நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம், குருதிப்பலி, பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே மூட நம்பிக்கைகளோடு பின்னிப் பிணைந்தவையாக விரிந்து கிடப்பது உண்மை. ஆனால் அவை முற்றிலும் தவறான பிம்பங்கள் என்று அழுத்தமாகத் தன் கருத்துக்களை வாசகர் உணரும் விதமாக இந்நூலின் கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன. வட்டாரம் சார்ந்த உற்பத்தி அசைவுகளும் சமூக உளவியலும் எனப் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் நாட்டார் தெய்வங்கள் ஒரு மக்கள் பண்பாட்டின் அடையாளமாக நிற்கின்றன. (முன்னுரையில் ச. தமிழ்ச்செல்வன்)
Tho. Paramasivan (Tamil: தொ. பரமசிவன்; 1950 – 24 December 2020), often known as Tho Pa, was an Indian Tamil anthropologist, writer, folklorist, archeologist and professor. He was the first graduate in his family. He grew up to serve as a professor of Tamil at Manonmaniam Sundaranar University, simultaneously pursuing a writer’s career.
Fondly called as ‘Tho Pa’, he has written more than 15 books which focus on the historical, archaeological and anthropological aspects of Tamil society. His works also dwell a lot on folklore. One of his finest work in this area is Alagar Kovil.
பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.
அழகர் கோயில் குறித்த இவரது முனைவர் பட்ட ஆய்வேடு கோயிலாய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்கிறது. ஆய்வாளர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் தேடி வாசிக்கும் நூலாகவும் இந்நூல் இருக்கிறது.
" 'நிறுவனம்' என்பதே அதிகாரச் சார்புடையது. எனவே அங்கு ‘மேல் - கீழ்' என்ற வரிசைமுறையுடன்தான் அதிகாரம் செயற்படத் தொடங்குகின்றது. அதிகாரத்தை நிலைப்படுத்த விரும்புகின்ற நிறுவனச் சமயங்களுக்கு மூன்று அடிப்படைத் தேவைகள் உண்டு. முதலாவது ஒரு புனித நூல் (வேதம், தேவாரம், பைபிள், குர்ஆன்) இரண்டாவதாக விதிகளை அடிப்படையாகக் கொண்ட பூசை முறை (கிரியாசூத்திரம், காரண - காரிய ஆகமங்கள், பாஞ்சராத்திர - வைகாசன ஆகமங்கள், ஷியா சன்னி - மாலிகி - அன்பலி விளக்கங்கள்) மூன்றாவதாகப் புனித இருப்பிடங்கள் (கைலாசம், பரமபதம், காசி, பெத்லேம், மெக்கா) ஆகியவற்றோடு மற்றொரு கூறும் இதில் அடங்கியுள்ளது. அதாவது, கடவுளுக்கும் அடியவர்களுக்கும் நடுவிலே நிற்கும் புரோகிதர் (Clergy) எனப்படும் ஒரு மனிதன். நாட்டார் தெய்வ வழிபாடுகள் மேற்குறித்த இலக்கணத்திலிருந்து விலகி நிற்பவை அல்லது அவ்வகையான கட்டுகளுக்குள் அடங்க மறுப்பவை."
இதுதான் இந்தப் புத்தகத்தின், தென்னகத்தின் அடிப்படை முடிச்சு. இதுவரை வைதீக சக்திகள் இந்தத் தென்முனையை கடக்கமுடியாமல் நின்ற இடம். அதே வைதீக, வர்ணாஸ்ரம அடக்குமுறை சக்திகள் கடைசி தடையை மீறி இந்தத் தென்முனையில் கால் வைத்தாயிற்று என்று உரக்க காதில் ஒலிக்கும் வேளையில், இதை மீள்வாசிப்பில் உச்சரித்து, வறண்ட சிரிப்பை வழங்கி, கடந்து போவது எப்படி என்று நினைக்கும் வேளையில், இந்தக்கூற்றின் உண்மையை " மாற்றம் ஒன்றைத்தவிர வேறெல்லாம் மாற்றத்தின் காற்றில் கலைத்துப்போடப்படும்" என்ற உண்மையை வைத்து புரிந்துகொள்ள முயல்கிறேன்.
"பெரியார் 1917 முதல் 1973 வரை தன்னுடைய எழுத்தாலும் பேச்சாலும் தன் சிந்தனையில், ‘சரி’ என்று தோன்றியவற்றை எப்பொழுதும் எளிய மக்களின் மத்தியில் நின்றுகொண்டு முரட்டுத்தனமான பேச்சாலும் எழுத்தாலும் முன்வைத்தவர் ஆவார். பல நூற்றாண்டுக் காலமாக முளைத்தெழுந்த எளிய மக்களின் கோபத்தின் வெளிப்பாடு அவர். அறிவாளிகளின் கூட்டத்தினையும் புத்தகத்தினையும் பின்னணியாக வைத்துக்கொண்டவர் அல்லர், அவர். இதுவே அவரது மிகப்பெரிய வலிமையாகும். இலக்கு நோக்கிய தன் பயணத்தில் சில கட்டத்தில் எதிரிகளையும் கூட்டாளிகளாகச் சேர்த்துக் கொண்டவர் அவர்."
இந்த ஒரு புள்ளியில் தான் காந்தியின் போராட்டமும் பெரியாரும் இணைந்த இடம் என்று தோன்றுகிறது. காந்தியின் ஆகப்பெரிய ஆயுதம், நோக்கம், பெரும்பான்மை மக்களை முக்கிய தேசிய நீரோட்டத்துக்குள் இழுத்து வந்ததுதான். அப்படி எழுத்த தலைமைகளும், இயக்கங்களும் வெகு ஜன இயக்கங்களாகத்தானே இருக்கும்? அப்படி எழுந்த இயக்கங்களின் தலைமை அவற்றுக்கான வெகு ஜன தன்மையுடனேயே தானே இருக்கும்? அம்பேத்காரிய, தலித்திய, பெரியாரிய இயக்கங்கள் அப்படிப்பட்ட்டவைதான். காந்தியவாதிகள் என்று கூறிக்கொண்டே அவற்றை இகழ்பவர்கள், வசைபாடுபவர்கள் இவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் வரை, முந்தைய சரித்திரங்கள் மாறுவது காலத்தின் நியதிதான்.
"சாதிய ஆதிக்கத்தால் கொலை செய்யப்பட்ட ஒருவன் தெய்வமாக்கப்பட்டால் அவன் இரண்டு சாதியாராலும் வணங்கப்படுவான். அவனைக் கொன்ற ஆதிக்க சாதி ஆவி அச்சம் காரணமாகவும், கொலை செய்யப்பட்டவனின் சாதியினர் பாதுகாப்புக் கருதியும், ஒரே தெய்வத்தை வழிபடுவதையும் களஆய்வில் கண்டறியலாம்."
இறுதியாக எழுபது, என்பதாண்டு கால முன்னேற்றத்தையும், காந்திய, அம்பேத்காரிய, பெரியாரிய இயக்க அரசியல் வரலாற்றையும் இப்படி பாலூற்றி, பூச்சாட்டி கருவறைக்குள் அடைத்து கடந்து போவோமா?...
யாவுமறிந்த தெய்வங்களே!., ஆனால் அதன் பின்னணி, வரலாற்றுச் சுவடுகளை கட்டுரைத் தொகுப்பாக விளக்கப்பட்டுள்ளது. நாட்டார் மரபு தெய்வங்கள், மேலோர்/ பார்ப்பனர்கள் தெய்வங்கள், இவர்களுக்கிடையே உள்ள பாகுபாடுகள் அருமையாக பதிவிடப்பட்டுள்ளது. கொற்றவை, அம்மன், பழையோள், கடல்கெழு செல்வி என தாய்த்தெய்வங்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன என்று விறுவிறுப்போடு நகர்கிறது. நாட்டார் தெய்வங்கள் பற்றி விரிவாக படிக்க, இந்நூல் ஓர் முன்னுரையாக அமைகிறது.
Must read to know about a lot of Village deities of Tamil Nadu. (Non Vedic-Agamic Pantheon)
தெய்வம் என்பதோர்... தொ. ப விடமிருந்து மற்றும் ஒரு தகவல் களஞ்சியம்... "தெய்வங்களைப் பற்றி பேசாமல் ஒரு பண்பாட்டினை ஆய்வு செய்ய முடியாது" என தொடங்கும் அவர், ஒற்றை தெய்வத்தை முன்னிருத்தும் பெருஞ்சமய நெறிக்கு மாறாக தமிழ் மக்கள் ஒரே ஊரில் பலவகை தாய்த் தெய்வங்களை வணங்கி வந்திருப்பதில் தொடங்கி, கொற்றவை என்ற தாய்த் தெய்வம் எப்படி முருகனுக்கு தாயாக்கப்பட்டால்?? , வள்ளி யார்?? , தெய்வானை எப்படி முருகனுக்கு மனைவி ஆக்கப் பட்டால்? என விரிந்து... பெரியார் ஏன் நாட்டார் தெய்வங்களை ஆதரித்தார்?... நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் உள்ள வித்தியாசம் என்ன??? என மற்றும் பல கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்திருக்கிறார். இறுதியாக பெரியாரிய பார்வையில் இந்து என்ற சொல்லுக்கு அரசியல் சட்டம் நேரிடையான வரைவிலக்கணத்தை தர வேண்டும். அந்த சொல் பல்வேறு சமயங்களையும் நம்பிக்கைசார்ந்த வழிபாட்டு நெறிகளையும் குறிக்கும் சொல் என்பதால் வெவ்வேறு சமயங்களுக்குமான வரம்புகளை முறைப்படுத்தி சட்டமாக்க வேண்டும்... என்ற வலுவான கோரிக்கையுடன் முடிக்கிறார்!!! ஒவ்வொரு தமிழரும் அவசியம் வாசிக்க வேண்டிய மற்றொரு தொ. ப வின் படைப்பு 🙏🙏🙏
வைதீகத்தை பின்பற்றி சமூகத்தில் பாகுபாடு பார்க்கின்ற நிறுவனமயமாக்கப்பட்ட மதங்களே ஒதுக்கப்பட வேண்டியது, தமிழ் சமூகத்தின் கடவுள் நம்பிக்கை அல்ல என்பது தான் தொ.ப இந்தத் புத்தகத்தின் கட்டுரைகளில் சொல்லவருவது. துணைக்கு அவர் பெரியாரையும் கூட்டி கொள்கிறார். இது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. மீனாட்சி, காமாட்சி, சமயபுரம் மாரியம்மன் போன்ற நாட்டார் தெய்வங்கள் எவ்வாறு பெருந்தெய்வங்களாக மாற்றம் செய்யப்பட்டன என்ற வரலாறையும் குறிப்பிட்டிருக்கலாம். இந்து மாதத்தில் கரைந்து போன நாட்டார் தெய்வங்கள் பற்றி ஏற்கனவே தெளிவடைந்திருப்பவர்களுக்கு இந்த புத்தத்தில் பெரிதாக Takeaway இருக்காது
Definitely an interesting read about religion of Tamil people and culture. I enjoyed reading and learning from tho.pa's perspective, it was rational and factual.
1.ஆண்டு முழுவதும் வெட்ட வெளியில் மண் குவியலாகக் கிடந்து, ஆண்டுக்கு ஒருமுறை உயிர்கொண்டெழும் நாட்டார் தெய்வங்களை பெரியார் எதிர்கொள்ளவில்லை. மாறாக, அதிகார மையமாகிய கோயில்களையும் அதை மையப்படுத்திய மனித ஏற்றத்தாழ்வுகளையுமே அவர் எதிர்த்தார்
2.தெய்வங்களிலும் மேல் -கீழ் காட்டுவதற்கு முருகனின் இருபுறமும் மனைவியர் நிற்கும் சிற்பங்களில் தெய்வானைக்கு மட்டும் மார்பு கச்சு இருப்பதை காணலாம்.
The book "Teyvam Empatoor" has a great research in history which were meticulously suppressed by certain groups due to political benefits. Tho.paramasivan had greatly researched and says details with immense authenticity. If you love to know your roots or root of the ceremonies we usually do as dictated by our ancestors, you should take a read thru this book. Authors like tho.pa are to be greatly appreciated and recognized for their years of research work. Hail Tho.pa!!!
மிகச்சிறந்த ஆய்வுகளுடன் கூடிய சிறப்பான புத்தகம். சைவம் சமணம் வைணவம் மற்றும் அனைத்து தமிழ் சமயங்களின் வழிபாடு முறைகள் பற்றியும் முருகன் பற்றிய வரலாற்று உண்மைகளை நமக்கு தருகிறார் பரமசிவன் ஐயா. ஒரு நாத்திகனாக கடவுள் வழிபாட்டை பற்றி ஒரு நாத்திகரின் மூலமே அறிந்ததில் பெருமிதம்.
இது நான் படித்த தொ.ப அவர்களது முதல் புத்தகம். இம்முறை மீள்வாசிப்பு. நான் படித்த முதல் ஆய்வு சார்ந்த நூலும் இதுவே. தொ.ப -வின் புத்தகங்கள் மூலம் கடவுளை, மதத்தை, சாதியை, அதிகாரம் மற்றும் ஆதிக்கம் என்ற தளத்தில் மட்டும் அல்லாமல் பண்பாட்டு அளவில் நடந்த சமூக நிகழ்வுகளை/சிக்கல்களை இதுவரை அறிந்திராத இன்னொரு கோணத்தில் நின்று புரிந்து கொள்ள முடியும். நாட்டார் தெய்வங்களில் தாய்த் தெய்வங்கள் தான் அதிக அளவிலான எண்ணிக்கையில் உள்ளன. ‘பக்தா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்’ என்று கேட்கும் தெய்வங்களாக இல்லாமல் பெரும்பாலும் ஆயுதமேந்திய, அக்னி மகுடம் தரித்த, அரக்கன் தலை கொய்து மக்களை காக்கும் கோபம் கொண்ட தெய்வங்களாகவே உள்ளன. இந்தக் கோயில்கள் பெரும்பாலும் வடக்கு திசை நோக்கி இருக்க காரணம் என்ன? தமிழகம் என்பது பண்டைய காலத்தில் தற்போதைய கேரளத்தையும் உள்ளடக்கியதாகவே இருந்துள்ளது. ஆக பகைவர்கள் வடக்கில் இருந்து மட்டுமே வரமுடியும். எனவேதான் மக்களைக் காக்க வடதிசை நோக்கி தாய்த் தெய்வம் ஆயுதம் ஏந்தி நிற்கிறது. பொய் அழுகையை நீலிக்கண்ணீர் என்று சொல்லியும் கேட்டும் இருப்போம். அந்த நீலியின் கதை என்ன? அந்த கதையில் வணிகன் கொலைகாரனாகவும், வேளாளர்கள் சத்தியம் தவறாதவர்களாகவும் காட்டப்பட்டிருப்பது ஏன் என்ற செய்தியைப் படித்தபோது இவ்வளவு தூரம் ஒருவரால் ஆராய்ச்சி நோக்கில் ஒரு நிகழ்வை/கதையை உற்றுநோக்கி விட முடியுமா என்ற ஆச்சரியமே மிகுந்தது. கீழே குறிப்பிட்டுள்ளவற்றை சிறு செய்தியாகவும் விரிவான ஆய்வாகவும் இப்புத்தகத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். 1) தாய்த் தெய்வங்கள் (அவற்றின் வகைமை) 2) நீலியின் கதை (ஏன் நீலி தெய்வம் ஆக்கப்படவில்லை) 3) அரசிகளின் பள்ளிப்படைக் கோயில்கள் 4) வள்ளி (வள்ளி முருகனின் இரண்டாம் மனைவி என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருந்தால் கட்டாயம் வாசிக்கவும்) 5) நயினார் நோன்பு (சித்திரகுப்த வழிபாடு பற்றி) 6) நெல்லையில் தாய்த் தெய்வமாக வழிபடப்படும் இப்போதும் இருக்கும் பகவதி அம்மன் என்ற சமணப்பள்ளி (கோயில்) 7) வள்ளலார் (சைவ சமயத்தின் உள்ளிருக்கும் கருத்தியல் சார்ந்த முரண்கள்/வரலாற்றுச் சிக்கல்கள் மற்றும் சிதம்பரம் கோயில் பற்றி) 8) கண்ணனைப் பாடும் சாதிய படிமுறைகளை வற்புறுத்த ஆழ்வார் பாடல்களுக்கான காரணம் (அதிகாரத்தை விரும்புபவர்கள் இராம அவதாரத்தையே இப்போதும் கொண்டாடுகிறார்கள்) 9) சடங்கியல் தலைமை (தீ வளர்த்து மந்திரம் சொல்லி தான் கல்யாணம் பண்ணிக்குவேன் என்பவர்கள் கட்டாயம் வாசிக்கவும்) 10) சாதிப் படிநிலையோடு கூடிய தெருக்களின் வரிசை, கோயில் நுழைவு உரிமை, பிடிமண் கோயில்கள் 11) இந்து, இந்திய தேசியம் போன்ற கருத்தாக்கங்கள் உருவாகக் காரணம் 12) காலனி ஆட்சியை மேல்சாதியார் எப்போது எதற்காக எதிர்த்தார்கள் 13) பிராமணரல்லாதார் அறிக்கை, இந்து என்ற சொல்லை நிராகரிக்கும் பெரியாரியம் எனப் பல கருத்துக்களை தெரிந்து கொள்ள கட்டாயம் இந்தப் புத்தகத்தை வாசியுங்கள். ஒருமுறை, இருமுறை அல்ல திரும்பத் திரும்ப வாசிப்பதன் மூலமே தொ.ப -வின் புத்தகத்தில் உள்ள பல்வேறு தகவல்களை உள்வாங்க முடியும்.
"தெய்வமென் தோர் சித்தமுண்டாகி" என்னும் திருவாசக அடியிலிருந்து நூலின் தலைப்பை எடுத்து இந்நூலை துவங்கி பெரிய வரலாற்றை சுருக்கமாகவும் தெளிவாகவும் படைத்துள்ளார். "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்" என்ற வள்ளுவரின் மொழியின் அடிப்படையில் தமிழகத்தில் பரவலாக மன்னர்களின் பள்ளிப்படை கோவில்கலெ உள்ளன.
நம்பிக்கைகளுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் இடையில் என்ன இருக்கிறது? ஏதோ ஒரு வகையில் நுண் அரசியல் அதிகாரமும் சமூக அதிகாரமும்தானே இருக்கின்றன.
வைதீகத்தை பின்பற்றி சமூகத்தில் பாகுபாடு பார்க்கின்ற நிறுவனமயமாக்கப்பட்ட மதங்களே ஒதுக்கப்பட வேண்டியது, தமிழ் சமூகத்தின் கடவுள் நம்பிக்கை அல்ல என்பது தான் தொ.ப வின் இந்தத் புத்தகத்தின் கட்டுரைகளில் முதல்முழு அடிப்படை விதிஆகும். உண்மையில் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்பதை அறிய இந்த நூல் வழிவகை செய்கிறது.
ஒற்றை தெய்வத்தை முன்னிருத்தும் பெருஞ்சமய நெறிக்கு மாறாக தமிழ் மக்கள் ஒரே ஊரில் பலவகை தாய்த் தெய்வங்களை வணங்கி வந்திருப்பதில் துவங்கி முருகனுக்கு வள்ளி தெய்வானை எப்படி மனைவி ஆக்கப்பட்டனர், தாய்த் தெய்வ கோவிலில் பார்பனியம் நுழைந்த விதம் மற்றும் பெரியார் ஏன் நாட்டார் தெய்வங்களை ஆதரித்தார் என்பதைப் பற்றியும் உள்ள கட்டுரைகள் பெரும் வியப்பை தருகின்றன.
ஒரு சமணக் கோவில் என்ற கட்டுரை நம்மக்கு "அழிந்து விட்டதாக கருதப்படும் எந்தக் கருத்தியல்களும் முழுமையாக மறைந்து விடுவதில்லை என்பதே இயற்கையின் விதி" என்பதையே புரியவைக்கிறது.
பண்பாடு குறித்த ஆய்வுகளை அறிய இந்த புத்தகம் உதவும். வரலாறுகள் எப்போதும் கோட்டைகளையும் கற்கோவில்களையும் சுற்றிய படியே உள்ளது. இந்த வரலாறு வெறும் அரசியல் வரலாறுகளாக மட்டுமே இருக்கிறது. நுண்அரசியல் வரலாறு எப்போதும் நமக்கு வியப்பாகவும் சாட்சியங்கள் போதாமைகளாகவும் இருந்து வருகிறது. இந்த புத்தகம் விரிவான தகவல் இல்லை என்றாலும் கட்டுரையில் காட்டப்படும் மேற்கோள்கள் அந்த போதாமைகளை மறுபரிசிலனைக்கு உட்படுத்துகிறது. நுண்அரசியலை புரிந்து கொள்ள உதவுகிறது.
சிறுதெய்வங்கள் எப்படி பெரும் தெய்வங்களாக மாற்றப்பட்டு இருக்கிறது. தாய்த் தெய்வ வழிபாடு மீது இந்த மக்கள் கொண்டு இருந்த நம்பிக்கை. வட்டாரத்திற்கு வட்டாரம் அவற்றில் இருந்த மாறுபாடு மற்றும் பிற மதங்கள் கூட இங்கு கால் உன்ற தாய்த் தெய்வங்களையே அவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
ஒரு சமணக் கோவில் என்ற கட்டுரை எளிய மக்கள் மதங்களை எப்படி அணுகுகிறார்கள் என்பதை புரியவைக��கிறது. வள்ளலார், ஆழ்வார்கள், ஆண்டாள், பக்தி இலக்கிய ஆய்வுகள் என தொப தெறிக்கவிட்டு இருக்கிறார். பண்பாடு எவ்வாறு பரிணமித்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
தெய்வங்களைப் பற்றிப் பேசாமல் ஒரு பண்பாட்டினை ஆய்வு செய்ய முடியாது எனும் வரியுடன் இந்தப் புத்தகம் தொடங்குகிறது.
சிறு தெய்வங்கள் என்று வழங்கப்படும் நாட்டார் தெய்வங்களின் தோற்றத்தையும் அவ்வெளிய தெய்வங்கள் பிரதிபலிக்கும் அம்மக்களின் வாழ்க்கை நிலையையும் சமூக நிலையையும் நமக்கு உணர்த்துகிறது இந்தப் புத்தகம்.
ஆழ்வார் பாடல்கள் கண்ணன் பாட்டு வள்ளலார் என பல வாரியாக இப்பண்பாட்டு ஆய்வானது விரிகிறது. பெரியாரியத்தை ஏற்போர் நாட்டார் தெய்வங்களை ஏற்பதற்கான காரணத்தையுப் தேவையையும் தெளிவே எடுத்துரைக்கிறது. இந்தியத் தேசியம் முதன் முதலில் சமய நோக்கிலேயே தோன்றியிருக்கிறது என்றும் அதன் மறைமுக நோக்கத்தையும் எடுத்தியம்புகிறது இந்தப் புத்தகம். இன்றும் நிலவிவரும் கேள்வியான பெரியார் ஏன் இந்து மதத்தையே பிரதானமாக எதிர்த்தார் எனும் கேள்விக்கு தெளிவான விடையை அளித்து வியக்க வைக்கிறது இந்தப் புத்தகம்.
Theivam enbathor... It's a Periyarist book justifying periyars views.. all I can see is complaints on Brahmins and there is no chapter relevant to topic.
To summarise.. whatever comes from Brahmin is fake and poisonous. But you can pray and follow all foolish rituals happening in indigenous tribal temples.. never seen such a hypocrites like periyarists in my life.. I was laughing out most of the chapters..
Note: I'm a pragmatic person in religious views. I try to understand what everyone says. I listen to atheist and I listen to spritual persons. But trust me this book is from a lunatic hypocrite.
"நாட்டார் தெய்வங்கள் எவையும் ‘முன்னே வந்து’ வரம் தரும் தெய்வங்கள் அல்ல. ‘பின்னே நின்று’ பாதுகாப்புத்தரக்கூடியன. அவை அழிக்கும் ஆற்றல் அற்றவை. மாறாக வயல் களத்திலும் அறுவடைக் காலத்திலும் கண்மாய்க் கரையிலும் ஊர் மந்தையிலும் ஊர் எல்லையிலும் தூங்காமல் நின்று காவல் காக்கக்கூடியன. அவை நுகர்வுக்காக மட்டும் பிறந்தவை அல்ல. உற்பத்தி சார்ந்த பண்பாட்டோடு பிறந்தவை. " - An excerpt from பெரியாரியலும் நாட்டார் தெய்வங்களும்.
Always had the question how could the widespread tamil Gods and their vast rituals/practices dwell inside the 'Hinduism' umbrella. The answer is in the book - it never did.
Must read the book. It talks about our culture, worship of local and family gods. The importance of it. Invasion of Aryan culture. Institutionalising the small temples in name of Vedas and Vedic culture. Development of organized religion. Caste systems and human exploitation. How religion played important role in politics and power centralisation. The book is more like research findings and literature. A great contribution to the Tamil society from the author.
நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம், குருதிப்பலி, பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே மூட நம்பிக்கைகளோடு பின்னிப் பிணைந்தவையாக விரிந்து கிடப்பது உண்மை. ஆனால் அவை முற்றிலும் தவறான பிம்பங்கள் என்று அழுத்தமாகத் தன் கருத்துக்களை வாசகர் உணரும் விதமாக இந்நூலின் கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன. வட்டாரம் சார்ந்த உற்பத்தி அசைவுகளும் சமூக உளவியலும் எனப் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் நாட்டார் தெய்வங்கள் ஒரு மக்கள் பண்பாட்டின் அடையாளமாக நிற்கின்றன.
"நாட்டார் தெய்வங்கள் என்ற சொல்லாட்சி நம் மனங்களில் சாமியாட்டம், குருதிப்பலி, பலி வடிவங்கள் ஆகிய படங்களாகவே மூட நம்பிக்கைகளோடு பின்னிப் பிணைந்தவையாக விரிந்து கிடப்பது உண்மை. ஆனால் அவை முற்றிலும் தவறான பிம்பங்கள் என்று அழுத்தமாகத் தன் கருத்துக்களை வாசகர் உணரும் விதமாக இந்நூலின் கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன"
தமிழரின் பண்பாடை பார்ப்பனிய ஆதிக்கதிலிருந்து பிரித்து அறிய, உண்மையில் தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்பதை அறிய, நம் வேர்களை அறிய, பெரியாரிய, மார்க்ஸிய பார்வையில் நமது தெய்வங்கள். ஐயா தொ. பரமசிவனின் உழைப்பு அலப்பரியது.
A detailed, in depth analysis of history and politics of religion and caste system of tamil nadu... Must read if you're interested in Religion politics.
Must read book. The book clears about the misconceptions about local cultural practices, its role in history, social harmony. It also talks about how religion plays a major role in power concentrations in society. The invasion of aryan concept. Difference between saivam, vaivanavam, Spartas etc etc.. Its like a great literature review. Its gives a new perspective to the religion and Tamil culture in current scenario..