செங்கிஸ்கான்
******************
உலகம் முழவதும் மண்ணாசை கொண்ட பேரரசர்கள், சர்வாதிகாரிகள் எல்லா காலத்திலும் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்....
நல்லாட்சி புரிந்து போற்றதலுக்குரிய அரசர்களை எப்படி வரலாறு தன் நினைவில் தக்க வைத்துள்ளதோ., அதே போல மண்ணாசையால் பல போர்கள் புரிந்து பல்லாயிரக் கணக்கான போர் விரர்களை கொன்று, பலி கொடுத்து..அதன் தொடர்ச்சியாக பல லட்சக்கணக்கான மக்களை கொன்று பேரரசுகளை நிறுவிய மன்னர்களையும் நினைவில் தக்க வைத்திருக்கிறது...
2000களில் ஒரு ஆய்வின் மூலம் தெரிந்த தகவல்., கிழக்கு ஐரோப்பா முதல் பசிபிக் கடல் வரை கிட்டதட்ட 1,60,00,000 ஆண்களின் மரபணு கூரு ஒன்றாக உள்ளது என்பதுதான் அது. அதாவது அந்த நிலப்பரப்பில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 200ல் ஒருவர் ஒரே மரபணு கூரை கொண்டவர்களாக இருக்கின்றனர். அந்த மரபணுவிற்கு சொந்தகாரர், #செங்கிஸ்கான்.
இன்றிலிருந்து கிட்டதட்ட 800 ஆண்டுகளுக்கு முன் மங்கோலிய நிலப்பரப்பில், ஒரு சாதாரண இனக்குழுவின் தலைவனுக்கு மகனாக பிறந்தார், #டெமுஜின்(செங்கிஸ்கானின் இயற்பெயர்).
அப்போது, மங்கோலியா என்பது ஒரு தேசமாக இல்லாது, பல நூற்றுக்கணக்கான, ஒன்றுக்கு ஒன்று தாக்கிக் கொல்லும் இனக் குழக்களின் நிலப்பரப்பாகவே இருந்திருக்கிறது.
அப்படிப்பட்ட இனக்குழுக்களை ஒன்றாக இணைத்து ஒரே மங்கோலிய தேசமாக கட்டியெழுப்ப வேண்டுமென்பதே, செங்கிஸ்கானின் வேட்கையாக இருந்தது. அதற்கு இசைந்த இனக்குழுக்களை வரவேற்றும், எதிர்த்த இனக்குழுக்களை அழித்தும், பல்லாயிரக்கணக்கான வீரர்களின் பிணத்தின் மேல் வளர்த்தெடுக்கப்படுகிறது, மங்கோலியா எனும் தேசம்...
மங்கோலிய தேசம் உருவான பின்னும் மண்ணாசை விடாதபடியால், வடக்கே ருசியா, தெற்கே சினா, மேற்கே ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் என எட்டி பிடிக்க ஆரம்பித்தார்...அவரது காலத்திற்கு பின் அவரது மகன்கள்,பேரன்கள் மேலும் பறந்து விரிந்து கைப்பற்றி
மங்கோலிய பேரரசாக உருவாக்கினர்.
செங்கிஸ்கானின் குதிரைப்படைகளை தடுப்பதற்காக சீனப்பெருஞ்சுவர் கட்டப்பட்டிருந்தாலும், சீன தேசம் முழுமையாக வீழ்ந்தது, செங்கிஸ்கானின் வம்சத்தவரான குப்லா கானிடம்.
இமயமலையை கடக்க முடியாததால் பாரதப் பகுதி மங்கோலியர் வசப்படவில்லை.
மாவிரன் அலெக்சாண்டர் கைப்பற்றிய நிலப்பரப்பைவிட நான்கு மடங்கு அதிக நிலப்பரப்பை கொண்டது மங்கோலிய பேரரசு. கிட்டதட்ட 200 ஆண்டுகாலம், செங்கிஸ்கானின் வம்சத்தவரால் ஆளப்பட்ட அப்பேரரசு 14ம் நூற்றாண்டு வாக்கில் சரியத் தொடங்கியது. ஆனாலும் செங்கிஸ்கான் எனும் வீரனின் வேட்கை, ஒன்று பட்ட தேசம் என்ற ஆசை நிலைத்து உண்மையாக நின்றுவிட்டது.
செங்கிஸ்கான் பற்றிய முதல் தமிழ் புத்தகம் இது. இனக்குழக்களின் பெயர்கள் சற்றே குழப்பம் தருபவையாக இருந்தாலும், வரலாறை சுவாரசியமாக கொண்டு சென்ற எழுத்து நடையால் படிப்பதில் தொய்வு ஏற்படவில்லை.
இதில் செங்கிஸ்கான் எனப்படும் டெமுஜினின் பிறப்பு, வளர்ந்த விதம், சகோதரர்கள், நண்பர்கள், வீரம், போர்தந்திரம்
முதல் இனக்குழுக்களை ஒன்றிணைத்தல், அதற்கான படுகொலைகள், போர்கள் என அனைத்தும் விவரிக்கப்பட்டுள்ளன.
மேலும் இனக்குழக்களின், உணவு முறைகள், பிற இனங்களை கொள்ளையடித்தல், பெண்களை கவர்தல் என மங்கோலிய இனக்குழுக்களின் செயல்பாடுகள் பற்றி விவரிக்கப்பட்டிருக்கிறது.
180 பக்கங்களுக்குள் செங்கிஸ்கானின் வரலாற்றை சுருக்கிவிட முடியாதென்றாலும், சுருங்கச் சொன்னாலும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது இந்நூலில். அதில் மிகையுமல்ல.!