இப்புதினம் பின் நவீனத்துவ பாணியில் எழுதப்பட்டது. மையமற்ற கதை ஓட்டம் கொண்டது. பல்வேறு தனித்தனிக் கதைகள் வழியாக ஒரு விஷயத்தை பல்வேறு கோணங்களில் சொல்லக்கூடிய அமைப்பு உடையது.
குள்ளச்சித்தன் என்று பெயருடைய ஒரு சித்தபுருஷரை வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கிறார்கள். சிலருக்கு அவர் வாழ்க்கையின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறார். சிலருக்கு அவர் மெய்ஞானம் அளிக்கிறார். அவர் ஒரே சமயம் பல இடங்களிலும் காட்சியளிக்கிறார்.
ராக கண்ணப்பன், சிவப்பி என்ற செட்டியார் ஜாதி தம்பதிகளின் பிள்ளையில்லாக்குறையை சித்தர் தீர்க்கிறார். ஹாலாஸ்யம் என்பவருக்கு மெய்ஞானம் அளிக்கிறர். இவ்வாறு பல்வேறு சாதி, இடம் சார்ந்த கதைகளைச் சொல்லும் போது அவற்றுக்கான வட்டாரவழக்குகள் அனைத்தையும் யுவன் சந்திரசேகர் சிறப்பாக பயன்படுத்துகிறார். யுவன் சந்திரசேகர் மாற்றுமெய்மை என்பதில் நம்பிக்கை கொண்டவர் மாற்றுமெய்மை என்பது இந்த உலகில் நம் புலன்களால் அறியப்படும் மெய்மைக்கு அடியில் இருக்கும் அறியமுடியாத இன்னொரு மெய்மையாகும். இந்நாவலும் மாற்றுமெய்மையை பேசுவதே.
This ebook is a product of Kizhakku pathippagam, which is a imprint of New Horizon Media Private Limited (NHM).
Yuvan Chandrasekar (b. 14 December 1961) is a Tamil writer, poet, translator, whose works bring out a postmodern aesthetic. He wrote poetry under the name of M. Yuvan. Yuvan Chandrasekar's works express a kind of magical realism which he classifies as 'alternate reality'.
இந்நாவல் மூன்று வெவ்வேறான கதைகளை கொண்டது பழனி சிகப்பி என்ற தம்பதிகளின் வாழ்வும், ஆலயம் ஆல்ஸ்யம் என்பவருடைய நண்பனாகிய முத்துசாமியின் சுய சரிதத்தை எழுதும் கதை, மவுண்ட் பாட்டன் இந்தியாவிற்கு வந்த பயணங்களும் இந்த சந்தித்த சித்தர்களையும் பற்றிய தொகுப்பு. இந்த மூன்று கதைகளுமே Non-linear முறையில் எழுதியிருந்தார்.
இக்கதையின் இருக்கும் மாய மெய்மை(magical realism) வாழ்வின் பல பல அர்த்தங்களை உள்ளடக்கியது. ஆரம்பத்தில் குழப்பமாகவே இருந்தது எந்த கதை யாருடையது என, வாசிக்க வாசிக்க கதையின் சுவரசியத்தால் நாம் மூழ்கி விடுவோம். இதில் இருக்கும் இந்த புனைவின் சுவாரசியத்திலேயே மூழ்கி திளைத்து விடுவோம்.
ஆங்காங்கே போடப்படும் முடிச்சுகளை கதையின் சொல்லாடல்களில் அவிழ்க்கும் காட்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். இறுதி கட்டத்தை நெருங்கும் போது இந்த மூன்று கதைகளும் இணையும் காட்சி வியக்க வைக்கிறது. யுவனின் எழுத்தும் கதை கையாலுதலும் தனித்துவம். இந்த எழுத்தாளரின் சிறந்த படைப்பாகவே கருதுகிறேன். இவரின் மற்ற நூல்களையும் வாசிக்க தூண்டுகிறது.
மிகவும் ரசித்து படித்தேன். படித்த பிறகும் நினைவில் ரசித்தேன். ஆசிரியரின் உழைப்பு அதிகம். வாசகனுக்கு இன்பம் அதிகம். உள்ளார்ந்த தேடலின் ஒரு விளக்கு இந்த புத்தகம்.
ஒரே மூச்சில் படித்து முடிக்க சாலச்சிறந்த புத்தகம். புதிதாய் வாசிக்க பழகியிருப்பவர்கள் ஒரு வெள்ளை தாளும் பேனாவுமாய் படிக்க உட்காருவது உசிதம். கதாப்பாத்திரங்களை மேப் போட்டு வைத்து கொண்டால் பின் வரும் முடிச்சுக்கள் அவிழும் பொழுது உதவியாயிருக்கும். நவீன இலக்கியங்கள் என்று சொல்லப்படும் படைப்புகள் பெரும்பாலும் கதையில் எழும் கேள்விகளின் விடைகளை வாசிப்பவரின் ஊகங்களுக்கே விட்டு விடுகின்றன. இந்நாவலும் இந்த அடிப்படையிலேயே. பல அடுக்குகளாக விரியும் கதைக்கு யுவனின் மொழி பெரும் பலம் சேர்க்கிறது. பெரிதாய் நாவல்களில் பதியப்படாத செட்டிநாட்டு மொழியையும் வெகு இலகுவாய் கையாண்டிருக்கிறார். பிரசங்கமாக இல்லாமல் அங்கங்கே வரும் வாழ்வியல் விளக்கங்களும் ஏற்று கொள்ளக்கூடியதாகவே உள்ளன. ஒரு பெரும் வாசிப்பு அனுபவம் நிச்சயம் கிடைக்கும்
"விடியல் என்பது மனிதர்களுக்கு தங்களுக்கு ஏற்பட்ட துக்கத்தை நினைவுபடுத்துவது"
இந்த நாவலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை... யு.ச வின் எழுத்து புதியதாக உள்ளது... மூன்று வெவ்வேறு கதைகளை non-linear format ல் சுவாரிசயம் குறையாமல் தந்திருக்கிறார்... The novel has more metaphysical tone... இந்த நாவலில் இடம்பெறும் சித்தர்களை பற்றிய கதைகளை மூடநம்பிக்கையை கொண்டாடுவதாக கொள்ளாமல் கால-வெளியை விளக்க முயன்ற அல்லது அதை பற்றிய மாற்று சிந்தனையாக கருதும் ஒரு பேன்டஸியாக கொள்ளலாம்... ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும், மூன்றில் எந்த கதையைப் படிக்கிறோம் என்பது புதிராக இருப்பது hook of the writing.... This is the kind of book in which the beauty of storytelling lies in the way it was told rather than the contents,... 👍👍👌👌