பூமியில் வாழ்ந்த சில மனிதர்களின் வாழ்வே வரலாறாகிறது, பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்வும் அதில் ஒன்று. முத்துராமலிங்க தேவரின் பிறப்புக்கும் மறைவுக்கும் இடைப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளை மேலோட்டமாக விவரிக்கிறது இந்த புத்தகம் - கலைச்செல்வன் செல்வராஜ்
விழா முடிந்ததும் சேதுராமன் செட்டியார் தேவர் அருகே வந்தார். அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு, என் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு பேச்சை நான் கேட்டதே இல்லை என்றார். கூட்டத்திற்கு வந்த காமராஜரும், இது போன்ற வீரம் மிக்க பிரசங்கம் நமது நாட்டின் விடுதலைப்போருக்கு மிகவும் உதவும் என்றார்.