Jump to ratings and reviews
Rate this book

நா. முத்துக்குமார் கவிதைகள்

Rate this book
பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டமும். சென்னைப் பல்கலைக் கழகத்தில் திரைப்பாடல் ஆய்விற்காக முனைவர் பட்டமும் பெற்றவர். தூசிகள், பட்டாம்பூச்சி விற்பவன், நியூட்டனின் முன்றாம் விதி, குழந்தைகள் நிறைந்த வீடு, பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம், கிராமம் நகரம் மாநகரம், கண்பேசும் வார்த்தைகள், பாலகாண்டம், அனா ஆவன்னா, என்னை சந்திக்க கனவில் வராதே, அணிலாடும் மூன்றில், வேடிக்கை பார்ப்பவன் ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இலயோலா கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக் கழகம். பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், இந்திராகாந்தி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளன. பட்டாம்பூச்சி விற்பவன் தொகுப்பிற்காக 1997ம் ஆண்டின் ஸ்டேட் பேங்க் விருது பெற்றுள்ளார். தற்சமயம் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதி வருகிறார். திரை இசை பாடல்களுக்காக இந்திய அரசின் தேசியவிருதுகளை இரண்டு முறை பெற்றிருக்கிறார். பிலிம் ஃபேர் விருதும், தமிழக அரசின் கலைமாமணி, சிறந்த பாடலாசிரியர் விருதுகளும் பெற்றுள்ளார்.

304 pages, Unknown Binding

Published June 1, 2016

84 people are currently reading
1183 people want to read

About the author

Na. Muthukumar

16 books324 followers
Nagarajan Muthukumar (12 July 1975 – 14 August 2016) was a Tamil poet, lyricist, and author. Best known for his Tamil language film songs, he received the most Filmfare Awards for Best Lyricist in Tamil and was a two-time recipient of the National Film Award for Best Lyrics for his works in Thanga Meenkal (2013) and Saivam (2014).

Muthukumar grew up in Kannikapuram village in Kancheepuram, India in a middle-class family. He has a brother Ramesh Kumar. At the age of six and a half, he lost his mother. At a young age, he acquired an interest in reading. He began his career working under Balu Mahendra for four years. He was later offered to write lyrics in the film Veera Nadai, directed by Seeman. He has been credited as a dialogue writer in a few films, including Kireedam (2007) and Vaaranam Aayiram (2008). His last movie as a lyricist is Sarvam Thaala Mayam with A.R. Rahman.

Na. Muthukumar was born at Kannikapuram, Kancheepuram on 12 July 1975. He did his graduation in Physics at Kancheepuram Pachaippa college. He pursued his master's degree in Tamil at Chennai Pachaippa college. With the aim of becoming a director, he joined as an assistant director to the legendary Balumahendra. His Poem 'Thoor' took him to great heights. On 14 June 2006, he married Jeevalakshmi in Vadapalani, Chennai.

Muthukumar, who had been suffering from jaundice for a long time, died on the morning of 14 August 2016, at his Chennai residence, of cardiac arrest. He is survived by his wife, son and daughter.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
69 (49%)
4 stars
41 (29%)
3 stars
11 (7%)
2 stars
9 (6%)
1 star
10 (7%)
Displaying 1 - 10 of 10 reviews
Profile Image for Swetha.
41 reviews25 followers
February 26, 2017
//கூட்டுக் குடும்பத்தில்
சித்தப்பாக்களுடன் வளர்ந்த மூத்தபிள்ளை, அம்மாவை அண்ணி என்றழைக்கும்-பிறழ்வு//

//கல்யாணமானால் சிலருக்கு சதை போடத் துவங்கும் என்று சொல்ல, அவன் தனக்கான சதையை கொண்டுவரப் போகும் பெண்ணை கனவுகாணத் தொடங்கினான்-நூறு வருடப் பொறுமை//

//காலுக்கு மேல் சூரிய உதயம் பார்க்கிறது, கோபுரம் வாழும் வௌவால்//

//எழுந்து நடந்தான் புத்தன், போதி மரத்தடியிலும் எறும்புகள் கடிக்கின்றன//

//கண்டிப்பான அப்பா சற்றே சிரிக்கிறார், கேமராமேனுக்கு நன்றி//
Profile Image for Balaji M.
220 reviews14 followers
May 13, 2017
நா. முத்துக்குமார் கவிதைகள்


*பட்டாம்பூச்சி விற்பவன்
*நியூட்டனின் மூன்றாம் விதி
*குழந்தைகள் நிறைந்த வீடு
*ஆனா ஆவன்னா
*என்னை சந்திக்க கனவில் வராதே

மேற்சொல்லப்பட்ட கவிதைப் புத்கங்களின் தொகுப்பாகத்தான் இந்த புத்தகம் அமைந்திருக்கிறது. இதில்,
' பட்டாம்பூச்சி விற்பவன்' 1997ல் வெளிவந்துள்ளது...

நா. முத்துகுமாரின் கவிதைகள்...வேறென்ன பாராட்டுதல் இருந்துவிட முடியும்....ஒவ்வொன்றும் முத்து.
இக்கவிதைகளுக்கு பாலுமகேந்திரா, மணிரத்னம், கந்தர்வன் முதல் பலர் நல்லதொரு முகவுரை கொடுத்தள்ளனர்...அதில் பிறழ்வுமில்லை!

'என்னை சந்திக்க கனவில் வராதே' என்னும் தொகுப்பு ஜப்பானிய காதல் கவிதைகளின் தழுவல் எனக் கூறியிருக்கிறார்.

நாம் நமது தினப்படி வாழ்வில் நடந்த, சந்தித்த, ரசித்த சம்பவங்கள், அப்படியொன்றும் ஒருவருக்கு ஒருவர் அவ்வளவு வேறுபாடு கொண்டதாக இல்லை என்பது இவரது கவிதைகள் மூலம் தெரிகிறது.

அப்படிபட்ட சம்பவங்களை இவர் அவ்வளவு அருமையாக ரசித்து வர்ணித்திருக்கிறார்...நாம் ரசித்தோ/கடந்தோ சென்றதோடு நிறுத்திகொண்டோம்....

கிட்டத்தட்ட அனைத்து கவிதைகளையும் இருமுறை வாசிக்கும் விதமான படைப்பு.
அதாவது ஒரு விஷயத்தை பற்றிய முடிச்சுகளை போட்டுகொண்டே சென்று, கடைசி வரியில் விடையளிக்கிறார்...அந்த முடிச்சுகளை படிக்கும்போது ஒருவித ஆர்வமிகுதி உயர்ந்துகொண்டே செல்லும்.
விடை தெரிந்த பின், 'அட' என சொல்லி, மறுபடியும் அதே கவிதையை தெரிந்த விடையுடன் பொருத்தி பார்த்து படித்து செல்ல தூண்டுகிறது.

மொத்தத்தில், தரமான கவிதைகள்!!!

இன்னமும் இவரது பல நல்ல படைப்புகளை பெற தகுதியற்றவர்களாகி விட்டோம்,
தேசிய விருது பெற்ற இக்கவிஞனின் இழப்பின் மூலம்.
Profile Image for Prasanth Delli.
12 reviews1 follower
December 21, 2021
Being a fanboy of muthukumar, loved reading every kavithai.

Best book to read on travel.
Became addictive to read again and again.

Last section on translated kavithaigal was bit unengaging.
65 reviews1 follower
January 5, 2024
நா. முத்துக்குமாரின் எழுத்துக்கள் எளிமையாகவும் இருக்கும் இலக்கியத்தன்மையுடனும் இருக்கும். சில வரிகளில் அதிகமான தாக்கத்தை எளிதாக இவரால் ஏற்படுத்த முடியும். இந்த கவிதை தொகுப்பு மிக அருமையான படைப்பு. மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும் எழுத்துக்கள் இவருடையது! 💚
Profile Image for Thamarai Selvam  Ekambaram .
12 reviews
May 6, 2025
முத்துக்குமார் எழுதிய கவிதைகளை பற்றி ஒரு விமர்சனமோ அல்லது கருத்து சொல்வதற்கு எனக்கு புலமை இல்லை

அவர் எப்படி நினைத்து எழுதினார் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் இருட்டினிலே நடக்கையிலே நா முத்துக்குமார் அவர்கள் கவிதைகள் தான் என்னோடு கூட இருந்தது என் நிழலும் என்னை விட்டு பிரிந்து தான் போனது.
Profile Image for Bhuvan.
253 reviews42 followers
October 13, 2021
இவற்றின் எளிமைதான் இவற்றின் அழகு.
இவற்றின் யதார்த்தம்தான் இவற்றின் அழகு.
முத்துக்குமாரின் கவிதைகள் யாவும் அழகுதான்.
Displaying 1 - 10 of 10 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.