திமுக ஆட்சியின் தாக்கத்தைத் தமிழகம் உணர்வதற்கு முன்னால், அண்ணா மறைந்துவிட, கலைஞர் மு. கருணாநிதியின் பொறுப்பில் ஆட்சியும் கட்சியும் வந்து சேர்ந்தது. பெரியார், அண்ணா இருவரிடமும் பணியாற்றிய அனுபவம் அவருக்குக் கைகொடுத்தது.
திமுகவில் இருந்து விலகி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி தொடங்கியபோது, திராவிட இயக்கம் மேலும் பல பிளவுகளுக்குத் தயாரானது. பிறகு, எமர்ஜென்சி புயலில் சிக்கி, மீண்டு எழுவதற்குள் தேர்தல் தோல்வி. அடுத்த பத்தாண்டுகளுக்கு, எம்.ஜி.ஆரின் சவாலை அவர் சந்திக்கவேண்டியிருந்தது.
திமுகவின் முடிவுரையை பலர் எழுத ஆரம்பித்துவிட்ட சமயத்தில், கலைஞர், கட்சியை ஒருங்கிணைத்தார். தமிழகம் அதுவரை அறிந்திராத, வலிமையான எதிர்க்கட்சி இலக்கணத்தை வகுத்து கட்சிக்கு உயிரூட்டினார்.
ஜெயலலிதா, வைகோ என்று புதிய தலைவர்கள் அறிமுகமான-போது, திராவிட இயக்கம் விரிந்தும், பிரிந்தும் வளர ஆரம்பித்தது. என்றாலும், திமுக, அதிமுக தவிர்த்து இன்னொரு கட்சியால் இங்கே ஆட்சி செய்ய முடியவில்லை. கட்சிப் பிரிவினைகள் தாண்டி ஒரு வலுவான சக்தியாக, திராவிட இயக்கம் வளர்ந்து பரவியிருப்பதையே இது காட்டுகிறது. அண்ணா மறைந்த 1969 தொடங்கி நேற்று வரையிலான இயக்க வரலாறு இரண்டாம் பாகத்தில் இடம்பெறுகிறது.
This ebook is a product of Kizhakku pathippagam, which is a imprint of New Horizon Media Private Limited (NHM).
பிறந்தது மயிலாடுதுறையில். படித்தது முதுகலை கணிப்பொறிப் பயன்பாடுகள் (M.C.A) கல்கி பத்திரிகையில் சுதந்தரப் பத்திரிகையாளராக எழுதத் தொடங்கி தற்போது கிழக்கு பதிப்பகத்தில் முதன்மைத் துணை ஆசிரியராகப் பணிபுரிகிறார். இந்தியாவில் நிகழும் அரசியல் பிரச்னைகள் குறித்த இவருடைய கட்டுரைகள் குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தேசிய அரசியல் மீது தீவிரக் கவனம் செலுத்திவரும் இவருக்கு தமிழக அரசியல் மீது எப்போதும் கவனம் உண்டு. தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க ஆகிய கட்சிகள் தோன்றி வளர்ந்த கதையைப் புத்தககமாகப் பதிவு செய்திருக்கும் இவர் நியூ ஹொரைஸன் மீடியாவின் இன்னொரு பதிப்பான MiniMaxன் பொறுப்பாசிரியராக இயங்கிவருகிறார்.
அண்ணாவின் மறைவுக்கு பின் திராவிட இயக்கங்களின் வரலாற்றை சுருக்கமாக விளக்குகிறது இந்த நூல். பல்வேறு பிரச்சனைகளால், கட்சி பிளவு வரலாறு முழுமைக்கும் நிகழ்ந்து உள்ளது, அஇஅதிமுக பெயர் வந்த காரணம், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்க்கு திராவிட இயக்கங்கள் பங்களிப்பு, கூட்டணிகள்,தேர்தல் களம், திராவிட இயக்கங்கள் செய்த நன்மைகள் என பல சுவாரசியமான தகவல்கள் இதில் அடங்கும்.
வரலாறு முழுமைக்கும் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது திமுக பெரியாரும், அண்ணாவும் வகுத்து தந்த அடிப்படை கொள்கைகளில் இருந்து சிறிது அளவு கூட மாறுபடாமல் இருந்ததற்கு கருணாநிதி மிக பெரிய பங்காற்றி உள்ளார். கட்சி பிளவுகள் தவிர்க்க முடியாதவை என்றாலும் அவை நிகழாமல் இருந்திருந்தால் தமிழகம் இன்னும் முன்னேறிய மாநிலமாக இருந்திருக்கும் என தோன்றுகிறது.
கலைஞர் அவர்களின் அரசியில் அணுகுமுறையை அதிமுக முற்றிலும் சிதைத்து "போட்டி போடும்" கலாச்சாரமாக மாற்றியது இன்றும் தொடர்கிறது.
இருந்தாலும் மக்கள் நலன்களில் எவ்வித சமரசமும் இன்றி இரண்டு கழகங்களும் நிறைய நல்ல திட்டங்களை கொண்டு வந்து உள்ளனர்.
இன்று உள்ள சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் என நாம் அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கு பின்னால் உள்ள வரலாறு பிரம்மிக்க வைக்கிறது.
மிக எளிமையாக புத்தகத்தை எழுதிய ஆர். முத்துக்குமார் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.
தமிழக வரலாறு படிக்க விரும்புவர்களும், திராவிட இயக்க ஆதரவாளர்கள் அனைவரும் இந்த நூலை வாசிக்கலாம்.
Book: திராவிட இயக்கம் வரலாறு- பாகம் 2 Author: ஆர். முத்துக்குமார்
அண்ணாவின் மறைவில் ஆரம்பித்து 2009 நாடாளுமன்ற தேர்தல் வரையிலான திராவிட கட்சிகளின் வரலாறு.. சம்பவங்கள் ஏதும் திரிக்கப்பவில்லை என்றாலும் தெரிவிக்கும் கருத்துகளிலும் நியாயப்புத்துலிலும் மு.க சார்பு வெளிப்படையாக தெரிகிறது... அதுதான் புத்தகத்தின் மிகப்பெரிய பின்னடைவு.... ஆனால் முக்கியமான நிகழ்வுகளை தொகுத்து வழங்கியதில் படிக்க வேண்டிய புத்தகம் ...
திராவிட (தமிழக) அரசியலை பகுத்தறிவோடு அறிய பயன்படும் இரண்டு பாகங்களும் உடைய புத்தகம்..20 ஆம் நூற்றாண்டில் தொடங்கி 2009 வரை நடந்த அரசியல் நிகழ்வுகளின் தொகுப்பு..திராவிட அரசியலை தெரிந்து கொள்ள நினைப்போருக்கு ஒரு நல்ல முன்னோட்டம் இப்புத்தகம்..
திராவிட இயக்கங்களின் வரலாற்றை ஒளிவுமறைவின்றி, விருப்பு வெறுப்பிற்கு இடமின்றி, நடுநிலைமையில் விளக்கும் நூல். 2009 வரையிலான வரலாற்றைப் பதிவு செய்துள்ளதால் 2G பிரச்சனை குறித்த விளக்கங்கள் இந்நூலில் இல்லை.
A good reference book to keep update on the Dravidian politics from the start to the current phase. Vastly covered. But author resembles affinity to a specific story line