Jump to ratings and reviews
Rate this book

சின்னு முதல் சின்னு வரை [Chinnu Muthal Chinnu Varai]

Rate this book
இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிறுத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும்... நான் உணர்வதைத் தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.

80 pages, Paperback

First published January 1, 1991

6 people are currently reading
27 people want to read

About the author

Vannadasan

22 books86 followers
Vannadaasan (தமிழ்: வண்ணதாசன்) aka கல்யாண்ஜி is a popular poet in Tamil Modern literature. He lives in Tirunelveli. He writes short stories and non fiction articles under the name "Vannadhasan". He writes poems under the name "Kalyanji". His real name is S. Kalayanasundaram

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
10 (41%)
4 stars
8 (33%)
3 stars
4 (16%)
2 stars
1 (4%)
1 star
1 (4%)
Displaying 1 - 2 of 2 reviews
Profile Image for Saranya Dhandapani.
Author 2 books179 followers
August 14, 2025

“சமீபத்தில் என்னை அதிகம் தொட்ட புத்தகம் அக்டோபர் வாக்கில் படித்த என்சாண்டட் டெஸ்னா என்கிற மிகச்சிறு சோவியத் புத்தகம். ‘நீலகண்டப் பறவையைத் தேடி’யைப் போல மனத்தை என்னவோ செய்த சிறு அற்புதம் அது. இதை வாசித்த மனதுடன்தான் ‘சின்னு முதல் சின்னு வரை’ என்ற நீண்ட கதையை அறுபது பக்கங்களுக்கு எழுதினேன்.” என்று “எல்லோர்க்கும் அன்புடன்” புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார்.

“இயல்பின் அழகு எழுத்தில் வாய்த்தால் போதும்” என்று ஒரு வரி இந்த புத்தகத்தில் வரும். அப்படியே இருக்கிறது இந்த படைப்பும். இது ஒரு குறுநாவல்! சின்னு தான் கதாநாயகி! இவருக்கு சின்னுவை சின்ன வயதிலிருந்தே பிடிக்கும்,crush மாதிரி என்று வைத்துக்கொள்ளலாம். சின்னு அழகி! இவரது கண்கள் மூலம், எழுத்துக்கள் மூலம் தான் சின்னுவை நமக்குத் தெரியும். சின்னுவின் கணவன் இறந்து துக்கம் விசாரிக்க இவர் மனைவியுடன் செல்கிறார். இவர் சின்னுவை சந்தித்தாரா? அந்த அன்பின் பகிர்தல் எவ்வாறாக இருந்தது என்பது தான் கதை.

சாதாரண கதை! சாதாரண மனிதர்கள்! வாழ்வே சாதாரணமானது தானே என்று எதார்த்தங்களை எழுத்தில் அடுக்க இவரை விட்டால் வேறு யாரால் முடியும்? வாழ்வின் சின்னச் சின்ன நிகழ்வுகளையும், நம்மை உருவாக்கும் அனுபவங்களையும் மிக எளிய வார்த்தைகளால் ஆழமாகப் பதிவு செய்கிறார். இதை வாசித்த பின், கதை முடிந்துவிட்டது என்ற உணர்வு வராது.மாறாக, அந்த உணர்வு நம்முள் நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.

முடிவில்லாத நினைவொன்றைப் போல, இந்தக் குறுநாவல் வாசகரின் உள்ளத்தில் மறைந்து நிற்கும்.

Profile Image for Kamali Joe.
24 reviews
December 30, 2025
எளிய வாழ்வினை ஆழமான எழுத்துக்களால் அழுத்தமாக பதிவு செய்வது எவ்வளவு அற்புதம்.
இருப்பது எல்லாம் இருப்பதாகவே பதிவு செய்வதும், பார்ப்பதை எல்லாம் பார்ப்பதாகவே எழுதுவதின் இயல்பு தான் வண்ணதாசன் 🤌🏻💗
சின்னு சின்னுவாகவே இருக்கிறாள்.... ✨
Displaying 1 - 2 of 2 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.