நம் ஒவ்வொவொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கும் நம்பிக்கை சுரங்கத்தின் சாவி தான் இந்த புத்தகம். மனது என்பது அவிழ்த்து விட்ட கடுகுப் பொட்டலம் போல், ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் ஓடுகின்றன என்று பரமஹம்சரின் சிந்தனையோடு ஆரம்பிக்கிறார் நாகூர் ரூமி.
எதிர்மறை எண்ணங்கள், கோபம், சந்தோஷம் , காத்திருப்பு போன்றவற்றை அணுகும் முறைகளை நிறைய நிஜ வாழ்க்கை உதாரணங்களோடும், கதைகளோடும் சுவாரஸ்யமான நடையில் ரூமி எழுதியிருக்கிறார்.
குரான், பைபிள், கீதை, ராமாயணம், புத்திசம் , ஜென், சுஃபி என்ற பல பரிமாணங்களில் இருந்து நிறைய மேற்கோள்களும், கதைகளும் கூறி, மனதை பண்படுத்தும் விதைகளைத் தூவி இருக்கிறார்.
பின்பு மனதை ஒருநிலப்படுத்தும் தியான வகைகளையும் எளிமையாக விளக்கியுள்ளார்.
இந்தப்புத்தகத்தின் மீது பித்தாகி போனேன். இன்னொரு முறைக்கு கூட படிக்கலாம் என்று தோன்றுகிறது.