அருமை! அருமையிலும் அருமை!!
சாவி பல்வேறு காலகட்டங்களில் தனது வாழ்க்கையின் அனுபவங்களை அவருக்கே உரித்தான ஹாஷ்யம் கலந்த அழகான நடையில் நமக்கு படம் பிடித்து காட்டி இருக்கிறார். அவரின் சிறுவயது நண்பர்கள் தொடங்கி அன்றைய எழுத்துலகத்தில் இடம் பிடித்த ஜாம்பவான்கள் கல்கி, வாசன், துமிலன், ஜெயகாந்தன் மற்றும் அரசியல் தலைவர்கள் காமராஜர், ராஜாஜி, ஈ.வே.ரா, அண்ணாத்துரை, கருணாநிதி, நடிகர்கள் எம்.ஜீ.ஆர்., எஸ்.வி.சகஷ்ரநாமம், என்.எஸ்.கே. அவர்களுடனும் ஜி.டி.நாயுடு, சுவாமி சங்கராச்சாரியார் போன்ற பெரியோர்களுடனும் தனக்குண்டான தோழமை, அவர்களுடன் தான் சேர்ந்து பெற்ற அனுபவங்களையும் அவரது எழுத்துலக வாழ்க்கையையும் மிகவும் நேர்த்தியாக தொகுத்தளித்திருக்கும் விதம் படிப்பவர் மனங்களை அன்றைய நாட்களுக்கு நிச்சயம் எடுத்து செல்லும். மனம் நிறைந்த வாசிப்பு!!!