Jump to ratings and reviews
Rate this book

கேரக்டர்: By Saavi

Rate this book
Character ( கேரக்டர் ) By Saavi சாவியின் ‘கேரக்டர்’கள் நாம் தினசரி சந்திக்கிற மனிதர்களே. இவர்களின் சவடால்களை நாம் கேட்டிருக்கிறோம்; இவர்களின் ஜம்பங்கள் நமக்கு பரிச்சயமானவைதான் & ஆனால் இந்த வகை வகையான மனிதர்களை நம் கண் முன்னே கொண்டு நிறுத்த சாவி கையாளும் விதவிதமான பேச்சுமொழி வசீகரமானது. அக்கிரகாரத்து மொழியில் எழுதும் ‘சாவி’யால் ஆப்பக்கடைக்காரி பாஷையையும் பேச முடிகிறது. சாவியின் ‘கேரக்டர்’ நமக்கு ஒரு நகைச்சுவை விருந்து.

Kindle Edition

Published November 21, 2016

4 people are currently reading
4 people want to read

About the author

S. Viswanathan

25 books13 followers
Sa. Viswanathan alias Saavi a famous Tamil author contributed important novels in Tamil history. Washingtonil Thirumanam was written by Saavi. A gentle story with a hilarious touch by Chavi would keep the readers (of course born with Tamil as mother tongue) laughing till the end.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (18%)
4 stars
10 (62%)
3 stars
3 (18%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Balaji M.
221 reviews14 followers
November 5, 2021
"கேரக்டர்" -சாவி

கிட்டத்தட்ட 1950 களின் கடைசியில், பல வித்தியாசமான கதை மாந்தர்களை கொண்டு தனித்தனியே உருவாக்கி எழுதப்பட்டுள்ளது.

அதாவது கதைகளுக்குள் கதாபாத்திரங்களாக இல்லாது, கதாபாத்திரங்களுக்குள் கதையாக எழுதப்பட்டுள்ளது. அதன்படி 28 கேரக்டர்களை உருவாக்கி, அந்த கேரக்டர் பெயருக்கு ஏற்ப அதன் குணாதிசயங்களை வடிவமைத்து, நகைச்சுவை சம்பவங்களை உருவாக்கி, ஜனரஞ்சகமாக எழுதப்பட்டுள்ளது. இடையிடையே சிறு சிறு கதைகளாக அந்த கேரக்டர்களை கொண்டு நகைச்சுவை விருந்து படைத்துள்ளார் திரு சாவி அவர்கள். இதில் சில வரலாற்றுக் குறிப்புகளும், அந்த கால உலக அரசியல் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. கேரக்டரின் பேச்சுவாக்கில், உதாரணமாக உலக அரசியல் ரஷ்ய அமைச்சர் குருசேவ் பற்றி "அரசியல் அண்ணாசாமி" என்ற கேரக்டர் புனைவில் கூறப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் பற்றிய அருமையான துணுக்கும் இடம்பெற்றுள்ளது.

இத்தனை காலத்திற்கு பிறகும் நம்மை ஒரே வீச்சில் வாசிக்க வைக்க கூடிய நடையில் இப்புத்தகம் எழுதப்பட்டிருப்பது, பிரமிப்பையே ஏற்படுத்திக்கிறது!!!

இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 'கேரக்டர்'களின் பெயர்களை பார்த்தாலே புரியும் இப்புத்தகத்தின் சுவையை:

'புள்ளி' சுப்புடு
'அவுட்' அண்ணாச்சி
'சர்வர்' சந்தானம்
'அட்டெண்டர்' ஆறுமுகம்
'அல்டாப்' ஆறுமுகம்
'மூணு சீட்டு' முத்தண்ணா
'அப்பர் பர்த்' குப்பண்ணா
'தொழிலாளி' துளசிங்கம்
'அக்கப்போர்' சொக்கப்பன்
'ஆராய்ச்சி' ஆர் வி ராமன்
'துக்ளக்' துரைசாமி
''வீட்டுக்காரர்' வெங்கடாசலம்
'ஏமாளி' ஏகாம்பரம்
'ஆப்பக்கடை' அம்மாக்கண்ணு
'ஜம்பம்' சாரதாம்பாள்
'பப்ளிசிட்டி' பங்காரு சாமி
'சிக்கனம்' சின்னசாமி
'பல்டி' பலராமன்
'டவாலி' ரங்கசாமி
'ஜானகியம்மாள்' ஹஸ்பண்ட்
'அரசியல்' அண்ணாசாமி
'நர்ஸ்' நாகமணி
'வைத்தியர்' வேதாசலம்
'அமெச்சூர்' ஆராவமுதன்
'எதிர்வாதம்' ஏகாம்பரம்'
'அனுமார்' சாமியார்'
'நான்தான்' நாகசாமி '
'கமிஷன்' குப்பண்ணா'
Profile Image for Arthy Shakthi Bala.
54 reviews14 followers
March 30, 2023
சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் புத்தகம்.
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.