பிரபு காளிதாஸின் முதல் நாவல் என்கிற வகையில் மிக நல்ல தொடக்கம். எழுத்தில் நல்ல முதிர்ச்சி. காட்சிப்படுத்துவதில் ஆழம். இதெல்லாம் ப்ளஸ். ஆனால் க்ராஃப்ட் மட்டுமே போதாது. அடுத்த நாவலில் இதைத் தாண்டுவார் என நம்புகிறேன். இளையராஜாவின் பாடல்களின் வரிசைகள் பழைய உத்தி, குறைத்திருக்கலாம். அப்பள கணேசனின் அம்மா ஒரு வரியிலாவது வந்தது நல்ல பெண்களும் இருக்கிறார்கள், அப்பாடா என்று நினைக்க வந்தது. பல கண்ணிகள் முழுமையடைய வில்லை. விரிவான நாவலாக வந்திருக்கவேண்டும். நாவலில் பிரதானம் பொறுமையே. அது நடையில் கைவசப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த நாவலிலும் அது முகிழவேண்டும். பிரபு காளிதாஸுக்கு வாழ்த்துகள்.