எப்போது படித்தாலும் என்னை வியப்பில் ஆழ்த்தும் மாபெரும் இதிகாசம் மஹாபாரதம்.
சிறுவயதில் என் தாத்தா தன் மடியில் என்னை உட்கார வைத்து மகாபாரதக் கதையை சொல்ல சொல்ல என்னை முழுதும் ஆக்கிரமித்தவன் பீமன். பகாசுர வதம், கீச்சக வதம் என பீமன் புரிந்த வீரசெயல்களால் நான் முழுவதும் ஈர்க்கப்பட்டேன்.
பாண்டவர்களின் சேனையில் பாண்டிய சோழர்கள் இடம் பெற்றிருந்தது முற்றிலும் புதிய செய்தி.
உமா சம்பத் அவர்கள் இம்மாபெரும் இதிகாசத்தை ஆர்வத்தை கிளறும் வகையில் அமைந்திருக்கிறார். இருப்பினும் ஏகலைவன் போன்ற முக்கிய மனிதர்களைப் பற்றி சொல்லாமல் விட்டுவிட்டது வருத்தமே.