை, அதற்கான தாக்கம் நேற்று வரை இருந்து கொண்டு தான் இருந்தது. இந்த புத்தகத்தை படிக்கும் பொது அப்டி ஒரு பரவசம் - மீண்டும் குழந்தை பருவம் போன மாதிரி.! ஒரு நிம்மதி பெருமூச்சு, சந்தோஷம் எல்லாம்...!
The book starts with a quest to find out about this “Pani Manithan” (Snowman) who keeps leaving giant footprints near the Himalayas. Indian Army appoints one Major Pandian to check this out. He thinks it’s a monkey. Or probably China’s way of confusing Indian Army by leaving such fake footprints. He sets out into the Himalayas to see if his theory was right. A scientist + Doctor “Dhivakar” was appointed to help him. On the way to find this Snowman, they run into “Kim” a Ladakh Kid who had encountered a Snowman before. These three people then venture into the Himalayas in search of the so-called Snowman.
I knew how the book would end as soon as I reached this part. It is a children’s story, so it wasn’t that big of a surprise when it ended. But, what makes this book special is the amount of research the author had done (or probably a simple Google search! Who knows?) to make this an interesting reading. I kept searching Google about the facts that are mentioned in this book, and it kept surprising me. How little we know!
There are a few illustrations in the book to help children visualize the fantasy the author is describing. One sentence, as the author says before the starting of the book, isn’t longer than ten words, so it is an easy read for anyone (even those who know very little Tamil). There are a few spelling mistakes that irritate sometimes, but overall this book is for everyone (not only for the children).
Though the adventure and the fantasy will lure the children into the book, I doubt if the philosophy and the talk about the “Conscious, subconscious and unconscious (even collective unconscious)” would interest them. What starts as an adventure, soon turns into a thriller and then dives deep into the fantasy. And finally, spill some of the philosophical flowers here and there in the end, there you have it! The Snowman!