இரண்டு குறுநாவல்களும் ஒரு கட்டுரையும் அடங்கிய தொகுப்பு.
தொட்டதெல்லாம் பொன்::::: *************** திருடர்களால் திருப்பட்ட நகை ஒன்று தவறி குப்பை தொட்டியில் விழுந்ததைப் பார்த்த மெக்கானிக் அதை வைத்துக் கொள்கிறான் , பேப்பரில் அந்த நகை இருக்கும் இடத்தில் மகாலட்சுமி இருப்பால் என்று முனிவர் ஆசிர்வதித்துக் கொடுத்த செயின் அது என்று போடப்பட்டிருப்பதால்.
அது வந்த நேரம் பல வருடங்கள் நடைபெற்ற வழக்கு முடிவுக்கு வருகிறது.வாழ்ந்த பழைய வீடு இவர்கள் பக்கம் சாதகமாக அங்கே ஒட்டனைகளுடன் பாழடைந்து இருப்பதைப் பார்க்க செல்பவனுக்குத் தங்கம் கிடைக்கிறது.
போலிஸ் வந்து வீட்டை தோண்டும் போது பல வருடங்களாக அந்த வீட்டை திருடர்கள் தங்களின் திருட்டு நகையைப் பதுக்க உபயோகித்திருப்பது தெரிகிறது.
கா.. கா... கா... ::::: ********* தன் மகள் கனிகாவை எப்படியாவது ஸ்ரீராமுக்கு கட்டி கொடுக்க வேண்டும் என்று இந்தியா வரும் ஸ்ரீராமின் மனைவியையும் குழந்தையையும் கொல்ல முடிவெடுக்கிறார் அருணாசலம். இந்து மதத்தின் மீது தீராத பற்றுக் கொண்ட ஸ்ரீராமின் மனைவியைக் காப்பாற்ற நல்சக்திகள் காகாவின் ரூபத்தில் வந்து தீயதை அருணாசலத்தின் பக்கமே திருப்பி விடுவதால் கனிகாவின் இறப்பு ஏற்படுகிறது.
கடவுளைக் கண்டவர்கள்:::: ********* இறைவன் இருக்கிறான் அது மனிதர்களின் மூலமே கர்மாபலன் இருந்தால் தரிசிக்க முடியும் என்பதைச் சொல்லி சில மகான் எப்படிச் சராசரி வாழ்வில் இருந்து பக்திமானாக மாறி அனைவரும் போற்றப்படும் சித்த புருஷர்களாக மாறியதை விவரிக்கிறார்.
"பிரம்மமுகூர்த்தத்தை சராசரி பொழுதாக நினைத்த வரை அதனால் பெரிய பலனில்லை. அந்த பொழுதின் அருமை தெரிந்து மனம் சூரியனைக் கண்ணால் பார்த்து, கருத்தால் சந்தித்து ஒருமுகப்படுவதில்தான் பலனுள்ளது."