A collection of 40 stories of local deities. Reading them all makes you identify the pattern in it. Caste based honour killing is the one which stood out as the pattern for me.
இந்து என்கிற மதமும், பிராமண தெய்வங்களும் வருவதற்கு முன்பில் இருந்தே வழிப்பாட்டு முறை என்பது மக்களிடத்தில் இருந்து வருகிறது. அப்படியென்றால் என்ன மாதிரியான தெய்வங்களை மக்கள் வணங்கியிருப்பார்கள். மக்கள் தங்கள் வாழும் பகுதிகளுக்கு ஏற்ப ஏதோ ஒரு காரணத்தால் ஒரு தெய்வத்தை உருவாக்கி வணங்கியுள்ளனர். இந்த தெய்வங்களை நாம் வட்டார தெய்வங்கள், குலசாமி போன்ற பெயர்களால் அழைக்கிறோம். நம்மூரில் உள்ள கிருஸ்துவர்கள் சிலர் குலசாமி வழக்கத்தை கடைப்பிடிப்பதை பார்க்கலாம். காலம் காலமாக வணங்கி வரும் வட்டார தெய்வங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதையை தாங்கி கொண்டு நிற்கின்றன. இந்த புத்தகம் 40 வட்டார தெய்வங்களின் கதைகளை நமக்கு தருகிறது. அதில் அதிகப்படியாக யாரையாவது கொலை செய்துள்ளனர், அல்லது அவர்களின் சாவுக்கு காரணமாக இருந்துள்ளனர். இதனால் ஊரிலோ அல்லது கொலைக்கு காரணமானவர் குடும்பத்திலோ தவறுகள் நடைபெறுகிறது. அந்த கொலையே அதற்கு காரணம் என கொலை செய்யப்பட்டவரை தெய்வமாக்குகின்றனர். சாதிய கொலைகள் இதில் அதிகமாக நடந்துள்ளன. கொள்ளை நோய்களுக்கு வட்டார தெய்வங்களை உருவாக்கியதில் முக்கிய பங்கு இருக்கிறது. யாரையாவது கொலை செய்து அந்த நேரம் பார்த்து ஊரில் கொள்ளை நோய் பரவி கொத்து கொத்தாக சாவு நடக்க அதனால் மக்கள் கொலை செய்யப்பட்டவரை தெய்வமாக வணங்க கொள்ளை நோய்கள் நீங்குகிறது. அந்த காலங்களில் காலரா போன்ற சில கொள்ளை நோய்கள் குறிப்பிட்ட காலங்களில் பரவக்கூடியவை. ஆனால் அந்த காலங்கள் பல ஊர்களில் கொலை செய்யப்பட்டவர்களை தெய்வமாக்கியுள்ளது. இந்து மதம் இழுத்த வட்டார தெய்வங்கள் என பார்த்தால் சிவன் மற்றும் அவரது குடும்பத்தாரை கூறலாம். எப்படி பார்த்தாலும் வட்டார தெய்வங்களும் அறியாமையின் விளைவாகவே உருவாகியுள்ளது.