நீங்கள் அனைவரும் நல்ல புரட்சிக்காரர்களாக வளரவேண்டும். நன்றாகப் படிக்க வேண்டும். தொழில்நுட்பத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.
தனிப்பட்ட முறையில் நாம் முக்கியமல்ல. புரட்சி ஒன்றே மிக முக்கியமானது. உலகத்தில் எங்கேனும் யாருக்காவது கொடுமைகள் நடந்தால், அவர்களுக்காக வருத்தப்படுங்கள்.
குழந்தைகளே, உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன். மீண்டும் உங்களை காண்பேன் என்று நம்புகிறேன்..!
இது ஒரு தந்தை தனது குழந்தைகளுக்கு எழுதிய கடைசி கடிதத்தில் இடம்பெற்ற சில வரிகள்..! இந்த உலகில் எந்த மூலையில் யாருக்கு கொடுமை நடந்தாலும் வருத்தப்படு, என்ற வார்த்தைகள் எப்படிப்பட்ட மனிதனால் சொல்ல முடியும். தன் கால்கள் செல்லும் இடமெல்லாம் தனது தேசமாக என்னியவன். எல்லா மனிதர்களுக்கும் அன்பும், மனிதமும் சரிசமமாக கிடைக்கும் வரை போராடிக்கோண்டே இருக்க வேண்டும் என்று சொன்னவன் ! 20ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான கலகக்காரன் ! "சே குவேரா" தனது நம்பிக்கைகளுக்கு நேர்மையாக இருந்தவன். தனது தத்துவத்துக்கு விசுவாசமாக இருந்தவன்! அதிகார வர்க்கத்தின் சுரண்டலை எதிர்க்கும் கலகக்காரர்களின் மனதில் எப்போதும் நீ வாழ்ந்து கொண்டிருப்பாய் சே !
Very nicely written by Marudhan. Charles voice is wonderful in this audio version of this book. சே-வின் வரலாற்றை கேட்டு முடிக்கும் போது நெஞ்சம் கனத்தது. நன்றி
20 ஆம் நூற்றாண்டு கண்ட மிகச்சிறந்த போராளிகளில் மிகவும் முக்கியமானவர் எர்னஸ்டோ என்னும் சே குவேரா. இவரை நினைத்தால் கர்வமாக உள்ளது.இனம்,மொழி,நாடு கடந்து உலகத்திலுள்ள அடிமைத்தளத்திலுள்ள மக்களுக்காக நைந்து போன நுரையீரலுடன் (ஆஸ்துமா நோய்)போராடிய மாவீரன் சே.எல்லா தலைவர்களுமே சொந்த மக்களுக்காக சொந்த மண்ணிற்காக போராடியவர்கள் ஆனால் சே மட்டுமே அதில் விதிவிலக்கு. இதற்கு உதாரணமாக ஒரு செய்தியாளர் சே வை நோக்கி நீங்கள் அர்ஜெண்டினாவில் பிறந்தீர்கள்...பின்பு கியூபா விடுதலைக்குப் போராடீனீர்கள்....இப்போது பொவிலியாவில் போராடிக் கொண்டு இருக்கீர்கள்....எது உங்கள் தாய்நாடு????அதற்கு சே வின் பதில் அடிமைப்பட்டு இருக்கும் அனைத்து தேசமும் என் தாய்நாடே என பதிலளித்தார். சே என்பது நண்பர் அல்லது தோழர் என்ற பொருள் கொண்ட அர்ஜெண்டினா சொல்லாகும். மக்கள் இவரை சே என்று அன்புடன் அழைத்தனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பிடல் காஸ்ட்ரோவுடன் சேர்ந்த புரட்சிகளை செய்தார். லத்தீன் அமெரிக்க புரட்சி (கியூபா )தான் எர்னஸ்டோ என்னும் சாமானியனை சே குவேராவாக மாற்றியது. கியூபாவின் வளர்ச்சியில் இரண்டு பெரிய சக்திகள் உள்ளன ஒன்று பிடல் காஸ்ட்ரோ மற்றொன்று சேகுவேரா. காஸ்ட்ரோவுக்கு கியூபா தன் சொந்த நாடு போராடும் பண்பு இயல்பானது. ஆனால் சே'வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் தொடர்பற்ற மற்றொரு தேசத்தின் விடுதலைக்காக தன் உயிரையும் பணயம் வைத்து ஆயுதம் ஏந்தினார் . இதனால்தான் சே ஒரு மாமனிதராக அடையாளம் காணப்படுகிறார்.
சே விற்கு தான் அணியும் ஆடை பற்றியும் சவரம் செய்வது பற்றியும் சிறிதளவும் கவலை இல்லை இதனாலேயே இவரின் புறத்தோற்றம் பலருக்கும் பிடிக்காமல் போனது. ஆனால் அகத் தோற்றமோ கம்பீரமானது. தனது மரணத்தைப்பற்றி கூறும் போதெல்லாம் சாவை கண்டு ஒருபோதும் பயப்பட போவதில்லை என்றும், ""நான் சாகடிக்க படலாம் ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டேன் ""என்று கூறுவார். மார்க்சியவாதி ,மருத்துவர், இலக்கியவாதி ,புரட்சியாளர், யுந்த வல்லுனர் என பன்முகத் தன்மைகளை கொண்ட சேவின் பூதவுடல் அழிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் அவரது கொள்கைகளால் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டே இருப்பார். சேகுவேரா என்பது ஒரு பெயர் அல்ல அது ஒரு வரலாற்று சரித்திரம்.
“Che Guevara: Vendum viduthalai” is a biography of the enigmatic revolutionary. The book gives an account of Che's life from his childhood in Argentina and his motorcycle journeys across South America to meeting Fidel Castro and joining the revolution and then finally, his last days in bolivia.
The book is narrated with subtle admiration for the man who while suffering from acute asthma managed to overthrow a corrupt government. When the battle at cuba was over, instead of resting under the laurels he continued on with the revolution in Congo and bolivia, where he met his end and uttered his iconic last words, “Shoot, coward. You are only going to kill a man.”
His popularity rose exponentially and he remains one of the most discussed revolutionaries even after 50 years since his death in 1967.
This book unfolds the life of this cuban icon linearly. The prose is direct. It would make for a short, engulfing read for people interested in Che Guevara or Communism.
சேகுவேரா வேண்டும் விடுதலை ! வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள் , போராட்டங்கள் . லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தையும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும் வேட்கை . சே ஒரு தனிமனிதரல்ல . ஒரு மாபெரும் நிலப்பரப்பின் மனச்சாட்சி .
தனக்குப் பின்னால் வருபவர்களும் மாற்றங்களை உண்டாக்கினால் அதுதான் புரட்சி என்று நம்மையும் புரட்சியாளனாக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து உள்ளார்
சேகுவேராவை பற்றி படிக்கும்போது பிடல் காஸ்ட்ரோ பற்றிய அறிமுகம் கிடைக்கிறது அவரைப் பற்றி தெரிந்துகொள்ள வேண���டும் என்று ஆர்வம் கூடுகிறது மற்றும் கம்யூனிச சித்தாந்தங்களையும் அறிய வேண்டும் என்று தோன்றுகிறது இதுதான் ஒரு புத்தகத்தின் வெற்றி என்று நான் கருதுகிறேன்
சே குவேரா வின் வரலாற்றை படித்து முடிக்கும் போது ஒன்னே ஒண்ணுதான் அடிக்கடி தோணிட்டே இருக்கு.. இன்னும் நாம இந்த உலக அரசியல் ah கத்துக்கணும்.. engayo பொறந்த ஒரு மனுஷன் இந்த உலகத்துல யாரோ ஒருதர்க்கு ஒரு கஷ்டம் நா எப்படி துடிக்க முடியுது.. அவங்களுகாக நாடு நாடா போய் எப்படி போராட முடியுது.. இறக்கும் போதும் அவருக்கு வயசு 40 .. but அவர் இறந்து 60 வருஷதக்கும் மேல ipo அவரை பற்றி படித்தால் உடம்பு சிலிற்கிரது..
மிகவும் அழகாக எழுத்தப்பட்ட ஒரு மாபெரும் புரட்சியாளனின் வீரக்காவியம் இது. ஐயா மருதன் அவர்கள் நாம் ஒரு வரலாற்று நூலை படித்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வையே நமக்கு வர விடவில்லை, மாறாக நாம் ஒரு நேர்த்தியான புதினத்தை படிக்கிறோம் என்று தான் தோன்றும் நமக்கு. மிகவும் அழகாக காட்சிகளை நமக்குள்ளே கடத்திவிடுவதில் அவர் வெற்றியே பெற்றார் என்று உறுதியாகக் கூறுவேன். புரட்சியாளன் சே குவேராவுடனேயே வாழ்ந்த ஒரு அற்புத உணர்வை இந்நூலின் மூலம் பெற்றேன்.
After reading this book, I came to know about a revolutionary human being. This fueled my motivation. The author described the life events briefly and he avoids unnecessary events. i read this book in a single session,That much i loved this book. The book may be included a lot of interesting events. That's what I missed in this book. Worth reading!
I am pregnant right now. Wanted my baby to listen to the life of some great people. But this one made me cry. What a great warrior!
At times, I feel tired and sick that makes me lie down in one corner. But this is a story of how a kid with asthma grew up to be a threat to colonizers and the US.
மிகவும் ஆவலுடன் படித்தேன். சிறந்த நேர்த்தியான முறையில் எழுதப்பட்ட புத்தகம். ஆரம்பம் முதல் இறுதிவரை படிப்பதற்கு ஆவலாக இருந்தது. அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். இப்படியொரு சிறந்த புத்தகம் எழுதிய ஆசிரியர் மருதன் அவருக்கு நன்றி.
தாங்கள் எழுதிய சே குவேரா புத்தகம் சமீபத்தில் படித்தேன் மிகவும் அருமையாக எழுதி இருந்தீர்கள் அதை படிக்கும் போதே அவைகளை கண் முன்னே நடப்பது போல் இருந்தது மிக மிக அருமை
This entire review has been hidden because of spoilers.
Well written and good pace by the author. The story of Che is enlightening. But I would need to read lot other books to get a different perspectives too ...