Jump to ratings and reviews
Rate this book

ஜெயகாந்தன் சிறுகதைகள், தொகுப்பு 2 [Jayakanthan Sirukathaigal, Part 2]

Rate this book
ஜெயகாந்தனின் சிறுகதைகள் - தொகுப்பு 2

டிரெடில் (1958)
பிணக்கு ( 1958)
நந்தவனத்தில் ஓர் ஆண்டி (1958)
நீ இன்னா ஸார் சொல்றே? (1959)
புதிய வார்ப்புகள் (1965)
சுயதரிசனம் (1965)
அக்ரஹாரத்துப் பூனை (1969)
அக்கினிப் பிரவேசம் (1965)
புது செருப்புக் கடிக்கும் (1971)
நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ? (1967-1969)

232 pages, Kindle Edition

Published October 1, 2016

205 people are currently reading
266 people want to read

About the author

Jayakanthan

129 books675 followers
Dhandapani Jeyakanthan, otherwise known as 'JK' among his friends and comrades, is a multi-dimensional personality, well known in the literary circle as a prolific writer, commentator, pamphleteer, film-maker and critic. He has won acclaim for wielding his pen against social injustices and economic inequality. Jeyakanthan was born in a family of agriculturists in Manjakuppam, a suburb of Cuddalore of the erstwhile Madras Presidency. Brought up by his mother and maternal uncles, he got interested in politics at a young age as his uncles were actively involved in it. Jeyakanthan dropped himself out of school after completing fifth grade, as he thought studies would hinder his political activism.

In 1946, he left for Chennai in search of livelihood, where he performed odd jobs, before ending up as a compositor in the printing press of Communist Party of India (CPI). His association with the CPI instilled the ideas of the movement, where he got to accompany leaders such as P. Jeevanandham, Baladandayutham and S. Ramakrishnan. The leaders of the party encouraged him to write. After graduating to an active member of the party, he got to learn about topics pertaining to world literature, culture, politics, economics and journalism. It was during this time, Jeyakanthan started writing for pro-communist magazines. Over the next few years, he established himself as one of the top-most writers in the party. His early works were first published in the party newspaper Janasakthi, and soon other magazines like Sarasvathi, Thamarai, Santhi, Manithan, Sakthi and Samaran published his works. His early works focused on the plight of slum-dwellers who were settled in and around the party office.

Jeyakanthan was married to his cousin. The couple had two daughters and a son. Jeyakanthan wrote his first short story for a Tamil magazine titled Sowbakiyavathi, which got it published in 1953. Following early success, Jeyakanthan started writing for mainstream magazines such as Ananda Vikatan, Kumudam and Dinamani Kadir, who published a number of short stories, particularly in the 1960s. In 1964, Jayakanthan entered films by co-producing and directing a venture titled Unnaipol Oruvan, based on his novel.

His writings reflect his views on the morals, ethics and the societal norms as a whole. His writings are vivid portrayals of life and relationships, with all the intricacies and beauty of reality, and with a profound love for humanity. He is one among the few of the original writers of the Tamil Literature. He is a man of insight, pride and scholarship whose writings expressed with unparalleled courage and utmost honesty speaks for all the generations to come. A winner of Sahitya Acadamy Award and Fellowship, Jnanpita Award, Soviet Land Nehru Award, the Russian Federation's Order of Friendship and the Padma Bhushan.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
165 (53%)
4 stars
103 (33%)
3 stars
25 (8%)
2 stars
8 (2%)
1 star
10 (3%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for Prem.
77 reviews51 followers
December 30, 2018
படித்த புத்தக வடிவம்: Amazon Kindle மின்புத்தகம்

ஜெயகாந்தனின் 1958 முதல் 1971 வரை எழுதப்பட்ட பத்து சிறுகதைகள் அடங்கிய இரண்டாவது தொகுப்பு. Kindle-ல் உள்ள மேற்கோள் செய்யும் வசதியில் 71 குறிப்புகள் எடுத்துள்ளேன். இன்னும் எடுக்காமல் விட்ட மேற்கோள்கள் இருக்கக் கூடும். இதிலிருந்தே இப்புத்தகத்தின் சிறப்பு புரிகிறது. ஒவ்வொரு கதையின் கருப்பொருளும் இன்றைய காலத்திற்கும் பொருந்துவதாகவே எனக்குப் படுகின்றது. அது அக்கினிப் பிரவேசமாக (1965) இருக்கட்டும், புது செருப்புக் கடிக்குமாக (1971) இருக்கட்டும், அக்ரஹாரத்துப் பூனையாக (1969) இருக்கட்டும் புதிய வார்ப்புகளாக (1965) இருக்கட்டும் , நாம் இன்னும் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம் என்பதையும், ஜெயகாந்தன் எப்படி காலத்தைக் கடந்தவராக இருக்கிறார் என்பதையுமே காட்டுகின்றன. நந்தவனத்தில் ஓர் ஆண்டி கதையை என்னால் பிதாமகன் திரைப்படத்துடன் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை, அந்தப் பாடலுடன் சேர்த்து. சில கதை மாந்தர்கள் நேரடியாக வாசகர்களுடன் பேசுகிறார்கள், கேள்வி எழுப்புகிறார்கள், முடிவை நம்மிடமே விட்டு விடுகிறார்கள். எத்தனைக் கருத்தார்ந்த கதையிலும் ஒரு மெல்லிய பகடி, நகைச்சுவையைப் புகுத்தி புன்முறுவலை ஏற்படுத்தத் தவறுவதில்லை ஜேகே.

எனக்கு மிகவும் பிடித்த கதைகள்:
* - பிணக்கு
* - நந்தவனத்தில் ஓர் ஆண்டி
* - நீ இன்னா ஸார் சொல்றே?
* - சுயதரிசனம்
* - புதிய வார்ப்புகள்
* - அக்கினிப் பிரவேசம்
* - புது செருப்புக் கடிக்கும்

சில குறிப்புகள்:

* - வேலையைப் பாருடா, கய்தே!" என்று அவருடைய 'கௌரவம்' குரல் கொடுத்தது. "ஆவட்டும், ஸார்!" என்ற அந்தத் தொழிலாளியின் 'சிறுமை' அதற்கு அடங்கிப் பணிந்தது!

* - டாக்டர் பதில் கூறாமல் தலையைக் குனிந்தவாறே கைலாசம் பிள்ளையின் சோகத்தை மிதித்துக் கொண்டு போயே விட்டார்.

* - நமக்குத் தெரிந்த ஒவ்வொரு வார்த்தையையும் எங்கு எப்பொழுது நாம் கற்றுக்கொண்டு முதன்முதலில் உச்சரித்தோம் என்று சொல்ல முடியுமா?

* - நான் பேசறதே இல்லே... பின்னே என்னா ஸார், பேசறதுக்கு இன்னா இருக்குது! ரொம்பப் பேசறவனெ நம்பவே கூடாது ஸார்! அவனுக்குப் புத்தியே இருக்காது. பேசாம இருக்கிறவனையும் நம்பக் கூடாது... ஏன்னா அவன் பெரிய ஆளு ஸார்... சமயம் வாச்சா ஆளையே தீர்த்துப் பிடுவான்.

* - ஒரு நியாயத்தின் அடிப்படையில்தான் சில நிர்ப்பந்தங்கள் நேர்கின்றன. நிர்ப்பந்தங்கள் நேர்ந்த நிமிஷங்கள் தளர்ந்தாலும் அதன் நியாயங்கள் நிலைத்தே விடுகின்றன.

* - அதுவும் இரண்டு வருஷமாய் ரத்த அழுத்த நோயும் ஹிருதய பலவீனமும் ஏற்பட்ட பிறகு, காரைக்கூடப் பதினைந்து மைல் வேகத்திற்கு மேல் அவர் ஓட்டுவதில்லை.

* - 'அசடு பிராம்ணனா இருக்கப்படாது; அசடா இருந்தா அவன் பிராம்மணனில்லே; பிராம்ணன்னா ஞானப் பொக்கிஷம்னு அர்த்தம்'...

* - கையெழுத்திட்ட இடத்தில் கணபதி சாஸ்திரிகள் என்று எழுதி, சாஸ்திரிகள் என்ற வார்த்தை அடித்து நைக்கப்பட்டிருக்கிறது.

* - இந்த ஆயிரக்கணக்கான மனுஷா முகத்திலே ஒண்ணுகூட தெரிஞ்ச முகமா இல்லே. என்னைக் கவனிக்கிற முகம் இதிலே ஒண்ணுகூட இல்லேங்கறதை நெனச்சுப் பார்க்கறப்போ பரம சுகமா இருக்கு.

* - இயற்கையிலே ஒரு சிக்கலும் இல்லை. சிக்கலே இல்லேன்னா அது செயற்கையே இல்லை. இப்படி ஒரு செயற்கையான சிக்கல்லேதான் நான் சிக்கிண்டேன். அப்படி சிக்கிக்கறதுதான் வாழ்க்கை...

* - 'மருந்தைச் சாப்பிட்டா போறும்; மருந்திலே என்ன இருக்குன்னு தெரிஞ்சா என்ன, தெரியாட்டா என்ன?'ன்னு எப்பவோ படிச்சதை எடுத்துவிட்டேன். அவர் என்னைப் பார்த்துச் சிரிச்சுண்டே, 'மருந்து சாப்பிடறவனுக்குத் தெரியாட்டா பாதகமில்லே. மருந்து கொடுக்கிறவருக்குத் தெரிஞ்சிருக்கணுமே?'ன்னார்...

* - இருபத்தைந்து வருஷங்கள் ஆன பிறகும் அந்த நினைவுகள், அனுபவங்கள், நிகழ்ச்சிகள் யாவும் நினைப்பதற்கே சுகமாக இருக்கிறதென்றால், அவை யாவும் அழகான அனுபவங்களும், நினைவுகளும் தானே!

* - கூழாங் கற்களைப் பொறுக்கிக் குளத்துக்குள் எறிந்தவாறு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் உட்கார்ந்திருக்கலாமே - எங்கெங்கே பரந்து என்ன வாரிக் கட்டிக் கொண்டோம்?

* - சிங்கம், புலி இதெல்லாம் ரொம்பப் பிடிக்கும்! அதையெல்லாம் பார்த்ததில்லையல்லவா? அதனாலே பிடிக்கும்! பார்த்துப் பழகிட்டா, எதுவுமே பிடிக்காமல் போறது மனுஷ இயல்புதானே?

* - வீதியில் தேங்கி நின்ற மழை நீரை இருபுறமும் வாரி இறைத்துக் கொண்டு அந்த 'டீஸல் அநாகரிகம்' வந்து நிற்கிறது.

* - அவன் காலை உயர்த்தியபோது 'சளக்' என்று தெறித்த சேறு, காரின் மீது கறையாய்ப் படிகிறது. திறந்த கதவின் வழியே இரண்டொரு துளிகள் காருக்குள் இருந்த அவள் மீதும் தெறிக்கின்றன.

* - சூதிலே ஜெயிச்சவனும் வாழறதில்லே, தோத்தவனும் வாழறதில்லேங்கற சத்யத்தைத்தானே ஐயா, மகாபாரதம் பேசறது...

* - சூதாட்டத்துலே, பணத்தாலே லட்சாதிபதிகளை இந்த அரசாங்கம் உருவாக்கலாம். ஒரு ஞானஸ்தனை, ஒரு சதுர்வேத பண்டிதனை உருவாக்கச் சொல்லேன், பார்க்கலாம்"னு
Profile Image for Prabhu R..
Author 3 books34 followers
October 17, 2018
Great writing, takes you to the 1960-1970s era and the lifestyle. Some of the stories are mocking and even condemning the practices of the society. These stories prove why Jayakanthan is a highly acclaimed author.
Profile Image for Padmanathan N.
32 reviews1 follower
April 19, 2022
கட்டாயம் படிக்கவேண்டிய ஒன்று

ஜெயகாந்தனின் தேர்ந்தெடுக்கப்பட்ட இச்சிறுகதை தொகுப்பு மாறுபட்ட கோணத்தை இப்பொழுதும் சுட்டிக்காட்டுவதுடன் எழுதப்பட்ட காலகட்டத்தின் சமூக பிரச்சனைக்கான முற்போக்கு தீர்வையும் தீர்க்கமாக தனது பாணியில் எடுத்துரைத்துள்ளார் எழுத்தச ஜெயகாந்தன்.
Profile Image for Karthick.
8 reviews1 follower
January 14, 2018
Was Not able to keep it down. Each story was unique and interesting. A lot of questions to the readers. A method I believe that is so refreshing.
103 reviews1 follower
October 27, 2018
படித்ததில் பிடித்தது:
1. நந்தவனத்தில் ஓர் ஆண்டி
2. அக்கினிப் பிரவேசம்
3. புது செருப்பு கடிக்கும்
4. நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?
Profile Image for பூபதி கோவை.
Author 6 books3 followers
November 28, 2018
Jeyakanthan -An Immortal Man

Fantastic stories. All are soulful ones. He still lives in our hearts. Each character in his stories has its own values.. Great author...
3 reviews
April 4, 2017
Meaningful stories

Each of this story has a concept and teaches great lessons for life. Great narration and imparts lessons in a subtle way.
Displaying 1 - 7 of 7 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.