மெதுவாய் நகரும் ஒரு த்ரில்லர் கதை. த்ரில்லரையும் இலக்கிய பாணியில் எழுத முடியும் என்று நிரூபிக்க ஆசைப்பட்டரோ என்னவோ! ஜோர்ஜ், ரெஜினா பாத்திரங்கள் என்னை ரொம்பவே பாதித்தது. வைஜெயந்தி என்னை நிறைய குழப்பினாள். த்ரில்லர் போல இப்புத்தகம் படிக்க ஆரம்பித்தால் ஏமாற்றமே மிஞ்சும். ஜெமோ வை படிக்க இப்போது தான் ஆரம்பித்ததால் பொறுமை பலன் அளித்தது.
குண்டு செலுத்தப்பட்ட துப்பாக்கி , சுடப்பட்டவரை நோக்கி எந்த யோசைனையும் இன்றி சுடுவது போல , காலம்காலமாக போராட்ட குழுக்கள் , தங்கள் ஆணைகளை நிறைவேற்ற , எந்த கேள்வியும் கேட்காத , போராளிகளை தயார் செய்கின்றனர். இதில் வரும் சாந்தன் ஒரு துப்பாக்கி தான் , அவனுள்ளும் ஒரு குண்டு உள்ளது . ஒரு போரில் அவன் குண்டடிப்பட்டு அந்த குண்டானது இன்றும் அவனுள் இருப்பது, ஒரு உருவகமாக சொல்லப்பட்டு இருந்தாலும் , அவன் நிஜத்தில் , எந்த கேள்வியும் கேக்காத , திரும்பி பேசாது , சுட வேண்டிய ஒரு துப்பாக்கி தான் . தன் ஆணையை நிறைவேற்ற இலங்கையில் இருந்து வந்து , இங்கு அகதியாய் குடியேறி , இங்குள்ள ரா அமைப்பின் ஒரு எதிர் குழுவில் சேர்ந்து , அவன் சேர வேண்டிய இடத்தில் சேர்கிறான். இந்தியா-பாகிஸ்தான் போரில் இலங்கை , பாகிஸ்தானிய கடற்படை கப்பல்கள் எரிபொருள் நிரப்ப இடம் கொடுத்தததற்காக , இந்தியா அரசு விடுதலை புலிகளை பயன்படுத்தி , அவர்களை வலிமையாக்கி , இலங்கையில் உள்நாட்டு போர் மூலம் , அரசின் ஸ்திர தன்மையை குலைக்க முயற்சிக்கிறது . இது அனைவருக்கும் தெரிந்த ஒரு செய்தியாதலின் , ராவின் பங்கு இதில் புரிந்து கொள்ள முடிகின்றது , மற்றபடி இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என தெரிகிறது , இருப்பினும் இதில் உள்ள முக்கிய பாத்திரங்களை நிஜத்தில் யாராக இருக்கும் என கண்டுபிடிக்க முடியவில்லை. இலங்கை முக்கிய பிரமுகர் இங்கு கொல்லப்பட்டது போன்ற தகவலும் திரட்ட முடிவில்லை.
ஈழப்போராளி ஒருவரின் உண்மைக் கதையை தழுவிய குறுநாவல் என்று குறிப்பிடப்பட்டாலும் அது ஏனோ மனதோடு ஒன்றவில்லை.இந் நூலின் முன்னுரையில் அகத்தோடு பேசுவது தான் இலக்கியம் என்று குறிப்பிட்டிருப்பார் ஜெமோ.ஆனால் இக்கதையில் எம்மோடு பேசும் அகம் ஜெமோவினுடையது என்பது குறித்த முன்னாள் போராளியின் வார்த்தைகளில் குறிப்பாக வரலாறு தொடர்பான அவனது கருத்துகளில் தெளிவாகவே புலப்படுகின்றது.எட்டுப் பத்து வரிகளிலேயே எம் ஆழ்மனத்துயரங்களையும் உணர்வுகளையும் கண்ணாடி போல் பிரதிபலிக்கும் ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகளையும் மனதோடு ஒட்டாமல் வெறும் கதையாக நகரும் உலோகத்தையும் நோக்கும் போது ஒன்று மட்டும் புரிகிறது எம்மவர் உணர்வுகளை பிரதிபலிக்க எம்மவர்களால் மட்டும் தான் முடியும்.
'அறம்' புத்தகம் வாசித்ததிலிருந்து ஜெயமோகன் அவர்களின் ரசிகனாகி விட்டேன்.
ஆயுதம் ஏந்திய எந்தவொரு இயக்கமும், துரோகம் செய்தவர்களை கொன்றுவிடும். புலிகளுக்கு துரோகம் செய்துவிட்டு உயிருக்கு பயந்து 'ரா' அமைப்பில் சரணாகும் ஒருவரை கொல்லவரும் புலிகளின் ரகசிய உளவாளியின் (சார்லஸ்) கதை. திரில்லராக இருப்பினும், கதை யதார்த்தத்தை மீறவில்லை. Slow paced thriller, good read.
ஈழத்துப் பின்னணியில் கதைக்களம். வாழ்க்கையில் சரி தவறுக்குக் கோடே இல்லாத ஓர் கதை. கால் இடறி வழுக்கி விழுந்தவர்களெல்லாம் வரலாற்றில் வல்லவர்களாக சித்தரிக்கப்படும் அவலநிலை இக்கதையிலும் உண்டு. நாவலின் ஆரம்பம் ஆர்வம் ததும்ப வரவேற்று, வெற்றுப் பக்கங்களாக மாறிய உணர்வு. -தமிழினி
Published as a fast paced thriller. Please do not compare with similarly branded/marketed English books. This has the Jeyamohan stamp much more than a fast paced thriller stamp!
ஈழப்போர் பின்னணியில் ஒரு slow thriller. இயக்கத்தைச் சேர்ந்த ரகசிய உளவாளி சார்லஸ் என்கிற சாந்தன் இலங்கையில இருந்து இந்தியா வராரு. இயக்கத்துக்கு துரோகம் செய்த ஒருத்தர கொல்ல சொல்லி உத்தரவு வருது. அந்த கொலையோட தான் கதை ஆரம்பாகுது, அதே கொலையோட தான் முடியவும் செய்யுது. இடைப்பட்ட அவரோட பயணம் தான் இந்த கதை.
இயக்கத்தில இருக்கும்போது நடக்குற போர்ல தொடைல ஒரு குண்டு ஊடுருவிப்போய் அங்கேயே இருக்கு. அந்த உலோகத்தினாலான குண்ட குறிப்பிட்டு தான் இந்த தலைப்பு.
கதை ரொம்ப ரொம்ப ரொம்ப slow. இயக்கத்தோட தகவல் பரிமாற்றங்கள், தோழமை, பண பரிவர்த்தனைகள் எப்படினு இதுல தெரிஞ்சுக்கலாம். நடுவுல வர ஒரு encounter shot சூப்பரா இருந்துச்சு. சில இடங்கள்ள வர symbolic representations எனக்கு புரியல. இன்னும் கொஞ்சம் fast paced ah இருந்து இருந்தா நல்லா இருந்திருக்கும்.
This entire review has been hidden because of spoilers.
2.5* ஒரு சிறுகதையாக எழுதியிருக்கவேண்டிய ஒரு கருவைக்கொண்டு ஒரு நாவல் எழுதியிருக்கிறார் ஜெயமோகன். நாவலின் பெரும்பகுதியும் எதுவுமே நிகழ்வதில்லை. அவர் எடுத்துக்கொண்ட திரில்லர் அமைப்புக்கு இது பெரும்குறை. அதனால் அவரது வழமையான பாணியிலும் இல்லாமல், த்ரில்லராகவும் இல்லாமல் இரண்டும் கெட்டானாக வந்திருக்கிறது.
வாசித்து முடித்து 4 நாள் ஆச்சு. இன்னைக்காவது எழுதிடணும்னு எழுதுறேன்.திரில்லர் தான் என்றாலும் அதில் தனது இலக்கிய நடையையும் இணைத்துஎழுதி இருக்கிறார் ஜெ.மோ . அது சில நேரங்களில்கதையின் சுவாரஸ்யத்தை குறைத்து விட்டதாக தோன்றுகிறது.ப்ரோஜெக்டிங் வில்லனிசம் ஒன்றும் " ஜெ.மோ " க்கு புதுசில்லை ஆனாலும்.கொஞ்சம் வேகம் குறைகிறது கதையில்.
ஆனால் இதில் என்ன வித்தியாசம் என்று பார்த்தால் "பழிவாங்குவது / கொலை செய்வது தான் என் நோக்கம் , குழந்தைகளை , குடும்பங்களை, கொலை செய்யமாட்டேன். பெண்களை "ரேப்"ங்கலாம் நோ நோ. போன்ற ஓல்ட் கிளாஸ் ஹீரோ வெல்லாம் இல்லை.அவன் ஒரு கொலையாளி அவனை சுற்றியுள்ள கூட்டமும்அத்தனை கேவலமானதே, கொலையாளி சினிமாக்களில், கதைகளில், வருவதை போல் "கும்பல் ஆப்" நல்ல பீப்பில் கில்லிங் எனிமிஸ் பார் நியாயம்லாம் இல்லை. அவனுக்கு பணித்ததை அவன் செய்கிறான் அதற்கான நியாய அநியாயங்களை சீர்தூக்கி பார்க்கும் சில்லி விஷயங்களெல்லாம் "ஜெ .மோ" செய்யவில்லை.
உளவாளிகளின் , கொலையாளிகளின் , இயக்கங்களின் மன நிலை , செயல் பாடுகள் குறித்து மிக நுட்பமான விளக்கங்கள் நன்றாக இருக்கிறது.சூழ்நிலை கைதிகள் அவர்களின் நிலை மாற தரும் விலை மட்டமானதாக காடப்படிருந்தாலும் சில இடங்களில் அது உண்மையாகவே (அவர்களை பொறுத்த வரை நியாயமானதாகவும்)படுகிறது. கொலை , துப்பாக்கி , இயக்கம் , ரா , இதுமட்டுமே இணைந்து திரில்லர் ஆவதில்லை இன்னும் சுவாரஸ்யம் கூடும் விதத்தில் நான்றாக இருக்கலாம் (நமக்கு திரில்லர்நாலே "திகு திகு பாஸ்ட் பார்வேர்ட் தான ?)
உலோகம் ❤️ • ஜெயமோகன் பல நாவல்களும் சிறுகதைகளையும் எழுதித்தள்ளும் பிரபல்ய எழுத்தாளர். அவர் படைப்பில் ஒரு நூல் வாசிக்கவேண்டும் என்று பல நாள் நினைத்ததுண்டு. இறுதியில் உலோகம் புத்தகத்தில் தொடக்கம். • அவருடைய புத்தகங்களை பற்றி பார்த்துக்கொண்டு வரும் பொழுது இந்தப்புத்தகம் தன்னை வாசி என்பது போல் என்னை இழுத்தது. காரணம், முதலில் தலைப்பும் அட்டைப்படமும், இரண்டாவது, கதை ஈழப்பின்னணியில் அமைந்தது, அடுத்தது, இது ஒரு த்ரில்லர் கதை. (நான் இதுவரை தமிழில் த்ரில்லர் கதை வாசித்திருக்கவில்லை) • கதையின் முடிவை முதல் அத்தியாயமே சொல்கிறது. பக்கத்திற்கு பக்கம் கதைத்திருப்பங்களும் இல்லை. ஆனாலும் கதை மிகவும் விறுவிறுப்பாக சோர்வில்லாமல் பக்கங்களை புரட்டவைக்கிறது. இயக்கங்கள், துரோகங்கள், எதைப்பற்றியும் தெரியாத கட்டளையை மட்டும் ஏற்று செயல்படுத்தும் அடிமட்ட கருவிகள், என்பவற்றை கருவாக கொண்டு அழகாக களமாடியிருக்கிறார் ஜெயமோகன்.
The protagonist is an assassin sent to kill a politician from Sri Lanka in exile in New Delhi. Jeyamohan gets into the characters and in his inimitable way reveals different slices of the exile's life who leaves home under the threat of violence. I found his characterization of RAW and the political "double-games" played by different parties based on Eezham in India ring very true. Highly recommended !
A fast paced thriller in tamil, similar to its english books. A very good try and a interesting read. Thought I don't agree with lot of political comments said in this book - since it's a fiction - I'm giving it full rating.
மீள்வாசிப்பு செய்ய வேண்டும் அல்லது செயமோகன் எழுத்துடன் என்னை பழக்கிகொள்ள வேண்டும். காய்ச்சலில் படுத்திருந்த காலங்களில் படித்ததாலோ என்னவோ அவ்வளவாக ஈர்க்கவில்லை கடைசி சில அத்தியாயங்கள்.