Jump to ratings and reviews
Rate this book

துணையெழுத்து [Thunai Ezhuthu]

Rate this book
S. Ramakrishnan is a prominent writer in the modern literary of Tamil. His well-known creation “Thunai Ezhuthu” series published by Ananda Vikatan earned a great fame among the readers. The author’s narration is as interesting as fetching honey after climbing the mountain. His words in the book touches our heart just like a boy playing a musical flute in a pleasant manner. He made us as his co-passenger in his travel through the story. The shows, characters and words throughout the book are treasures that will not be erased by time. This book will create a light hearted feel of endearment. And also it shows how strange the life is with different knots… people with varieties of attitudes… How surprising the heart is, which is happy at a moment and sad at a moment.

354 pages, Kindle Edition

104 people are currently reading
1725 people want to read

About the author

S. Ramakrishnan

163 books663 followers
S. Ramakrishnan
(Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)

is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.

Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.

His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
306 (45%)
4 stars
269 (39%)
3 stars
76 (11%)
2 stars
15 (2%)
1 star
13 (1%)
Displaying 1 - 30 of 46 reviews
Profile Image for Avanthika.
145 reviews854 followers
May 13, 2018
நவீன எழுத்தாளர்களில் எஸ்.ராவின் எழுத்துக்கள் எனக்கு பிடித்தமானவை. துணையெழுத்து, எஸ்.ராமகிருஷ்ணனின் சந்திப்புகளின் தொகுப்பு. பல அனுபவங்களை, மனிதர்களை புத்தகங்கள் கற்று தருகின்றன.
Profile Image for Wiki.
73 reviews9 followers
July 21, 2022
எஸ். ராமகிருஷ்ணன் அய்யாவின் துணையெழுத்து, மாரி செல்வராஜ் அண்ணாவின் மறக்கவே நினைக்கிறேன் இந்த இரண்டு படைப்புகளும் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளன. இருவரும் தங்கள் வாழ்வின் அனுபவத்தை படிப்பவர்களின் கை கோர்த்து பயணம் போல் முடியும் வரை கூட்டி செல்கின்றனர். முடியும் தருணத்தில் இன்னும் கொஞ்ச தூரம் சென்றிருக்கலாமே என மனம் ஏங்குகிறது.
251 reviews38 followers
March 16, 2023
புத்தகம் : துணையெழுத்து 
எழுத்தாளர் :  எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : விகடன்  பிரசுரம்
பக்கங்கள் :  347
விலை : 85

            🔆எழுத்தாளர்  எஸ்.ராமகிருஷ்ணன்  அவர்களுக்கு  எழுத்தின்  மீது  இருக்கும்  அதே  ஆர்வம்  பயணத்தின்  மீதும்  உண்டு.  அவர்  பயணித்த  இடங்கள் ,  அந்த  களச்  சூழல்கள்  அவர்  சந்தித்த  மனிதர்களை  பற்றி  கூறுவது  தான்  துணையெழுத்து.

            🔆அனைத்து  கட்டுரைகளுக்கும் ,  மறைந்திருக்கும்  மனிதர்கள்  நம்மை  வசியப்படுத்துகின்றனர்.  மனதிற்கு  பிடித்த  சில  கட்டுரைகளைப்  பகிர்ந்து  கொள்கிறேன்.

            🔆“காணாமல்  போவது  எப்படி”  என்னும்  கட்டுரையில்  அவர்  சிறுவனாக  இருந்த  போது,  அவரை  அழைத்துக்  கொண்டு  அவரின்  சித்தி  ஒரு  திருவிழாவிற்கு  சென்றிருக்கிறார்.  அங்கு  அவர்  தொலைந்து  விட்டார்.  பிறகு  தெரிந்தவர்  மூலமாக  தன்  சித்தியைக்  கண்டுக்கொண்டார்.  மீண்டும்  18  வயதில் , தானே  தொலைந்து  போக  முடிவெடுத்து,  கன்னியாகுமரிக்கு  சென்றுவிட்டார்.  நாலைந்து  நாட்களுக்கு  பிறகு  தெரிந்தவர்  மூலமாக  பணம்  கொண்டு  ஊருக்குத்  திரும்பியிருக்கிறார்.  தன்னை  காணாமல்  வீட்டில்  உள்ளவர்கள்  அடைந்த  தவிப்பை  அறிந்தவுடன்  மிகவும்  வேதனை  அடைந்திருக்கிறார்.  சாவை  விட  அது  கொடுமையானது.

            🔆“இனி  நாம்  செய்ய  வேண்டியது என்ன”  எனக்கு  மிகவும்  பிடித்த  கட்டுரை.  எஸ்.ரா  அவர்களே  பல  நூல்களை  எழுதியிருக்கிறார்.  எனினும்  இன்னும்  வாங்க  வேண்டிய  புத்தகங்கள்  பல  இருக்கிறது.  சார்லஸ்  என்னும்  நபரின்  உதவியோடு  ஒரு  நூலகத்தில்  இருந்து   திருடுவதே  இந்தக்  கட்டுரை.  முழுக்  கட்டுரையை  வாசித்து  முடித்து  போது , ஒரு  திகில்  தொடரை  படித்த  அனுபவம்.

            எனக்கு  மிகவும்  பிடித்த  புத்தகம்.
            ஓவியர் மருது அவர்களின் ஓவியங்கள், மேலும் சிறப்பு.

          

புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம்,
புத்தகங்களால்  இணைவோம் ,
பல வேடிக்கை மனிதரைப் போலே ,
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி

சுபஸ்ரீனீ  முத்துப்பாண்டி
வாசிப்பை  நேசிப்போம்
Profile Image for Divakar T Lingam.
11 reviews2 followers
June 11, 2020
துணையெழுத்து.

எந்த புத்தகத்தில் "எஸ்.ரா" வை துடங்குவது என யோசனையில், நண்பர்களின் சில பரிந்துரைகளை வைத்து துணையெழுத்தில் தொடங்கினேன். கட்டுரை தொகுப்புகளின் எளிமைக்காகவும். துவக்கத்தில் இருந்தே எஸ்.ரா வின் எழுத்தில் ஒவ்வொரு இடத்தில் பல திரைப்படங்களையும், உலக மொழி இலக்கியங்களையும் குறிப்பிட்டுக்கொண்டே இருக்கிறார். இது கூடுதல் சுவாரசியமாக அமைகிறது.

பல கட்டுரைகள் இதில் மனிதில் தங்கிய படியே இருக்கிறது. பல நிலப்பரப்புகளை மிக எளிமையாக இதில் பதிவு செய்திருக்கிறார். சில எழுத்தில் அவர் சொல்லவரும் image description பிரமிப்பாக இருக்கிறது. மனிதர்கள் எப்போதும் கலையை, கல்வியை, மனித மேன்மையை வேர் பிடிக்க முயற்சித்து கொண்டே இருக்கிறார்கள் என ஆழமாக புரிய வைக்கிறது. முழுக்க முழுக்க, இது மனிதனை பற்றியும் அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலத்தை பற்றியும், அவன் ஓடிக்கொண்டிருக்கும் சுவடுகளை பற்றியுமாகவே இருக்கிறது. எஸ்.ரா வை துவங்க இதன் சரியான தொகுப்பு எனவும் தோன்றுகிறது. அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

துணையெழுத்தில் இருந்து :

"மரங்களில் தெரியும் பிரமாண்டம், விதைகளில் தெரிவதில்லை. ஒரு மனிதன் விதையாவதே முதுமை"

"கடற்பாசியைப்போல, நன்றி எப்போதும் ஈரமிக்கதாகவும் நிசப்தமாகத் தன இருப்பை காட்டிக்கொள்வதுமாகவே இருக்கிறது. மன்னிப்பும், நன்றியும் தான் மனிதனின் மாபெரும் கண்டுபிடிப்புகள் என்றுகூடத் தோன்றுகிறது."

"ஒருவேளை அவமதிப்பின் வடுக்கள் உடலில் வெளிப்படையாகத் தெரிய துவங்கினால், யாவரும் உடல் முழுவதும் வடுக்களோடுதான் இருப்பார்கள் என்று சுயசமாதானம் செய்து கொண்டேன்."


Profile Image for Krishnan Srinivasarengan.
11 reviews6 followers
November 11, 2013
If someone has to get a feel of what life is beyond their small circle of experience, read this book. SRa is an astute observer, a wonderful interpreter, a brilliant connector and above all a phenomenal narrator. Every article in this series (in Anandha Vikatan) was very powerful and no doubt I grabbed the book the moment it was out.
Profile Image for Arun Radhakrishnan.
68 reviews18 followers
March 19, 2017
எந்த இமயமலையைக் கடந்துபோவது என்பது நமக்கு அசாத்தியமாக இருக்கிறதோ, அதைக் குருவிகள் தினம் இரண்டு முறை பறந்து கடக்கின்றன.
Profile Image for Pragathish Rajan.
8 reviews3 followers
March 27, 2021
S. Ramakrishnan's genius is very simple - his ability to observe things we often always miss.
Reading this will make anyone want to just get on the next bus and go somewhere. Somewhere, anywhere.
108 reviews3 followers
August 31, 2022
S.ra அவரது புத்தகம் எல்லாமே ஒரு எழிமை இருக்கும்! இந்த புத்தகம் அப்படி பட்ட ஒன்று தான்!!
மனிதர்கள் தான் இதில் மையபுள்ளி.
லாடம் கட்டும் மனிதர், பிரமிள், ஜிம் கார்பெட், ரயில் பயணம், சினம், வெறுமை, இரவு, காதல், வாசிப்பு, பறக்கும் அணில், ரயில் அரவான்கள். இன்னும் பல பல......

இவை யாவும், நம்மை நாமே தேடும் படலம் என்று தான் சொல்ல வேண்டும். 51 கட்டுரைகள், எதை பற்றி வாசித்தாலும் அதில் ஒரு மனிதன். எளிமை தான் அதன் ஆதாரம்.
3 reviews1 follower
December 19, 2013
மிக அருமையான புத்தகம், சோர்வு இல்லாத எழுத��து நடை . நம்மை சுற்றி நிகழும் விஷயங்களில் இருந்து இவ்வளவு அர்த்தங்கள் பெறமுடியாமா என ஆச்சர்ய படவைக்கும் கதைகள் . கோபம்,பொய்கள், பெண் அடிமைத்தனம் , வலி என பல விஷயங்களை அசாதாரணமாக நமக்கு புரியவைக்கின்ற நூல்.
Profile Image for Nagarajan.
76 reviews23 followers
March 13, 2018
Good book which will make you introspect, think deep. Touches your inner core
Profile Image for Aarur Baskar.
34 reviews3 followers
September 27, 2019
துணையெழுத்து-எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பு .

தீவிர எழுத்து சிற்றிதழ்களுக்கு மட்டும் எனும் நிலையைக் கொஞ்சம் மாற்றியதில் ஆனந்த விகடனுக்கும் கொஞ்சம் பங்கிருக்கிறது. அந்தவகையில் தேசாந்திரி, துணையெழுத்து தொடர்களின் வழியாக எஸ்.ரா வின் எழுத்தை ஆ.வி. பரந்த வாசகர் வட்டத்துக்கு எடுத்துச்சென்றிருக்கிறது.

புனைவிலும், கட்டுரைகளிலும் ஒருசேர மிளிரும் சில எழுத்தாளர்களில் எஸ்.ரா.வும் ஒருவர். ஆனாலும், துணையெழுத்தின் பல கட்டுரைகளை வாசிக்கும் போது அதில் வரும் சம்பவங்களும், மனிதர்களும் நல்ல சிறுகதைக்கான வாய்ப்பாகவே நினைக்கத்தோன்றியது.

நடைமுறையில் கட்டுரையும் புனைவும் இரு வேறு தளங்களில் இயங்குபவை.
கட்டுரைகளில் பெரும்பாலும் எழுத்தாளர்கள் தாங்கள் சொல்லவந்த கருத்தை நிறுவ அல்லது வலியுறுத்த அது தொடர்பான தரவுகளைத் தொடர்ந்து அடுக்கிக்கொண்டே வருவார்கள். இறுதியாக முடிவுரை என்பதுபோல் குறிபிடத்தகுந்த சிலவற்றை வலியுறுத்திச் சொல்லி கட்டுரையை முடிப்பார்கள். இப்படி ஒரு கட்டுரைக்காக ஒரு எழுத்தாளன் எந்தெந்தத் தரவுகளை தனக்காக துணைக்கு அழைத்துக்கொள்கிறான். அதை எப்படி வாசகர்களிடம்
பக்குவமாக முன்வைக்கிறான் என்பதில் அவனுடைய வெற்றி அடங்கி இருக்கிறது. அந்த வகையில் எஸ்.ரா வெற்றி பெற்றிருக்கிறார்.

அதுபோல ஓர் எழுத்தாளன் சிறந்த கட்டுரைகளை எழுத இலக்கியம் தாண்டி வரலாறு, தொன்மம், ஆன்மீகம் என பல தளங்களை நாட்டத்தோடு தொடர்ந்து ஆழ்ந்து வாசிப்பது, மனிதநேயம், நம்பிக்கைகள் குறித்து சிந்தித்து இயங்குவதும் அவசிமானது. எஸ்.ரா அப்படி சிந்திந்து இயங்கக் கூடிய நல்ல மனிதராக தனது எழுத்தின் வழியாக அறிமுகமாகிறார். இந்தக் கட்டுரைகளை வாசிக்கும் போது உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகி புதிய திறப்புகளைத் தருகிறன. வாய்ப்பிருந்தால் வாசியுங்கள்.

நூல்-துணையெழுத்து
வெளியீடு-தேசாந்திரி பதிப்பகம்
விலை-ரூ.350
Profile Image for இரா  ஏழுமலை .
136 reviews8 followers
February 20, 2022
இதில் இருக்கும் கட்டுரைகள் எஸ் ரா தான் சந்தித்த விதவிதமா மனிதர்கள் பற்றிய நினைவாக உள்ளது , ஒரு சிறிய சம்பவத்தை எடுத்துக்கொண்டு வாழ்வின் இனிமையை உணதுவதில் எஸ் ரா தனித்துவமான எழுத்தாளர் . கால ஓட்டத்தில் எத்தனயோ மனிதர்கள் எல்லோர் வாழ்விலும் வந்து செல்வர்கள் பிறகு அவர்கள் வெறும் நினைவுகளாக மட்டுமே எஞ்வர்கள் எலோர் வாழ்விலும் இப்படியாக நிறைய மனிதர்கள் இருப்பார்கள் அவர்களை நினைவாக மெல்ல அசைபோட வைக்கும் புத்தகம் இது மேலும் அவர்களை அவர்களோடு பழகிய காலத்தில் நாம் புரிந்து கொல்லாமல் இருந்து இருக்கலாம் ஆனால் காலம் கடந்த பிறகு அவர்களை நம் புரிந்துகொண்ட போது அவர்கள் நம்மை விட்டு போய் இருப்பார்கள் அவர்களை நல்ல நினைவாக மாற்றிகொள்ள இந்த நூல் உதவுகிறது ... எஸ் ரா வின் எழுத்து எப்போதும் ஏதோதோ எண்ண அலைகளை கிளறிவிடும் இதுவும் அதுபோல தான் ....
Profile Image for Surendhar.
53 reviews1 follower
May 21, 2024
ஒரு தேசாந்திரியுடன் ஊர்கள், மக்கள், இயற்கை, மனங்கள், வரலாறு என ஒரு ஷார்ட் ட்ரிப்.

There was this one particular story ending where I do not agree with the author.

#34. ஸ்திரீபார்ட்

Idhula andha ending epdi irundhirukalaam nu thonuchuna:

“காமாட்சிநாதனை காமாட்சியாய் வளர்த்த அவன் தாத்தாவிற்கும், அரக்கு நிற சேலையை கட்டி வந்தபோது அவனை வீட்டிற்குள் அழைத்து வந்து அழகு பார்த்த ஊர் பெண்களுக்கும் தெரியவேயில்லை தாங்கள் செய்தது தவறென்று.”
This entire review has been hidden because of spoilers.
103 reviews1 follower
March 8, 2020
எளிமையான எழுத்து, ஒரு சில பக்கம் மட்டுமே நீளும் பத்திகள் சுவாரசியத்தை தாங்கிப்பிடிக்கின்றன. போரடிக்கும் போதெல்லாம் உடனே எடுத்து ஒரு பத்தியை படித்தால் புதிதாக ஒன்றையும் கற்றுக்கொள்ளலாம், ஆக்கப்பூர்வமாக நேரத்தையும் செலவளிக்கலாம்.
Profile Image for Mustafa.
2 reviews
June 15, 2018
Much pleasant feeling to read about s. Ramakrishnan traveling experience and impressed the way of comprehending depthless things in his life.
Profile Image for Karthik.
6 reviews
July 11, 2019
எஸ்.ராவின் அனுபவ கட்டுரைகள் என்றுமே மனதுக்கு நெருக்கமாகவும் ஒரு புது பாடமாகவும் இருக்கும்.
Profile Image for Balu.
20 reviews11 followers
January 19, 2021
வட்டியும் முதலும் fans will like it
3 reviews
March 31, 2021
“நிறமில்லாதொரு குடும்பம் , வேலையில்லாதவனின் பகல்,
காதற்ற ஊசி,
வளர்ப்பு மிருகங்கள்,
எண்ணும் எழுத்தும்,
வெறுங்கோபம்”

#எஸ்ராமகிருஷ்ணன்
#துணையெழுத்து
Profile Image for Chsmcrazy.
14 reviews1 follower
May 13, 2021
சிறந்த எழுத்தாளரின் ஆக சிறந்த வாழ்க்கை அனுபுவங்களின் தொகுப்பு.
Profile Image for Yadhu Nandhan.
257 reviews
December 14, 2020
வாழ்க்கை இனிமையானது. நல்ல அனுநவங்களே வாழ்க்கையை அப்படி ஆக்குகிறது என்பதை உணர்த்துகிறது இந்தப்படைப்பு. மனதிற்கு ஒரு இதமான உணர்வை தருகிறது. ஆசிரியரின் அனுபவங்களை கண்டு பொறாமைப்பட வைக்கிறது. அனைவரும் கண்டிப்பாக படிக்க் வேண்டிய புத்தகம்.
"தன்மேல் போடும் அனைத்து பொருட்களையும் கொண்டுவிடும் நிலத்தை நம்பும் மனிதன், தன்மேல் போடும் அனைத்து பொருட்களையும் நம்மிடமே தந்துவிடும் கடலை நம்ப மறுக்கிறான்" என்னும் வரி என்னை மிகவும் கவர்ந்தது.
Profile Image for Prabhu R..
Author 3 books34 followers
November 25, 2016
What an amazing writing. I have heard about this author and this book, but never knew that the book would be so impacting and the realism would be so moving. Some of the essays have made me think and have even made me feel the emotions that author wishes to convey. Bringing out the heavy feelings that one carries in their lives for various reasons without any sugarcoating or even exaggerating is a great task. A few essays, that discussed about the once famous personaliities but now forgotten - Karukurichi Arunachalam, Pudhumaipithan etc, the art forms that are mostly extinct except for a few people who are the last identities of the art forms, are very touching.
Profile Image for Divakar.
12 reviews2 followers
May 21, 2014
S.Ra is one of my favorite writer,Certainly I can't travel a lot like he does, and when I read his books i feel like as if i am travelling with him...Above all these things he is a greater observer and the way he narrate things is wonderful, this book contains all these aspects...Do read it..to experience those feelings....
37 reviews
Read
October 27, 2017
தன்னுடய வாழ்வில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை மிக அழகாக தொகுத்து அளித்திருக்கிறார் எஸ் ரா. அவை சுவையாகவும் அதேநேரத்தில் மனிதர்களின் பண்புகளையும் அருமையாக விளக்கி சொல்கிறது . வாசிக்க மிகவும் சுவாரஸ்யமான புத்தகம்.
Profile Image for Ganesh Ramalingam.
Author 0 books8 followers
December 19, 2017
A fulfilling read! I discovered my own writing style in this author. I went back to my buried writings, dusted them back and bringing back to life! Thank you Mr. S Ramakrishnan. Amazing book and must read. The book must reach the whole world. Worth translating into many languages...
Displaying 1 - 30 of 46 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.