சங்கப் பாடல்களை வாசிக்கையில் எல்லாம் எங்கோ நாம் ஊகிக்கமுடியாத வரலாற்றின் ஆழத்தில் நிறைந் திருந்த நம் மொழி கனிந்து அளித்த முத்தங்கள் அவை என்றே உணர்கிறேன். இந்த முத்தங்கள் வழி யாக மட்டுமே அந்தப் பேரழகை, பேரன்பை உணர முடிகிறது ... எனக்குத் தெரியும், இவை தென்மதுரையும் கபாட புரமும் கண்ட தொல்முத்துகள் என. நாளை விண் வெளி வசப்படும் காலத்திலும் இவை இருக்கும் என. ஆயினும், இவற்றை இங்கே இத்தருணத்தில் மட்டும் நிறுத்திப் பார்த்திருக்கிறேன். அழிவின்மையை என் சுண்டுவிரலில் எடுத்து கண்ணெதிரே தூக்கிப்பார்ப்பது எவ்வளவு பேரனுபவம்
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.
He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions. --- தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.
அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.
அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ
சங்க இலக்கியங்கள் மீது ஆர்வம் உள்ளவர்கள் ஒரு தொடக்கமாக இந்த நூலை வசிக்கலாம். சங்கக் கவிதைகளை நவீன வாழ்வின் நிகழ்வோடு விவரிக்கிறார். உண்மையில் சங்க இலக்கியம் வாசிக்க வேண்டும் என்றால் நாட்டுடைமை ஆக்கப்பட்ட தா . கோவேந்தன் நூல்கள் வாசிக்கலாம்...
என் மாமனார் இந்தப் புத்தகத்தை அன்பளிப்பாக வாசிக்க சொல்லிக் கொடுத்தார். ஜெயமோகனின் பெரிதாக அறியப்படாத நூலை கொடுத்திருக்கிறார், வாசிக்க பெரிதாக மனம் இல்லை. ஆனால், இவர் ஏற்கனவே எனக்கு கொடுத்த வேறு ஒரு நூலை வாசிக்காமல் தூசி தட்ட விட்ட குற்ற உணர்ச்சி உறுத்தியதால், தயக்கத்துடனே சங்கச் சித்திரங்களை வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் இது ஒரு பொக்கிஷமே.
சங்க இலக்கியத்தில் பொதிய அறிவோ, அறிமுகமோ இல்லாத நான், ஜெயமோகன் சங்க இலக்கியப் பாடலைத் தற்போதைய நடைக்கு மொழியாக்கம் செய்து, அவருடைய சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுடன் இதை ஒப்பிட்டு எழுதியதில் என்னை இந்த நூல் மிகவும் ஈர்த்தது. காதல், காமம், சாதி, தாயின் பாசம், இயற்கை, அழகு, மரணம், பெண்மை, தத்துவம், இலக்கியம் என்ற வாழ்வின் முக்கிய விடயங்களை ஆழமாக ஆராய்கிறது. சில பாடல்களின் ஜெயமோகனின் விளக்கம், நான் வாழ்க்கை நெறிகளாக, தத்துவமாக வகுத்திருக்கும் அதையே சொல்வதன் மூலம், எனது நம்பிக்கை மீழூட்டப்படுகிறது. சில நெரிகள் என் சிந்தனைகளை கேள்விக்குள் ஆக்குகின்றன. மொத்தத்தில், நூலை வாசித்து முடிக்கையில், நிச்சயமாக சிறிது மேலும் ஞானமுற்றிருப்பீர்கள்.
கண்டிப்பாக சங்கச் சித்திரங்கள் ஜெயமோகனின் மறைத்த நிதியங்களில் ஒன்று.
40 பாடல்கள் சங்கஇலக்கியங்களிலிருந்து… ஜெமோவின் பின்தொடரும் சில பக்கங்கள் இல்லாவிடில், “என்னத்தையா சொல்றானுங்க” தான்.
காமம், காதல், பரத்தைகள், ஓடிப்போவது என்று அன்று முதல் இன்று வரை நம் சந்திப்புகள் மாறவில்லை. பதப்படுத்தப்பட்ட காமமே காதலா? பண்படுத்தப்பட்ட வன்முறையே வீரமா? என்ற கொக்கி வேறு.
இதில் என் மனதில் நின்றது நிறைத்தது
-- வாயிலோயே வாயிலோயே என்ற ஒவ்வை பாடலும் அதை சார்ந்த ஜெயமோவின் வாழ்க்கை நிகழ்வும்
-- வற்றா காதலோடு தன மனைவியுடன் ஒரு பேரூந்து பயணத்தில் அறிமுகமாகும் அந்த பாயிடம் பின்னர் விரியும் அந்த வற்றிய வைகை பாடலும்
-- Marketடில் காணநேரும் “இந்நாள்” பரத்தை பாடலும் அதன் மூலம் ஜெயமோவின் ஆணாதிக்க ஊசிகளும்
-- அட மறந்தே போனேனே.. அந்த கௌரி அக்காவும் 20 வருடம் கழித்து பவுடர் கரைய, அரை கிலோ நகைகளுடன், அகல ஜரிகை பட்டுடன், அகன்ற அதே அக்கா
-- இறுதியில் ராதா என்ற உடன் பணிபுரியும் பெண்ணின் தாய் கொண்ட பசிதேனீரும் --நண்பன் ராதாகிருஷ்ணனின் மரணத்தின் மூலம் பித்தானாகி இயற்கை மூலம் எடுக்கும் மறுபிறப்பும்
--- ஒரு நாளுக்கு ஒன்று வீதம் அருந்துங்கள் இந்த அமிர்தத்தை
A collection of essays based on selected Tamil Sangha Kala writings. He starts with a few lines from some classic work and follows it up with a small story and then tries to relate the story with the former by translating the same lines into layman terms. For me this was a tough one to read, but enjoyed the story part and tried my best to understand the relation of the same with the classic poem or prose. This book is a collection of 40 essays & can be read as a coffee table book where one can plan to read one essay per day. I tried to read one in the morning & one before I go to sleep. This book should be a breeze for those who have studied Tamil as a language during their school days.
சங்கப்பாடல்கள் மீது காதல் கொண்டவர்கள், தன் அன்றாட வாழ்வின் தளத்தில் நின்று அப்பாடலின் விரிவை அனுபவிக்கும் ஆவல் கொண்டவர்கள் தவறவிடக்கூடாத புத்தகம் “சங்கச் சித்திரங்கள்”
சங்கப் பாடல்களை அணுகுகையில் அவற்றை திரும்பத் திரும்ப வாசிப்பதால் அர்த்தம் விளங்கும் என்கிறார் ஜெயமோகன். பலமுறை வாசித்தும் என் மரமண்டைக்கு விளங்கவில்லை.இதில் இடம்பெற்ற சில சங்க்க் கவிதைகள் ஏற்படுத்திய பாதிப்பை நான் படித்தவரையில் எந்த நவீன கவிதையும் எனக்கு இதுவரை ஏற்படுத்தவில்லை. சங்க கவிதைகள் வாசிக்க நினைப்பவர்க்கு அருமையான அறிமுக நூல்.ஜெயமோகனுக்கு நன்றி.
வெகுநாட்களாகவே சங்க இலக்கியங்களை அதன் சுவையறிந்து வாசிப்பின்பம் அடைய வேண்டுமென்ற எண்ணமிருந்தது, நேரடியாகப் பொருள் புரிந்து விளங்கிக் கொள்வதைக் காட்டிலும் ஓர் அனுபவத்தின் வழி கவிதையின் இன்பத்தை அடைவது பேரின்பம். தயக்கத்துடனே "சங்கச் சித்திரங்கள்" புத்தகத்தை கையிலெடுத்தேன், மாலைப்பொழுதின் தாபத்தை ஓர் அழகான காலையில் வாசிக்கையில் தொடர்ந்து வாசிக்கும் உந்துதலை அளித்தது.
சங்க இலக்கியங்களின் பொருளை, உணர்வுகளை சமகால அனுபவங்கள் மூலம் தான் உணர்ந்த தருணங்களை, இலையில் வைத்த இனிப்பைப் பிட்டு தன் மக்களின் இலைக்கு நகர்த்தும் தாயாய், ஓவியமாய் வரைந்து செல்கிறார் ஆசிரியர்.