Highly predictable!!! Disappointed. I have read Indira soundarajan's other Novels Kannigal ezhu per, vittu vidu karuppa,which was so good and thrilling but I don't recommend this book to anyone.
அரசாங்கத்தை ஏமாற்றி நேர்மையில்லாமல் சேர்த்த பணம் ஏதோ ஒருவழியில் அழிந்துவிடும்.
சந்திரசேகர் பிசினஸ்மேன், ஆனால் கொஞ்ச நாட்களாக அவர் பிசினஸ் படுத்து எதிரியான சதுர்வேதியின் கை ஒங்குகிறது. இதை முறியடிக்க மாந்திரீகம் தான் ஒரே வழி என்று கைகாட்டப்படுகிறது.
பட்டத்திரி என்னும் மலையாள மாந்திரீகவாதியை சந்திக்கிறேன். ஆனால் சதுர்வேதி ஏற்கனவே அவரிடம் பிசினஸில் முதல் இடம் வர பூஜை செய்தவன் என்று அறிந்து கொள்கிறான். அந்த மாந்திரீகன் சந்தரசேகருக்கும் உதவுவதாகச் சொல்லகிறான். அடுத்த நாளே பல இலட்சம் ஆர்டர் கிடைக்கிறது..
சதுர்வேதிக்கு டவுட் வந்து பட்டத்திரியை கேட்க, அவன் என்னை நம்பி வந்தவன் காப்பாற்றுவது என் கடமை என்று சொல்கிறார். தொழில் முன்னேற சொர்ண பாத்திரத்தில் சொந்த இரத்ததைக் கொண்டு பூஜையை இருவரும் செய்கின்றனர்.
சதுர்வேதியின் தங்கை கணவர் தீரஜ் கஸ்டமில் வேலை செய்பவர். ஏமாற்றி வந்த தங்கத்தை அரசாங்கத்துக்குத் தெரியாமல் பிளாக் மார்க்கெட்டில் சந்திரசேகருக்கு விற்கும் போது கள்ள நோட்டை கொடுத்து ஏமாற்றிவிடுகிறான் அதனால் தீரஜ் இப்போ ஜெயிலில் இருக்கிறான். அதற்குப் பழிவாங்க தான் இந்த மாந்திரீகம்.
சதுர்வேதி ஒருபடி மேலே சென்று பட்டத்திரி குருவான் நம்பூதரியிடம் பெரிய சூனிய பூஜைச் செய்ய சொல்கிறான் அதற்குச் சொர்ணவேண்டும் என்று கேட்க இவ்வளவு நாள் கள்ள மார்கெட்டில் வாங்கிய அனைத்தும் கொண்டுவருகிறான்.
சந்திரசேகரும் சொர்ண பூஜைக்குத் தீரஜிடம் வாங்கிய தங்கத்தைக் கொண்டுவந்து பட்டத்திரியிடம் உண்மையையும் சொல்லிவிடுகிறான் இது ஏமாற்றிச் சேர்த்தது என்று..
சுடுகாட்டில் இருந்த போலீஸ் இருவரையும் கைது செய்கிறது. பல நாட்களாக இருந்த சந்தேகத்தில் போலீஸ் அதிகாரிகள் மாந்திரீக வேடம் போட்டு இருவரையும் தகுந்த ஆதாரத்தோடு கைது செய்யத் தான் இவ்வளவு நாடகமும்.
எனக்கு இந்திரா சௌந்திரராஜன் என்றல் ஒரு வித இளமை கால நிணைவு கலந்த பிரியம். அவரின் மர்ம தேசம் , விடாது கருப்பு போன்ற படைப்புக்கள் தொலைக்காட்சி தொடருக்கு ஒரு வடிவம் கொடுத்தவை .
இப்போது இருக்கும் OTT Platform /Web series ikku அவரின் எழுத்துக்கள் நல்ல தேர்வு
மந்திர வலை எனக்கு அவரின் மிக சிறந்த கதையாக தோன்றவில்லை. கதை களம், கதை செல்லும் பாதை , திருப்பம் எல்லாம் எண்ண கூடிய ஒன்று
மேலும் நல்ல இந்திரா சௌந்திரராஜன் கதைகளை தேடி படிப்பேன்.
The way the plot unveils and the way it ends are quite different. It enters the field of witchcraft and takes a different unexpected turn. Overall, a nice and a quick read.