சேகுவேராவின் மோட்டார் சைக்கிள் பயணம் மற்றும் அரசியல் பார்வை ஆகியவற்றை உள்ளடக்கியதே இந்நூல். இந்த பயணத்தின் மூலம் எர்னஸ்டோ எவ்வாறு உலகம் போற்றும் மாபெரும் போராளி சே குவேராவாக உருவெடுக்கிறார் என்பதை அழகுற விளக்குகிறது. இதில் சேவின் அரசியல் சிந்தனை எந்தெந்த காலகட்டத்தில் எவ்வாறு மாற்றம் அடைகிறது என்பதையும் கூறுகிறது.
"சே குவேரா: புரட்சியாளர் ஆனது எப்படி?" சே குவேரா குறித்து மருதன் எழுதியுள்ள புத்தகம் இது. சிறப்பான வாழ்க்கை வரலாற்று நூல், சே குவேராவின் போராட்டப் பாதையை விரிவாகக் காட்டுகிறது. அவரது சிந்தனைகள், அரசியல் பயணம், மற்றும் புரட்சிகர மாற்றங்களுக்கு அடித்தளமான நிகழ்வுகளை தெளிவாக வெளிப்படுத்துகிறது. சிறந்த எழுத்து நடை, ஆழமான பகுப்பாய்வு, மற்றும் உற்சாகமான விவரணங்களால், இது ஓர் அபூர்வமான படைப்பாக அமைந்துள்ளது.
சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி என்று இந்த புத்தகம் நமக்கு சொல்கிறது. இதை மருதன் என்பவர் மொழிபெயர்த்துள்ளார். இந்த புத்தகம் கிழக்குப்பதிபகத்தாள் வெளியிடப்பட்டது.